Friday, Apr 18th

Last update07:14:26 AM GMT

You are here: வாழ்த்துக்கள்

புதிய வருடத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் புதிய பெயரில் இயங்கும் சீலன் டிஜிட்டல் போடோஸ் நிறுவனம்

E-mail Print PDF

ஏப்பிரல் 14 தமிழ் ஜய வருடப்பிறப்பை முன்னிட்டு எமது சீலன் டிஜிட்டல் போடோஸ் நிறுவனம் காலத்திற்கு ஏற்ப   புத்தம் புதிய அதி நவீன பரிமாணத்தில் பெயர் மாற்றம் செய்யப்பெற்று உங்கள் முன் எமது  சேவையை ஆரம்பிக்கின்றோம்.
.
நீங்கள் இன்று வரை எமக்கு தந்த ஆக்கத்தையும் ஊக்கத்தையும் இனியும் குறைவின்றி தருவீர்கள் என் நம்புகின்றோம் . எமது வாடிக்கையாளர்கள் நன்பர்க மற்றும் உற்றார்  உறவினர்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.

நன்றி நன்றி நன்றி ..
சீலன்

12 வது பிறந்தநாள் வாழ்த்து - செல்வி. சஜிதா ரவி - ஜேர்மனி - 11.04.2014

E-mail Print PDF

ஜெர்மனி - வீரபில்டில் வசிக்கும் திரு. திருமதி. ரவி சிவரஞ்சினி தம்பதியினரின் செல்வப்புதல்வி "சஜிதா" தனது 12 வது பிறந்தநாளை 11.04.2014 அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார்.

அன்புக்குட்டி சஜித்தவை அன்பு அப்பா, அம்மா, தங்கை, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி,  மாமா, மாமிமார், அண்ணாமார், அக்காமார், மச்சான், மச்சாள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இறையருளால் சகல செளபாக்கியங்கலும் பெற்று நோய்நொடியின்றி நீடூழிய காலம் பேரோடும் புகழோடும் பெருவாழ்வு வாழ்க வளர்க என வாழ்த்துகிறார்கள்.

 


10 வது பிறந்தநாள் வாழ்த்து - செல்வன் அபிநாஸ் றதீஸ்குமார் - கனடா - 31.03.2014

E-mail Print PDF

கனடா - ஸ்காபறோ நகரில் வசிக்கும் திரு, திருமதி றதிஸ்குமார் - ஜெயசிறி தம்பதியினரின் செல்வப் புதல்வன் “அபிநாஸ்” தனது 10 பிறந்தநாளை  31-3-2014 அன்று வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

செல்லம் அபிநாசை; அன்பு அப்பா, அம்மா, அண்ணா - சினேகன், மற்றும்  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இறையருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றார்கள்

18வது பிறந்தநாள் வாழ்த்து - செல்வன்.கேஜீவன் பாலச்சந்திரன் - கனடா - 29.03.2014

E-mail Print PDF

கனடாவை வதிவிடமாக கொண்ட பாலச்சந்திரன் -ஜெயமதி தம்பதியினரின் செல்வப் புதல்வன் கேஜீவன் அவர்கள் 29.03.2014 அன்று பதினெட்டாவது பிறந்தநாளில் காலடி வைக்கிறார்.

இவரை அன்பு அம்மா, அப்பா சகோதரர்களுடன் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வாழ்த்துகின்றனர்.

இணைய மூலம் வாழ்த்துவோர்

குலேந்திரன்-ஜெயமலர் குடும்பம்(ஜெர்மனி)

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் - ஜய வருஷப் பிறப்பு கருமங்கள் - 14.04.2014

E-mail Print PDF

ஓம்


"ஜய" புத்தாண்டே வருக வருக, துன்பங்கள் நீங்கி இன்பம் பொங்க அருள் தருக

வாக்கிய பஞ்சாங்கப்படி ஜய வருஷப்பிறப்புக் கருமம் (இலங்கை நேரப்படி)
கலியுகாதி சுத்ததினம் 1868296, நாடி 00 வினாடி 12, தற்பரை 30க்குச் சரியான ஜய வருஷம் சித்திரை மாதம் 01திகதி (14.04.2013) திங்கட்கிழமை காலை நாடி 00 விநாடி 12 (06 மணி 11 நிமிடத்திற்கு ) பூர்வபக்க சதுர்த்தசித் திதியில், அத்தநட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் வியாகாத நாமயோகத்தில் வணிசக்கரணத்தில், மேடலக்கினத்தில், மேடநவாம்சத்தில், சந்திரன் காலவோ ரையில், சந்திர  சூக்குமவோரையில், சாத்விககுணவேளையில் நட்சத்திரபட்சி யாகிய காகம் நடைத் தொழிலும் சூக்கும பட்சி நடைத்தொழிலும் செய்யுங் காலத்தில் இப்புதிய ஜய வருஷம் பிறக்கிறது. முதல் நாள் இரவு நாடி 50 விநாடி 12 (மணி 2.11) முதல் அன்று முற்பகல் நாடி 10 விநாடி 12 (மணி10.11) வரை விஷ{ புண்ணியகாலமாகும்.

