Saturday, Dec 20th

Last update12:16:36 AM GMT

You are here: ஆரோக்கியம்

அழகுக் குறிப்பு - மூக்கு மற்றும் காது அழகு படுத்துவது எப்படி? அறிந்து கொள்வோம்

E-mail Print PDF

கிளி மூக்கு, குடை மிளகாய் மூக்கு, சப்பை மூக்கு, கோணல், கூர்மையான மூக்கு இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம்.

ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலைப்படத் தேவையில்லை.

மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும். மிக எளிதான மூக்குக்கான அழகுக் குறிப்பினை பார்ப்போம்.

மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம். பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு, அருகில் வந்து பார்ப்பவருக்கு நிச்சயம் ஒரு வித அருக்குளிப்புபை (அசூசையை) ஏற்படுத்தும்.அதனால் முகம்வைத்து பார்க்கமாட்டார்கள்.

கடைகளில் விற்கும் பிளாக் ஹெட்ஸ் றிமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இறுகி இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்கமாட்டாது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது. எனவே ஸ்ட்ரைப்ஸை (ஒரு முறை பிளாக் ஹெட்ஸை முழுதும் நீக்கிவிட்டு) ரெகுலர் பராமரிப்புக்கு மாதம் ஒரு முறை என்று உபயோகிக்கலாம்.

Read more...

பைல்ஸ் (Piles ) எனப்படும் மூலவியாதியும் அதற்கான காரணிகளும்,

E-mail Print PDF

மலக்குடற் குதத்தின் அருகில் ஏற்படும் வீக்கம் மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது. வலி, இரத்தக் கசிவு, மலம் இறுகுதல், உட்காரும் போது வலி என்பன இந்த நோயின் அறிகுறிகளாகும்.

மல வாசலில் நல்ல இரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான இரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன. அசுத்த இரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மூல நோயாக இடம் பெறுகிறது.

மூல நோய் இரு வகைப் படும் -உள் மூலம், வெளி மூலம், உள் மூலத்தில் மேல் பகுதி இரத்தக் குழாய்களும் வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி இரத்தக் குழாய்களும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.மூல நோயின் காரணங்களாகப் பின்வருவன குறிப்பிடப்படுகின்றன.

1. வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும் போது அது மூல வீக்கத்தை ஏற்படுத்தி மூல வியாதியைத் தோற்றுவிக்கும். தமிழ் வைத்தியத்தில் “வயது போக, வயிறு பெருக்க, மூலம் புறப்பட” என்ற சூத்திரம் இருக்கிறது.

2. நீண்ட நாள் மலச் சிக்கல் மூலத்தைப் புடைக்கச் செய்கிறது.

3. உடற்பயிற்சி இல்லாமை, நார் சத்து இல்லாத மாவு உணவு, மூல வாசலில் எரிச்சல் என்பனவும் மூல வியாதியைத் தோற்றுவிக்கின்றன.

4. அதிக நேரம் நின்றபடி வேலை செய்தல் அல்லது அதிக நேரம் உட்கார்ந்த படி வேலை செய்தல் மூல நோய்க்குக் காரணமாகின்றது.

5.மூல நோய் பரம்பரை நோயாகவும் சில குடும்பங்களில் இடம் பெறுகிறது.

6. வயதுவ காலத்தில் முதுமையின் பரிசுகளில் ஒன்றாக மூலவியாதியும் ஏற்படுவது வழமை. இதைத் தவிர்க்க முடியும். கட்டாயமாக முதுமை அடைந்த காலத்தில் மூல நோய் ஏற்படத்தான் மேண்டுமென்ற விதி கிடையாது.

7. கர்ப்பிணிகளுக்கு வயிற்றுப் பகுதி அழுத்தம் ஏற்படுகிறது. மகப் பேற்றின் போது குழந்தையை முக்கி வெளியேற்றும் போது மூலம் புறப்படும். ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் மூல நோய் மறைந்துவிடும்.

மூலவியாதி வருவதைத் தடுப்பதற்கு சில வழிமுறைகள் சொல்லப்படுகின்றன. முதலாவதாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள வெண்டைக்காய் போன்ற வழுவழுப்பான மரக்கறிகளையும் இலை வகை களையும் உணவாக்க வேண்டும். முதலாம் கட்ட மூலவியாதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர இது போதுமானது. நிறையத் தண்ணீர் குடிக்க மறக்கக் கூடாது.

