Friday, Mar 23rd

Last update10:58:28 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு

மரண அறிவித்தல் - திருமதி. கந்தசாமி பூமணி அவர்கள்

E-mail Print PDF

Image may contain: 1 person, selfie and closeup

காலையடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் ”மணி” என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்ற திருமதி. கந்தசாமி பூமணி இன்று காலையடியில் சிவபதம் எய்தினார்

அன்னார் அமரர். சிவஞானம் கந்தசாமி (பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு  மனைவியும்;

மனோகரன் (சீமெந்து தொழிற்சாலை உத்தியோகத்தர்) அவர்களின் அன்புத் தாயாரும்;

பரிசித்து (கனடா) அவர்களின் பேத்தியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவின, நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

இலட்சார்ச்சனை விஞ்ஞாபனம் - பறாளை சிவசுப்பிரமணியர் தேவஸ்தானம்

E-mail Print PDF

Image may contain: 1 person

image may contain: one person  என்ற பகுதியை கிக் செய்தால் நோட்டீசை பார்வையிடலாம்

பணிப்புலம் பெற்றெடுத்த உத்தம நாயகன் – அமரர். சபாபதி அழகரத்தினம் ஐயா அவர்கள் - ஆக்கம்: கணபதிப்பிள்ளை கனகரத்தினம் – பணிப்புலம்

E-mail Print PDF

Image may contain: one or more people, eyeglasses and text

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வானுறையும் தெய்வத்துள் மட்டுமல்ல, எம் எல்லோர் உள்ளங்களிலும் எண்ணங்களிலும் நீங்காத இடம் பெற்ற எம் ஊர் பெரியவர் திருஅழகரத்தினம் ஐயா அவர்களின் நினைவு மீட்பு இப்பகிர்வு.

எம் சமூகத்தின் குறைகளை தாங்கும் தூணாகவும், நிறைவுகளை பறை சாற்றி ஊரின் பெருமைகளை அடையாளப்படுத்தும் நிறை தீரனாகவும் திகழ்ந்தவர் அமரர் அழகர் ஐயா அவர்கள். தொல்காப்பியம் கூறிநிற்கும், தலைவனாகிய ஆடவன்மேல் அமைவன என்ற இரண்டு பண்பின் தொகுதிகளான “பெருமையும் உரனும் ஆடூஉ மேன” இற்கு முற்றும் சொந்தக்காரர்.

அமரர் ”அழகர்”. நெடியதோற்றமும், கூரிய விழிகளும், குமிண் சிரிப்பும், பவளம் போல் மேனியிற் பால்வெண்ணீறும், கூடிய புறத்தோற்றத்திலும், முகத்தினூடு தெரியும் அகத்தோற்றத்திலும், மற்றோர்கள் கண்டவுடன் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் வசீகரத்தினை இயற்பிற் கொண்டவர் ஐயா அவர்கள்,

நற்குணமும், நல்லறிவும், அனுபவமும், விவேகமும், தீர்கதரிசனமும், ஆன்மீக அறிவும் மிக்க ஒரு சமூகத் தொண்டன். வெண்கலத்தின் ஓசை மிகுவது போல்புல்லியர் ஆர்ப்பரிக்க, வெள்ளிக் கலத்தின் ஓசை மிதமாவது போல் சிற்றுணர்வோர் சிலுசிலுக்க, பொன் கலத்தில் உண்டாகா ஒலி போல் முற்றுணர்வோர் ஒன்றும்மொழியாது அமைதியாக இருப்பர்.

பெருமகனார், முற்றுணர்வோர் தோற்க, முழு நிலையான அறிவிற்றனயன் தளம்பாத நிறைகுடம். ஆர்பரிப்பற்ற செயல்வீரன். நிதானமான சொல்வேந்தன். வாழ்வியலின் நுண்ணிய நயங்க ள் முற்றும் தன்னகத்தே இயற்பிற் கொண்ட பெரு மகனின் இழப்பு, எம் சமூக உறவுகளுக்கு ஒப்பற்ற துயர்.