இப்புண்ணிய காலத்தில் யாவரும் மருத்துநீர் தேய்த்து சிரசில் ஆலமிலை, காலில் விளாவிலையும் வைத்து ஸ்நானஞ்செய்து வெண்மை, சிவப்பு நிறமுள்ள பட்டாடையாயினும், வெண்மை, சிவப்புக்கரை அமைந்த புதியபட்டாடையாயினும் தரித்து பவளம்,முத்து இழைத்த ஆபரணமணிந்து வழிபாடு செய்க.

புதுவருடப்பிறப்பு :14-04-2014 திங்கட்கிழமை
நேரம் :காலை 06.11 மணி
புண்ணியகாலம் :அதிகாலை மணி 02.11 முதல் முற்பகல் 10.11 வரை  

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஜய வருஷப்பிறப்புக் கருமம் (இலங்கை நேரப்படி)
ஜய வருஷம் சித்திரை மாதம் 01-ம் திகதி (14-04-2014) திங்கட்கிழமை காலை உதயாதி நாழிகை 03.56 மணி காலை 07.36இல் "ஜய” என்னும் பெயருடைய புதுவருஷம் பிறக்கின்றது. அன்று நட்சத்திரம் அத்தம் 2-ம் பாதம், திதி பூர்வபக்க சதுர்த்தசி, சித்த யோகம். இது 60 வருட சுற்று வட்டத்தில் 28 ஆவது வருஷமாகும். அன்று திங்கட்கிழமை அதிகாலை நாழிகை 53.56 (மணி 03.36) முதல் பகல் நாழிகை 13;.56 (மணி 11.36) வரையும் மேட சங்கிரமண புண்ணியகாலம் ஆகும். வருஷம் பிறக்கும் போது உதயலக்கினம் "மேடம்” ஆக அமைகின்றது.

இப்புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மருத்து நீர் வைத்து தலையில் விளா இலையும், காலில் கடம்பமிலையும் வைத்து ஸ்நானஞ்செய்து, வெண்ணிற பட்டாயினும் அல்லது வெள்ளைப் புது வஸ்திரமாயினுந் தரித்து, முத்து சேர்த்து இழைக்கப்பட்ட ஆபரணங் களையணிந்து, நித்திய அனுட்டானம் முடித்து, கண்ணாடி, தீபம், பூரண கும்பம் முதலிய மங்கலப் பொருட்களைத் தரிசித்து, விநாயகர் முதலிய இஷ்டகுல தெய்வங்களைத் தரிசனம் செய்து, புதுவருட சூரியனுக்கு பொங்கல், பூசை செய்து, இயன்ற தானாதிகள் வழங்கி, குரு, பெற்றோர் முதலிய பெரியோர்களை வணங்கி, அவர்கள் ஆசிபெற்று, பிதிர் விரதானுசாரிகள் சிரார்த்தம், தர்ப்பணம் என்பன செய்து, நண்பர்கள், விருந்தினர்களை வரவேற்று, உபசரித்து, சுற்றத்தினருடன் இருந்து பால்பாயசம், தயிரன்னம், நெல்லிக்காய்த் துவையல் முதலியவற்றுடன் அறுசுவைப் பதார்த் தங்களையும் போஜனஞ் செய்து, தாம்பூலமருந்தி, சுகந்த சந்தன புஸ்பாதகளையணிந்து, புதுப்பஞ்சாங்க பலன்களைக் கேட்டு புதுவருடத்தில் ஆற்றக்கூடிய நற்கருமங்களைச் சிந்தித்து மங்களகரமாக வாழ்வார்களாக.

சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்: ரோகிணி, உத்தரம் 2ம், 3ம், 4ம் கால்கள்;, அத்தம், சித்திரை _ 1ம், 2ம் கால்கள், திருவோணம், அவிட்டம் 3ம், 4ம் கால்கள், சதயம், பூரட்டாதி 1ம், 2ம், 3ம் கால்கள்;.

