Friday, Mar 23rd

Last update10:58:28 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சைவமும் தமிழும்

திருமணம், பிறந்த தினம், வளைக்காப்பு போன்ற சுப நிகழ்வுகளில் ”அட்சதை” அறுகரிசி தூவி வாழ்த்துவது எப்படி?

E-mail Print PDF

எல்லா சுப சடங்குகளிலும் ”அட்சதை” எனும் மங்களப் பொருள் கட்டாயம் இருக்கும். வாழ்த்துகள் கூறி திருமண தம்பதியினரை ஆசீர்வதிக்கும்போது அட்சதை தூவி அவர்களை வாழ்த்துவதைப் பார்த்திருக்கின்றோம்.

அட்சதை தூவும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையை பின்பற்றுகின்றார்கள். பலர் தலைப் பகுதியில் தொடங்கி, கால்வரை தூவுவதையும், சிலர் கால்ப் பகுதியில் ஆரம்பித்து தலைவரை தூவி வாழ்த்துவதையும் பார்த்திருக்கின்றோம். இவை யாவும் தவறானது என அர்ச்சகர்கள் கூறுவதுடன் தவறான முறையில் அட்சதை தூவுவது கெடுதலை விளைவிக்கும் என்றும் கூறுகின்றனர்.

அட்சதையை இரண்டு கைகளாலும் எடுத்து ஒரு சில வினாடிகளாவது கையில் பொத்தி வைத்து தியானித்த பின் உச்சியில் தூவுதலே நல்ல பலனைத் தரும் என குறிப்பிடுகின்றனர். மலர்களைவிட மேலானது அட்சதை. மலர்களும் புனித தீர்த்தமும் அட்சதை இல்லாதபோது உபயோகிக்கலாம் என்பது ஐதீகம்.

வடமொழியில் ”க்ஷதம்” என்றால் இடிப்பது என்று பொருள். ”அக்ஷதம்” என்றால் இடிக்கப்படாதது அல்லது குத்தப்படாதது என்று பொருள். உலக்கையால் இடிக்கப்படாத அரிசியை ”அட்சதை” என்கிறார்கள். ”முனை முறியாத அரிசிதான் அட்சதை” எனப்படும். முனை முறிந்த அரிசிகளைக்கொண்டு இதைத் தயாரிப்பது தவறானது

அட்சதைக்குப் பச்சரிசியே சிறந்தது. புளுங்கல் அரிசியும், முனை முறிந்த அரிசியும் இறந்தவை என ஒதுக்கப்படுகின்றன. முனையுள்ள பச்சரிசி உணர்வையும் சக்தியையும் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல்கொண்டது. அதனால் அரிசியை கையில் கிள்ளிக் கொடுப்பது தவறானது. அதனால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் தட்டில் வைத்து, அட்சதையை எடுக்கச் செய்கிறார்கள்.

அரிசி உடல், மஞ்சள் ஆன்மா, அறுகம்புல் தெய்வசக்தி என்பதே ஆன்றோர்கள் கூற்று. உடல், ஆன்மா, தெய்வசக்தியோடு இணைந்து வாழ்த்துகிறோம் என்பதே பொருள். ஹோமங்கள் முடிந்த பிறகும், சிரார்த்தம் முடிந்த பிறகும், அதை நடத்திவைத்தவர்கள் வாழ்த்துக் கூறி அட்சதையை தூவுவார்கள்.

பிறந்தநாள் திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பெரியவர்கள் அட்சதையைத் தூவி வாழ்த்துவார்கள். இதை வீசி எறிவது தவறான விஷயம். திருமண வீடுகளில் எங்கோ ஓர் இடத்தில் இருந்துகொண்டு வீசி எறிவதைப் பார்க்கிறோம். இது ஆசியை அவமதிக்கும் ஒரு விஷயம். ஒவ்வொருவராகச் சென்று வாழ்த்தி தலையில் மெள்ளத் தூவுவதே சிறந்தது.

இன்னும் சொல்லப்போனால், மெள்ளத் உச்சியில் வைப்பதுதான் சிறந்தது. புதிய காரியங்கள் எதைத் தொடங்கினாலும் பெரியவர்கள், நண்பர்கள் கூடி இதைத் தூவி வாழ்த்துவது நல்லது. இதனால் எடுத்த காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும் அடைவார்கள் என்பது நிச்சயம்.

நன்றி

சங்க காலத்துக்கு முன்பிருந்தே நம் வழிபாடுகள், விழாக்கள் எல்லாவற்றிலும் அட்சதை இருந்து வந்துள்ளது. பழுதில்லாத அட்சதையைப்போல எல்லா நிகழ்வுகளும் முழுமையாக நடைபெற வேண்டும் என்பதே அட்சதையின் குறியீடு. மங்களங்கள் யாவும் தரும் இதை, தெய்வங்களின் அம்சம் என்பதைப் புரிந்து அதன் மகிமை உணர்ந்து பயன்படுத்தி பலன் பெறுவோமாக.

நன்றி:

Image may contain: one or more people

சிவலிங்கமும் அதன் தோற்றங்களும் - அதற்கான தத்துவங்களும்

E-mail Print PDF

Image may contain: indoor

சிவலிங்கம் அதன் தோற்றங்களும் அதற்கான தத்துவங்களும்

அண்ட சராசரங்கள் அனைத்தையும் கடந்த சிவபெருமான் என்ற மூல பரம்பொருளின் பரத்துவ நிலையை உணர்த்துவது தான் சிவலிங்கமாகும் நிற்குனமான இறைவனின் நிலையை வெளிப்படுத்தும் சிவலிங்கம் உச்சிப் பகுதி, நடுப்பகுதி,கீழ்ப் பகுதி என மூன்று பகுதிகளை தனக்குள் கொண்டது. உச்சிப் பகுதி லிங்கத்தின் பாணபகுதி அல்லது சிவபாகம் என அழைக்கப்பெறும். இது பிரபஞ்சத்தின் சம்ஹாரத்தை காட்டுவதாகும். நடுப்பகுதியான ஆவுடையார் மூலபரம்பொருள் விஷ்ணுவை தனக்குள் கொண்டதாக காக்கும் சக்தியாக திகழ்கின்றது. கடைசியாக உள்ள அடிப்புற பகுதி சிருஷ்டி என்பது உலகங்களின் அஸ்திவாரம் என்பதை காட்டும் பிரம்ம பகுதியாகும்.

அருவம் என்பது வடிவே இல்லாதது. இதில் அடங்குபவை சிவம், சக்தி, நாதம், பிந்து ஆகியவை. இந்த நான்கையும் வைத்து இறைவனை யோக முறையில் பூசித்தவர்களே சித்தர்கள் எனப் படுவார்கள்.

கண்ணுக்குப் புலப்படாத நிலை, ஞானியர் ஞானத்தால் உணரும் நிலை அருவம் ஆகும். உலக மக்கள் அனைவராலும், காணக்கூடிய நடராசர், தட்சிணாமூர்த்தி, மாதொரு பாகன் முதலியவை உருவங்களாகும். கண்ணுக்குப் புலப்படாத அருவ நிலைக்கும், கண்ணிக்குப் புலப்படும் உருவ நிலைக்கும், காரணமாய் அமைந்ததே சிவலிங்கம் ஆகும்.

கணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்; நீணாகம் பூண்டார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்” என்பது சேக்கிழார் வாக்கு.

அப்படி உருவமும் இல்லாமல், அருவமும் இல்லாமல் இறைவனைப் பூசிக்கும் ஒரு வடிவமே சிவலிங்க வழிபாடு. இந்தச் சிவலிங்க வழிபாட்டிலே முக லிங்கங்களும் உண்டு. சில சிவன் கோயில்களிலே லிங்கத்தில் முகம் இருக்கும். சிலவற்றில் முகம் இருக்காது. (சுழிபுரம்-கிழக்கில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சம்புநாதீஸ்வரர் ஆலயத்தில் ஐந்து முகங்களை கொண்ட லிங்கம் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது.) பொதுவாக லிங்கங்களுக்கு மூன்று பகுதி உண்டு. அவை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் பொதுவாய்க் குறித்தாலும், பஞ்ச பூதங்களில் முக்கியமான பூமி-பிரம்மா, நீர்-விஷ்ணு, அக்னி-சிவன், ஆகிய மூன்றையுமே சுட்டிக் காட்டுகிறது, என ஆன்றோர் கூற்று.

இயற்கையிலும், இறை சக்தியே நிரம்பி உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டவே இவ்வாறு சொல்கின்றார்கள், இந்த லிங்க வடிவிலே அடிப்பகுதியான பிரம்ம பாகம் பூமியிலே மறைந்து இருக்கும் வண்ணமும், ஆவுடை என்று சொல்லப் படும் நடுப்பகுதியான விஷ்ணு பாகம், அபிஷேகங்களை ஏற்கும் இடமாகவும், பாணமாகிய மேல் பகுதிதான் மேலோங்கி நின்று ஜோதி போலவும் காட்சி அளிக்கின்றது. இந்த லிங்கங்களுக்கு உருவமும் உண்டு, அருவலிங்கம் என வெறும் பாணம் மட்டுமே உள்ள லிங்கங்களும் உண்டு.

முகலிங்கங்கள் உருவம், அருவம் இரண்டும் அமையப் பெற்றிருக்கும். அடிப்பகுதியான பிரம்ம பாகமும், ஆவுடையும் இருக்கும், நடுவில் உள்ள பாணப் பகுதியில் முகம் இருக்கும்.

பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதை உணர்த்தி படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலும் இறைவன் ஒருவனிடத்தில் இருந்தே நடைபெறுகிறது என்பதை தெளிவாக காட்டும் தத்துவமே சிவலிங்கமாகும். அத்துடன் பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகின்றது.

அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதால் இலிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற் குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும் போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.

இதன் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம். இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது. சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய் தெரிகிறது.