வயதானவர்களுக்கு மூல இரத்தக் குழாய் வீக்கம் கூடுதலாக இருக்கும். பைன்டிங் (Binding ) என்ற சிகிச்சை முறையை மருத்துவ ஆலோசனையுடன் பயன் படுத்தி நன்மை அடையலாம். இந்தக் கட்டம் இரண்டாம் கட்ட மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது.

மூன்றாம் கட்டம் பற்றி இவ்விடத்தில் பார்ப்போம். அறுவை சிகிச்சை தவிர்ந்த பிறிதொரு மருத்துவ முறையும் மூலவியாதியைக் கட்டுப்படுத்த முடியாதென்ற நிலை தோன்றும் போது அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை அப்படியானவர்களுக்கு சிறந்த நிவாரணமாக அமையும். இப்போது சில நிமிடங்களில் முடியும் லேசர் அறுவை சிகிச்சை வந்து விட்டது. அதைப் பயமின்றிப் பயன் படுத்தலாம்.

மலச்சிக்கலை தடுக்கும் வழிமுறை:

மலச்சிக்கல்
மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன்களில் மலஜலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப்பதை நாம் உணரலாம்.

மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான். பிறகுதான் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவற்றைப் பற்றி விசாரிக்கிறார்.

செரிமானம் எப்படி ஏற்படுகிறது?
முதற்கட்டமான செரிமானம், நம் வாயில் போடும் உணவு நன்கு மெல்லப்பட்டு உமிழ்நீருடன் கலந்து கிரியை புரியும்போது ஆரம்பமாகிறது. பிறகு உணவு வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது. உணவை நன்கு மெல்லாமல் விழுங்குபவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும்.


வயிற்றிலுள்ள உணவு, அங்குள்ள அமிலங்களுடன் நன்கு கடையப்பட்டு, சிறு குடலுக்குச் செல்கிறது. வயிற்றிலுள்ள அமிலத்தன்மை அதிகமாகும்போது, நமக்கு அசிடிடி அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகிறது. செரிமானம் பாதிக்கப்படுகிறது.

சிறுகுடலுக்கு வந்த உணவு, அமிலத்தன்மையுடையது. கணையத்திலிருந்து கணைய நீர், கல்லீரலில் இருந்து பித்தநீர் இவை காரத்தன்மையுடையன. இவற்றுடன் சிறுகுடலில் சுரக்கும் பல என்ஸைம்களுடன் கலந்து, உணவு அமிலத்தன்மை இழந்து, நடுநிலை ((நெரவசயட)) அடைகிறது. இங்கு உணவின் சத்துக்கள் உட்கிரகிக்கப்பட்டு சக்கைகள் பெருங்குடலுக்குள் தள்ளப்படுகின்றன.

பெருங்குடலில் இக்கழிவுகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு மலமாக வெளியேறுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்:


1. நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.

3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.

5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.

6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான எனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்.


மலச்சிக்கலுக்கு அக்குபிரஷர் சிகிச்சை:
அக்குபிரஷர் முறைப்படி நம் உடலின் 12 முக்கியமான உறுப்புகளும் 12 மெரிடியன்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மெரிடியன்களின் வழியே 24 மணி நேரமும் சக்தி பாய்கிறது. ஒவ்வொரு மெரிடியனிலும் 2 மணி நேரம் என 12 மெரிடியன்களில் 24 மணி நேரம் சக்தி பாய்கிறது.

பெருங்குடல் மெரிடியனில் சக்தி பாயும் நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரையாகும். அதனால், காலை 6 முதல் 7 மணிக்குள் நாம் மலம் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மிகவும் நல்லது. 1 வாரம் சிறிது பொறுமையுடன் இந்த நேரத்தில் மலம் கழிப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். 2 அல்லது 3 டம்ளர் நீர் குடித்து வீட்டினுள்ளேயே சிறிது நேரம் நடக்க வேண்டும். பிறகு முன்புறமாக குனிந்து பாதங்களைத் தொடும் பயிற்சி செய்ய வேண்டும். இதனால், அடிவயிறு அழுத்தப்பட்டு மலம் கீழுக்குத் தள்ளப்படுகிறது.