புதுவருடப்பிறப்பு: 14-04-2014 திங்கட்கிழமை காலை 07.36 மணி
புண்ணியகாலம்: அதிகாலை மணி 03.36 முதல் பகல் மணி 11.36 வரை.

கைவிசேடம்:
14.04.2014 திங்கள் உதயம் 06.02 முதல் 07.30 வரை - பகல்   10.00 முதல் 12.05 வரை
16.04.2014 புதன்   உதயம் 06.01 முதல் 07.37 வரை

”ஜய வருஷம்” எனும் புதிய புத்தாண்டு எதிர்வரும் 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை கனடா, அமெரிக்கா போன்ற வட-அமெரிக்க நாடுகளிலும்; 14.04.2014 திங்கட்கிழமை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் பிறப்பதாக சோதிடம் கணித்துள்ளது. இராசி மண்டல வலயத்தில் உள்ள மேஷ ராசியில் சூரியன் உதயமாகும் தினமே தமிழ்-இந்துக்களின் புது வருடப்பிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது. சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசிக்கு வரும் வரை உள்ள காலம் ஓர் தமிழ்-வருஷமாகும்.

ஆலயத்தில் நாம் அங்கப்பிரதஷ்டை செய்யும்போது நாமும் சுழன்று கொண்டு ஆலயத்தையும் சுற்றி வலம்வருவதுபோல்; பூமியானது தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வலம்வருவதும், ஒருமுறை சுற்றிவர ஒரு வருட காலம் எடுக்கும் என்பதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள்.

பூமி சூரியனை சுற்றும் போது சோதிடம் கூறும் 12 ராசிகளில் முதல் ராசியாகிய மேடராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினமே வருடப் பிறப்பாக கணிக்கப்பெறுகின்றது. இத்தினத்தையே சிங்கள பௌத்த மதத்தினரும் இந்து மதத்தினரைப்போல் தமது புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். (இயற்கையாகவே பூமியும் எல்லாக் கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்ற போதிலும்; பூமியை  சுற்றியுள்ள  Zodiac என ஆங்கிலதில் அழைக்கப்படும் கற்பனையான இராசி மண்டல வலயத்தினூடாக சூரியன் உள்ளிட்ட எல்லாக் கிரகங்களும் பூமியை சுற்றி வருவதாக சோதிடம் கணிக்கின்றது.)

இப் பூவுலகம் தோன்றியதில் இருந்து பூமியானது சூரியனைச் சுற்ற ஆரம்பித்தது. சூரியனும், பூமியும் கோள வடிவினதாகவும், ஈர்ப்பு விசையுடன் சுழன்று கொண்டு இருப்பதனால் அவை குறிப்பிட்ட காலத்தின் பின்னர் சுற்றத் தொடங்கிய இடத்திற்கு வந்து சேர வேண்டும் என்பது இயற்கையின் நியதி. அப்படி வந்தும் (திரும்பவும்) தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருப்பதனால்  சுற்று ஆரம்பித்த அந்த நிகழ்வானது பிறப்பாகவும், அச்சுற்றை திரும்பத் திரும்ப ஆரம்பிக்கும் தினம் பிறந்த தினமாகவும் கொண்டாடுவதாக கூறலாம். அதாவது, மீண்டும் ஒருமுறை சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நாளே (பூமியின் பிறந்த நாளே) சித்திரை வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

Read more...

4வது பிறந்தநாள் வாழ்த்து - செல்வி. தீபிகா ரமேஸ் - இத்தாலி - 08.03.2014

E-mail Print PDF

இத்தாலி பலெர்மோவில் வசிக்கும் திரு, திருமதி ரமேஸ் - கவிதா தம்பதியினரின் செல்வப் புதல்வி  ”தீபிகா” தனது 4 -வது பிறந்தநாளை 08.03.2014 இன்று வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார்.

அன்புக்குட்டி திபிகாவை அன்பு அப்பா, அம்மா, அம்மம்மா, அம்மப்பா, அப்பப்பா, அப்பம்மா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்திமார், மாமா, மாமிமார், அண்ணாமார், அக்காமார், மச்சான், மச்சாள் அனைவரும் பணிப்புலம் அம்பாளின் திருவருளினால் சகல செளபாக்கியங்களும் பெற்று நோய்நொடியின்றி நீடூழி காலம் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றார்கள்

 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  3 
 •  4 
 •  5 
 •  6 
 •  7 
 •  8 
 •  9 
 •  10 
 •  Next 
 •  End 
 • »

Page 1 of 86

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்