கடவுள் விஷயத்திலும் சரி மற்ற எந்த விஷயத்திலும் சரி அநுபூதி ஒன்றே இறுதி முடிவு என்பது இந்துமதத்தின் மைய கருத்து அதாவது அனுபவத்தால் பெறுகின்ற விடையே இறுதியானது, உண்மையானது என்பது இதன் பொருளாகும் அதனாலேயே இறைவனை பற்றி பேசும்போது இந்துமதம் சகுன நிர்குண பிரம்மம் என்று வலியுறுத்தி பேசுகிறது அதாவது அருவுருவான பரம்பொருள் என்பது இதன் ஆதார சுருதியாகும்

நாம் சிவலிங்கத்தை இலிங்கம் என்ற ஒரே பெயரால் அழைத்தாலும் அதற்கு பல பெயர்கள் இருக்கிறது அதாவது இறைவன் உயிர்களுக்கு சாநித்தியராய் நின்று அருள்செயும் லிங்கத்தை பரார்த்த லிங்கம் என்றும், தானாக தோன்றியதை சுயம்பு லிங்கம் என்றும், தேவர்கள் உருவாக்கியதை கண லிங்கம் என்றும், பிரம்மன் மற்றும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டதை தைவீக லிங்கம் என்றும், முனிவர்கள் அசுரர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதை ஆரிட லிங்கம் என்றும், மனிதர்கள் செய்ததை மானுட லிங்கம் என்றும், மண் அரிசி வெண்ணை சந்தனம் புஷ்பம் சக்கரை மாவு ஆகியவற்றால் உருவானதை சணிக லிங்கம் என்றும் அழைக்கிறார்கள்

சகலாதிகரம், காசியப சிற்ப சாஸ்திரம், கந்தபுராணம், தென் குடி திட்டை புராணம், சிவபரக்ரமம் ஆகிய பழம்பெரும் நூல்கள் சிவலிங்கத்தின் நான்கு வகைகளை பற்றி பேசுகின்றன. தாளக்குடை போன்ற வடிவுடைய சத்ரகாரம், கோழிமுட்டை வடிவுடைய குக்குண்டாகாரம், வெள்ளரி பழம் வடிவுடைய திருபுடாகாரம், பாதிநிலா வடிவுடைய அர்த்த சந்திராகாரம் என்று லிங்கத்தின் நான்கு வித வடிவங்களுக்கு பெயர் சூட்டி நமக்கு தெரியபடுத்துகின்றன.

இதுதவிர முத்து, பவளம், வைடூர்யம், படிகம், மரகதம், நீலம் மாணிக்கம், வைரம், கோமேதகம் ஆகிய ரத்தினங்களிலும் சிவலிங்கத்தை உருவாக்கலாம் என்று பல சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. சிவலிங்கம் செய்ய பயன்படும் ரத்தினங்கள் குற்றமற்றவைகளாக இருக்க வேண்டும். அதன் அளவு இரண்டு அங்குலம் முதல்கொண்டு ஆறு அங்குலம் வரை இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன

ஆலயங்களில் உள்ள லிங்கங்களை தவிர மேற்சொன்ன பொருட்களில் லிங்க வடிவங்களை செய்து வீட்டில் வைத்து வழிபட்டால் அரச உறவு, தீர்க்க ஆயுள், ஆரோக்கிய உடம்பு, செல்வ வளர்ச்சி, பகைவர் வீழ்ச்சி, நன்மக்கள் பேறு சர்வ வசியம் ஏற்படும் என்று நமது முன்னோர்கள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள்

முகலிங்கம்:

தமிழ்நாட்டில் சிதம்பரம், திருவண்ணாமலை, போன்ற ஊர்களில் முகலிங்கங்களும், சுசீந்திரம் தாணுமாலயர் கோவிலில் கண், காது, மூக்கு வைத்து அலங்கரிக்கப் பட்ட முகலிங்கமும், காளஹஸ்தி கோயிலிலும் மேற்கூறியவாறு அலங்கரிக்கப் பட்ட லிங்கமும், ஊட்டியிலும் இவ்வாறான லிங்கங்களும் காணப் படுகின்றன. லிங்கங்கள் பலவகைப் பட்டாலும், வழிபாட்டுக்கு உரியவையில் சிறப்பானவை சுயம்புலிங்கங்களே ஆகும்.

இந்தச் சுயம்பு லிங்கங்கள் தானாக உண்டானதும், கரடுமுரடாகவும் இருக்கும், மற்ற ரேகைகள் எதுவும் இருக்காது என்றும் சொல்கின்றனர். இது தவிர, குருவின் அனுமதி மற்றும் உபதேசத்துடன் பெறும் இஷ்டலிங்கங்கள் உண்டு. இவை தனிப்பட்ட வழிபாடுகளிலேயே பெரும்பாலும் இடம் பெறுகின்றன. பாமர மக்களுக்கு அருளும் வண்ணம் ஏற்பட்டவையே தேவர்கள், முனிவர்கள், மற்றும் மனிதர்களால் ஸ்தாபிக்கப் பட்ட பரார்த்தலிங்கம். இவையே பெரும்பாலும் கோயில்களில் வழிபாட்டுக்கு என அமைந்துள்ளவை.

அம்பிகை தன் தவங்களின் போது, தன் வழிபாடலுக்கு என ஸ்தாபித்தவை "தேவிக லிங்கம்" என்று சொல்லப் படும். இதிலே தேவர்கள் பூஜித்த லிங்கம், "திவ்யலிங்கம்" அல்லது "தெய்வ லிங்கம்" எனச் சொல்லப் படுகின்றது. இந்திரன் பூஜித்தது இந்திரலிங்கம், வருணன் பூஜித்தது, வருணலிங்கம், வாயு பூஜித்தது வாயுலிங்கம் என வகைப் படுத்தப் படுகின்றது.

மனிதனாக ராமன் வாழ்ந்தபோது ஸ்தாபிதம் செய்தது, பின்னர் பூஜித்ததும், இன்றளவும் அனைவரும் வழிபட்டு வருவதும் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமியான "மானுட லிங்கம்" ஆகும். முனிவர்களால் பூஜிக்கப் பட்டது "ஆர்ஷிக லிங்கம்" எனவும், அசுரர்களால் பூஜிக்கப் பட்டது, "ராட்சச லிங்கம்" எனவும் சொல்லப் படுகின்றது.

முக லிங்கம் என்பது ஒரு முக லிங்கத்தில் இருந்து ஐந்து முக லிங்கங்கள் வரை உடையவை ஆகும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கும். ஆறாவது முகம் அதோ முகம் என்று சொல்லப் படும். அது அநேகமாய் மறைந்தே இருக்கும். அது பாதாளத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும், எனவும், சக்திகள் அதில் இருந்தே ஆரம்பம் எனவும் சொல்லப் படுகிறது. இந்த ஆறாவது முகத்தில் இருந்து தான் சிவஸ்வரூபம் ஆன சுப்ரமண்யர், நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாகவும் சொல்லப் படுகிறது.

பரம்பொருள் ஆன அந்த ஈசனுக்கு ஆறுமுகங்கள் என்பது சிவனடியார்களின் வழக்கு என்றாலும் நம்மால் அறியும் வகையில் இருப்பவை ஐந்து முகங்களே ஆகும். அதனால் தான் சுப்ரமணியருக்கு இறைவனின் சொரூபம் என உணர்த்தும் வகையில் ஆறுமுகங்கள் அமைந்தது எனவும் சொல்லப் படுகிறது.

இப்போது ஒவ்வொரு முகமும் நோக்கும் திசையையும், தன் முகங்களின் நிறங்களையும் பார்க்கலாம். கிழக்கே பார்த்து இருக்கும் முகம் "தத் புருஷம்" என அழைக்கப் படுகிறது. இது பள பளவென்ற பொன் நிறத்தில் காணப்படும். தென் திசையை நோக்கிக் கொண்டிருக்கும் முகம் "அகோரம்" என்று அழைக்கப் படும், இது கரு நிறத்தில் காணப்படுகிறது. மேற்கே பார்த்துக் கொண்டிருக்கும் முகம் "சத்யஜோதம்" என அழைக்கப் படும். இது தூய வெண்மை நிறத்தில் காணப்படும். வடக்கே பார்க்கும் முகம் "வாமதேவம்" எனப் படும், இது சிவந்த நிறத்தில் காணப் படும். ஈசான்ய திசை என்று அழைக்கப் படும் வட கிழக்குத் திசையில் காணப் படுவதோ, "ஈசான்ய முகம்" என்றே அழைக்கப் படும். இது பளிங்கு நிறத்தில் ஒளிர்கிறது.

ஒரு முகலிங்கம்:

முதலில் ஒரு முகம் கொண்ட லிங்கத்தைப் பற்றிப் பார்க்கலாம். தத்புருஷ லிங்கம் என அழைக்கப் படும் இந்த லிங்கத்தை வணங்கினால் சகல செல்வங்களுடன் கூடிய ராஜ யோகத்தை அடைவார்கள். சில கோயில்களில் இவ்வகை லிங்கங்கள் தென் மேற்கு மூலையில் காணப் படுகின்றது எனச் சொல்கின்றார்கள். தென்மேற்கு மூலையை "நிருதி" என அழைக்கிறார்கள். இந்த நிருதி தேவனால் இந்த லிங்கங்கள் வழிபடப் பட்டதால் இவை நிருதி லிங்கம் எனவும் அழைக்கப் பட்டு, கோயில்களின் தென் மேற்கு மூலைகளிலும் வைக்கப் படுகின்றன. சிதம்பரம், திருவண்ணாமலை, சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி கோயில், காளஹஸ்தி போன்ற இடங்களில் ஒரு முகத்துடன் கூடிய லிங்கங்கள் காணப்படுவதாயும் சொல்கின்றார்கள். வேதத்தின் சாரமான அக்னி மற்றும் ருத்ரன் இருவரின் இணைப்பே இந்த லிங்க வடிவம் என ஆய்வாளர்கள் சொல்வதாயும் தெரிகின்றது. ஆந்திராவில் உள்ள குடிமல்லம் என்னும் பகுதியிலும் சிவனின் முழுவடிவமும், லிங்கமாய் ஆன வரலாறும் காணப் படுவதாய்ச் சொல்கின்றார்கள். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் தெரிகிறது.

