Wednesday, Feb 21st

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு

சாந்தை பண்டத்தரிப்பு அமரர் திரு ஆறுமுகம் தம்பித்துரை அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவலைகள் 12.02.2018

E-mail Print PDF

Image may contain: 1 person, text

பிறப்பு 1920                           இறப்பு   25.01.1998

அன்பெனும் சொல்லுக்குப் பொருளாய் அமைந்ந்திருந்தீர்

ஆனந்தம் பெருக எம்மை பேணி வளர்த்திட்டீர்

இல்லாமை என்பதை இல்லாது  போக்கடிதத்திர்

ஈன்ற எம்மன்னையை   பாசமுடன் நேசித்திர்

உண்மைதான் உயர்வெனும் நீதியை உறுத்தி நின்றீர்

ஊக்கமே வாழ்க்கையின் ஆக்கமென புகன்றிர்

எண்ணையும் எழுத்தையும் எழிலுடன் கற்பித்தீர்

ஏற்றமுடன் எம்மையிப் புவியில் வாழ்வித்தீர்

ஒற்றுமை ஒன்றுதான் நற்றுணை எனவுரைத்தீர்

ஓரம் போகாதேயென அறிவுரை சொல்லி வைத்தீர்

ஒளவியம் ஆக்கத்திற் க ழிவென மொழிந்திட்டீர்

அஃதே வாழ்க்கையின் நியதியெனக் காண்பித்தீர்

எந்தையே !


இருபது  ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்

இருப்பது எம் நெஞ்சில் உன்முகம் ஐயா

உருவமற்ற உன்னொளி தன்னில் நாம்

திரு நிறைந்தே வாழ்ந்திட  வைத்தீர்

 

வையத்துள்  வாழ்வாங்கு வாழ்ந்த எம்மையா

தெய்வத்தின் திருவடி சேர்ந்ததும் வீதியே

பிறப்பொன்று இருக்குமேல் இறப்பும் உண்டென

மறக்கமுடியாது இறையடி சேர்ந்தீர்


சாந்தையில் பிறந்து சாந்தையில் வாழ்ந்து

சாந்தை விநாயகன் திருவடி சேர்ந்த

மாண்புடன் எம்மிடம்  வாழ்ந்திட்ட ஐயா

மீண்டும் எம்மிடம் பிறந்திட வேண்டுகின்றோம்


நினைவில் நனைந்திடும்

அன்புக் குடும்பத்தினர்

சாத்தவோலை - சம்புநாதீஸ்வரி சமேத சம்புநாதீஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா - 2018

E-mail Print PDF

Image may contain: one or more people and indoor

சுழிபுரம் - கிழக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சம்புநாதீஸ்வரி சமேத சம்புநதீஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா 05.02.2018 அன்று கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் நடைபெற இறையருள் பாலித்துள்ளது என்பதனை அறியத் தருவதுடன்; 13ம் திகதி சிவராத்திரி தினம் தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்த உற்சவம் சம்பில்துறை தீர்த்தக் கரையினிலும் நிகழ உள்ளது என்பதனையும் தெரியப் படுத்துகின்றோம்.

மஹோசவ காலத்தில் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப் பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

சுபம்

சுழிபுரம் பறாளை ஈஸ்வர விநாயகர் மஹோற்சவ விழா - 2018 முன்னறிவித்தல்:

E-mail Print PDF

Image may contain: one or more people, outdoor and text

மூஷிக வாஹன மோதகஹஸ்த

சாமரகர்ண விலம்பித ஸூத்ர

வாமனரூப மஹேஸ்வர புத்ர

விக்னவிநாயக பாத நமஸ்தே!

சுழிபுரம் - பறாளாய் அருமிகு ஈஸ்வர விநாயகர் மஹோற்ச பெருவிழா 09.06.2018 அன்று கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி, 19.06.2018 அன்று தேர்த்திருவிழாவும், 20.06.2018 தீர்த்தத் திருவிழாவும் நிகழ இறையருள் கூடியுள்ளது என்பதனை அறியத் தருவதிதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

இவ் மஹோற்சவ காலத்தில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் அடியார்கள் அனைவரும் உடல், உடை, உள்ளத் தூய்மையுடன்; ஆசார சீலர்களாக, விரதம் அனுஷ்டித்து வல்வினைகளை வேரோடு அறுக்கும் எம்பெருமான் அருள்பெற்று உய்வோமாக!

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற் பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம்,

நல்ல குணமதிக மாமருணைக் கோபுரத்துள் மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்.

-விவேக சிந்தாமணி-

இலங்கையின் வடபால் சைவமும் தமிழும் செழித்தோங்கி விளங்கும் "தொல்லுலகம் போற்றுஞ் சுழிபுரம்" என புகழ் பூர்த்த சுழிபுரம் நகரின் வடபால் வயலும் வயல்சூழ்ந்த மருதநிலத்தில் திடலாக அமைந்துள்ள "பறாளாய்" என்னும் பதிதனில், தொன்மையும், கீர்த்தியும் மிக்க ஆலயமாக திகழ்வதே பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயமாகும்

இலங்கையில் விநாயகர் ஆலயங்கள் இல்லாத ஊரே இல்லை எனலாம். விநாயகர் பெரிய ஆலயங்களாக மட்டுமன்றி, மற்றைய தெய்வங்களின் ஆலயங்களிலும் பரிவார தெய்வமாகவும், ஆற்றங்கரை, குளக்கரை, மருத மரத்தடி, அரச மரத்தடி போன்ற இடங்களி்லும் வீற்றிருந்து அருள் புரிகின்றார்.

விநாயகப் பெருமானின் புராதன ஆலயங்கள் பலவற்றின் சுவடுகள் வன்னிப் பகுதிகளிலும், புராதன அநுராதபுரப் பகுதிகளிலும், பொலன்னறுவை, தெய்வந்துறை முதலான இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய வற்றின் அடிப்படையில் நோக்கும் போது, ஆதிகாலம் முதல் இலங்கை முழுவதிலும் விநாயகர் வழிபாடு நடைபெற்று வந்திருப்பது புலனாகின்றது. இன்னும் புராதன அமைப்போடும், சிறப்போடும் விளங்குகின்ற ஆலயங்கள் பலவற்றை இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்திய, மேற்கு முதலான பகுதிகளில் காணமுடிகின்றது.

இலங்கையில் உள்ள புராதன விநாயகர் ஆலயங்களில் ஒன்றான சுழிபுரம் பறாளை விநாயகர் ஆலயமானது யாழ்ப்பாணத்தின் வடமேற்கே சுழிபுரம் என்னும் நகரில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில் சோழியபுரம் என அழைக்கபெற்ற பட்டினமே பிற்காலத்தில் சுழிபுரம் என மருவி உள்ளதாக கூறப்படுகின்றது

இலங்கையில் உள்ள புராதன விநாயகர் ஆலயங்களில் பிரசித்தி பெற்ற ஆலயமாக இவ்வாலயம் விளங்குவதுடன், அவர் தம்பி சிவசுப்பிரமணியரும் அவரருகே கோவில் கொண்டு எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருப்பதும் பறாளாய்பதியின் சிறப்பாகும். “பாறாளயம்பதிஎன்ற பெயர் மருவி தற்போது பறாளாய் என அழைக்கப்பெறுகின்றது..

இவ் இரு ஆலயங்களைச் சூழ நெல் வயல்களும், தோட்ட வயல்களும் பசுமையாய் சூழ்ந்திருக்க; அங்கிருந்து வரும் குளிர்ந்த இளம் தென்றலின் தாலாட்டில் அண்ணனும் தம்பியும் ஒய்யாரமாக வீற்றிருந்து தம்மை பக்தியோடு வழிபடும் பக்தர்களின் குறை தீர்த்து பரசவத்தில் திகழ்கின்றார்கள்.

ஆலயத்தைச் சூழ்ந்துள்ள வயல் வெளியை அடுத்து குடிமனைகள் அமைந்துள்ளன. இவ் ஆலயங்களிற்கு தெற்கே சுழிபுரமும், தென்-மேற்கே தொல்புரமும், கிழக்கே பணிப்புலமும், வடக்கே தொடர்ந்து மாதகல் வரை வயல் வெளியும், மேற்கேயும் தொடர்ந்து வயல் வெளியும் "திருவடிநிலை" தீர்த்தக் கரை வரை (கடற்கரை வரை) அமைந்துள்ளன. சுழிபுரம், தொல்புரம் பகுதியில் இருந்து இவ் ஆலயத்திற்கு வருபவர்கள் பறாளை வீதியினூடாகவும், பணிப்புலம் பகுதியில் இருந்து வருபவர்கள் இவ் ஆலயத்தை முருகன் வீதியினூடாகவும் வந்தடையலாம்.

இவ்விரு ஆலயங்களுக்கும் தனித்தனியாக தீர்த்தக் கேணிகள் அமைந்துள்ளமையால், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்பைப் பெறுகின்றன.. இவ் ஆலத்தின் வடக்கு பிரகாரத்துடன் இணைந்து முருகன் ஆலயமும் அமைந்துள்ளமை (வடக்கு வெளிப்பிரகாரம் முருகன் ஆலயத்தின் தெற்குப் பிரகாரமாக அமைந்துள்ளமை மற்றுமோர் சிறப்பு அம்சமாகும்.

பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்திற்கும், சிவசுப்பிரமணியர் ஆலயத்திற்கும் பொதுவானதாக இருந்த, மிகப் பழமைவாய்ந்ததும், புராண வரலாற்றை நுட்பமாக மரத்தில் செதுக்கப் பெற்ற சிற்பங்கள் நிறைந்ததுமான தேர் பழுதடைந்த காரணத்தால், கொட்டகையில் வைத்து பாதுகாத்து வருவதுடன் நவீன சித்திரத் தேர் அமைக்கப் பெற்று, அண்ணனும், தம்பியும் தங்கள்தங்கள் மஹோற்சவ காலங்களில் ஒரே தேரில் ஆரோகணித்து அருள் பாலித்து வந்தனர்.

விநாயகருக்கும் தனியான ஒரு சித்திரத்தேர் அமைக்க முன்வந்த விநாயகர் அடியார்கள் ஒன்றிணைந்து ”தேர் திருப்பணிசபை நியமிக்கப்பெற்று, பொது மக்களின் நன்கொடைகளுடன் புதிய சித்திரத் தேர் அமைக்கப்பெற்றதுடன்; 2013ம் ஆண்டு புதிய சித்திரத் தேரினில் ஈஸ்வர விநாயகர் ஆரோகணித்து அருள் பாலித்தார்.

இவ்வாலயம் சோழர்காலத்தில் முக்கிய வழிப்பாட்டுத் தலமாக இருந்ததாக மரபு வழிச்செய்திகள் குறிப்பிடுகின்றன. மேலும் இவ்வாலயத்தில் இந்தியாவில் இருந்து வந்த வேதாரணிய சைவக்குருமார்களால் வழிப்பாடுகள் நடந்ததாகவும், சோழ தேசத்தில் இருந்து வந்த எழுவர் தங்கள் பரிவாரங்களுடன் பறாளை விநாயகரை தரிசித்துச் சென்றதாகவும் சொல்லப்பெறுகின்றது.