அவர் இளைஞனாக இருந்த காலத்தில், தனது நண்பர்களுடன் இணைந்து மிகுந்த சிரமங்களின் மத்தியில் அம்பாள் சனசமூக நிலயத்தை அமைத்து, அங்கு கிராம முன்னேற்றச்சங்கம், இந்து இளைஞர் இயக்கம், மாதர் சங்கம் மற்றும் ஆங்கில, தமிழ் நூல்களைக் கொண்ட நூல் நிலையம் என்பன இயங்க முன்னோடியாக திகழ்ந்தார்.

ஊரின் மத்தியில் அமைந்துள்ள முத்துமாரி அம்பாள் ஆலயத் திருப்பணி வேலைகள் முடங்கிக் கிடந்த நேரம், அதன் தேவைகளில் அதீத கவனம் கொண்டவராக, பெரும்சிரமங்கள் மத்தியிலும் திருப்பணி சபை ஒன்றை நிறுவி, அதனூடு, ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பெற்று. புதுப் பொலிவுடன் காட்சியளிக்க கண்டார் .

உட் புறப் பூசல்கள்காரணமாக இவ்வாலயம், 1976 ம் ஆண்டு பூட்டப் பெற்று இருந்த காலத்தில், இரு பெரும் முரண் அணிகளாக பிளவு பட்டு இருந்த திருப்பணிச் சபையினரையும், ஆலயபூசகர்களையும் சமாதானமாக்கி, ஆலயத்தினை மீண்டும் திறந்து, பூசைகள் மற்றும் திருப்பணிகள் செவ்வனே நடைபெற அயராது முயன்றிருந்தார்.

பூசாரிமார் சார்பில்என்னையும், மறைந்த நலன்விரும்பியும், சமாதான விரும்பியுமான அமரர் சின்னையா பொன்னுத்துரை அவர்களையும் அழைத்து கலந்தாலோசித்தபின், தானே சமாதானதூதுவனாக திருப்பணிச் சபையினரிடம் சென்று பூசாரிமாரின் விருப்பத்தை தெரிவித்து அவர்களின் சம்மதம் பெற முயன்றார்.

இருப்பினும், கற்றறிந்து, சமூகப் பொறுப்பில் தீர்க்கமான நிலைகளில் இருந்தோருக்கும் சாமான்ய சமூகத்திற்கும் புரிதல்களில் இருந்த அகண்ட இடைவெளியும், பிடிவாத மன இறுக்கங்களும், இவரது விடா முயற்சியை, அந்த கால கட்டதத்தில் நிறைவேற்றாத தடை முட்களாக இருந்துவிட்டன, இருந்த போதிலும், அதிலிருந்து சற்றும் மனம் தளராதவராக, பக்கச் சார்பற்ற, பொறுப்பான, மனுதர்ம சாத்திர வழி முயன்று கொண்டே இருந்து, ஒரு கட்டத்தில் அவரது உயர் நோக்கங்கள் நிறைவேறக் கண்டார்.

எனது இள பராயக் காலங்களில் (1960-1970), அவர் திருமணமாகி மனைவி மக்களுடன் வாழ்ந்த குடும்ப சுமையிலும் , நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்; அம்மன்கோவில் முற்றத்திற்கு வரத் தவறுவதும் இல்லை. வந்தால் எங்களுடன் அளவளாவி எமக்கு அறிவு சார்ந்த தூண்டுதல்களை விதையாது வீடு செல்வதும் இல்லை.

தாம்அறிந்தை மற்றவர்களிடம் கேள்விகள் கேட்டு கேட்டு எம்மை சிந்திக்க தூண்டி பின் விளக்கம் சொல்லி, எமது அறிவுத்தேடலை உந்தச்செய்த உத்தமர். அவர்தம் கூறிய புத்திமதிகள் மற்றும் காட்டிச்சென்ற அறவழி இப்பொழுதும் எம் வாழ்வியலில் அழியாத சாட்சிகளாக எதிரொலிக்கின்றன.