இருமுகலிங்கம்:

இப்போது இரு முக லிங்கம் பத்திப் பார்ப்போம்.

இரு முக லிங்கங்களில் ஒரு முகம் கிழக்கு நோக்கியும் (தத்புருஷம்) மற்றொரு முகம் மேற்கு நோக்கியும் காணப்படும். இவை "ம்ந்திரலிங்கங்கள்" எனச் சொல்லப் படுகின்றன. இவற்றை அதிகம் வழிபடுவது கர்நாடகாவில் உள்ள லிங்காயத்தார் என அழைக்கப் படும் வீர சைவர்கள் ஆவார்கள். சிவத் தொண்டு செய்பவர்களும் இந்த லிங்கங்களை வழிபடலாம் எனச் சொல்லப் படுகிறது. இந்த லிங்கங்களைப் பூஜிக்க தற்காலத்தில் "விருட்சி" என அழைக்கப் படும் இருவாட்சி மலர்கள் நல்லது. இரு முகம் கொண்ட ருத்திராட்சத்தால் அலங்கரிக்கலாம்.

மூன்று முக லிங்கம்:

அடுத்து மூன்று முக லிங்கங்கள். இவை கிழக்கு, தெற்கு, வடக்கு மூன்று திசைகளை நோக்கிக் காணப் படும். தத் புருஷம், அகோரம், வாமதேவம் என மூவகைப் பட்ட முகங்கள் கொண்ட இந்த லிங்கங்கள் முத்தொழிலையும் குறிப்பவை எனச் சொல்லப் படுகிறது. கிழக்கு முகம் ஆண்மையின் கம்பீரத்துடன் காணப்படுவதால் படைத்தலையும், தெற்கு முகம் கோபத்துடன் காணப் படுவதால், அழித்தலையும், வடக்கு முகம் பெண்மையின் ஜாடையுடனே சிரிப்புடனேயும் காணப் படுவதால் காத்தலையும் குறிக்கும். திரிமூர்த்தி லிங்கம் என அழைக்கப் படும் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரை கோயிலிலும், நாசிக்கில் உள்ள திரியம்பகேஸ்வரரும் திரி மூர்த்தி லிங்கங்கள் என அழைக்கப் படுகின்றன. இது தவிர, எலிபெண்டா குகையிலும் மும்முக லிங்கம் காணப் படுவதாய்ச் சொல்கிறார்கள். இந்த மும்முக லிங்கங்களுக்கு மும்முக ருத்ராட்ச மாலை அணிவித்து, மூன்று தளங்கள் உள்ள வில்வத்தால் வழிபடலாம்.

சதுர்முகலிங்கம்:

இனி சதுர்முக லிங்கங்கள் பத்திப் பார்க்கலாம். சதுர்முக லிங்கம் என்னும் நான்கு முக லிங்கம் "வேத லிங்கம்" என அழைக்கப் படுகிறது. இவற்றின் முகங்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளை நோக்கி இருக்கும். இவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைக் குறிப்பவை

என்று சொல்வார்கள். நேபாளத்தின் பசுபதி நாதர் கோயிலில் நம் கண்ணுக்குத் தெரிவது சதுர்முக லிங்கம் தான் என்றாலும், அவற்றுக்கும் மேல் நோக்கிய ஒரு முகமும், கீழ் நோக்கிய ஒரு முகமும் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளதாய்ச் சொல்லப் படுகிறது. ஆனால் நேபாள சதுர்முக லிங்கம் மார்பு வரையிலும், இரு கரங்களுடனும் காட்சி தருகிறது. நான்கு முகம் இருப்பதால் அங்கே நான்கு வாசல்களும் உண்டு. ஒவ்வொரு வாசலிலும் போய்த் தனித் தனியாகத் தரிசனம் செய்யும் வசதியும் உண்டு.

இது தவிர, காஞ்சியில் கச்சபேஸ்வரர் கோயிலிலும், திருவதிகை, திருவண்ணாமலை, திருவானைக்கா ஆகிய தலங்களிலும் காளஹஸ்திக்கு அருகே உள்ள மலை மண்டபத்திலும் சதுர்முக லிங்கங்கள் உள்ளதாய்த் தெரிய வருகிறது. இந்த லிங்கங்களுக்கு நான்கு முக ருத்திராட்சம் அணிவித்து நான்கு வில்வதளங்களால் வழிபடுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வழிபடுவோருக்குப் பிரம்ம ஞானம் கைவரப் பெற்று எட்டுத் திக்கிலும் புகழ் வாய்ந்தவராய்ச் சொல்லப் படுவார்கள்.

ஐந்து முகலிங்கம்:

ஐந்து முக லிங்கங்களில் திசைக்கு ஒன்றாக ஐந்து முகங்கள் தவிர, உச்சியில் வடகிழக்கு திசை நோக்கி ஒரு முகமும் காணப்படும். திருச்சியில் திருவானனக்காவில் கோவில் அருகே "பஞ்சமுகேஸ்வரர் கோயில்" என்று தனியாக உள்ளது. சஷ்டி அப்த பூர்த்தியை அந்தக் கோயிலில் வைத்துச் செய்யப் படுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வட இந்தியாவில் சில தலங்களிலும் பஞ்சமுக லிங்கங்கள் காணப் படுகின்றன. திருக்கைலையில் இறைவனின் தரிசனம் பஞ்சமுக லிங்க தரிசனம் என்றே சொல்லப் படுகிறது. இந்தப் பஞ்ச முகங்களில் இருந்தே கங்கை ஐந்து உருவங்களில் பொங்கி வருவதாயும் சொல்லப் படுகிறது. திருக்கோயில்களில் கடைப் பிடிக்கப் படும் "ஆகமம்" இந்த ஐந்து முகங்களில் இருந்தே வந்ததாயும் சொல்லப் படுகிறது. அதனால் பஞ்சமுக லிங்கத்தைச் சிலர் "சிவாகம லிங்கம்' எனவும் சொல்வார்கள்.

ஐந்து முக ருத்திராட்சத்தினால் மண்டபம் கட்டி, ஐந்து பொருட்களால், குறிப்பாய் பஞ்சகவ்யம் எனப்படும் பசும்பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவற்றால் அபிஷேஹம் செய்து, ஐந்து மலர்களால் மாலை அணிவித்து, ஐந்து வில்வங்களால் அர்ச்சித்து, ஐவகை நைவேத்தியம் செய்வித்து, வழிபடுதல் விசேஷம் எனச் சொல்கின்றனர்.

பஞ்ச முக லிங்கங்கள் தவிர்த்து, ஈசனின் ஆறாவது முகமும் உள்ளது. இந்த ஆறாவது முகம் கீழ்நோக்கியே காணப் படுகிறது. இது "அதோ முகம்" என அழைக்கப் படுகிறது. ஈசனின் ஐந்தாவது முகம் மேல் நோக்கி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டும், ஆறாவது முகம் கீழ் நோக்கி பாதாளத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கும். இந்த ஆறாவது முகம் நம் கண்களுக்குப் புலப்படாத ஒன்றாகும். இந்த ஆறு முகங்களில் இருந்தும், அவற்றின் நெற்றிக் கண்களில் இருந்து விளைந்த நெருப்புப் பொறிகளில் தோன்றியவரே முருகப் பெருமான் ஆவார். பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் பொங்கி வந்த போது, அதை விழுங்கியது இந்த ஆறாவது முகமான “அதோ” முகம் எனவும் சொல்லப் படுகிறது.

ஆறுமுகலிங்கம்:

ஆகவே ஈசனின் நீலகண்டமே ஆறாவது முகமாய்க் கருதுவோர்களும் உண்டு. ஆறுமுகங்களுடன் கூடிய லிங்கங்கள் எங்கும் வழிபாட்டுக்குக் காணக் கிடைக்கவில்லை. ஏனெனில் முருகப் பெருமானே சிவ ஸ்வரூபம் என்பதால் அவரே ஆறுமுக, சிவனாய்க் கருதி வழிபடுவோரும் உண்டு. திருவானைக் காவில் உள்ள தென் பிரகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகரும், மற்றொரு லிங்கத்தில் முருகப் பெருமானும் காணப் படுவதாய்ச் சொல்கின்றனர். காஞ்சியில் உள்ள ஆதி காமாட்சி அம்மன் கோயிலிலும், முன் மண்டபத்தின் லிங்கத் திருமேனியில் பிடாரியின் உருவம் அமைக்கப் பட்டு, சக்தி லிங்கம் என அழைக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர். அடுத்து சதாசிவ மூர்த்தி பற்றிப் பார்ப்போமா?

திருமூலர் திருமந்திரத்தில் சதாசிவ மூர்த்தியைப் பற்றித் துதிக்கையில் இவ்வாறு கூறுகிறார்:

"கூடிய பாதம் இரண்டும் படிமிசை

பாடிய கை இரண்டு எட்டும் பரந்தெழும்

தேடு முகம் ஐந்து செங்கண் மூவைந்து

நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே!" (ஏழாம் தந்திரம் பாடல் ஒன்று)

எனக் கூறுகின்றார்.

சதாசிவ வடிவத்துக்கு முகம் ஐந்து, திருப்பாதங்கள் இரண்டு, பத்துக் கைகள், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களாக மொத்தம் பதினைந்து கண்கள் இவற்றோடு தாமரைப் பீடத்தில் நிற்பதாய்க் கூறுகின்றார்.

இலிங்க வகைகள்

சுயம்பு லிங்கம் - இறைவன் இச்சைப்படி தானாக தோன்றிய லிங்கமாகும்

1. தேவி லிங்கம் - தேவி சக்தியால் வழிபடபட்ட லிங்கம்.

2. காண லிங்கம் - சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட லிங்கம்.

3. தைவிக லிங்கம் - மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட லிங்கம்.

4. ஆரிட லிங்கம் - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.

5. இராட்சத லிங்கம் - இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.