வாய்க்குக் கீழே முகவாயில் உள்ள புள்ளியிலும், தொப்புளுக்கு கீழே 2 விரல்கள் தள்ளி உள்ள புள்ளியிலும், பக்கவாட்டில் இருபுறங்களிலும் 3 விரல்கள் தள்ளி உள்ள புள்ளிகளிலும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். டாய்லெட்டில் உட்கார்ந்து கழுத்துப் பயிற்சி செய்தாலும் மலம் இறங்கி வரும். தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டில் திருப்பும் பயிற்சி செய்யும்போது, மலம் கழிப்பது சுலபமாகிறது.இரைப்பை மெரிடியனில் காலை 7 மணி முதல் 9 மணி வரை சக்தி பாய்கிறது. காலை 9 மணிக்கு நாம் முழு உணவு உண்போமேயானால் உணவு நன்கு செரிக்கப்பட்டு மலச்சிக்கல் தீரும். இப்போதுள்ள அவசர யுகத்தில் பலர் காலையில் காபி அல்லது கஞ்சி குடித்துவிட்டு பிறகு மெதுவாக மதியம் உணவு உண்கின்றனர். கேட்டால் ‘நேரம் இல்லை’ என்ற பதில் கிடைக்கிறது. படத்தில் காட்டப்பட்டுள்ள ஆள்காட்டி விரலின் கடைசிப் பகுதியில் உள்ள புள்ளி லிமி4 என்ற பெருங்குடல் மெரிடியனில் நான்காவது புள்ளியாகும்.

கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இப்புள்ளி உள்ளது. இடையிலுள்ள சதைப்பகுதியில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசிப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்புள்ளியை தினமும் காலை 14 முறைகளும், மாலை 14 முறைகளும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். இரு கைகளிலும் செய்ய வேண்டும். இதனால் மலச்சிக்கல், அசிடிடி, வாயுத் தொல்லை முதலியவை தீருகின்றன. வராமல் தடுக்கப்படுகின்றன.

மலச்சிக்கலினால் உடல் மந்தம், வாய்வுத் தொல்லை, தலைவலி, பசியின்மை, து}க்கமின்மை, உடல் நாற்றம், மூலம், பௌத்திரம், சிறுகுடல் சம்பந்தப்பட்ட கொலைடிஸ், சிறுகுடல் புற்றுநோய் இவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, மலச்சிக்கலை நாம் அலட்சியம் செய்யாமல் அதற்குத் தீர்வு காண வேண்டும்.

நாம் நமது ஆயுளின் முதல்பாதியில் உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறோம். பிற்பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறோம். எல்லோரும் இதை யோசித்து உடல்நலத்தை எப்போதும் பேணிக் காக்க வேண்டும்.

ஈஸ்ட்ரோஜன் இழப்பை ஈடு செய்ய - இயற்கை மருத்துவம்

E-mail Print PDFஒருவரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில், ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்மோன்களால் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளான கர்ப்பப்பையின் உள்படலம் வெளிவளர்தல், மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் மற்றும் சினைப்பை கட்டிகள் ஆகியவை ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதாலேயே ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில தகவல்கள்…

அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும்:
பழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து காணப்படுகிறது. தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது.

இயற்கை உணவுகள்:
ரசாயன கலப்பின்றி  இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.

பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகள்:
உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை “ஐசோபிளாவின்’ என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.

நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள்:
ஒமீகா – 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த <உணவுகளில் காணப்படுகிறது.
அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:

நமது உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் உடல் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:
பெண்களுக்கான ஹார்மோன் களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது.

"சென்ஈஸ்ட்ரோஜன்களை' தவிர்க்க வேண்டும்:
ஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.

கொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' சேருகின்றன என்பதை மறக்கக் கூடாது. எனவே, ஆரோக்கிய உணவு முறை மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க மருத்துவ ஆலோசனைகள் சில...

E-mail Print PDF

“அம்மா!” எனும் மொழி தரும் அங்கீகாரமும் அன்பும் உலகின் எந்த சொல்லுக்கும் இல்லை. அன்னை காட்டும் அன்பும், கூடுதல் அக்கறையும் தர உலகில் வேறு எந்த உறவும் கிடையாது. இணையான உள்ளமும் கிடையாது.  ”பிறந்த குழந்தையை பிரசவித்த மறுகணம் தாயின் வயிற்றில் வைத்தால், அது தாயின் மார்பைப் பற்றி தன் முதல் சீம்பாலினை உறிஞ்சத் துவங்கும். யாரும் அதனை வழிகாட்ட வேண்டியதில்லை” என்ற செய்தி தரும் கவித்துவமும், வியப்பும் ஏராளம்.

குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான். பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றது. இதனால்தான் குறைந்தது 6 மாதங்கள் வரையாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே… என்று கவலைப்படும் தாய்மார்களும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Read more...

பாம்புக்கடியும் அதற்கான முதலுதவியும் - அறிந்து கொள்வோம்

E-mail Print PDF


பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் மனிதனையே கொல்லக்கூடிய அதன் விசம்தான். இந்த விசகடிக்கு சரியான சிகிச்சை, உரிய நேரத்தில் செய்தால் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

இலங்கையில் பாம்புக்கடியினால் வருடந்தோறும் அதிகளவான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். யாழ்ப்பாணத்திலும் அதே நிலைமையே காணப்படுகிறது. மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுமிடத்து தேவையற்ற மரணங்ககையும், உபாதைகளையும் தவிர்க்கமுடியும்.

இலங்கையிலும் சரி யாழ்ப்பாணத்திலும் சரி இங்கு காணப்படுகின்ற அனைத்துப்பாம்புகளும் கொடிய விஷம் உள்ள பாம்புகள் என எண்ணுவது தவறானது. அவ்வாறு கடிக்கும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதன் மூலம் அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும். தேவையற்ற தவறான முதலுதவிகள் செய்யப்படுமிடத்து விஷம் உடலில் அகத்துறிஞ்சும் தன்மையானது அதிகரிக்கப்படுகிறது.

உதாரணமாக, கடிபட்ட  இடத்தை கத்தியாலோ அல்லது ஏதாவது கூரான ஆயுதத்தாலோ வெட்டும் போது விஷமானது உடலில் அகத்துறிஞ்சும் தன்மை அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் தோலில் காயத்தை ஏற்படுத்தும் ஏதாவது திராவகத்தாலோ கழுவும் போது absorption அதிகரிக்கப்படலாம்.

அத்துடன் அல்ககோல்(மது) உட்கொண்டாலோ அகத்துறிஞ்சல் வீதமானது அதிகரிக்கப்படும். எனவே முறைதவறிய முதலுதவிகளும் தேவையற்ற பழக்கவழக்கங்களும் உயிரிழப்புக்களை அதிகரிக்க காரணமாக அமைகின்றன.

உலகில் சுமார் 3500 வகை பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றில்  250 வகை பாம்புகள்தான் விசத்தன்மையுள்ளவை. இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் சுமார் 216 வகைப்பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 வகையான்வை விஷத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய இரண்டு லட்சம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள். அவர்களில் 15,000-20,000 பேர் விசத்தால் இறக்கிறார்கள்.

விசப்பாம்புகளில் நம் நாட்டில் முக்கியமானது நல்லபாம்பு. இது படமெடுத்து ஆடும். இதன் படத்தில் இரண்டு கருப்பான கண் போன்ற அமைப்பு இருக்கும். கண் போன்ற அமைப்பில் சிறு தங்கநிற செதில்கள் காணப்படும். சில பாம்புகளில் ஒற்றைக்கண் கூட உண்டு. கருநாகத்தின் படத்தில் கண் இருக்காது.

இறந்த பாம்பில் படம் விரிந்து இருக்காது. இதற்கு அந்தக் கழுத்துப்பகுதி இணைப்புகள் இறுகி விடுவதே காரணம். நல்லபாம்பின் தாடையில் விசப்பற்கள் இரண்டு உண்டு. அதனருகில் ஒன்று அல்லது இரண்டு சிறு பற்கள் காணப்படலாம்.

ஆபத்தான சில இந்தியப் பாம்புகள்.
இந்திய கோப்ரா
ராஜ நாகம் (King cobra)
Banded krait
Slender coral snake
Russell viper
Saw- scaled viper
Common krait

நல்ல பாம்பின் விசக்கடி பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
நல்லபாம்பு விசமானது பொதுவாக நரம்புமண்டலத்தைத் தாக்கக்கூடிய விசமாகும்.

1. கடித்த 6-8 நிமிடத்தில் கடிவாயைச் சுற்றியுள்ள பகுதி சிவந்துவிடும்.

2. கடிவாயிலிருந்து இரத்தத்துடன் நீர் கசியும்.