அமரர் அழகரத்தினம் ஐயா அவர்களின் கல்வியறிவும், உயர்தக இயல்பாற்றல்களும், சுங்க திணைக்கழத்தில் ஆரம்ப நிலை உத்தியோகத்தராக இணைத்தது. அவரது நேர்மை,அறிவு, ஆற்றல் பணிவு, விவேகம் போன்ற நற்குணங்கள் சுங்கத் திணைக்கழகத்திற்கு அரும்பெரும் சொத்தாக அமைந்தது, செவ்வனே, சிறப்பியல்புச் சேவை நிமித்தம் பதவிஉயர்வுகள் பெற்று, சுங்க இலாகா பிரதிப் பணிப்பாளராக உயர்ந்த பதவியை வகித்து, ஓய்வு பெற்றார்.

ஐயா அவர்களுக்கு ஆன்மீக அறிவும், தெவீக சக்தியும் பரம்பரையாக வந்த சொத்து. முருகப்பெருமானிடம் அமைந்த கட்டுக்கடங்காத பக்தி நிமித்தம், அருணகிரிநாதர்அருளிச் செய்த ”கந்தர் அநுபூதி” என்னும் தோத்திரத்தில் மறைந்துள்ள ஆழமான கருத்துக்களை மிக நுட்பமாக ஆராய்ந்து, “அநுபூதிச் செல்வன்” என்னும் நூலில் பதிப்பித்து, ஓய்வு பெற்ற அதிபரும், அமரருமான மதிப்பிற்குரிய சண்முகரத்தின சர்மா அவர்கள் மூலம் காலையடியில் அமைந்துள்ள ஞானவேலாயுதர் ஆலயத்தில் வெளியிட்டு தமிழுக்கும் சைவத்திற்கும் பெருமை சேர்த்தார்.

அத்துடன் திருமுறைகளின் தாற்பரியம் என்னும் நூலையும் பதிவிலிட்டு வினியோகித்தார். இவ் நூல்களில் குறிக்கப்பெற்ற சில விடயங்களில், பொருள் விளக்கம் வேண்டி வினவிய பொழுது, அவர் தெரிவித்ததாவது, புத்தகத்தில் இடம்பெற்ற சில பொருளடக்கம், தனது இயல்புகளுக்கும் அப்பாற்பட்டது என்றும், அவற்றை நிறுவியது தன்னோடு பொருதிய தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அமானுசிய அனுக்கிரகமேயன்றி வேறேதும் இல்லை என்றார்.

அவை மட்டுமன்றி; ஜோதிட சாஸ்திரத்திலும் வித்தகராக திகழ்ந்தார். அண்மைக் காலம் வரை சோதிட வல்லுணர்களில் பெயர் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு அவர் முதன்மையாளராகவும் விளங்கினார்.

ஐயா அவர்களின் கல்வியறிவும், ஆற்றலும் சுங்க திணைக்கழத்தில் ஆரம்ப நிலை உத்தியோகத்தராக இணைத்தது. அவரது நேர்மை, அறிவு, ஆற்றல் பணிவு, விவேகம்போன்ற நற்குணங்கள் சுங்கத் திணைக்கழகத்திற்கு அரும்பெரும் சொத்தாக ஆக அமைந்தமையால் பதவி உயர்வுகள் பெற்று சுங்க திணைக்கழக பிரதிப் பணிப்பாளராகஉயர்ந்த பதவியை வகித்து ஓய்வு பெற்றார்.

இத்துணை பெருமைகளையும் தன்னகத்தே கொண்ட எம்மூர் பெருமகன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதனை புருவம் உயர்த்தி சொல்வதில் பெருமை கொள்கின்றோம்.

பெரியார் அமரர் அழகரத்தினம் ஐயா அவர்கள் பெருமையையும், புகழையும் பெற்றுக் கொள்ள இவ்வுலகில் அவரை சரியான முறையில் வழிநடத்திய அந்த ஜீவாத்மா, பொறிவழிச் செல்லாது, பஞ்சமா பாதகங்கள் புரியாது, அறநெறிவழி நின்று நற்செயல்கள் புரிந்ததினால் அந்த ஜீவாத்மாவை பீடித்திருந்த கன்மவினைகள் நீக்கி பரிசுத்த ஆன்மாவாகி பரமாத்மாவுடன் இணைந்து மோட்ச நிலை அடைய வேண்டும் என்பதே நியதி.