இவ் ஆலயத்தில் தற்பொழுதும் வேதாரணிய சைவக் குருமார்கள் பரம்பரையில் வந்த சைவக் குருமார்களில் ஒருவரான சின்னத்துரை குருக்கள் பிறைசூடி குருக்கள் அவர்களினால் பரிபாலிக்கப் பெற்றும், பூசைகளும் செய்யப் பெற்றும் வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

பறாளை விநாயகர் மீது இவ் ஊர் மக்கள் பெரும் நம்பிக்கையோடு வாழ்கின்றனர். தாம் எக்காரியத்தைச் செய்வதற்கு முன்பும் இவ்வாலயத்தை, தரிசனம் செய்கின்றனர். மக்கள் தாங்கள் தமது வயல்களில் இருந்து பெறும் அறுவடையை முதலில் விநாயகருக்கே சமர்ப்பிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழரசர் காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பறாளை விநாயகர் ஆலயத்தை, போர்ததுக்கேயர் (டச்சுக்காரர்) இடிக்கத் தொடங்கினர். அதன் போது போர்த்துகேய படை அதிகாரி ஒருவர் மூல விக்கிரகத்தினை குறிபார்த்த வேளையில் காகம் ஒன்று வந்து, அந்த அதிகாரியின் கண்ணைக் கொத்தி ஆலயத்தை இடிக்க விடாது தடுத்தது என புராணக் கதைகள் கூறுகின்றன. அதனால், இங்குள்ள பிள்ளையார் "கண் கொத்திக் காக்கைப் பிள்ளையார்" எனவும் அழைக்கப்படுகிறார். அந்த அற்புத வரலாற்றினைப் பறாளை விநாயகர் பள்ளு சிறப்பாக கூறுகின்றது.

இன்னும் இதற்கு சமீபமாக இராமபிரான் பாதம் வைத்த காரணத்தால் (சிவபிரான் பாதம் பதித்ததால் எனக் கூறுவாருமுளர்) "திருவடிநிலை" எனப் பெயர்பெற்ற தீர்த்த தலம் அமைந்துள்ளது. இத்தலம்மானது கீரிமலையைப்போல மூர்த்தி தலம் தீர்த்த ஆகிய விசேடங்களை பெற்றதுள்ளது. "திருவடிநிலை" தீர்த்தக் கரையினில் பறாளை விநாயகர், பறாளை முருகன் தீர்த்த உற்சவங்களும், பொன்னாலை வரதராசப் பெருமாள் தீர்த்த உற்சவங்களும் நடைபெற்று வருகின்றன.

இத் தீர்த்தக் கரைக்கு கிழக்கு கரையோரமாகசம்பில்துறைஎன்னும் தீர்த்தக் கரை அமைந்துள்ளது. இத் தீர்த்தக்கரையில் பணிப்புலம் முத்துமாரி அம்பாள், காலையடி ஞானவேலாயுதர், சுழிபுரம் கிழக்கு சம்புநாதீஸ்வரர் தீர்த்த உற்சவங்கள் நடைபெறுகின்றன. சம்பில்துறை தீர்த்தக்கரையில் முற்காலத்தில் பிரபல்யமாக இருந்த சம்புநாதீஸ்வரர் ஆலயமும், பட்டினமும், துறைமுகமும் இயற்கைக் அனர்த்தங்களால் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் சமுத்திரத்தில் சங்கமித்தது என்பது வரலாறு.

இவ் ஆலயம் இருந்த இடத்தின் கரையோரமாக பணிப்புலத்தைச் சேர்ந்தநரசிங்க சுவாமிகளால்பல வருடங்களுக்கு முன்னர் சம்புநாதீவரர் ஆலயம் அமைக்கப்பெற்று கும்பாபிஷேகமும் நிகழ்த்தப்பெற்று பூசைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு அருகாமையில் "சங்கமித்த விகாரை" அமைந்துள்ளது. இங்கு இருந்த துறைமுகத்தில்தான் அசோகச் சக்கரவர்த்தியின் மகளான சங்கமித்த வந்திறங்கியதாக வரலாறு கூறுகின்றது.

முற்காலத்தில் இப்பிரதேசத்தை ஆட்சிசெய்த "திசைமழுவன்" என்னும் சிற்றரசன் அரசு செய்த இடம் ஈஸ்வர விநாயகர் ஆலயத்திற்கு சமீபமாக மேற்குத் திசையில் அமைந்துள்ளதாக செவிவழி வந்த கதைகள் கூறுகின்றன. அந்த இடம் தற்போது "மழுவைக்காடு" என்னும் பெயரால் அழைக்கப் பெறுகின்றது. அந்த இடத்தில் திசைமழுவன் காலத்தில் பிரபல்யம் பெற்று விளங்கிய "சம்பேசுரன்" என்னும் சிவாலயம் அழிந்து போன நிலையில் காணப்படுகின்றது. அழிவுற்றிருக்கும் இவ் ஆலயத்தை, விநாயகர் ஆலயத்திற்கு மேற்காக திருவடிநிலை தீர்த்தக்கரைக்கு செல்லும் குறுக்குப் பாதையில் இப்போதும் காணலாம்.

ஈஸ்வர விநாயகர் ஆலயம் தற்போழுது புனநிர்மான திருப்பணி வேலைகள் செய்யப்பெற்று, பிரதான வாயிலில் இராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருகின்றது,.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இவ்வாலயத்தின் மீது நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பறாளை விநாயகர் பள்ளு" என்னும் பிரபந்தமொன்றைப் பாடியுள்ளார். அந்நூல் இத்தலத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் பறாளை விநாயகரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டதாகும். சிந்து, விருத்தம், கல்ப்பா, ஆகிய யாப்புக்களால் அந் நூல்பாடப்பட்டதாகும்.

விநாயகரை வணங்குவது எப்படி?

"சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோபசாந்தயே"

விநாயகரை வணங்கும்போது இரண்டு கைகளையும் முட்டியாகப் பிடித்து; இடக்கையால் இடது நெற்றியிலும் (நெற்றியின் ஓரத்திலும்), வலக்கையால் வலது நெற்றியிலும் (நெற்றியின் ஓரத்திலும்) மூன்று அல்லது ஐந்து முறை குட்டுகளிட்டு; வலக்கையால் இடது காதையும், இடக்கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு இடது கை மார்பைத் தொட்டவாறும், வலது கை வெளிப்பக்கமாகவும் இருக்கும்படி “ஓம் விநாயகா நமகஎன்ற மந்திரத்தை சொல்லியபடி) மூன்று முறை தோப்புக் கரணம் போட்டு தோத்திரங்கள் பாடி வணங்கி தம் குறைகள்தீர வேண்டுதல் செய்தல் வேண்டும்.

இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது; எமது உடம்பின் மத்தகத்திலிருக்கும் அமிர்தமானது சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிசேக மாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்பெறுகின்றது.

அத்தோடு முன்னொரு காலத்தில் விநாயகப் பெருமான் காக்கை உருவெடுத்து அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக ஓடவைத்த பொழுது நிட்டையிலிருந்த அகத்திய முனிவரானவர் கோபங் கொண்டு காக்கையினை விரட்டினார். அப்பொழுது காக்கையானது ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு ஓடியபொழுது முனிவரும் அச்சிறுவனைத் துரத்திச் சென்று அவனது தலையில் குட்டினார்.

தலையில் குட்டு வாங்கியதும் சிறுவனாக நின்ற விநாயகப் பெருமான் தனது திருச் சொரூபத்தினை அகத்தியருக்குக் காண்பித்தார். உடனே விநாயகப் பெருமானை வணங்கிய அகத்திய முனிவரானவர் தான் செய்த தவறை உணர்ந்து தனது இரண்டு கைகளினாலும் தனது தலையிலே குட்டி தோப்புக்கரணம் செய்து தன்னை மன்னித்தருளுமாறு விநாயகரை வேண்டியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

இதன் பாவனையாகவே நாமும் தலையிலே குட்டி தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்குகின்றோம். நெற்றியில் குட்டி தோப்புக்கரணம் போட்டு விநாயகனை வணங்கினால் நாம் அறியாது செய்த பாவங்கள் அற்றுப் போய்விடும் என்பது ஐதீகம்.

விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்ற வேலைகள் யாவும் தடையின்றி நிறைவுபெறும் என்பதனால்தான் கோவிற்கிரிகைள் உட்பட எல்லாச் சந்தர்ப்பங்களிலும் விநாயகர் வழிபாடு முதலிடத்தை வகிக்கின்றது.

பறாளை வீதியூடாக வரும்போது விநாயகரை முதலில் தரிசிக்கலாம்

முருகன் வீதியூடாக வரும்போது முருகன் ஆலயத்தை தரிசிக்கலாம்

"திருவடிநிலை" தீர்த்தக் கரையின் தற்போதைய தோற்றம்

இத் தீர்த்தக் கரையினில் பறாளை ஈஸ்வர விநாயகர், பறாளை சிவசுப்பிரமணியர், பொன்னாலை வரதராஜப் பெருமாள் தங்கள் தங்கள் தீர்த்தோற்சவ காலத்தில் இவ் தீர்த்தக் கரைக்கு எழுந்தருளி சமுத்திர தீர்த்தம் ஆடுவது வழக்கம். அதற்காக இத் தீர்த்தக் கரையினில் விசாலமான பூஜை மண்டபம் ஒன்று எம்முன்னோர்களல் அமைக்கப்பெற்றிருந்தது. அத்துடன் இத் தீர்த்தக் கரையினில் "வாகை வைரவர்" எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றார். தீர்த்த உற்சவ காலங்களில் இங்கு வரும் அடியவர்கள் பொங்கல் இட்டு பூசைகள் செய்து வாகை வைரவரை வழிபடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

நன்றி

பறாளை விநாயகர் பள்ளு

காப்பு

தொல்லுலகம் போற்றுஞ் சுழிபுரம்வாழ் ஐங்கரன்மேற்

பல்வளஞ்சேர் பள்ளினிசை பாடவே – வில்வழங்கு

மையாழிக் கண்ணன் மலர்க்கண் வளர்ந்ததிருக்

கையாழிக் கண்ணனே காப்பு.

துதி

விநாயகர்

நந்து தவழ நதிதனி லாம்ப னனிமலருஞ்

சுந்தரஞ் சேரும் பழனப் பறாளையிற் றோன்றுசுடர்

வந்தெதிர் நின்ற கயமுகன் றன்னை வதைத்ததந்த

வைந்து கரப்பிள்ளை யென்னகத் தேநின் றருள்செயுமே.