3. 30 நிமிடத்தில் கடிபட்ட நபருக்கு தூக்கம் வருதல், கால்கள் சுரணைக்குறைவு, நிற்க நடக்க இயலாமை ஆகியவை ஏற்படும்.

4. சிலருக்கு உமட்டல், வாந்தி வரலாம்.

5. நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் கால் தசைககள் செயலிழந்து போய்விடும். இதனால் நிற்க முடியாது.

6. கண் இமைகள் செயலிழந்து கண்ணைத் திறக்க முடியாது.

7. கடித்த அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்தில் எச்சில் அதிகம் ஊறும். வாந்தி, நாக்குத் தடித்தல், குரல்வளை தடித்து செயல் இழத்தல் ஆகியவை ஏற்பட்டுப் பேசவும், விழுங்கவும் இயலாது.

8. சுமார் இரண்டு மணி நேரத்தில் உடல் தசைகள் முழுவதும் செயலிழப்பதால் மூச்சு விடுதல் (Respiratory Paralysis) ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். கடிபட்டவர் சுய நினைவிலிருந்தாலும் பேசமுடியாது.

9. அதன் பின் வலிப்பு வரலாம். நுரையீரல் செயலிழந்து மூச்சு நின்று விடும். பின் இதயத்துடிப்பும் நின்று போகும்.

மருந்துகள்:

விச முறிவு மருந்தை அனைத்து அரசு மருத்தவ மனைகளிலும் உள்ளது. இது நல்லபாம்பு மற்றும் அனைத்துவிதப் பாம்பு விசத்தையும் குணப்படுத்தும்.

நல்லபாம்புக் கடியால் இறப்பதற்கு முக்கிய காரணங்கள் :
1. அதிக அளவு விசத்தை பாம்பு கடித்து உடலுக்குள் செலுத்துதல்.

2. கடிபட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லாமை, தகுந்த சிகிச்சை அளிக்காமை ஆகியவையே.

3. உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்து இன்னுயிர் காப்போம்.

பாம்பில் இருந்து நஞ்சு எப்படி பாய்கின்றது? அதில் என்ன உண்டு
பாம்பின் வாய்
நச்சுத் தன்மையான பாம்புகள் பெரிய நீண்ட இரு பற்களைக் தமது மேல் தாடையில் கொண்டுள்ளன. இப் பற்கள் நஞ்சை பாச்சுவதற்காக துவார்ங்களைக் கொண்டுள்ளன. இதன் மூலம் உடலிலன் ஆழமான பகுதிகளுக்கு நஞ்சு பாச்சப்படுகின்றது.

பாம்பு மனிதனைக் கடிக்கும்போது நஞ்சானது தோலிக்கு கீழான கொழுப்பு கலங்கள் கொண்ட பகுதிக்கும், தசைகளை கொண்ட பகுதிக்கும் பாச்சப்ப்டுகின்றது.

சில பாம்புகள் மனிதனிம் கண்களை நோக்கி விஷத்தை பாச்சவல்லன.

பாம்பின் விஷத்தில் என்ன உண்டு?

இதில் 20 க்கு மேற்பட்ட பதார்த்தங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அதிகளவானவை புரத மூலக்கூறுகள்.

1. இரத்தத்தை உறைய வைக்கக்கூடிய புரதங்கள்

2. குருதிக் குளாய்களை பாதிப்படையச் செய்யும் பதார்த்தங்கள்

3. உடற்கலங்களை இறக்கச் செய்யும் பதார்த்தங்கள்

4. குருதிக் கலங்கள், தசைக் கலனங்கள் போன்றவறை அழிவடையச் செய்யும் பதார்த்தங்கள்

5. உடல் நரபு கணத்தாக்க கடத்தலை பாதிக்கும் பதார்த்தங்கள்

பாம்பு கடிக்கும் போது எவ்வளவு நஞ்சு பாசய்ச்சுகின்றது?

இது பல காரணிகளில் தங்கியுள்ளது

*  வேறுபட்ட இன பாம்புகள் வேறுபட்ட அளவில் விஷத்தை கக்குகின்றன

*  பாம்புக்கடி ஆழம்

*  கடிகளின் எண்ணிக்கை

*  பாம்பின் பருமன் (ஒரே இனத்தில் பெரிய பாம்புகள் கூடிய விஷத்தை பாய்ச்சுகின்றன)

பாம்புகள் கடிப்பது தமை பாதுகாத்துக் கொள்வதற்கே. அவைகளை சீண்டாமல் விட்டால் அவை ஒன்றும் செய்யாது.