6. தெய்வீக லிங்கம் - தேவர்களால் பூசை செய்யப்பட்டு முனிவர்களின் தவத்தினால் பூமிக்கு வந்த இலிங்கம்

7. அர்ஷ லிங்கம் - ரிசிகளும், முனிவர்களும் தங்களின் வழிபாட்டிற்கு உருவாக்கிய இலிங்கம்

8. அசுர லிங்கம் - அசுரர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.

9. மானுட லிங்கம் / மனுஷ்ய லிங்கம் - மனிதர்களால் வழிபடப்பட்ட இலிங்கம்

10. மாணி மாய லிங்கம் - இந்திரனால் வழிபடப்பட்ட லிங்கம்

11. தாமரமய லிங்கம் - சூரியனால் வழிபட்டப்பட்ட இலிங்கம்

12. முக்தி இலிங்கம் - சந்திரனால் வழிபடப்பட்ட இலிங்கம்

13. ஹேம இலிங்கம் - குபேரனால் வழிபடப்பட்ட இலிங்கம்

இவற்றில் மனுஷ்ய இலிங்கமானது தொண்னூறு வகையாக உள்ளதென மகுடாகமம் எனும் சைவ ஆகமம் கூறுகிறது.

• க்ஷணிக லிங்கம் - தற்காலிக வழிபாட்டிற்கு மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகியவைகளைக் கொண்டு உருவாக்கப்படும் லிங்கங்கள்.

• வர்த்தமானக லிங்கம் - பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் ஆகியவை ஒரே அளவாகவும், ருத்ர பாகம் அவைகளைவிட இருமடங்கும் இருக்கும் இலிங்கங்கள்.

• ஆத்ய லிங்கம் - பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் ஆகியவை அனைத்தும் சம அளவு இருக்கும் இலிங்கங்கள்.

சிவபெருமான் சதாசிவ மூர்த்தி தோற்றத்தில் தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து லிங்கங்களை தோற்றுவித்தார். இவை பஞ்ச லிங்கங்கள் எனவும் அறியப்படுகின்றன.

1. சிவ சதாக்கியம்

2. அமூர்த்தி சதாக்கியம்

3. மூர்த்தி சதாக்கியம்

4. கர்த்திரு சதாக்கியம்

5. கன்ம சதாக்கியம்

பஞ்சபூத இலிங்கங்கள்

நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆன இலிங்கங்கள் பஞ்சபூத இலிங்கங்கள் எனப்படும்.

1. அப்பு லிங்கம்

2. தேயு லிங்கம்

3. ஆகாச லிங்கம்

4. வாயு லிங்கம்

5. அக்னி லிங்கம்

முக லிங்கங்கள்

• ஏக முக லிங்கம்

• இரு முக லிங்கம்

• மும் முக லிங்கம்

• சதுர் முக லிங்கம்

• பஞ்ச முக லிங்கம்

ஆறுவகை இலிங்கங்கள்

திருமூலர் தனது நூலான திருமந்திரத்தினுள் ஆறுவகையான இலிங்கள் பற்றி குறிப்பிடுகின்றார், அவையாவன அண்ட இலிங்கம், பிண்ட இலிங்கம், சதாசிவ இலிங்கம், ஆத்ம இலிங்கம், ஞான இலிங்கம், சிவ இலிங்கம் என்பவனவாகும்.

இவற்றில் அண்ட இலிங்கம் என்பது உலகத்தினைக் குறிப்பதாகும்,

பிண்ட இலிங்கம் என்பது மனிதனுடைய உடலாகும்,

சதாசிவ இலிங்கம் என்பது சிவனையும் ஆதி சக்தியையும் இணைந்து உருவமாக கொள்ளுவதாகும்,

ஆத்ம இலிங்கம் என்பது அனைத்து உயிர்களையும் இறைவனாக காண்பதாகும்,

ஞான இலிங்கம் என்பது இறைவனின் சொரூப நிலையை குறிப்பதாகும்,

சிவலிங்கம் என்பது பொதுவான இறைவழிபாட்டிற்குறிய குறி.