நடேசர்

சுருதி யின்முத லாகிய காரணர்

துளைபொ லிசுர வாரண மாமுகர்

சுழிபுர நகர் மேவுப றாளையி லுறைநாதர்

கரும ணிவிழி யாழுமை பாலகர்

கதிரை யின்வடி வேலர்ச கோதரர்

கருணை யின்மத தாரையி னார்பளி னிசையோதச்

செரும ருவுத்ரி சூலவ ராயுதர்

திரிதி ரிபுர கோபர நாமயர்

திகழி ரணிய மேருச ராசனர் பணிநாணார்

பொருமு ழுவையி னீருரி யாடையர்

புரிச டைவளை சோமக லாதரர்

பொதுவி னினட மாடிய சேவடி மறவேனே

சிவகாமியம்மை

தோட்டு வாரிச நான்முகன் பேணிய

தும்பி மாமுக னம்புவி தாங்கிய

சேட்டு மேருவிற் பாரதந் தீட்டிய

தென்ப றாளைப் பரஞ்சோதி யன்னை

கோட்டு வாரணி கொங்கைப் பெருக்குங்

குழற்சு ருக்கு மணிவாய் முருகும்பஞ்

சூட்டு சீறடி யுந்துடி நேரிடை

யுடையு மெங்கணு மென்கணி னின்றவே

''பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூண ஆனந்தமே''

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது இறை. ஐந்தொழில் புரியும் சிவன், சிவக்கனல் முருகன், மோனஞான போத தட்சணா மூர்த்தி, பராசக்தி பரம்பொருளின் இச்சா, கிரியா, ஞான சக்தியின் கூட்டு. அவ்வாறே இறைவனின் திவ்விய வல்லமையின் வடிவமே விநாயகர்.

ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி

தந்நோ தந்தீ ப்ரஜோதயாது

விநாயகரை முழு முதற் கடவுளாக வழிபடும் சமயம் "காணபத்யம்". ஆனால் இந்து மதம் முழுவதற்கும் பொதுவாய் எழுந்தருளியிருக்கும் தெய்வம் விநாயகர். எந்த ஒரு நற்காரியத்தைத் தொடங்கும் முன்னும் விநாயகர் வணக்கத்துடன் தொடங்கும் போது காரியம் சித்தியடையும் என்பது நம்பிக்கை. அத்துடன் விநாயகர் வழிபாட்டில் விநாயகரை உருவத்தில் கொண்டு வருவதும் எளிது. மண்ணினால், சாணத்தினால், அரிசி மாவினால், மஞ்சளினால் பிள்ளையரை எளிதில் உருவாக்கிடலாம். வேறு சின்னம் அகப்படாத இடத்து அறுகம்புல் அவருக்கு அறிகுறியாக வந்து நிற்கும்.இயற்கையின் முறைமைகளைக் காக்கச் சிவசக்தியின் அருட்பிரசாதமாக ஆனைமுகன் உருவெடுத்தான் என்பது ஐதீகம்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

காப்பு-திருமந்திட்ரம்

விநாயகரின் முப்பத்திரண்டு தோற்றங்களும் அவற்றின் விளக்கமும்

பிரபஞ்ச சக்தி, காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர். பூமி, காற்று, நெருப்பு, நீர், வானம் ஆகிய பஞ்சபூதங்களின் முழு வடிவம்மே இந்த ஐங்கரன். அவருக்கு ஐந்து கைககள். "ஒரு கை தனக்கும், ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு ,இரு கைகள் நம்மைக் காக்க"என்று தணிகைப் புராணத்திலே சொல்கிறார் கச்சியப்ப முனிவர்.

சிவனுக்கு - "ஆல் அமர் செல்வன்" கண்ணனுக்கு "ஆலிலைப் பாலன்" என்று விருட்ஷங்களை இணைத்து அளைப்பதுபோல் விநாயகனுக்கு "ஆலமர அல்லது அரசமரத்தடி பிள்ளையார்" என அழைப்பார்கள். விநாயகரை மகா கணபதி, ஹரித்ரா கணபதி அல்லது துந்திராஜ கணபதி, உச்சிஷ்ட கணபதி, நவநீதி கணபதி, ஸ்வர்ண கணபதி, சந்தான கணபதி என்கிற ஆறு வடிவங்களில் வழிபடுவார்கள்.

முத்கல புராணம் விநாயகரின் எட்டு அவதாரங்களையும், முப்பத்திரண்டு திருவுருவங்களையும் விவரித்து கூறப்பெற்றுள்ளது. எட்டு அவதாரங்கள் என்பது மனிதர்களின் எட்டு பலவீனங்கள் அல்லது அசுர குணங்களை குறிக்கின்றன. அவையாவன:

1. அகந்தையை வெல்லும் - ஏகதந்தர்;

2. செருக்கை அகற்றும் - தும்ரவர்ணர்;

3. பொறாமையை அழிக்கும் - வக்ரதுண்டர்;

4. மோகத்தை அடக்கும் - மகோதரர்;

5. பேராசையை நீக்கும் - கஜானானர்;

6. கோபத்தை குறைக்கும் - லம்போதரர்;

7. காமத்தை விளக்கும் - விடர்;

8. தற்பெருமையை தணிக்கும் - விக்னராஜா என்பனவாம்.

முப்பத்திரெண்டு திருவுருவங்களும் தோற்றமும்:

1. "ஸ்ரீபால விநாயகர் " குழந்தை வடிவம், யானைத்தலை; பொன்னிற மேனி; நான்கு கைகளில் ஒன்றில் வாழைப்பழம், ஒன்றில் மாம்பழம், ஒன்றில் கரும்பு, ஒன்றில் பலாப்பழம், துதிக் "கை"யில் அவருக்கு பிடித்த கொழுக்கட்டை.

2. "ஸ்ரீ தருண விநாயகர்" : இளமை பொங்கும் அழகிய இளைஞனாக, ஒடிந்த தந்தம், விளாம்பழம், கரும்புத்துண்டம், அங்குசம், பாசம், நெற்கதிர்,நாவற்பழம்,மோதகம் தாங்கிய எட்டு கைகளும் கொண்ட சிவந்த மேனியர்.

3. "ஸ்ரீ பக்தி விநாயகர்" : அறுவடை கால முழு நிலவு போல் ஒளிரும் சாம்பல் நிற மேனியர்; வாழைப்பழம், மாம்பழம், தேங்காய், கிண்ணம் நிறைய பாயசம் கொண்ட நான்கு கைகள் உடையவர்.

4. "ஸ்ரீ வீர விநாயகர்" : வல்லமை வாய்ந்த மாவீரர் போல் அனைவரையும் கவர்ந்தீர்க்கும் வகையில், நின்ற நிலையில் அம்பு, அங்குசம், மழு, குந்தாலி, சம்மட்டி, சூலம், வாள், சக்கரம், சங்கு, கேடயம், கதை, கொடி, பாசம், நாகம், வேல்,வில் கொண்ட பதினாறு கரங்கள் கொண்ட சிவந்த மேனி.

5. "ஸ்ரீ சக்தி விநாயகர்" : தனது சக்தியரில் (சித்தி, முக்தி) ஒருவரை மடியில் அமர்த்தி இடது கீழ்க்கரத்தால் அணைத்த வண்ணம் உட்கார்ந்த நிலையில் அங்குசம் பாசம் ஏந்தி வலது கீழ்க்கரத்தால் அபயம் அளிக்கும் நான்கு கரமுடைய ஆரஞ்சு சிவப்பு மேனியர்.

6. "ஸ்ரீ துவிஜ விநாயகர்": நான்குமுக வெண்ணிலவு வண்ண மேனி, அக்கமாலை, தண்டம், கமண்டலம், ஏடு ஏந்திய நான்கு கரங்கள்.

7. "ஸ்ரீ சித்தி விநாயகர்": எடுத்ததை முடித்து வைக்கும் பொன் மஞ்சள் நிற மேனி, மாம்பழம், பாசு, கரும்புத்துண்டம், மலர்க்கொத்து கொண்ட நான்கு கரங்கள், துதிக்கையில் எள்ளுருண்டை.

8. "ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர்": பேரின்பம் அருளும் பண்பாட்டு காவலர், நீல நிற மேனி, தனது சக்தியுடன் வீற்றிருக்கும் இவர் அக்கமாலை, மாதுளம் பழம், வஜ்ஜிர திரிசூலம், நீலோற்பலம், நெற்கதிர், வீணை தாங்கிய ஆறு கரங்கள்.

9. "ஸ்ரீ ஷிப்ர விநாயகர்": வரமருளும் விநாயகரான இவர் தந்தம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி நான்கு கரங்களில் தாங்கியிருப்பார் துதிக்கையில் இரத்தின கும்பம் கொண்ட வண்ன மேனி.

10. "ஸ்ரீ விக்ன விநாயகர்": விக்கினங்களின் அதிபதி. தந்தம், மலரம்பு, பரசு, சக்கரம், சங்கு, பாசம், கரும்புவில், பூங்கொத்து ஏந்திய எட்டு கரங்கள். துதிக்கையில் கொழுக்கட்டையை வைத்திருக்கும் பொன்னிற மேனி.

11. "ஸ்ரீ ஹரம்ப விநாயகர்": சிங்கவாகனத்தில் அமர்ந்திருக்கும் ஐந்து முக வெண்ணிறமேனி. அபயகரம், தந்தம், மலர்மாலை, அக்கமாலை,சுத்தி, பாசம், பழம், கதை, கொழுக்கட்டை கொண்ட பத்து கரம்.

12. "ஸ்ரீ லட்சுமி விநாயகர்": வெற்றியைத் தருபவர்; நீல மலர் ஏந்திய இருதேவியர்களுடைய தூய வெண்ணிற மேனியர்; பச்சைக்கிளி, மாதுளம் பழம், வாள், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, மாணிக்கக்கும்பம், வரம் தரும் கரம் கொண்ட எட்டு கரங்கள்.

13. "ஸ்ரீ மகர விநாயகர்": மூன்று கண்களுடன் நெற்றியில் பிறைச் சந்திரன் ஒளிர, சிவப்பு வண்ணத்தோற்றம். தந்தம், மாதுளம்பழம், நீலோற்பலம், நெற்கதிர், சக்கரம், பாசம், தாமரை, கரும்புவில், கதை ஆகியவற்றைத் தாங்கிய ஒன்பது கரங்கள், தாமரை எந்திய கையுடன் கூடிய சக்தியை பத்தாவது கையில் தழுவிக்கொண்டு துதிக்கையில் ரத்தின கலசம்.

14. "ஸ்ரீ விஜய விநாயகர்": மூஷிக வாகனத்தில் அமர்ந்திருக்கும் வெற்றியைத் தரும் செந்நிற மேனி, தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம் தாங்கிய நான்கு கரங்கள்.

15. "ஸ்ரீ நிருத்திய விநாயகர்": ஊன்றிய இடது கால்,தூக்கிய வலது கால், கற்பக விருட்சத்தனடியில் ஆனந்த நடனமாடும் பொன்னிற மேனி. தந்தம், அங்குசம், அபிநயம் காட்டுவது போலுள்ள உயர்த்திய கையிலே பாசம், கொழுக்கட்டை கொண்ட நான்கு கரங்கள்.

16. "ஸ்ரீ ஊர்த்துவ விநயகர்": இடது மடியில் அமர்ந்திருக்கும் பச்சை நிறமுடைய தேவியை அணைத்த வண்ணமுள்ள பொன்னிற மேனி. தந்தம், அம்பு, செங்கழநீர்மலர், நெற்கதிர், கரும்புவில், தாமரை மலர் கொண்ட ஆறு கரங்கள்.