பெரியார் அமரர் அழகரத்தினம் ஐயா அவர்களை மதிப்போடும், மரியாதையோடும் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ வைத்த அந்த ஆத்மா வானுறையும் தெய்வத்துள்வைக்கப்படும் என்ற குறள் மொழிக்கு இணங்க; பரமாத்மாவுடன் இணைந்து மோட்ச நிலை அடைய நாமும் இறைவனை பிரார்த்திப்போமாக.

அந்த நன்நோக்காளர், உயர் பண்பாளர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதனை எண்ணி பெருமை கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா மோட்ச நிலை அடைய நாமும் இறைவனை பிரார்த்திப்போமாக.

ஓம் சாந்தி! ஓம்சாந்தி!! ஓம் சாந்தி!!!.
நன்றி, வணக்கம்

கணபதிப்பிள்ளை கனகரத்தினம் – பணிப்புலம்

அமரர். உயர்திரு சுப்பிரமணியம் திருகேதீஸ்வரன் (அதிபர் ஆறுமுகவித்தியாலயம்) அவர்கள் தனது வாழ்கையில் பின்பற்றிய நற்பண்புகள்.

E-mail Print PDF

* ஏழ்மையிலும் நேர்மை

* கோபத்திலும் பொறுமை

* தோல்வியிலும் விடாமுயற்ச்சி

* வறுமையிலும் உதவிசெய்யும் மனம்

* துன்பத்திலும் துணிவு

* செல்வத்திலும் எளிமை

* பதவியிலும் பணிவு

* பட்டமும் பதவியும் சேவை செய்வதற்கே என்ற பெருந்தன்மை

* தகுதி பாராது எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தும் மனப்பான்மை.

* நிறைகுடம்போல் தளம்பாமை

* கல்வியறிவு மட்டுமே எமது ஊரையும், சமூகத்தையும் உயர்த்தும் என்ற உன்னத நோக்கை பெரியார் அப்துல் கலாம் அவர்கள் கூறியதுபோல் கனாக் கண்டு செயல் படுத்த முயற்சித்த உத்தமர்

Image may contain: 1 person, standing

நன்றி

அமரர். உயர்திரு. சுப்பிரமணியம் திருகேதீஸ்வரன் அவர்களின் சேவை நினைவு கூறலும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் - இடம், நேரம் மாற்றப்பெற்றுள்ளது

E-mail Print PDF

Image may contain: 1 person, text

கடந்த 27.02.2018 அன்று எமது ஊரையே உலுக்கி உயிர்பிரிந்த உத்தமனின் உயர்ந்த சேவையை நினைவு கூர்ந்து அவரின் ஆத்மா சாந்தி அடைய; புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் எம்மூர் மக்களால் உருவாக்கப் பெற்ற பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா நிர்வாகிகளால் முன்னெடுக்கப் பெற்றுள்ள நிகழ்வு எதிர் வரும் 18.03.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இலக்கம் 3840 - Finch Ave E, Scarborough, ON M1T 3T4 ல் அமைந்துள்ள ஸ்காபறோ மெற்றொபொலிரன் சென்ரரில் பி. பகல் 3:00 மணிக்கு நடைபெறும் என்பதனை அறியத் தருகின்றது.