பிற இலிங்க வகைகள்

1. கந்த லிங்கம்

2. புஷ்ப லிங்கம்

3. கோசாக்ரு லிங்கம்

4. வாலுக லிங்கம்

5. யவாகோதுமாசாலிஜ்ஜ லிங்கம்

6. சீதாகண்ட லிங்கம்

7. லவண லிங்கம்

8. திலாப்சிஷ்த லிங்கம்

9. பாம்ச லிங்கம்

10. கூட லிங்கம் அல்லது சீதா லிங்கம்

11. வன்சங்குர லிங்கம்

12. பிஷ்டா லிங்கம்

13. ததிதுக்த லிங்கம்

14. தான்ய லிங்கம்

15. பழ லிங்கம்

16. தாத்ரி லிங்கம்

17. நவநீத லிங்கம்

18. கரிக லிங்கம்

19. கற்பூர லிங்கம்

20. ஆயஸ்காந்த லிங்கம்

21. மவுகித்க லிங்கம்

22. ஸ்வர்ண லிங்கம்

23. ரஜத லிங்கம்

24. பித்தாலா லிங்கம்

25. திராபு லிங்கம்

26. ஆயச லிங்கம்

27. சீசா லிங்கம்

28. அஷ்டதாது லிங்கம்

29. அஷ்ட லோக லிங்கம்

30. வைடூர்ய லிங்கம்

31. ஸ்படிக லிங்கம்

32. பாதரச லிங்கம்

சுபம்

சிவலிங்கமும் அதன் தோற்ற தத்துவங்களும்
அண்ட சராசரங்கள் அனைத்தையும் கடந்த சிவபெருமான் என்ற மூல பரம்பொருளின் பரத்துவ நிலையை உணர்த்துவது தான் சிவலிங்கமாகும் நிற்குனமான இறைவனின் நிலையை வெளிப்படுத்தும் சிவலிங்கம் உச்சிப் பகுதி, நடுப்பகுதி,கீழ்ப் பகுதி என மூன்று பகுதிகளை தனக்குள் கொண்டது. உச்சிப் பகுதி லிங்கத்தின் பாணபகுதி அல்லது சிவபாகம் என அழைக்கப்பெறும். இது பிரபஞ்சத்தின் சம்ஹாரத்தை காட்டுவதாகும். நடுப்பகுதியான ஆவுடையார் மூலபரம்பொருள் விஷ்ணுவை தனக்குள் கொண்டதாக காக்கும் சக்தியாக திகழ்கின்றது. கடைசியாக உள்ள அடிப்புற பகுதி சிருஷ்டி என்பது உலகங்களின் அஸ்திவாரம் என்பதை காட்டும் பிரம்ம பகுதியாகும்.
அருவம் என்பது வடிவே இல்லாதது. இதில் அடங்குபவை சிவம், சக்தி, நாதம், பிந்து ஆகியவை. இந்த நான்கையும் வைத்து இறைவனை யோக முறையில் பூசித்தவர்களே சித்தர்கள் எனப் படுவார்கள்.
அப்படி உருவமும் இல்லாமல், அருவமும் இல்லாமல் இறைவனைப் பூசிக்கும் ஒரு வடிவமே சிவலிங்க வழிபாடு. இந்தச் சிவலிங்க வழிபாட்டிலே முக லிங்கங்களும் உண்டு. சில சிவன் கோயில்களிலே லிங்கத்தில் முகம் இருக்கும். சிலவற்றில் முகம் இருக்காது. (சுழிபுரம்-கிழக்கில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சிவன் ஆலயத்தில் ஐந்து முகங்களை கொண்ட லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது. பொதுவாக லிங்கங்களுக்கு மூன்று பகுதி உண்டு. அவை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் பொதுவாய்க் குறித்தாலும், பஞ்ச பூதங்களில் முக்கியமான பூமி-பிரம்மா, நீர்-விஷ்ணு, அக்னி-சிவன், ஆகிய மூன்றையுமே சுட்டிக் காட்டுகிறது, என ஆன்றோர் கூற்று.
இயற்கையிலும், இறை சக்தியே நிரம்பி உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டவே இவ்வாறு சொல்கின்றார்கள், இந்த லிங்க வடிவிலே அடிப்பகுதியான பிரம்ம பாகம் பூமியிலே மறைந்து இருக்கும் வண்ணமும், ஆவுடை என்று சொல்லப் படும் நடுப்பகுதியான விஷ்ணு பாகம், அபிஷேகங்களை ஏற்கும் இடமாகவும், பாணமாகிய மேல் பகுதிதான் மேலோங்கி நின்று ஜோதி போலவும் காட்சி அளிக்கின்றது. இந்த லிங்கங்களுக்கு உருவமும் உண்டு, அருவலிங்கம் என வெறும் பாணம் மட்டுமே உள்ள லிங்கங்களும் உண்டு.
முகலிங்கங்கள் உருவம், அருவம் இரண்டும் அமையப் பெற்றிருக்கும். அடிப்பகுதியான பிரம்ம பாகமும், ஆவுடையும் இருக்கும், நடுவில் உள்ள பாணப் பகுதியில் முகம் இருக்கும்.
பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதை உணர்த்தி படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலும் இறைவன் ஒருவனிடத்தில் இருந்தே நடைபெறுகிறது என்பதை தெளிவாக காட்டும் தத்துவமே சிவலிங்கமாகும். அத்துடன் பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகின்றது.
அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதால் இலிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற் குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும் போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.
இதன் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம். இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது. சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய் தெரிகிறது.
கடவுள் விஷயத்திலும் சரி மற்ற எந்த விஷயத்திலும் சரி அநுபூதி ஒன்றே இறுதி முடிவு என்பது இந்துமதத்தின் மைய கருத்து அதாவது அனுபவத்தால் பெறுகின்ற விடையே இறுதியானது, உண்மையானது என்பது இதன் பொருளாகும் அதனாலேயே இறைவனை பற்றி பேசும்போது இந்துமதம் சகுன நிர்குண பிரம்மம் என்று வலியுறுத்தி பேசுகிறது அதாவது அருவுருவான பரம்பொருள் என்பது இதன் ஆதார சுருதியாகும்
நாம் சிவலிங்கத்தை இலிங்கம் என்ற ஒரே பெயரால் அழைத்தாலும் அதற்கு பல பெயர்கள் இருக்கிறது அதாவது இறைவன் உயிர்களுக்கு சாநித்தியராய் நின்று அருள்செயும் லிங்கத்தை பரார்த்த லிங்கம் என்றும், தானாக தோன்றியதை சுயம்பு லிங்கம் என்றும், தேவர்கள் உருவாக்கியதை கண லிங்கம் என்றும், பிரம்மன் மற்றும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டதை தைவீக லிங்கம் என்றும், முனிவர்கள் அசுரர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதை ஆரிட லிங்கம் என்றும், மனிதர்கள் செய்ததை மானுட லிங்கம் என்றும், மண் அரிசி வெண்ணை சந்தனம் புஷ்பம் சக்கரை மாவு ஆகியவற்றால் உருவானதை சணிக லிங்கம் என்றும் அழைக்கிறார்கள்
சகலாதிகரம், காசியப சிற்ப சாஸ்திரம், கந்தபுராணம், தென் குடி திட்டை புராணம், சிவபரக்ரமம் ஆகிய பழம்பெரும் நூல்கள் சிவலிங்கத்தின் நான்கு வகைகளை பற்றி பேசுகின்றன. தாளக்குடை போன்ற வடிவுடைய சத்ரகாரம், கோழிமுட்டை வடிவுடைய குக்குண்டாகாரம், வெள்ளரி பழம் வடிவுடைய திருபுடாகாரம், பாதிநிலா வடிவுடைய அர்த்த சந்திராகாரம் என்று லிங்கத்தின் நான்கு வித வடிவங்களுக்கு பெயர் சூட்டி நமக்கு தெரியபடுத்துகின்றன.
இதுதவிர முத்து, பவளம், வைடூர்யம், படிகம், மரகதம், நீலம் மாணிக்கம், வைரம், கோமேதகம் ஆகிய ரத்தினங்களிலும் சிவலிங்கத்தை உருவாக்கலாம் என்று பல சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. சிவலிங்கம் செய்ய பயன்படும் ரத்தினங்கள் குற்றமற்றவைகளாக இருக்க வேண்டும். அதன் அளவு இரண்டு அங்குலம் முதல்கொண்டு ஆறு அங்குலம் வரை இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன
ஆலயங்களில் உள்ள லிங்கங்களை தவிர மேற்சொன்ன பொருட்களில் லிங்க வடிவங்களை செய்து வீட்டில் வைத்து வழிபட்டால் அரச உறவு, தீர்க்க ஆயுள், ஆரோக்கிய உடம்பு, செல்வ வளர்ச்சி, பகைவர் வீழ்ச்சி, நன்மக்கள் பேறு சர்வ வசியம் ஏற்படும் என்று நமது முன்னோர்கள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள்
முகலிங்கம்:
தமிழ்நாட்டில் சிதம்பரம், திருவண்ணாமலை, போன்ற ஊர்களில் முகலிங்கங்களும், சுசீந்திரம் தாணுமாலயர் கோவிலில் கண், காது, மூக்கு வைத்து அலங்கரிக்கப் பட்ட முகலிங்கமும், காளஹஸ்தி கோயிலிலும் மேற்கூறியவாறு அலங்கரிக்கப் பட்ட லிங்கமும், ஊட்டியிலும் இவ்வாறான லிங்கங்களும் காணப் படுகின்றன. லிங்கங்கள் பலவகைப் பட்டாலும், வழிபாட்டுக்கு உரியவையில் சிறப்பானவை சுயம்புலிங்கங்களே ஆகும்.
இந்தச் சுயம்பு லிங்கங்கள் தானாக உண்டானதும், கரடுமுரடாகவும் இருக்கும், மற்ற ரேகைகள் எதுவும் இருக்காது என்றும் சொல்கின்றனர். இது தவிர, குருவின் அனுமதி மற்றும் உபதேசத்துடன் பெறும் இஷ்டலிங்கங்கள் உண்டு. இவை தனிப்பட்ட வழிபாடுகளிலேயே பெரும்பாலும் இடம் பெறுகின்றன. பாமர மக்களுக்கு அருளும் வண்ணம் ஏற்பட்டவையே தேவர்கள், முனிவர்கள், மற்றும் மனிதர்களால் ஸ்தாபிக்கப் பட்ட பரார்த்தலிங்கம். இவையே பெரும்பாலும் கோயில்களில் வழிபாட்டுக்கு என அமைந்துள்ளவை.
அம்பிகை தன் தவங்களின் போது, தன் வழிபாடலுக்கு என ஸ்தாபித்தவை "தேவிக லிங்கம்" என்று சொல்லப் படும். இதிலே தேவர்கள் பூஜித்த லிங்கம், "திவ்யலிங்கம்" அல்லது "தெய்வ லிங்கம்" எனச் சொல்லப் படுகின்றது. இந்திரன் பூஜித்தது இந்திரலிங்கம், வருணன் பூஜித்தது, வருணலிங்கம், வாயு பூஜித்தது வாயுலிங்கம் என வகைப் படுத்தப் படுகின்றது.
மனிதனாக ராமன் வாழ்ந்தபோது ஸ்தாபிதம் செய்தது, பின்னர் பூஜித்ததும், இன்றளவும் அனைவரும் வழிபட்டு வருவதும் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமியான "மானுட லிங்கம்" ஆகும். முனிவர்களால் பூஜிக்கப் பட்டது "ஆர்ஷிக லிங்கம்" எனவும், அசுரர்களால் பூஜிக்கப் பட்டது, "ராட்சச லிங்கம்" எனவும் சொல்லப் படுகின்றது.
முக லிங்கம் என்பது ஒரு முக லிங்கத்தில் இருந்து ஐந்து முக லிங்கங்கள் வரை உடையவை ஆகும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கும். ஆறாவது முகம் அதோ முகம் என்று சொல்லப் படும். அது அநேகமாய் மறைந்தே இருக்கும். அது பாதாளத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும், எனவும், சக்திகள் அதில் இருந்தே ஆரம்பம் எனவும் சொல்லப் படுகிறது. இந்த ஆறாவது முகத்தில் இருந்து தான் சிவஸ்வரூபம் ஆன சுப்ரமண்யர், நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாகவும் சொல்லப் படுகிறது.
பரம்பொருள் ஆன அந்த ஈசனுக்கு ஆறுமுகங்கள் என்பது சிவனடியார்களின் வழக்கு என்றாலும் நம்மால் அறியும் வகையில் இருப்பவை ஐந்து முகங்களே ஆகும். அதனால் தான் சுப்ரமணியருக்கு இறைவனின் சொரூபம் என உணர்த்தும் வகையில் ஆறுமுகங்கள் அமைந்தது எனவும் சொல்லப் படுகிறது.
இப்போது ஒவ்வொரு முகமும் நோக்கும் திசையையும், தன் முகங்களின் நிறங்களையும் பார்க்கலாம். கிழக்கே பார்த்து இருக்கும் முகம் "தத் புருஷம்" என அழைக்கப் படுகிறது. இது பள பளவென்ற பொன் நிறத்தில் காணப்படும். தென் திசையை நோக்கிக் கொண்டிருக்கும் முகம் "அகோரம்" என்று அழைக்கப் படும், இது கரு நிறத்தில் காணப்படுகிறது. மேற்கே பார்த்துக் கொண்டிருக்கும் முகம் "சத்யஜோதம்" என அழைக்கப் படும். இது தூய வெண்மை நிறத்தில் காணப்படும். வடக்கே பார்க்கும் முகம் "வாமதேவம்" எனப் படும், இது சிவந்த நிறத்தில் காணப் படும். ஈசான்ய திசை என்று அழைக்கப் படும் வட கிழக்குத் திசையில் காணப் படுவதோ, "ஈசான்ய முகம்" என்றே அழைக்கப் படும். இது பளிங்கு நிறத்தில் ஒளிர்கிறது.
ஒரு முகலிங்கம்:
முதலில் ஒரு முகம் கொண்ட லிங்கத்தைப் பற்றிப் பார்க்கலாம். தத்புருஷ லிங்கம் என அழைக்கப் படும் இந்த லிங்கத்தை வணங்கினால் சகல செல்வங்களுடன் கூடிய ராஜ யோகத்தை அடைவார்கள். சில கோயில்களில் இவ்வகை லிங்கங்கள் தென் மேற்கு மூலையில் காணப் படுகின்றது எனச் சொல்கின்றார்கள். தென்மேற்கு மூலையை "நிருதி" என அழைக்கிறார்கள். இந்த நிருதி தேவனால் இந்த லிங்கங்கள் வழிபடப் பட்டதால் இவை நிருதி லிங்கம் எனவும் அழைக்கப் பட்டு, கோயில்களின் தென் மேற்கு மூலைகளிலும் வைக்கப் படுகின்றன. சிதம்பரம், திருவண்ணாமலை, சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி கோயில், காளஹஸ்தி போன்ற இடங்களில் ஒரு முகத்துடன் கூடிய லிங்கங்கள் காணப்படுவதாயும் சொல்கின்றார்கள். வேதத்தின் சாரமான அக்னி மற்றும் ருத்ரன் இருவரின் இணைப்பே இந்த லிங்க வடிவம் என ஆய்வாளர்கள் சொல்வதாயும் தெரிகின்றது. ஆந்திராவில் உள்ள குடிமல்லம் என்னும் பகுதியிலும் சிவனின் முழுவடிவமும், லிங்கமாய் ஆன வரலாறும் காணப் படுவதாய்ச் சொல்கின்றார்கள். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் தெரிகிறது.