17. "ஸ்ரீ ஏகாட்சர விநாயகர்": பிறை சூடி, முக்கண்ணனுடன் செம்பட்டுடையும், செம்மலர் மாலையும் அணிந்து குட்டைக் கைகால்களை கொண்டு பத்மாசன நிலையில் மூஷிக வாகனத்தில் அமர்ந்திருக்கும் செந்நிற மேனி, மாதுளம் பழம், அங்குசம், பாசம், கொண்ட நான்கு கரங்கள்.

18. "ஸ்ரீ வரத விநாயகர்": வரம் தரும் பிறைசூடிய முக்கண், செந்நிற மேனி, தேன்கிண்ணம், அங்குசம், பாசம், துவஜம் கொண்ட நான்கு கரங்கள்.

19. "ஸ்ரீ திரயாட்சர விநாயகர்": ஆடும் காதுகளில் சாமரம் எனும் அணிகளும், தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம் கொண்ட நான்கு கரங்கள். தும்பிக்கையில் கொழக்கட்டை பொன்னிற மேனி.

20. "ஸ்ரீ ஷிப்ர பிரசாத விநாயகர்": பிறையுடையாடை, முக்கண் கொண்ட சிவந்த மேனி, தந்தம், தாமரை, அங்குசம், பாசம், கற்பகக் கொடியுடன் ஆறு கரங்கள். துதிக்கையில் மாதுளம் பழம்.

21. "ஸ்ரீ ஹரித்ரா விநாயகர்": மஞ்சள் ஆடையுடைய பொன்னிற மேனி. தந்தம், அங்குசம், பாசம், மோதகம் கொண்ட நான்கு கரங்கள்.

22. "ஸ்ரீ ஏகதந்த விநாயகர்": பெருத்த வயிறு, ஒற்றைத் தந்தம், அக்கமாலை, கோடரி, லட்டு கொண்ட நான்கு கரங்களைக்கொண்ட நீல மேனி.

23. "ஸ்ரீ சிருஷ்டி விநாயகர்": தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம். கொண்ட நான்கு கரங்கள். செந்நிற மேனியில் பெருச்சாளி வாகனம்.

24. "ஸ்ரீ உத்தண்ட விநாயகர்": வலது கையில் தாமரை ஏந்தியுள்ள பச்சை நிற தேவியை இடது கையால் அணைத்துள்ள செந்நிற மேனி. த்ந்தம், மலர்மாலை, தாமரை, கதை, பாசம், நீலோற்பலம், நெற்கதிர், கரும்புவில், மாதுளம்பழம் கொண்ட ஒன்பது கரங்கள் துதிக்கையில் ரத்ன கும்பம்.

25. "ஸ்ரீ ருணமோகன விநாயகர்": செம்பட்டுடுத்தி வெண்பளிங்கு நிறம் கொண்டவர். தந்தம், அங்குசம், பாசம், நாவற்பழம் ஏந்திய நான்கு கரங்கள்.

26, "ஸ்ரீ துண்டி விநாயகர்": நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் செந்நிற மேனி. தந்தம், அக்கமாலை, கோடரி, ரத்தின பாத்திரம் தாங்கிய நான்கு கரங்கள்.

27. "ஸ்ரீ இருமுக விநாயகர்": இரு முகம், செந்நிற ஆடை, ரத்தின கீரிடம், நீலநிற மேனி. தந்தம், அங்குசம், பாசம், ரத்தின பாத்திரம் கொண்ட நான்கு கரங்கள்.

28. "ஸ்ரீ திரிமுக விநாயகர்": அபயம், அக்கமாலை, அங்குசம் உள்ள மூன்று வலது கரங்கள், பாசம், அமுத கலசம், வரதம் மூன்று இடது கரங்கள், தங்க தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் செந்நிற மேனி.

29. "ஸ்ரீ சிங்க விநாயகர்": சிங்க வாகனத்தில் அமர்ந்துள்ள வெண்ணிற மேனி. வரதம்,வீணை, சிங்கம், கற்பகக்கொடி கொண்ட நான்கு வலக்கரங்கள், தாமரை, மலர்க்கொத்து, ரத்தின கவசம், அபயம் கொண்ட நான்கு கரங்கள்.

30. "ஸ்ரீ யோக விநாயகர்": யோக ஆசனத்தில் யோக பட்டம் கட்டிக்கொண்டு யோக தண்டம், அக்கமாலை, பாசம், கரும்பு தாங்கிய நான்கு கரங்கள், நீல நிற ஆடை அணிந்த பால சூரிய நிறம்.

31. "ஸ்ரீ துர்க்கா கணபதி": அம்பு, தாமரை, அக்கமாலை, அங்குசம், பாசம், அஸ்திரம், கொடி, வில் ஆகியவற்றை எந்திய எட்டு கரங்கள் செந்நிற ஆடையுடைய பொன்னிறம்.

32. "ஸ்ரீ சங்கட ஹர விநாயகர்": துயரங்களைப் போக்குபவர், நீல ஆடை அணிந்த பால சூரியன் போன்ற நிறம். இடது மடியில் நில மலரை ஏந்திய பச்சை மேனியுடைய தேவியை அமர்த்தியிருப்பவர். வரதம் அங்குசமுடைய வலக்கரம், பாசம், பாயச பாத்திரமுடைய இடக்கரம்.

ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம்!

பக்தாவாஸம் ஸ்மரேந்நித்யமாயு: காமார்த்த ஸித்தயே!!


பொருள்: தீர்க்காயுள், விருப்பம், செல்வவளம் ஆகியவற்றை அருளும் பார்வதியின் மைந்தனும், தூய்மையான பக்தர்களின்

நெஞ்சில் வசிப்பவருமானவிநாயகப்பெருமானை தினமும் வணங்குகிறேன்.

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்

வெற்றிமுகத்து விநாயகனைத் தொழப் புத்தி மிகுத்து வரும்

வெள்ளைக்கொம்பன் விநாயகனைத் தொழத்

துள்ளியோடும் தொடர்வினைகளே!

அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய

தொப்பையப்பனைத் தொழ வினையறுமே.

பொருள்: யானைமுகம் கொண்ட விநாயகப் பெருமானை வழிபட்டால் வாழ்வு சிறக்கும். வெற்றிமுகம் கொண்ட

அப்பெருமானை வழிபடுவோருக்கு நல்ல புத்தி உண்டாகும். வெள்ளை நிறம் கொண்ட தந்தத்தையுடைய அவர்,

நம்மைத் தொடரும் தீவினைகளைப் போக்கி அருள்வார்.தொப்பையப்பனாகிய விநாயகப்பெருமானுக்குஇனிமையான

அப்பம், மா,பலா, வாழைப்பழங்கள், அன்னம் ஆகியவற்றைப் படைத்து வழிபட நம் வினைகள் வேரோடு அகன்றுவிடும்.

இல்வாழ்க்கையில் சித்தியையும், முக்தியையும் அடைவதற்காக மானிடராக பிறந்திருக்கும் நாம்;

சித்தி, முக்தி என்னும் இரு சக்திகளையும் தம் சக்திகளாகப் பெற்று;

மிகவும் பழமையும், புதுமையும், நிறைந்த பறாளைப் பதிதனில் அருள்பாலிக்கும் ஈஸ்வரவிநாயகரை

இவ் மஹோற்சவ உற்சவ காலத்தில் ஆசாரசீலர்களாக விரதம் அனுஷ்டித்து, பக்தி சிரத்தையுடன் வழிபட்டு,

இஸ்டசித்திகளைப் பெற்று உய்வோமாக

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கையான்

பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு

 

சுபம்


 