இவ் நிகழ்வில் பங்குபற்றி எமது ஊரின் சேவகனும், ஆறுமுகவித்தியாலய அதிபருமாகிய அமரர். திருகேதீஸ்வரன் அவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து அன்னாரின் ஆத்மா சாந்திபெற பிரார்த்தனை செய்ய வருகை தருமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

நன்றி

 


ஊரையே உலுக்கிய மரண அறிவித்தல் - உயர்திரு. சுப்பிரமணியம் திருதீஸ் அவர்கள்: தகனம் - 01.03.2018 வியாழக்கிழமை:- இறுதி ஊர்வலம் வீடியோ இணைப்பு

E-mail Print PDF

Image may contain: 1 person, text

சில்லாலை-மேற்கு, பண்டத்தரிப்பை சோ்ந்த சுப்பிரமணியம் திருக்கேதீஸ்வரன் அவர்கள் 27.02.2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார்: சிவபதமெய்திய சுப்பிரமணியம் - மனோன்மணி தம்பதியரின் அன்புமகனும்;

நமசிவாயம் - லீலாவதி தம்பதியரின் அன்புமருமகனும்;

நவமலரின் அன்புக்கணவரும்;

ரேகா (உயா்தரமாணவி, பண்டதரிப்பு பெண்கள் உயா்தரக்கல்லூரி), மித்திரன் (உயா்தரமாணவா், மகாஜனக்கல்லூரி, தெல்லிப்பளை), உமைபாலா (மாணவா், சில்லாலை றோ.க.த.பாடசாலை) ஆகியோரின் அன்புத்தந்தையும்;

சிவனேஸ்வரி, நகுலேஸ்வரி, செந்தாமரை, சிவனேசராசன் (ஆசிரியா். அச்சுவேலி மத்தியகல்லூரி), யாதவன் (மதுவரி உத்தியோகத்தா், சங்கானை), சிவசக்தி ஆகியோரின் அன்புச்சகோதரரும்;

தா்மலிங்கம், வசந்தமலா், சுகிர்தமலா், பிரபாகரன் ஆகியோரின் அன்புமைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (01.03.2018) வியாழக்கிழமை பி.ப. 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு பூதவுடல் தகனம் செய்யப்பெறும். .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

https://www.facebook.com/sabanayagam.anujan/videos/2039131392770882/

https://www.facebook.com/sabanayagam.anujan/videos/2039259539424734/


அமைதியான வாழ்க்கை வாழ்ந்து காட்டிய உத்தம புருஷன்

பிறந்த குடும்பத்தின் புகழ் சேர்த்திட இளமையில் தம் புத்தியைத் தீட்டி; கிராமத்தை வளர்த்திட அமைதியாக நகர்ந்து; ஊரில் நடைபெறும் எல்லா நிகழ்வுகளிலும் முன்னின்று உழைத்து

கற்றோர் பலர் நாஸ்திகம் பேச, ஆஸ்திகனாக அறவழி நின்று இறைபணி செய்து நற்பழ விருட்ஷமாக வாழ்ந்து;  ஊர் பாடசாலையில் அதிபராகி பல கல்விமான்களை உருவாக்கி;

தம் உடலை கவனிக்காது பாடசாலையின் முனேற்றத்திற்காக அயராது உழைத்து இளைத்திருந்த வேளை; காலதேவன் காச்சல் என்னும் நோயாக வந்து உத்தராயண காலத்தில் கவர்ந்து சென்றான்.

(உத்தராயண காலத்தில் உயிர் பிரிந்தால் மோட்சம் கிடைக்கும் என்பதனால் பீஷ்மர் அம்புப் படுக்கையில் காத்திருந்து உயிர்நீர்த்தார்). அத்துடன் புனிதம் நிறைந்த மாசிமகம் திருநாளில் 01.03.2018 பூதவுடல் அக்கினியுடன் சங்கமிக்க செய்வதும் இறைவன் கொடுத்த வரமே.

சிவபதம் எய்திய அமரர். உயர்திரு. திருக்கேதீஸ்வன் அவர்களின் மறைவால் துயருறும் அன்பு மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்களுடன் நாமும் இணைந்து துயருறுகின்றோம்.

திருக்கேதீஸ்வரன் அவர்களின் உடலை தாங்கி இறைபணி, பொதுப் பணிகளை செய்யத் தூண்டிய அந்த ஆன்மா சாந்தி பெற்று இறைபதம் அடைய இறைவனை பிரார்த்திப்போமாக. ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஒம் சாந்தி!!!

 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  6 
 •  7 
 •  8 
 •  9 
 •  10 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 127

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்