இருமுகலிங்கம்:
இப்போது இரு முக லிங்கம் பத்திப் பார்ப்போம்.
இரு முக லிங்கங்களில் ஒரு முகம் கிழக்கு நோக்கியும் (தத்புருஷம்) மற்றொரு முகம் மேற்கு நோக்கியும் காணப்படும். இவை "ம்ந்திரலிங்கங்கள்" எனச் சொல்லப் படுகின்றன. இவற்றை அதிகம் வழிபடுவது கர்நாடகாவில் உள்ள லிங்காயத்தார் என அழைக்கப் படும் வீர சைவர்கள் ஆவார்கள். சிவத் தொண்டு செய்பவர்களும் இந்த லிங்கங்களை வழிபடலாம் எனச் சொல்லப் படுகிறது. இந்த லிங்கங்களைப் பூஜிக்க தற்காலத்தில் "விருட்சி" என அழைக்கப் படும் இருவாட்சி மலர்கள் நல்லது. இரு முகம் கொண்ட ருத்திராட்சத்தால் அலங்கரிக்கலாம்.
மூன்று முக லிங்கம்:
அடுத்து மூன்று முக லிங்கங்கள். இவை கிழக்கு, தெற்கு, வடக்கு மூன்று திசைகளை நோக்கிக் காணப் படும். தத் புருஷம், அகோரம், வாமதேவம் என மூவகைப் பட்ட முகங்கள் கொண்ட இந்த லிங்கங்கள் முத்தொழிலையும் குறிப்பவை எனச் சொல்லப் படுகிறது. கிழக்கு முகம் ஆண்மையின் கம்பீரத்துடன் காணப்படுவதால் படைத்தலையும், தெற்கு முகம் கோபத்துடன் காணப் படுவதால், அழித்தலையும், வடக்கு முகம் பெண்மையின் ஜாடையுடனே சிரிப்புடனேயும் காணப் படுவதால் காத்தலையும் குறிக்கும். திரிமூர்த்தி லிங்கம் என அழைக்கப் படும் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரை கோயிலிலும், நாசிக்கில் உள்ள திரியம்பகேஸ்வரரும் திரி மூர்த்தி லிங்கங்கள் என அழைக்கப் படுகின்றன. இது தவிர, எலிபெண்டா குகையிலும் மும்முக லிங்கம் காணப் படுவதாய்ச் சொல்கிறார்கள். இந்த மும்முக லிங்கங்களுக்கு மும்முக ருத்ராட்ச மாலை அணிவித்து, மூன்று தளங்கள் உள்ள வில்வத்தால் வழிபடலாம்.
சதுர்முகலிங்கம்:
இனி சதுர்முக லிங்கங்கள் பத்திப் பார்க்கலாம். சதுர்முக லிங்கம் என்னும் நான்கு முக லிங்கம் "வேத லிங்கம்" என அழைக்கப் படுகிறது. இவற்றின் முகங்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளை நோக்கி இருக்கும். இவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைக் குறிப்பவை
என்று சொல்வார்கள். நேபாளத்தின் பசுபதி நாதர் கோயிலில் நம் கண்ணுக்குத் தெரிவது சதுர்முக லிங்கம் தான் என்றாலும், அவற்றுக்கும் மேல் நோக்கிய ஒரு முகமும், கீழ் நோக்கிய ஒரு முகமும் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளதாய்ச் சொல்லப் படுகிறது. ஆனால் நேபாள சதுர்முக லிங்கம் மார்பு வரையிலும், இரு கரங்களுடனும் காட்சி தருகிறது. நான்கு முகம் இருப்பதால் அங்கே நான்கு வாசல்களும் உண்டு. ஒவ்வொரு வாசலிலும் போய்த் தனித் தனியாகத் தரிசனம் செய்யும் வசதியும் உண்டு.
இது தவிர, காஞ்சியில் கச்சபேஸ்வரர் கோயிலிலும், திருவதிகை, திருவண்ணாமலை, திருவானைக்கா ஆகிய தலங்களிலும் காளஹஸ்திக்கு அருகே உள்ள மலை மண்டபத்திலும் சதுர்முக லிங்கங்கள் உள்ளதாய்த் தெரிய வருகிறது. இந்த லிங்கங்களுக்கு நான்கு முக ருத்திராட்சம் அணிவித்து நான்கு வில்வதளங்களால் வழிபடுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வழிபடுவோருக்குப் பிரம்ம ஞானம் கைவரப் பெற்று எட்டுத் திக்கிலும் புகழ் வாய்ந்தவராய்ச் சொல்லப் படுவார்கள்.
ஐந்து முகலிங்கம்:
ஐந்து முக லிங்கங்களில் திசைக்கு ஒன்றாக ஐந்து முகங்கள் தவிர, உச்சியில் வடகிழக்கு திசை நோக்கி ஒரு முகமும் காணப்படும். திருச்சியில் திருவானனக்காவில் கோவில் அருகே "பஞ்சமுகேஸ்வரர் கோயில்" என்று தனியாக உள்ளது. சஷ்டி அப்த பூர்த்தியை அந்தக் கோயிலில் வைத்துச் செய்யப் படுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வட இந்தியாவில் சில தலங்களிலும் பஞ்சமுக லிங்கங்கள் காணப் படுகின்றன. திருக்கைலையில் இறைவனின் தரிசனம் பஞ்சமுக லிங்க தரிசனம் என்றே சொல்லப் படுகிறது. இந்தப் பஞ்ச முகங்களில் இருந்தே கங்கை ஐந்து உருவங்களில் பொங்கி வருவதாயும் சொல்லப் படுகிறது. திருக்கோயில்களில் கடைப் பிடிக்கப் படும் "ஆகமம்" இந்த ஐந்து முகங்களில் இருந்தே வந்ததாயும் சொல்லப் படுகிறது. அதனால் பஞ்சமுக லிங்கத்தைச் சிலர் "சிவாகம லிங்கம்' எனவும் சொல்வார்கள்.
ஐந்து முக ருத்திராட்சத்தினால் மண்டபம் கட்டி, ஐந்து பொருட்களால், குறிப்பாய் பஞ்சகவ்யம் எனப்படும் பசும்பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவற்றால் அபிஷேஹம் செய்து, ஐந்து மலர்களால் மாலை அணிவித்து, ஐந்து வில்வங்களால் அர்ச்சித்து, ஐவகை நைவேத்தியம் செய்வித்து, வழிபடுதல் விசேஷம் எனச் சொல்கின்றனர்.
பஞ்ச முக லிங்கங்கள் தவிர்த்து, ஈசனின் ஆறாவது முகமும் உள்ளது. இந்த ஆறாவது முகம் கீழ்நோக்கியே காணப் படுகிறது. இது "அதோ முகம்" என அழைக்கப் படுகிறது. ஈசனின் ஐந்தாவது முகம் மேல் நோக்கி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டும், ஆறாவது முகம் கீழ் நோக்கி பாதாளத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கும். இந்த ஆறாவது முகம் நம் கண்களுக்குப் புலப்படாத ஒன்றாகும். இந்த ஆறு முகங்களில் இருந்தும், அவற்றின் நெற்றிக் கண்களில் இருந்து விளைந்த நெருப்புப் பொறிகளில் தோன்றியவரே முருகப் பெருமான் ஆவார். பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் பொங்கி வந்த போது, அதை விழுங்கியது இந்த ஆறாவது முகமே எனவும் சொல்லப் படுகிறது.
ஆறுமுகலிங்கம்:
ஆகவே ஈசனின் நீலகண்டமே ஆறாவது முகமாய்க் கருதுவோர்களும் உண்டு. ஆறுமுகங்களுடன் கூடிய லிங்கங்கள் எங்கும் வழிபாட்டுக்குக் காணக் கிடைக்கவில்லை. ஏனெனில் முருகப் பெருமானே சிவ ஸ்வரூபம் என்பதால் அவரே ஆறுமுக, சிவனாய்க் கருதி வழிபடுவோரும் உண்டு. திருவானைக் காவில் உள்ள தென் பிரகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகரும், மற்றொரு லிங்கத்தில் முருகப் பெருமானும் காணப் படுவதாய்ச் சொல்கின்றனர். காஞ்சியில் உள்ள ஆதி காமாட்சி அம்மன் கோயிலிலும், முன் மண்டபத்தின் லிங்கத் திருமேனியில் பிடாரியின் உருவம் அமைக்கப் பட்டு, சக்தி லிங்கம் என அழைக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர். அடுத்து சதாசிவ மூர்த்தி பற்றிப் பார்ப்போமா?
திருமூலர் திருமந்திரத்தில் சதாசிவ மூர்த்தியைப் பற்றித் துதிக்கையில் இவ்வாறு கூறுகிறார்:
"கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்தெழும்
தேடு முகம் ஐந்து செங்கண் மூவைந்து
நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே!" (ஏழாம் தந்திரம் பாடல் ஒன்று)
எனக் கூறுகின்றார்.
சதாசிவ வடிவத்துக்கு முகம் ஐந்து, திருப்பாதங்கள் இரண்டு, பத்துக் கைகள், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களாக மொத்தம் பதினைந்து கண்கள் இவற்றோடு தாமரைப் பீடத்தில் நிற்பதாய்க் கூறுகின்றார்.
இலிங்க வகைகள்
சுயம்பு லிங்கம் - இறைவன் இச்சைப்படி தானாக தோன்றிய லிங்கம்
1. தேவி லிங்கம் - தேவி சக்தியால் வழிபடபட்ட லிங்கம்.
2. காண லிங்கம் - சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட லிங்கம்.
3. தைவிக லிங்கம் - மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட லிங்கம்.
4. ஆரிட லிங்கம் - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.
5. இராட்சத லிங்கம் - இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.
6. தெய்வீக லிங்கம் - தேவர்களால் பூசை செய்யப்பட்டு முனிவர்களின் தவத்தினால் பூமிக்கு வந்த இலிங்கம்
7. அர்ஷ லிங்கம் - ரிசிகளும், முனிவர்களும் தங்களின் வழிபாட்டிற்கு உருவாக்கிய இலிங்கம்
8. அசுர லிங்கம் - அசுரர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.
9. மானுட லிங்கம் / மனுஷ்ய லிங்கம் - மனிதர்களால் வழிபடப்பட்ட இலிங்கம்
10. மாணி மாய லிங்கம் - இந்திரனால் வழிபடப்பட்ட லிங்கம்
11. தாமரமய லிங்கம் - சூரியனால் வழிபட்டப்பட்ட இலிங்கம்
12. முக்தி இலிங்கம் - சந்திரனால் வழிபடப்பட்ட இலிங்கம்
13. ஹேம இலிங்கம் - குபேரனால் வழிபடப்பட்ட இலிங்கம்
இவற்றில் மனுஷ்ய இலிங்கமானது தொண்னூறு வகையாக உள்ளதென மகுடாகமம் எனும் சைவ ஆகமம் கூறுகிறது.
• க்ஷணிக லிங்கம் - தற்காலிக வழிபாட்டிற்கு மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகியவைகளைக் கொண்டு உருவாக்கப்படும் லிங்கங்கள்.
• வர்த்தமானக லிங்கம் - பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் ஆகியவை ஒரே அளவாகவும், ருத்ர பாகம் அவைகளைவிட இருமடங்கும் இருக்கும் இலிங்கங்கள்.
• ஆத்ய லிங்கம் - பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் ஆகியவை அனைத்தும் சம அளவு இருக்கும் இலிங்கங்கள்.
சிவபெருமான் சதாசிவ மூர்த்தி தோற்றத்தில் தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து லிங்கங்களை தோற்றுவித்தார். இவை பஞ்ச லிங்கங்கள் எனவும் அறியப்படுகின்றன.
1. சிவ சதாக்கியம்
2. அமூர்த்தி சதாக்கியம்
3. மூர்த்தி சதாக்கியம்
4. கர்த்திரு சதாக்கியம்
5. கன்ம சதாக்கியம்
பஞ்சபூத இலிங்கங்கள்
நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆன இலிங்கங்கள் பஞ்சபூத இலிங்கங்கள் எனப்படும்.
1. அப்பு லிங்கம்
2. தேயு லிங்கம்
3. ஆகாச லிங்கம்
4. வாயு லிங்கம்
5. அக்னி லிங்கம்
முக லிங்கங்கள்
• ஏக முக லிங்கம்
• இரு முக லிங்கம்
• மும் முக லிங்கம்
• சதுர் முக லிங்கம்
• பஞ்ச முக லிங்கம்
ஆறுவகை இலிங்கங்கள்
திருமூலர் தனது நூலான திருமந்திரத்தினுள் ஆறுவகையான இலிங்கள் பற்றி குறிப்பிடுகின்றார், அவையாவன அண்ட இலிங்கம், பிண்ட இலிங்கம், சதாசிவ இலிங்கம், ஆத்ம இலிங்கம், ஞான இலிங்கம், சிவ இலிங்கம் என்பவனவாகும்.
இவற்றில் அண்ட இலிங்கம் என்பது உலகத்தினைக் குறிப்பதாகும்,
பிண்ட இலிங்கம் என்பது மனிதனுடைய உடலாகும்,
சதாசிவ இலிங்கம் என்பது சிவனையும் ஆதி சக்தியையும் இணைந்து உருவமாக கொள்ளுவதாகும்,
ஆத்ம இலிங்கம் என்பது அனைத்து உயிர்களையும் இறைவனாக காண்பதாகும்,
ஞான இலிங்கம் என்பது இறைவனின் சொரூப நிலையை குறிப்பதாகும்,
சிவலிங்கம் என்பது பொதுவான இறைவழிபாட்டிற்குறிய குறி.
பிற இலிங்க வகைகள்
1. கந்த லிங்கம்
2. புஷ்ப லிங்கம்
3. கோசாக்ரு லிங்கம்
4. வாலுக லிங்கம்
5. யவாகோதுமாசாலிஜ்ஜ லிங்கம்
6. சீதாகண்ட லிங்கம்
7. லவண லிங்கம்
8. திலாப்சிஷ்த லிங்கம்
9. பாம்ச லிங்கம்
10. கூட லிங்கம் அல்லது சீதா லிங்கம்
11. வன்சங்குர லிங்கம்
12. பிஷ்டா லிங்கம்
13. ததிதுக்த லிங்கம்
14. தான்ய லிங்கம்
15. பழ லிங்கம்
16. தாத்ரி லிங்கம்
17. நவநீத லிங்கம்
18. கரிக லிங்கம்
19. கற்பூர லிங்கம்
20. ஆயஸ்காந்த லிங்கம்
21. மவுகித்க லிங்கம்
22. ஸ்வர்ண லிங்கம்
23. ரஜத லிங்கம்
24. பித்தாலா லிங்கம்
25. திராபு லிங்கம்
26. ஆயச லிங்கம்
27. சீசா லிங்கம்
28. அஷ்டதாது லிங்கம்
29. அஷ்ட லோக லிங்கம்
30. வைடூர்ய லிங்கம்
31. ஸ்படிக லிங்கம்
32. பாதரச லிங்கம்