சுழிபுரம் பறாளை ஈஸ்வர விநாயகர் மஹோற்சவ விழா -2018
முன்னறிவித்தல்:
மூஷிக வாஹன மோதகஹஸ்த
சாமரகர்ண விலம்பித ஸூத்ர
வாமனரூப மஹேஸ்வர புத்ர
விக்னவிநாயக பாத நமஸ்தே!
சுழிபுரம் - பறாளாய் அருமிகு ஈஸ்வர விநாயகர் மஹோற்ச பெருவிழா 09.05.2018 அன்று கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி, 19.05.2018 அன்று தேர்த்திருவிழாவும், 20.05.2018 தீர்த்தத் திருவிழாவும் நிகழ இறையருள் கூடியுள்ளது என்பதனை அறியத் தருவதிதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.
இவ் மஹோற்சவ காலத்தில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் அடியார்கள் அனைவரும் உடல், உடை, உள்ளத் தூய்மையுடன்; ஆசார சீலர்களாக, விரதம் அனுஷ்டித்து வல்வினைகளை வேரோடு அறுக்கும் எம்பெருமான் அருள்பெற்று உய்வோமாக!
அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற் பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம்,
நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.
-விவேக சிந்தாமணி-
இலங்கையின் வடபால் சைவமும் தமிழும் செழித்தோங்கி விளங்கும் "தொல்லுலகம் போற்றுஞ் சுழிபுரம்" என புகழ் பூர்த்த சுழிபுரம் நகரின் வடபால் வயலும் வயல்சூழ்ந்த மருதநிலத்தில் திடலாக அமைந்துள்ள "பறாளாய்" என்னும் பதிதனில், தொன்மையும், கீர்த்தியும் மிக்க ஆலயமாக திகழ்வதே பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயமாகும்
இலங்கையில் விநாயகர் ஆலயங்கள் இல்லாத ஊரே இல்லை எனலாம். விநாயகர் பெரிய ஆலயங்களாக மட்டுமன்றி, மற்றைய தெய்வங்களின் ஆலயங்களிலும் பரிவார தெய்வமாகவும், ஆற்றங்கரை, குளக்கரை, மருத மரத்தடி, அரச மரத்தடி போன்ற இடங்களி்லும் வீற்றிருந்து அருள் புரிகின்றார்.
விநாயகப் பெருமானின் புராதன ஆலயங்கள் பலவற்றின் சுவடுகள் வன்னிப் பகுதிகளிலும், புராதன அநுராதபுரப் பகுதிகளிலும், பொலன்னறுவை, தெய்வந்துறை முதலான இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேற்கூறிய வற்றின் அடிப்படையில் நோக்கும் போது, ஆதிகாலம் முதல் இலங்கை முழுவதிலும் விநாயகர் வழிபாடு நடைபெற்று வந்திருப்பது புலனாகின்றது. இன்னும் புராதன அமைப்போடும், சிறப்போடும் விளங்குகின்ற ஆலயங்கள் பலவற்றை இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்திய, மேற்கு முதலான பகுதிகளில் காணமுடிகின்றது.
இலங்கையில் உள்ள புராதன விநாயகர் ஆலயங்களில் ஒன்றான சுழிபுரம் பறாளை விநாயகர் ஆலயமானது யாழ்ப்பாணத்தின் வடமேற்கே சுழிபுரம் என்னும் நகரில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில் சோழியபுரம் என அழைக்கபெற்ற பட்டினமே பிற்காலத்தில் சுழிபுரம் என மருவி உள்ளதாக கூறப்படுகின்றது
இலங்கையில் உள்ள புராதன விநாயகர் ஆலயங்களில் பிரசித்தி பெற்ற ஆலயமாக இவ்வாலயம் விளங்குவதுடன், அவர் தம்பி சிவசுப்பிரமணியரும் அவரருகே கோவில் கொண்டு எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருப்பதும் பறாளாய்பதியின் சிறப்பாகும். “பாறாளயம்பதி” என்ற பெயர் மருவி தற்போது பறாளாய் என அழைக்கப்பெறுகின்றது..
இவ் இரு ஆலயங்களைச் சூழ நெல் வயல்களும், தோட்ட வயல்களும் பசுமையாய் சூழ்ந்திருக்க; அங்கிருந்து வரும் குளிர்ந்த இளம் தென்றலின் தாலாட்டில் அண்ணனும் தம்பியும் ஒய்யாரமாக வீற்றிருந்து தம்மை பக்தியோடு வழிபடும் பக்தர்களின் குறை தீர்த்து பரசவத்தில் திகழ்கின்றார்கள்.
ஆலயத்தைச் சூழ்ந்துள்ள வயல் வெளியை அடுத்து குடிமனைகள் அமைந்துள்ளன. இவ் ஆலயங்களிற்கு தெற்கே சுழிபுரமும், தென்-மேற்கே தொல்புரமும், கிழக்கே பணிப்புலமும், வடக்கே தொடர்ந்து மாதகல் வரை வயல் வெளியும், மேற்கேயும் தொடர்ந்து வயல் வெளியும் "திருவடிநிலை" தீர்த்தக் கரை வரை (கடற்கரை வரை) அமைந்துள்ளன. சுழிபுரம், தொல்புரம் பகுதியில் இருந்து இவ் ஆலயத்திற்கு வருபவர்கள் பறாளை வீதியினூடாகவும், பணிப்புலம் பகுதியில் இருந்து வருபவர்கள் இவ் ஆலயத்தை முருகன் வீதியினூடாகவும் வந்தடையலாம்.
இவ்விரு ஆலயங்களுக்கும் தனித்தனியாக தீர்த்தக் கேணிகள் அமைந்துள்ளமையால், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்பைப் பெறுகின்றன.. இவ் ஆலத்தின் வடக்கு பிரகாரத்துடன் இணைந்து முருகன் ஆலயமும் அமைந்துள்ளமை (வடக்கு வெளிப்பிரகாரம் முருகன் ஆலயத்தின் தெற்குப் பிரகாரமாக அமைந்துள்ளமை மற்றுமோர் சிறப்பு அம்சமாகும்.
பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்திற்கும், சிவசுப்பிரமணியர் ஆலயத்திற்கும் பொதுவானதாக இருந்த, மிகப் பழமைவாய்ந்ததும், புராண வரலாற்றை நுட்பமாக மரத்தில் செதுக்கப் பெற்ற சிற்பங்கள் நிறைந்ததுமான தேர் பழுதடைந்த காரணத்தால், கொட்டகையில் வைத்து பாதுகாத்து வருவதுடன் நவீன சித்திரத் தேர் அமைக்கப் பெற்று, அண்ணனும், தம்பியும் தங்கள்தங்கள் மஹோற்சவ காலங்களில் ஒரே தேரில் ஆரோகணித்து அருள் பாலித்து வந்தனர்.
விநாயகருக்கும் தனியான ஒரு சித்திரத்தேர் அமைக்க முன்வந்த விநாயகர் அடியார்கள் ஒன்றிணைந்து ”தேர் திருப்பணி” சபை நியமிக்கப்பெற்று, பொது மக்களின் நன்கொடைகளுடன் புதிய சித்திரத் தேர் அமைக்கப்பெற்றதுடன்; 2013ம் ஆண்டு புதிய சித்திரத் தேரினில் ஈஸ்வர விநாயகர் ஆரோகணித்து அருள் பாலித்தார்.
இவ்வாலயம் சோழர்காலத்தில் முக்கிய வழிப்பாட்டுத் தலமாக இருந்ததாக மரபு வழிச்செய்திகள் குறிப்பிடுகின்றன. மேலும் இவ்வாலயத்தில் இந்தியாவில் இருந்து வந்த வேதாரணிய சைவக்குருமார்களால் வழிப்பாடுகள் நடந்ததாகவும், சோழ தேசத்தில் இருந்து வந்த எழுவர் தங்கள் பரிவாரங்களுடன் பறாளை விநாயகரை தரிசித்துச் சென்றதாகவும் சொல்லப்பெறுகின்றது.
இவ் ஆலயத்தில் தற்பொழுதும் வேதாரணிய சைவக் குருமார்கள் பரம்பரையில் வந்த சைவக் குருமார்களில் ஒருவரான சின்னத்துரை குருக்கள் பிறைசூடி குருக்கள் அவர்களினால் பரிபாலிக்கப் பெற்றும், பூசைகளும் செய்யப் பெற்றும் வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
பறாளை விநாயகர் மீது இவ் ஊர் மக்கள் பெரும் நம்பிக்கையோடு வாழ்கின்றனர். தாம் எக்காரியத்தைச் செய்வதற்கு முன்பும் இவ்வாலயத்தை, தரிசனம் செய்கின்றனர். மக்கள் தாங்கள் தமது வயல்களில் இருந்து பெறும் அறுவடையை முதலில் விநாயகருக்கே சமர்ப்பிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழரசர் காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பறாளை விநாயகர் ஆலயத்தை, போர்ததுக்கேயர் (டச்சுக்காரர்) இடிக்கத் தொடங்கினர். அதன் போது போர்த்துகேய படை அதிகாரி ஒருவர் மூல விக்கிரகத்தினை குறிபார்த்த வேளையில் காகம் ஒன்று வந்து, அந்த அதிகாரியின் கண்ணைக் கொத்தி ஆலயத்தை இடிக்க விடாது தடுத்தது என புராணக் கதைகள் கூறுகின்றன. அதனால், இங்குள்ள பிள்ளையார் "கண் கொத்திக் காக்கைப் பிள்ளையார்" எனவும் அழைக்கப்படுகிறார். அந்த அற்புத வரலாற்றினைப் பறாளை விநாயகர் பள்ளு சிறப்பாக கூறுகின்றது.
இன்னும் இதற்கு சமீபமாக இராமபிரான் பாதம் வைத்த காரணத்தால் (சிவபிரான் பாதம் பதித்ததால் எனக் கூறுவாருமுளர்) "திருவடிநிலை" எனப் பெயர்பெற்ற தீர்த்த தலம் அமைந்துள்ளது. இத்தலம்மானது கீரிமலையைப்போல மூர்த்தி தலம் தீர்த்த ஆகிய விசேடங்களை பெற்றதுள்ளது. "திருவடிநிலை" தீர்த்தக் கரையினில் பறாளை விநாயகர், பறாளை முருகன் தீர்த்த உற்சவங்களும், பொன்னாலை வரதராசப் பெருமாள் தீர்த்த உற்சவங்களும் நடைபெற்று வருகின்றன.
இத் தீர்த்தக் கரைக்கு கிழக்கு கரையோரமாக “சம்பில்துறை” என்னும் தீர்த்தக் கரை அமைந்துள்ளது. இத் தீர்த்தக்கரையில் பணிப்புலம் முத்துமாரி அம்பாள், காலையடி ஞானவேலாயுதர், சுழிபுரம் கிழக்கு சம்புநாதீஸ்வரர் தீர்த்த உற்சவங்கள் நடைபெறுகின்றன. சம்பில்துறை தீர்த்தக்கரையில் முற்காலத்தில் பிரபல்யமாக இருந்த சம்புநாதீஸ்வரர் ஆலயமும், பட்டினமும், துறைமுகமும் இயற்கைக் அனர்த்தங்களால் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் சமுத்திரத்தில் சங்கமித்தது என்பது வரலாறு.
இவ் ஆலயம் இருந்த இடத்தின் கரையோரமாக பணிப்புலத்தைச் சேர்ந்த “நரசிங்க சுவாமிகளால்” பல வருடங்களுக்கு முன்னர் சம்புநாதீவரர் ஆலயம் அமைக்கப்பெற்று கும்பாபிஷேகமும் நிகழ்த்தப்பெற்று பூசைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு அருகாமையில் "சங்கமித்த விகாரை" அமைந்துள்ளது. இங்கு இருந்த துறைமுகத்தில்தான் அசோகச் சக்கரவர்த்தியின் மகளான சங்கமித்த வந்திறங்கியதாக வரலாறு கூறுகின்றது.