பாம்பு கடிப்பதற்கான காரணங்கள் சில:

*  பாம்புகள் இரவு வேளைகளில் அல்லது புதர்களில் இருக்கும்போது வெறும் காலோ அல்லது பாதுகாப்பற்ற காலணிகளால் மிதிக்கப்படும் போது
*  பாம்புகளை கையாளும்போது
*  வீட்டிற்கு இரவில் இரைதேடிவரும் பாம்புகள் மீது படுக்கையில் இருக்கும்போது கை கால் படும் போது

யார் பொதுவாக பாம்புக்கடிக்கு உள்ளாகின்றனர்?

*  வேட்டையாடுவோர்
*  விலங்குகளை பராமரிப்போர்
*  விவசாயிகள்
*  இறப்பர், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள்
*  மீன்பிடிப்போர்
*  பாம்புகளை கையாளுவோர்

பாம்புக் கடியில் இருந்து எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம்?

1. உள்ளூர் பாம்புகள் பற்றிய அறிவை வளர்த்தல் (அதாவது மக்கள் வசிக்கும் பிரதேசத்தில் என்னென்ன பாம்பு வகைகள் இருக்கின்றன?, அவை எந்தக்காலப்பகுதியில் என்ன நேரத்தில் அதிக நடமாட்டம் செய்கின்றன, எப்படிப்பட்ட இடத்தில் மறைந்து வாழ்கின்றன என்ற தகவல்களாகும்.)

* பாம்புகளின் வகைகள் (பாம்பைப்பற்றிய கல்வியறிவு மக்களுக்கு புகட்டப்பட வேண்டும்)

* பொதுவான வாழிடங்கள் (கல் குவியல்கள், விறகுகள், மரங்கள் குவித்து வைத்துள்ள இடங்கள்)

* இரைதேடும் காலம் பகல்/இரவு

* அதிகமாக வெளியே உலாவும் காலம்

2. அதிகமாக பம்புக்கடி ஏற்படும் சந்தற்பங்களை மக்களுக்கு தெரியப்படுத்துதல்

* மழைக் காலத்திற்குப் பின்னர்

* வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது

* அறுவடைக் காலம்

* இரவு வேளை (இரவில் நடந்து செல்லும் போது போதியளவு வெளிச்சத்துடன்(Torch light) செல்வது விரும்பத்தக்கது)

3. இரவில் புதர்களுக்கருகில் நடக்கும்போது பாம்புக்கடியில் இருந்து தப்புவதற்காக பாதணிகள் மற்றும் நீள காற்சட்டைகளை குறிப்பாக இரவில் பாம்பு நடமாட்டம் உள்ள இடத்தில் செல்வதாயின் அணிந்து செல்வது

4. நிலத்தில் படுத்து உறங்குவதை தவித்தல்

5. இறந்த பாம்புகளை கவனமாக கையாளுதல்

6. வீட்டையும் அதன் சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்திருத்தல் (
வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் குறுகிய கால இடைவெளிகளில் தூய்மையாக்குவதன் மூலமும் பாம்புகள் வருவதை தவிர்க்க முடியும்)

முதலுதவி:
முதலுதவியின் நோக்கங்கள்

1. நஞ்சு குருதிக்குள் உள்ளெடுக்கப்பட்டு உடலெங்கும் பரவுவதை தடுத்தல்

2. மருத்துவ உதவியை நாடும்வரை பாம்பு கடித்தவரை பாதுகாத்தல்

3. பாம்பு கடியில்  உடனடியாக உடலில் ஏற்படும் அறிகுறிகளை தடுத்தல்

4. வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல ஒழுங்குகள் செய்தல்

தவிக்க வேண்டிய தவறான செயல்பாடுகள்

1. பாம்புக் கடி ஏற்பட்ட இடத்தை வெட்டி குருதியை வெளியேற்றுதல்

2. காயத்திலிருந்து விஷத்தை வாயால் உறுஞ்சி எடுத்தல்

3. கடிபட்ட இடத்தை இறுக்கி துணியால் கட்டுதல்

4. மின் அதிர்ச்சி வழங்கல்

5. இரசாயனப் பதார்த்தங்களை காயத்தில் பூசுதல்/விடுதல் அல்லது குளிர் கட்டிகளை காயத்தில் வைத்தல்
(இவை சில சமயங்க்களில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இவை கூடுதலக தீமையே விளைவிக்கின்றன.)