ஏழரைச் சனி என்னதான் செய்யும்?- அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

Image may contain: 1 person, smiling

சனி பகவான் கிரகஸ்துதி

நீலாஞ்சன ஸமா பாஸம்

ரவி புத்ரம், யமா க்ரஜம்

ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம்

தம் நமாமி ஸனைச்சரம்

சனி பகவான் காயத்ரி மந்திரம்

காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|

தந்நோ மந்த: ப்ரசொதயாத்||

Read more...

தைப்பூசத் திருநாளும் அதன் சிறப்பும்

E-mail Print PDF

தைமாதத்தில் வரும் பூசம் நட்சத்திரம் இந்துக்களால் பண்டுதொட்டு இறை வழிபாட்டுக்குரிய புண்ணிய நன்னாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப் பெற்று வருகின்றது. தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அருள் பெற சிறந்த விரத நாளாகவும்; 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரமாகவும் பூசம் அமைகின்றது்.

தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பூரணை), இருக்கும். தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தைமாதம் உத்தராயண காலத்தின் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும்.பூரணை தினத்தில்; சிவாம்சமான சூரியன்மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்க ”தைப்பூச திருநாள்” ஆமைகின்றது. இச் சிறப்பு மிக்க இத்தினம் இவ் வருடம் 30.01.2018 அன்று அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.

தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும், சிவசக்தி ஜக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்ததாகவும் ஐதீகம். சிவனின்றேல் சக்தியில்லை, சக்தியின்றேல் சிவனில்லை என்று கூறபடுகின்றது. அதாவது சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகின்றது.

சிவசக்தி இணைந்த இப்புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீரென்றும், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கின்றோம். எனவே உலக இயக்கத்திற்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கின்றோம். இது வழிவழியாக இந்துக்கள் கைக்கொண்டுவரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகின்றது.

இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகின்றது. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பர். அந்த அவனாகிய இறைவன் இறைவியுடன் இணைந்து கலந்தமையாலேயே உலக இயக்கம், இயற்கையின் அதாவது பஞ்சபூதங்களினூடாக நிகழ்கின்றது என்பதை நினைவில் கொள்ள வழிவகுக்கும் நாள் இந்நாள்.

உலகிலேயே உயிரினங்கள் யாவற்றினதும் தோற்றத்திற்கும் வாழ்வுக்கும் செயற்பாடுகளுக்கும் மறைவிற்கும் இயற்கையே காரணியாக அமைகின்றது. இயற்கையை மீறி எதுவும் செயற்ப்படமுடியாது. அதாவது நம்பிக்கைக்கு மேலான சக்தியாகிய இறைசக்தியை மீறிச் செயற்படமுடியாது. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இயற்கையே விதியாக அமைகின்றது. இதை வலியுறுத்துவதும் இத்தைப்பூச நன்னாளின் ஒரு அம்சமாகும்.

தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும் பிரகஷ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்தநாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது.

அத்துடன் வாயுபகவானும், வர்ணபகவானும், அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமை உணர்த்தப்பட்ட புண்ணியநாள் இத் தைப்பூச நன்னாளாகும்.

சிவனுக்குரிய சிறப்பு மிக்க நன்னாட்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் இத் தைப்பூச நன்னாளானதுமுருகப் பெருமானுக்குரிய விசேட நாளாகவும் விளங்குகின்றது. சிவசக்தி ஐக்கியமான முருகப்பெருமான் மாட்சிமை பெறும் தினமாகவும். முருகப் பெருமான் அன்னையிடம் வேல் வாங்கிய திருநாளும் இதுவாக அமைகிறது. சிவனின் அருளினால் தோன்றிய முருகன் அன்னையின் சக்தியையும் பெற்று சிவசக்தியின் பேரருள் மிக்கவராக இத் தைப்பூச நாளில் திகழ்வதால் முருகன் ஆலயங்களில் அபிஷேகம், திருவிழா முதலியன நிகழ்தப்படுகின்றன. முருகனை வேண்டிப் பலர் இந்நாளில் விரதமிருப்பர்.

முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள்.

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்று வாழ்க்கையை நம்பிக்கையுடன் சூரிய பகவானுக்குப் பொங்கலிட்டு வழிபட்டு எதிர்நோக்கும் நாம் தைப்புச நன்னாளிலே நம்மை வாட்டிவதைக்கும் துன்ப, துயரங்கள் யாவும் துடைத்தெறியப்பட வேண்டும் என்று நம்மை ஆட்டிவிக்கும் மாபெரும் சக்தியான சிவசக்தியை மனதிருத்தி பிரார்த்தனை செய்வதுடன் வாழ்விலே நலங்கள் சூழ, வாழ்வு சிறக்க வாழவழி கிட்ட வேண்டும் என்று விரதமிருந்து வேண்டுதல் செய்து தொழுகின்றோம்.

இத்தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பாகும் இயலாதவர்கள் புண்ணிய நதிகளை நினைத்துப் போற்றி வழிபட்டு நீராடுதல் வேண்டும். வாழ்வில் ஒளியேற்றும் இத் தைப்பூச நன்னாள் பல்வேறு நற்செயல்கள் தொடங்கும் நாளாக அமைகின்றது.

"தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்" என்பது பழமொழியாக அமைவதால்; ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதி துண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்பெறுகின்றன.