முற்காலத்தில் இப்பிரதேசத்தை ஆட்சிசெய்த "திசைமழுவன்" என்னும் சிற்றரசன் அரசு செய்த இடம் ஈஸ்வர விநாயகர் ஆலயத்திற்கு சமீபமாக மேற்குத் திசையில் அமைந்துள்ளதாக செவிவழி வந்த கதைகள் கூறுகின்றன. அந்த இடம் தற்போது "மழுவைக்காடு" என்னும் பெயரால் அழைக்கப் பெறுகின்றது. அந்த இடத்தில் திசைமழுவன் காலத்தில் பிரபல்யம் பெற்று விளங்கிய "சம்பேசுரன்" என்னும் சிவாலயம் அழிந்து போன நிலையில் காணப்படுகின்றது. அழிவுற்றிருக்கும் இவ் ஆலயத்தை, விநாயகர் ஆலயத்திற்கு மேற்காக திருவடிநிலை தீர்த்தக்கரைக்கு செல்லும் குறுக்குப் பாதையில் இப்போதும் காணலாம்.
ஈஸ்வர விநாயகர் ஆலயம் தற்போழுது புனநிர்மான திருப்பணி வேலைகள் செய்யப்பெற்று, பிரதான வாயிலில் இராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருகின்றது,.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இவ்வாலயத்தின் மீது நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பறாளை "விநாயகர் பள்ளு" என்னும் பிரபந்தமொன்றைப் பாடியுள்ளார். அந்நூல் இத்தலத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் பறாளை விநாயகரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டதாகும். சிந்து, விருத்தம், கல்ப்பா, ஆகிய யாப்புக்களால் அந் நூல்பாடப்பட்டதாகும்.
விநாயகரை வணங்குவது எப்படி?
"சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோபசாந்தயே"
விநாயகரை வணங்கும்போது இரண்டு கைகளையும் முட்டியாகப் பிடித்து; இடக்கையால் இடது நெற்றியிலும் (நெற்றியின் ஓரத்திலும்), வலக்கையால் வலது நெற்றியிலும் (நெற்றியின் ஓரத்திலும்) மூன்று அல்லது ஐந்து முறை குட்டுகளிட்டு; வலக்கையால் இடது காதையும், இடக்கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு இடது கை மார்பைத் தொட்டவாறும், வலது கை வெளிப்பக்கமாகவும் இருக்கும்படி “ஓம் விநாயகா நமக” என்ற மந்திரத்தை சொல்லியபடி) மூன்று முறை தோப்புக் கரணம் போட்டு தோத்திரங்கள் பாடி வணங்கி தம் குறைகள்தீர வேண்டுதல் செய்தல் வேண்டும்.
இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது; எமது உடம்பின் மத்தகத்திலிருக்கும் அமிர்தமானது சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிசேக மாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்பெறுகின்றது.
அத்தோடு முன்னொரு காலத்தில் விநாயகப் பெருமான் காக்கை உருவெடுத்து அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக ஓடவைத்த பொழுது நிட்டையிலிருந்த அகத்திய முனிவரானவர் கோபங் கொண்டு காக்கையினை விரட்டினார். அப்பொழுது காக்கையானது ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு ஓடியபொழுது முனிவரும் அச்சிறுவனைத் துரத்திச் சென்று அவனது தலையில் குட்டினார்.
தலையில் குட்டு வாங்கியதும் சிறுவனாக நின்ற விநாயகப் பெருமான் தனது திருச் சொரூபத்தினை அகத்தியருக்குக் காண்பித்தார். உடனே விநாயகப் பெருமானை வணங்கிய அகத்திய முனிவரானவர் தான் செய்த தவறை உணர்ந்து தனது இரண்டு கைகளினாலும் தனது தலையிலே குட்டி தோப்புக்கரணம் செய்து தன்னை மன்னித்தருளுமாறு விநாயகரை வேண்டியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
இதன் பாவனையாகவே நாமும் தலையிலே குட்டி தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்குகின்றோம். நெற்றியில் குட்டி தோப்புக்கரணம் போட்டு விநாயகனை வணங்கினால் நாம் அறியாது செய்த பாவங்கள் அற்றுப் போய்விடும் என்பது ஐதீகம்.
விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்ற வேலைகள் யாவும் தடையின்றி நிறைவுபெறும் என்பதனால்தான் கோவிற்கிரிகைள் உட்பட எல்லாச் சந்தர்ப்பங்களிலும் விநாயகர் வழிபாடு முதலிடத்தை வகிக்கின்றது.
பறாளை வீதியூடாக வரும்போது விநாயகரை முதலில் தரிசிக்கலாம்
முருகன் வீதியூடாக வரும்போது முருகன் ஆலயத்தை தரிசிக்கலாம்
"திருவடிநிலை" தீர்த்தக் கரையின் தற்போதைய தோற்றம்
இத் தீர்த்தக் கரையினில் பறாளை ஈஸ்வர விநாயகர், பறாளை சிவசுப்பிரமணியர், பொன்னாலை வரதராஜப் பெருமாள் தங்கள் தங்கள் தீர்த்தோற்சவ காலத்தில் இவ் தீர்த்தக் கரைக்கு எழுந்தருளி சமுத்திர தீர்த்தம் ஆடுவது வழக்கம். அதற்காக இத் தீர்த்தக் கரையினில் விசாலமான பூஜை மண்டபம் ஒன்று எம்முன்னோர்களல் அமைக்கப்பெற்றிருந்தது. அத்துடன் இத் தீர்த்தக் கரையினில் "வாகை வைரவர்" எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றார். தீர்த்த உற்சவ காலங்களில் இங்கு வரும் அடியவர்கள் பொங்கல் இட்டு பூசைகள் செய்து வாகை வைரவரை வழிபடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
நன்றி
பறாளை விநாயகர் பள்ளு
காப்பு
தொல்லுலகம் போற்றுஞ் சுழிபுரம்வாழ் ஐங்கரன்மேற்
பல்வளஞ்சேர் பள்ளினிசை பாடவே – வில்வழங்கு
மையாழிக் கண்ணன் மலர்க்கண் வளர்ந்ததிருக்
கையாழிக் கண்ணனே காப்பு.
துதி
விநாயகர்
நந்து தவழ நதிதனி லாம்ப னனிமலருஞ்
சுந்தரஞ் சேரும் பழனப் பறாளையிற் றோன்றுசுடர்
வந்தெதிர் நின்ற கயமுகன் றன்னை வதைத்ததந்த
வைந்து கரப்பிள்ளை யென்னகத் தேநின் றருள்செயுமே.
நடேசர்
சுருதி யின்முத லாகிய காரணர்
துளைபொ லிசுர வாரண மாமுகர்
சுழிபுர நகர் மேவுப றாளையி லுறைநாதர்
கரும ணிவிழி யாழுமை பாலகர்
கதிரை யின்வடி வேலர்ச கோதரர்
கருணை யின்மத தாரையி னார்பளி னிசையோதச்
செரும ருவுத்ரி சூலவ ராயுதர்
திரிதி ரிபுர கோபர நாமயர்
திகழி ரணிய மேருச ராசனர் பணிநாணார்
பொருமு ழுவையி னீருரி யாடையர்
புரிச டைவளை சோமக லாதரர்
பொதுவி னினட மாடிய சேவடி மறவேனே
சிவகாமியம்மை
தோட்டு வாரிச நான்முகன் பேணிய
தும்பி மாமுக னம்புவி தாங்கிய
சேட்டு மேருவிற் பாரதந் தீட்டிய
தென்ப றாளைப் பரஞ்சோதி யன்னை
கோட்டு வாரணி கொங்கைப் பெருக்குங்
குழற்சு ருக்கு மணிவாய் முருகும்பஞ்
சூட்டு சீறடி யுந்துடி நேரிடை
யுடையு மெங்கணு மென்கணி னின்றவே
''பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூண ஆனந்தமே''
“அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது இறை”. ஐந்தொழில் புரியும் சிவன், சிவக்கனல் முருகன், மோனஞான போத தட்சணா மூர்த்தி, பராசக்தி பரம்பொருளின் இச்சா, கிரியா, ஞான சக்தியின் கூட்டு. அவ்வாறே இறைவனின் திவ்விய வல்லமையின் வடிவமே விநாயகர்.
ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தீ ப்ரஜோதயாது
விநாயகரை முழு முதற் கடவுளாக வழிபடும் சமயம் "காணபத்யம்". ஆனால் இந்து மதம் முழுவதற்கும் பொதுவாய் எழுந்தருளியிருக்கும் தெய்வம் விநாயகர். எந்த ஒரு நற்காரியத்தைத் தொடங்கும் முன்னும் விநாயகர் வணக்கத்துடன் தொடங்கும் போது காரியம் சித்தியடையும் என்பது நம்பிக்கை. அத்துடன் விநாயகர் வழிபாட்டில் விநாயகரை உருவத்தில் கொண்டு வருவதும் எளிது. மண்ணினால், சாணத்தினால், அரிசி மாவினால், மஞ்சளினால் பிள்ளையரை எளிதில் உருவாக்கிடலாம். வேறு சின்னம் அகப்படாத இடத்து அறுகம்புல் அவருக்கு அறிகுறியாக வந்து நிற்கும்.இயற்கையின் முறைமைகளைக் காக்கச் சிவசக்தியின் அருட்பிரசாதமாக ஆனைமுகன் உருவெடுத்தான் என்பது ஐதீகம்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
திருமந்திரம்
விநாயகரின் முப்பத்திரண்டு தோற்றங்களும் அவற்றின் விளக்கமும்
பிரபஞ்ச சக்தி, காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர். பூமி, காற்று, நெருப்பு, நீர், வானம் ஆகிய பஞ்சபூதங்களின் முழு வடிவம்மே இந்த ஐங்கரன். அவருக்கு ஐந்து கைககள். "ஒரு கை தனக்கும், ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு ,இரு கைகள் நம்மைக் காக்க"என்று தணிகைப் புராணத்திலே சொல்கிறார் கச்சியப்ப முனிவர்.
சிவனுக்கு - "ஆல் அமர் செல்வன்" கண்ணனுக்கு "ஆலிலைப் பாலன்" என்று விருட்ஷங்களை இணைத்து அளைப்பதுபோல் விநாயகனுக்கு "ஆலமர அல்லது அரசமரத்தடி பிள்ளையார்" என அழைப்பார்கள். விநாயகரை மகா கணபதி, ஹரித்ரா கணபதி அல்லது துந்திராஜ கணபதி, உச்சிஷ்ட கணபதி, நவநீதி கணபதி, ஸ்வர்ண கணபதி, சந்தான கணபதி என்கிற ஆறு வடிவங்களில் வழிபடுவார்கள்.
முத்கல புராணம் விநாயகரின் எட்டு அவதாரங்களையும், முப்பத்திரண்டு திருவுருவங்களையும் விவரித்து கூறப்பெற்றுள்ளது. எட்டு அவதாரங்கள் என்பது மனிதர்களின் எட்டு பலவீனங்கள் அல்லது அசுர குணங்களை குறிக்கின்றன. அவையாவன:
1. அகந்தையை வெல்லும் - ஏகதந்தர்;
2. செருக்கை அகற்றும் - தும்ரவர்ணர்;
3. பொறாமையை அழிக்கும் - வக்ரதுண்டர்;
4. மோகத்தை அடக்கும் - மகோதரர்;
5. பேராசையை நீக்கும் - கஜானானர்;
6. கோபத்தை குறைக்கும் - லம்போதரர்;
7. காமத்தை விளக்கும் - விடர்;
8. தற்பெருமையை தணிக்கும் - விக்னராஜா என்பனவாம்.
முப்பத்திரெண்டு திருவுருவங்களும் தோற்றமும்:
1. "ஸ்ரீபால விநாயகர் " குழந்தை வடிவம், யானைத்தலை; பொன்னிற மேனி; நான்கு கைகளில் ஒன்றில் வாழைப்பழம், ஒன்றில் மாம்பழம், ஒன்றில் கரும்பு, ஒன்றில் பலாப்பழம், துதிக் "கை"யில் அவருக்கு பிடித்த கொழுக்கட்டை.