ஏற்றுக் கொள்ளப்பட்ட முதலுதவி முறைகள்:

1.  கடிபட்டவரின் பயத்தைப் போக்குதல். பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கலாம்

*  பெரும்பாலான் பாம்புகள் விஷமற்றவை

*  பாம்புக் கடி எல்லாவற்றிலும் விஷம் பாச்சப்படுவதில்லை

*  பாய்ச்சப்படும் நஞ்சு சில வேளைகளில் போதுமானதாக இருப்பதில்லை

*  இதற்கு எதிர் மருந்து வைத்தியசாலையில் உண்டு

2. கடிபட்ட பகுதியை அசையாமல் பாதுகாத்தல். ( அசைவு நஞ்சின் அகத்துறுஞ்சலை அதிகரிக்கும்)

3. பண்டேஜ் மூலம் காயப்பட்ட இடத்தை இறுக்கிக் கட்டல்
அதிக இறுக்கததை தவிர்க்க வேண்டும். இதை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கும்வரை கழற்றக் கூடாது (சில பாம்பு கடிகளுக்கு இவ்வாறு செவதால் அது கடிக்கப்பட்ட பகுதியில் கலங்களின் அழிவை தூண்டும்)

4. கடிபட்ட அங்கத்தில் நகைகள் அல்லது நூல்கள் கட்டப்பெற்றிந்தால் அவற்றை கழற்றுதல்

5. கடி காயத்தை சீண்டாமல் இருத்தல் (சீண்டுவதால் தொற்றுக்கள் அதிகரிப்பதுடன் நஞ்சின் அகத்துறிஞ்ச்சல்லும் அதிகரிக்கும்)

6. வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லல்
செல்லும்போது

உடனடியாக வைத்தியசாலையை நாடுவது முக்கியமாகும்.

*  கடிபட்ட அங்கத்தை கூடியளவு அசைக்காது பார்த்துக் கொள்ளல்
*  வாகனங்களை உபயோகித்தல் அல்லது நோயாளியை தூக்கொச் செல்லல்

அத்துடன் கடித்த பாம்பினை உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது விரும்பத்தக்கது.

நாம் அறிந்த மூலிகை தாவரங்களும் அறியாத மருத்துவக் குணங்களும் - பகுதி - 1 & 2

E-mail Print PDF

வல்லாரை.
1. மூலிகையின் பெயர் -: வல்லாரை.

2. தாவரப் பெயர் -: CENTELLA ASIATICA
HYDROCOTOYLE ASIATICA.

3. தாவரக்குடும்பம் -: APIACEAE.

4. வேறு பெயர்கள் -: சஸ்வதி, சண்டகி, பிண்டீரி, யோகனவல்லி, நயனவல்லி, குணசாலி, குளத்திக் குறத்தி, மற்றும் அசுரசாந்தினி.

5. வகைகள் -: கருவல்லாரை மலைப்பாங்கான இடத்தில் இருப்பது.

6. பயன்தரும் பாகங்கள் -: இலை மட்டும்.

7. வளரியல்பு -: ஈரமான பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும். தட்பமான, மித தட்பமான பகுதிகளில் வளரும். ஒரு மென்மையான கொடி. தண்டு நீண்டதாக தரையில் படர்ந்து இருக்கும். செங்குத்தான வேர்களின் இலைக் கோணத்திலிருந்து இந்த தண்டுகள் வளரும். மெல்லிய தண்டு பெரும்பாலும் சிவப்பு நிறமானதாக இருக்கும். வேர்க்கூட்டத்திலிருந்து தோன்றும் இலைக்காம்பு மிகவும் நீண்டு இருக்கும். ஒரு கணுவிலிருந்து 1 முதல் 3 இலை தோன்றும். இலையின் வடிவம் வட்ட வடிவமாகவோ, மொச்சை வடிவமாகவோ இருக்கும். அகலம் அதிகமாக இருக்கும். கரு வல்லாரை என்ற ஓரினம் மலைப்பாங்கான இடங்களிங் வளர்கின்றன. கொடிமற்றும் விதைகளில் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

Read more...

Page 7 of 29

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்