இத் தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். நம்பிக்கையே வாழ்வை வழி நடத்தும் சக்தி. எமக்கும் மேலான சக்தியொன்று உண்டு. அந்தச் சக்தியின் மீது அதாவது உலகைப் படைத்து, காத்து, அருளி, அழித்து, மறைக்கும் அந்த மாபெரும் சக்தி மீது பக்திகொண்டு நம்பிக்கையுடன் வழிபட்டால் தன்னம்பிக்கை தானே நமக்கு வந்துவிடும்.

இறை சக்தியாகிய அதற்கு மேலான சக்தியொன்றில்லாத மாபெரும் சக்தி நமக்குத் துணைசெய்யும். எம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கை நம்மனதில் மேலோங்கிவிட்டால் தன்னம்பிக்கை தானே வந்து நம் வாழ்வை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளச் செய்யும்.

உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர் கொள்ள இத்தைப்பூச நன்னாளிலே சிவசக்தி பேரருளை நாடி வழிபடுவோம்...

முருகனுக்கு காவடி எடுப்பதன் காரணம் என்ன?

நேர்த்தியாக காவடி தூக்கும் நிகழ்வு எவ்வாறு உருவானது?

முருகனால் சங்காரம் செய்யப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில்லாசிரியனாகத் திகழ்ந்தவன் இடும்பன் என்னும் அசுரன். முருகனால் சூரபத்மன் ஆகியோர் அழிக்கப்பட்ட பின்பு இடும்பன் மாத்திரமே எஞ்சி இருந்து சிவபூஜை செய்ய ஆரம்பித்தான்.

சிறந்த சிவபக்தனாக விளங்கிய இடும்பனுக்கு அவனது மனைவி இடும்பி உற்றதுணையாக விளங்கினாள். இவர்கள் தங்கியிருந்த இடம் "இடும்ப வனம்' எனப்பட்டது. இடும்பன் சூரபத்மனைப்போல் அல்லாது முருகனின் அருள்வேண்டி கேதாரமலையில் தவமிருந்த நேரமிது.

அகத்தியர்; இமயமலைச்சாரலில் சிவகிரி, சக்திகிரி ஆகிய இருமலைகளையும் பூஜித்து வந்திருக்கிறார். அகத்தியரின் இருப்பிடமோ பொதிகைமலை. இமயமலையில் நெடுங்காலம் தங்க முடியாது இருந்தமையால் கிரிகள் (மலைகள்) இரண்டையும் பொதிகை மலைக்கு எடுத்து செல்ல அகத்தியர் விரும்பினார்.

எனவே கேதாரமலை வரை இருமலைகளையும் கொண்டு வந்து அதற்குமேல் முடியமையால் அங்கே அகத்தியர் இளைப்பாறினார்.

அங்கே தவம் செய்து கொண்டிருந்த இடும்பன்; அகத்தியரை கண்டதும் ஓடி வந்து வணங்கினான். இடும்பனை ஆசீர்வதித்த அகத்தியர் "யாரை நோக்கி தவம் இருக்கிறாய்?" என்று கேட்டார். சூரபத்மனைப் போல நானும் அழியாமல் இருக்க முருகனை வேண்டி தவமிருக்கிறேன்" என்றான்.

அகத்தியர், "முருகனின் அருள் பெற சுலபமான வழி ஒன்று கூறுகிறேன். சிவகிரி, சக்தி கிரி இரண்டும் முருகனின் பெற்றோர் அம்சம். இவற்றை பொதிகை மலை வரை தூக்கி வந்து உதவினால் நீ முருகனின் அருள் பெறுவாய்" என்றார். இடும்பன் மலைகளைத் தூக்கப் பல விதங்களிலும் முயற்சி செய்தான். ஆனால் முடியவில்லை.

"முடியவில்லையே" என்றான். அகத்தியர் முருகனின் மூல மந்திரங்களை உபதேசித்தார். இடும்பன் மூல மந்திரங்களை பக்தியோடு உச்சரித்தான். அஷ்ட நாகங்கள் கயிறுகளாக மாறின. பிரம்ம மந்திரம் ஜபித்தவுடன் பிரம்ம-தண்டம் துலா-தண்டமாக மாறியது. கயிறான நாகங் களை துலா தண்டத்தின் இருமுனைகளிலும் உறிகளாக கட்ட சொன்னார்.

மலைகளை மந்திரங்களை சொல்லிக் கொண்டே தூக்கி உறியில் வைத்தான் இடும்பன்.

திருவாவினன்குடி (பழநி) வரை வந்தாயிற்று. மூச்சிறைத்தது. இரு மலைகளையும் கீழே வைத்தான். பின் தொடர்ந்த அகத்தியரும் திருவாவினன்குடி முருகனை தரிசித்து திரும்பினார்.

இளைப்பாறிய இடும்பன் மலைகளைத் தூக்கி கொண்டு புறப்பட முயற்சித்தான். மலைகள் நகரவில்லை. மந்திரங்களும் பலிக்கவில்லை.

"மிகவும் பலசாலியாக இருந்தும் உன்னால் தூக்க முடியவில்லையே" என்ற குரல் கேட்டு இடும்பன் திரும்பி பார்த்தான். மலை மேல் ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் கேலி செய்தான்.

ஆத்திரத்துடன் சிறுவன் மேல் பாய்ந்தான் இடும்பன். சிறுவன் நகர, மலை மீதிருந்து உருண்டான். கூடவே இடும்பனின் மனைவி ஓடி வந்தாள். ஆடு மேய்க்கும் சூதுரட்டிக் கம்பு "வேலாக" மாற, சிறுவன் குமரனாக' காட்சி தந்தான்.

"முருகா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா, வேலவா, சுப்பிரமண்யா, ஆறுமுகா எனது கணவனின் தவறை மன்னித்தருள வேண்டும். எனக்கு மாங்கல்ய பிச்சை தந்தருள வேண்டும், என கண்ணீர் விட்டு கதறினாள்.

முருகன் அருளினால் இடும்பன் எந்த சேதமுமில்லாமல் எழுந்து வந்தான். இருவரும் முருகனை வணங்கி அவனருள் பெற்றனர்.

"இடும்பா! இந்த மலைச்சிகரங்கள் இங்கேயே இருக்கட்டும். இதிலுள்ள மூலிகைச் செடிகள் மக்களின் உடல் பிணி தீர்க்கும். நீ இங்கு காவல் தெய்வமாக இருப்பாய்.

உன்னைப் போல் காவடி தூக்கி வருபவர்களின் குறைகள் உடனே விலகி விடும். உன்னை வணங்கிய பின்பு என்னை வணங்குபவர்களின் கோரிக்கை உடனே நிறைவேறும்" என்று வரமளித்து அகத்தியரையும், இடும்பன் தம்பதியினரையும் ஆசிர்வதித்து மறைந்தான்.

முருகனை வழிபடுவதற்கு முன் இடும்பனை வழிபட வேண்டும் என முருகன் விரும்பியதால், பழநி முருகன் எழுந்தருளி இருக்கும் மலைக்கு அருகே உள்ள இடும்பமலையில் இடும்பனை தரிசித்த பின் முருகனை வழிபடுகின்றார்கள். அனேகமான முருகன்

ஆலயங்களில் இடும்பன் வாசலிலேயே பரிவாரமூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

காலையடியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஞானவேலாயுதர் ஆலயத்திலும் இடும்பன் பரிவார மூர்த்தியாக வாசலில் காட்சி தருகின்றார். அதுவும் சிரஞ்சீவி மூலிகை மரமான நெல்லியின் நிழலில்.

தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். இந்தக் காவடி எடுப்பதன் காரணம் என்ன?

அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் (பள்நீ) நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

ஆனால் அந்த சிறுவன் இந்த மலை ”தனக்கே சொந்தம்” என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.

இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக முருகன் வரமளித்தார்.

இந் நிகழ்வு முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் கூறுகின்றார்கள்.

எது எப்படியோ? ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் துன்பமும் இரண்டு சுமைகளாக சரி சமமாக இருக்கிறது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக் கோலாக உள்ளது என்பதே உண்மை.

நெய் நிரப்பி, இருமுடிகட்டும் - கனடா ஐயப்ப சுவாமிமார்கள் -. 26.12.2017

E-mail Print PDF

இன்று சபரிமலை யாத்திரை புறப்படும் கலேஸ் சாமியுடன் எங்களூர் சாமிமார்

நெய் நிரப்பி, இருமுடிகட்டும் - கனடா ஐயப்ப சுவாமிமார்கள் -. 26.12.2017.

நிகழ்வினை பார்வையிட இங்கே அழுத்துக https://photos.google.com/share/AF1QipNYfQW8jB9cbzRPGNwdKbS2FwTU9OX3Ecckzltp_arYwhiM-qoYNegfLkKsH9VYUQ/photo/AF1QipP3EvBr2R21iuI9beM7Wt2b-6x5z9a7qycbLE3b?key=M0NHMnp5aE9oV3ZHTkNrQXRoNjhkVjZrRFJWNDV3

Image may contain: 5 people, people standing

கனடா - ஐயப்பன் இந்து ஆலயத்தில் நெய் நிரப்பி இருமுடி கட்டும் சுவாமிமார்கள் - 26.12.2017

E-mail Print PDF

நெய் நிரப்பி, இருமுடிகட்டும் - கனடா ஐயப்ப சுவாமிமார்கள் -. 26.12.2017.

நிகழ்வினை பார்வையிட இங்கே அழுத்துக

https://photos.google.com/share/AF1QipNYfQW8jB9cbzRPGNwdKbS2FwTU9OX3Ecckzltp_arYwhiM-qoYNegfLkKsH9VYUQ/photo/AF1QipP3EvBr2R21iuI9beM7Wt2b-6x5z9a7qycbLE3b?key=M0NHMnp5aE9oV3ZHTkNrQXRoNjhkVjZrRFJWNDV3

Image may contain: 5 people, people standing

 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  6 
 •  7 
 •  8 
 •  9 
 •  10 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 30

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்