2. "ஸ்ரீ தருண விநாயகர்" : இளமை பொங்கும் அழகிய இளைஞனாக, ஒடிந்த தந்தம், விளாம்பழம், கரும்புத்துண்டம், அங்குசம், பாசம், நெற்கதிர்,நாவற்பழம்,மோதகம் தாங்கிய எட்டு கைகளும் கொண்ட சிவந்த மேனியர்.
3. "ஸ்ரீ பக்தி விநாயகர்" : அறுவடை கால முழு நிலவு போல் ஒளிரும் சாம்பல் நிற மேனியர்; வாழைப்பழம், மாம்பழம், தேங்காய், கிண்ணம் நிறைய பாயசம் கொண்ட நான்கு கைகள் உடையவர்.
4. "ஸ்ரீ வீர விநாயகர்" : வல்லமை வாய்ந்த மாவீரர் போல் அனைவரையும் கவர்ந்தீர்க்கும் வகையில், நின்ற நிலையில் அம்பு, அங்குசம், மழு, குந்தாலி, சம்மட்டி, சூலம், வாள், சக்கரம், சங்கு, கேடயம், கதை, கொடி, பாசம், நாகம், வேல்,வில் கொண்ட பதினாறு கரங்கள் கொண்ட சிவந்த மேனி.
5. "ஸ்ரீ சக்தி விநாயகர்" : தனது சக்தியரில் (சித்தி, முக்தி) ஒருவரை மடியில் அமர்த்தி இடது கீழ்க்கரத்தால் அணைத்த வண்ணம் உட்கார்ந்த நிலையில் அங்குசம் பாசம் ஏந்தி வலது கீழ்க்கரத்தால் அபயம் அளிக்கும் நான்கு கரமுடைய ஆரஞ்சு சிவப்பு மேனியர்.
6. "ஸ்ரீ துவிஜ விநாயகர்": நான்குமுக வெண்ணிலவு வண்ண மேனி, அக்கமாலை, தண்டம், கமண்டலம், ஏடு ஏந்திய நான்கு கரங்கள்.
7. "ஸ்ரீ சித்தி விநாயகர்": எடுத்ததை முடித்து வைக்கும் பொன் மஞ்சள் நிற மேனி, மாம்பழம், பாசு, கரும்புத்துண்டம், மலர்க்கொத்து கொண்ட நான்கு கரங்கள், துதிக்கையில் எள்ளுருண்டை.
8. "ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர்": பேரின்பம் அருளும் பண்பாட்டு காவலர், நீல நிற மேனி, தனது சக்தியுடன் வீற்றிருக்கும் இவர் அக்கமாலை, மாதுளம் பழம், வஜ்ஜிர திரிசூலம், நீலோற்பலம், நெற்கதிர், வீணை தாங்கிய ஆறு கரங்கள்.
9. "ஸ்ரீ ஷிப்ர விநாயகர்": வரமருளும் விநாயகரான இவர் தந்தம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி நான்கு கரங்களில் தாங்கியிருப்பார் துதிக்கையில் இரத்தின கும்பம் கொண்ட வண்ன மேனி.
10. "ஸ்ரீ விக்ன விநாயகர்": விக்கினங்களின் அதிபதி. தந்தம், மலரம்பு, பரசு, சக்கரம், சங்கு, பாசம், கரும்புவில், பூங்கொத்து ஏந்திய எட்டு கரங்கள். துதிக்கையில் கொழுக்கட்டையை வைத்திருக்கும் பொன்னிற மேனி.
11. "ஸ்ரீ ஹரம்ப விநாயகர்": சிங்கவாகனத்தில் அமர்ந்திருக்கும் ஐந்து முக வெண்ணிறமேனி. அபயகரம், தந்தம், மலர்மாலை, அக்கமாலை,சுத்தி, பாசம், பழம், கதை, கொழுக்கட்டை கொண்ட பத்து கரம்.
12. "ஸ்ரீ லட்சுமி விநாயகர்": வெற்றியைத் தருபவர்; நீல மலர் ஏந்திய இருதேவியர்களுடைய தூய வெண்ணிற மேனியர்; பச்சைக்கிளி, மாதுளம் பழம், வாள், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, மாணிக்கக்கும்பம், வரம் தரும் கரம் கொண்ட எட்டு கரங்கள்.
13. "ஸ்ரீ மகர விநாயகர்": மூன்று கண்களுடன் நெற்றியில் பிறைச் சந்திரன் ஒளிர, சிவப்பு வண்ணத்தோற்றம். தந்தம், மாதுளம்பழம், நீலோற்பலம், நெற்கதிர், சக்கரம், பாசம், தாமரை, கரும்புவில், கதை ஆகியவற்றைத் தாங்கிய ஒன்பது கரங்கள், தாமரை எந்திய கையுடன் கூடிய சக்தியை பத்தாவது கையில் தழுவிக்கொண்டு துதிக்கையில் ரத்தின கலசம்.
14. "ஸ்ரீ விஜய விநாயகர்": மூஷிக வாகனத்தில் அமர்ந்திருக்கும் வெற்றியைத் தரும் செந்நிற மேனி, தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம் தாங்கிய நான்கு கரங்கள்.
15. "ஸ்ரீ நிருத்திய விநாயகர்": ஊன்றிய இடது கால்,தூக்கிய வலது கால், கற்பக விருட்சத்தனடியில் ஆனந்த நடனமாடும் பொன்னிற மேனி. தந்தம், அங்குசம், அபிநயம் காட்டுவது போலுள்ள உயர்த்திய கையிலே பாசம், கொழுக்கட்டை கொண்ட நான்கு கரங்கள்.
16. "ஸ்ரீ ஊர்த்துவ விநயகர்": இடது மடியில் அமர்ந்திருக்கும் பச்சை நிறமுடைய தேவியை அணைத்த வண்ணமுள்ள பொன்னிற மேனி. தந்தம், அம்பு, செங்கழநீர்மலர், நெற்கதிர், கரும்புவில், தாமரை மலர் கொண்ட ஆறு கரங்கள்.
17. "ஸ்ரீ ஏகாட்சர விநாயகர்": பிறை சூடி, முக்கண்ணனுடன் செம்பட்டுடையும், செம்மலர் மாலையும் அணிந்து குட்டைக் கைகால்களை கொண்டு பத்மாசன நிலையில் மூஷிக வாகனத்தில் அமர்ந்திருக்கும் செந்நிற மேனி, மாதுளம் பழம், அங்குசம், பாசம், கொண்ட நான்கு கரங்கள்.
18. "ஸ்ரீ வரத விநாயகர்": வரம் தரும் பிறைசூடிய முக்கண், செந்நிற மேனி, தேன்கிண்ணம், அங்குசம், பாசம், துவஜம் கொண்ட நான்கு கரங்கள்.
19. "ஸ்ரீ திரயாட்சர விநாயகர்": ஆடும் காதுகளில் சாமரம் எனும் அணிகளும், தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம் கொண்ட நான்கு கரங்கள். தும்பிக்கையில் கொழக்கட்டை பொன்னிற மேனி.
20. "ஸ்ரீ ஷிப்ர பிரசாத விநாயகர்": பிறையுடையாடை, முக்கண் கொண்ட சிவந்த மேனி, தந்தம், தாமரை, அங்குசம், பாசம், கற்பகக் கொடியுடன் ஆறு கரங்கள். துதிக்கையில் மாதுளம் பழம்.
21. "ஸ்ரீ ஹரித்ரா விநாயகர்": மஞ்சள் ஆடையுடைய பொன்னிற மேனி. தந்தம், அங்குசம், பாசம், மோதகம் கொண்ட நான்கு கரங்கள்.
22. "ஸ்ரீ ஏகதந்த விநாயகர்": பெருத்த வயிறு, ஒற்றைத் தந்தம், அக்கமாலை, கோடரி, லட்டு கொண்ட நான்கு கரங்களைக்கொண்ட நீல மேனி.
23. "ஸ்ரீ சிருஷ்டி விநாயகர்": தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம். கொண்ட நான்கு கரங்கள். செந்நிற மேனியில் பெருச்சாளி வாகனம்.
24. "ஸ்ரீ உத்தண்ட விநாயகர்": வலது கையில் தாமரை ஏந்தியுள்ள பச்சை நிற தேவியை இடது கையால் அணைத்துள்ள செந்நிற மேனி. த்ந்தம், மலர்மாலை, தாமரை, கதை, பாசம், நீலோற்பலம், நெற்கதிர், கரும்புவில், மாதுளம்பழம் கொண்ட ஒன்பது கரங்கள் துதிக்கையில் ரத்ன கும்பம்.
25. "ஸ்ரீ ருணமோகன விநாயகர்": செம்பட்டுடுத்தி வெண்பளிங்கு நிறம் கொண்டவர். தந்தம், அங்குசம், பாசம், நாவற்பழம் ஏந்திய நான்கு கரங்கள்.
26, "ஸ்ரீ துண்டி விநாயகர்": நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் செந்நிற மேனி. தந்தம், அக்கமாலை, கோடரி, ரத்தின பாத்திரம் தாங்கிய நான்கு கரங்கள்.
27. "ஸ்ரீ இருமுக விநாயகர்": இரு முகம், செந்நிற ஆடை, ரத்தின கீரிடம், நீலநிற மேனி. தந்தம், அங்குசம், பாசம், ரத்தின பாத்திரம் கொண்ட நான்கு கரங்கள்.
28. "ஸ்ரீ திரிமுக விநாயகர்": அபயம், அக்கமாலை, அங்குசம் உள்ள மூன்று வலது கரங்கள், பாசம், அமுத கலசம், வரதம் மூன்று இடது கரங்கள், தங்க தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் செந்நிற மேனி.
29. "ஸ்ரீ சிங்க விநாயகர்": சிங்க வாகனத்தில் அமர்ந்துள்ள வெண்ணிற மேனி. வரதம்,வீணை, சிங்கம், கற்பகக்கொடி கொண்ட நான்கு வலக்கரங்கள், தாமரை, மலர்க்கொத்து, ரத்தின கவசம், அபயம் கொண்ட நான்கு கரங்கள்.
30. "ஸ்ரீ யோக விநாயகர்": யோக ஆசனத்தில் யோக பட்டம் கட்டிக்கொண்டு யோக தண்டம், அக்கமாலை, பாசம், கரும்பு தாங்கிய நான்கு கரங்கள், நீல நிற ஆடை அணிந்த பால சூரிய நிறம்.
31. "ஸ்ரீ துர்க்கா கணபதி": அம்பு, தாமரை, அக்கமாலை, அங்குசம், பாசம், அஸ்திரம், கொடி, வில் ஆகியவற்றை எந்திய எட்டு கரங்கள் செந்நிற ஆடையுடைய பொன்னிறம்.
32. "ஸ்ரீ சங்கட ஹர விநாயகர்": துயரங்களைப் போக்குபவர், நீல ஆடை அணிந்த பால சூரியன் போன்ற நிறம். இடது மடியில் நில மலரை ஏந்திய பச்சை மேனியுடைய தேவியை அமர்த்தியிருப்பவர். வரதம் அங்குசமுடைய வலக்கரம், பாசம், பாயச பாத்திரமுடைய இடக்கரம்.
ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம்!
பக்தாவாஸம் ஸ்மரேந்நித்யமாயு: காமார்த்த ஸித்தயே!!
பொருள்: தீர்க்காயுள், விருப்பம், செல்வவளம் ஆகியவற்றை அருளும் பார்வதியின் மைந்தனும், தூய்மையான பக்தர்களின்
நெஞ்சில் வசிப்பவருமானவிநாயகப்பெருமானை தினமும் வணங்குகிறேன்.
வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்
வெற்றிமுகத்து விநாயகனைத் தொழப் புத்தி மிகுத்து வரும்
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத் தொழத்
துள்ளியோடும் தொடர்வினைகளே!
அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய
தொப்பையப்பனைத் தொழ வினையறுமே.
பொருள்: யானைமுகம் கொண்ட விநாயகப் பெருமானை வழிபட்டால் வாழ்வு சிறக்கும். வெற்றிமுகம் கொண்ட
அப்பெருமானை வழிபடுவோருக்கு நல்ல புத்தி உண்டாகும். வெள்ளை நிறம் கொண்ட தந்தத்தையுடைய அவர்,
நம்மைத் தொடரும் தீவினைகளைப் போக்கி அருள்வார்.தொப்பையப்பனாகிய விநாயகப்பெருமானுக்குஇனிமையான
அப்பம், மா,பலா, வாழைப்பழங்கள், அன்னம் ஆகியவற்றைப் படைத்து வழிபட நம் வினைகள் வேரோடு அகன்றுவிடும்.
இல்வாழ்க்கையில் சித்தியையும், முக்தியையும் அடைவதற்காக மானிடராக பிறந்திருக்கும் நாம்;
சித்தி, முக்தி என்னும் இரு சக்திகளையும் தம் சக்திகளாகப் பெற்று;
மிகவும் பழமையும், புதுமையும், நிறைந்த பறாளைப் பதிதனில் அருள்பாலிக்கும் ஈஸ்வரவிநாயகரை
இவ் மஹோற்சவ உற்சவ காலத்தில் ஆசாரசீலர்களாக விரதம் அனுஷ்டித்து, பக்தி சிரத்தையுடன் வழிபட்டு,
இஸ்டசித்திகளைப் பெற்று உய்வோமாக
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு

சுழிபுரம் - பறாளை சிவசுப்பிரமணியர் தேவஸ்தான மஹோற்சவ விழா முன்னறிவித்தல் - 2018

E-mail Print PDF

No automatic alt text available.

பறாளை முருகன் துனை
உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவா யுயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவா யருள்வாய் குகனே

பறாளை ஈஸ்வரவிநாயகர், சிவசுப்பிரமணியர் ஆலயங்கள்

இலங்கையின் வடபால் சைவமும் தமிழும் செழித்தோங்கி "தொல்லுலகம் போற்றுஞ் சுழிபுரம்" என புகழ் பூத்த சுழிபுரம் நகரின் வடபால் வயலும் வயல்சூழ்ந்த மருதநிலத்தில் திடலாக அமைந்துள்ள "பறாளாய்" என்னும் பதிதனில், தொன்மையும், கீர்த்தியும் புதுமையும் மிக்க ஆலயங்களாகளாக பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயமும், சிவசுப்பிரமணியர் ஆலயமும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன.

இவ் இரு ஆலயங்களைச் சூழ நெல் வயல்களும், தோட்ட வயல்களும் பசுமையாய் சூழ்ந்திருக்க; அங்கிருந்து வரும் குளிர்ந்த இளம் தென்றலின் தாலாட்டில் அண்ணனும் தம்பியும் அருகருகே எழுந்தருளி தம்மை பக்தியோடு வழிபடும் பக்தர்களின் குறை தீர்த்து பரசவத்தில் திகழ்கின்றார்கள்.

இவ் ஆலயங்கள் யாழ்ப்பாணத்தின் வடமேற்கே சோழர் காலத்தில் "சோழியபுரம்" என அழைக்கபெற்ற சுழிபுரம் என்னும் பட்டினத்தின் வடபால் அமைந்துள்ளது. சோழியபுரம் பட்டினமே பிற்காலத்தில் ”சுழிபுரம்” என மருவி உள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் முற்காலத்தில் “பாறாளாயம்பதி” என்று அழைக்கப்பெற்ற பெயர் மருவி தற்போது ”பறாளாய்” என அழைக்கப்பெறுகின்றது.

ஆலயங்களைச் சூழ்ந்துள்ள வயல் வெளியை அடுத்து குடிமனைகள் அமைந்துள்ளன. இவ் ஆலயங்களிற்கு தெற்கே சுழிபுரமும், தென்-மேற்கே தொல்புரமும், கிழக்கே பணிப்புலமும், வடக்கே தொடர்ந்து மாதகல் வரை வயல் வெளியும், மேற்கேயும் தொடர்ந்து வயல் வெளியும் "திருவடிநிலை" தீர்த்தக் கரை வரை அமைந்துள்ளன. சுழிபுரம், தொல்புரம் பகுதியில் இருந்து இவ் ஆலயத்திற்கு வருபவர்கள் ”பறாளை வீதி”யினூடாகவும், பணிப்புலம் பகுதியில் இருந்து வருபவர்கள் இவ் ஆலயத்தை ”முருகன் வீதி”யினூடாகவும் வந்தடையலாம்.

இவ்விரு ஆலயங்களுக்கும் தனித்தனியாக தீர்த்தக் கேணிகள் அமைந்துள்ளமையால், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்பைப் பெறுகின்றன.

இவ்விரு ஆலயங்களையும் இரண்டிற்கும் பொதுவாக அமைந்துள்ள வெளிபிரகாரம் பிரிக்கின்றன. விநாயகர் ஆலத்தின் வடக்கு பிரகாரம் முருகன் ஆலயத்தின் தெற்குப் பிரகாரமாக அமைந்துள்ளமை மற்றுமோர் சிறப்பு அம்சமாகும்.

முருகன் ஆலயத்தில் உள் பிரகாரத்திற்கும், வெளிப்பிரகாரத்திற்கும் இடையே இன்னுமொரு வீதி காணப்படுகின்றது. இவ் வீதியின் வடக்கு பிரகாரத்தில் முருகனின் தீர்த்தக் கேணி அமைந்துள்ளது. அத்துடன் வெள்ளரசமரத்தின் கீழ் சிவலிங்கமும், பைரவர் ஆலயமும், நாக தேவதைகளும் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்திற்கும், சிவசுப்பிரமணியர் ஆலயத்திற்கும் பொதுவானதாக இருந்த, மிகப் பழமைவாய்ந்ததும், புராண வரலாற்றை நுட்பமாக மரத்தில் செதுக்கப் பெற்ற சிற்பங்கள் நிறைந்ததுமான தேர் பழுதடைந்த காரணத்தால், கொட்டகையில் வைத்து பாதுகாத்து வருவதுடன் நவீன சித்திரத் தேர்கள் அமைக்கப் பெற்று, அண்ணனும், தம்பியும் தங்கள்தங்கள் மஹோற்சவ காலங்களில் ஆரோகணித்து அருள் பாலிக்கின்றார்கள்.

இந்த ஆலயங்களிற்கு சமீபமாக (மேற்கு திசையில்) இராமபிரான் பாதம் வைத்த காரணத்தால் (சிவபிரான் பாதம் பதித்ததால் எனக் கூறுவாருமுளர்) "திருவடிநிலை" எனப் பெயர்பெற்ற தீர்த்த தலம் அமைந்துள்ளது.

இத்தலம்மானது கீரிமலை தீர்த்தக் கரையினைப்போல் மூர்த்தி தலம் தீர்த்த ஆகிய விசேடங்களை பெற்றதுள்ளது. "திருவடிநிலை" தீர்த்தக் கரையினில் பறாளை விநாயகர், பறாளை முருகன் தீர்த்த உற்சவங்களும், பொன்னாலை வரதராசப் பெருமாள் தீர்த்த உற்சவங்களும் நடைபெற்று வருகின்றன. அத்துடன் இத் தீர்த்தக் கரையினில் ஆடி அமாவாசை சித்திரா பௌர்ணமி போன்ற விஷேட தினங்களில் பிதிர் கடன் தீர்க்கும் புனித தலமாகவும் திகழ்கின்றது.

முற்காலத்தில் இப்பிரதேசத்தை ஆட்சிசெய்த "திசைமழுவன்" என்னும் சிற்றரசன் அரசு செய்த இடம் ஈஸ்வர விநாயகர், சுப்பிரமணியர் ஆலயங்களுக்கு சமீபமாக மேற்குத் திசையில் அமைந்துள்ளதாக செவிவழி வந்த கதைகள் கூறுகின்றன. அந்த இடம் தற்போது "மழுவைக்காடு" என்னும் பெயரால் அழைக்கப் பெறுகின்றது.

அந்த இடத்தில் திசைமழுவன் காலத்தில் பிரபல்யம் பெற்று விளங்கிய "சம்பேசுரன்" என்னும் சிவாலயம் அழிந்து போன நிலையில் காணப்படுகின்றது. அழிவுற்றிருக்கும் இவ் ஆலயத்தை, விநாயகர் ஆலயத்திற்கு மேற்காக திருவடிநிலை தீர்த்தக்கரைக்கு செல்லும் குறுக்குப் பாதையில் இப்போதும் காணலாம்.

திருவடிநிலை தீர்த்தக் கரைக்கு கிழக்கு கரையோரமாக “சம்பில்துறை” என்னும் தீர்த்தக் கரை அமைந்துள்ளது. இத் தீர்த்தக்கரையில் பணிப்புலம் முத்துமாரி அம்பாள், காலையடி ஞானவேலாயுதர், சாந்தை சித்திவிநாயகர், சுழிபுரம் கிழக்கு சம்புநாதீஸ்வரர் தீர்த்த உற்சவங்கள் நடைபெறுகின்றன.

சம்பில்துறை தீர்த்தக்கரையில் முற்காலத்தில் பிரபல்யமாக இருந்த சம்புநாதீஸ்வரர் ஆலயமும், பட்டினமும், துறைமுகமும் இயற்கைக் அனர்த்தங்களால் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் சமுத்திரத்தில் சங்கமித்தது என்பது வரலாறு.

இவ் ஆலயம் இருந்த இடத்தின் கரையோரமாக பணிப்புலத்தைச் சேர்ந்த “நரசிங்க சுவாமிகளால்” பல வருடங்களுக்கு முன்னர் சம்புநாதீவரர் ஆலயம் அமைக்கப்பெற்று கும்பாபிஷேகமும் நிகழ்த்தப்பெற்று பூசைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு அருகாமையில் "சங்கமித்த விகாரை" அமைந்துள்ளது. இங்கு இருந்த துறைமுகத்தில்தான் அசோகச் சக்கரவர்த்தியின் மகளான சங்கமித்த பிக்குணி வந்திறங்கியதாக வரலாறு கூறுகின்றது.

குன்றில் குடியிருக்கும் குமரன்: குன்று (மலை, உயர்ந்த இடம்) என்றால் குமரக் கடவுளுக்கு தனிப் பிரியம். உடனே உட்காந்து விடுவார் என பறாளை முருகன் ஆலய வாத்தியார் ஐயா கூறுவார். பறாளை வயல்வெளியில் உயர்ந்து காணப்படும் திடலில் சிவசுப்பிரமணியர் அண்ணர் ஈஸ்வர விநாயகருடன் அருகருகே எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.

அறுபடை வீடு
மிகப்பழமை வாய்ந்த தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம் தமிழக நிலப்பரப்பைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகையாகப் பிரிக்கிறது. இவற்றில் மலையும் மலையைச் சார்ந்த பகுதியாகிய குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளே முருகப்பெருமான்.

பழநி:
பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநிமைலயில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது

திருச்செந்தூர்:
கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர்.

அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.

திருப்பரங்குன்றம்:
தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

சுவாமிமலை:
தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை.

திருத்தணி:
முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.

பழமுதிர்ச்சோலை:
நக்கீரர், 'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே' என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.

முருகக் கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே?

முருகன்:
முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.

மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று. இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

சரவண பவன்
சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன். என்றும் பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்துவீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம்,ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.
சகரம் என்றால் உண்மை, ரகரம் என்றால் விஷய நீக்கம், அகரம் என்றால் நித்யதிருப்தி, ணக்ரம் என்றால் நிர்விடயமம், பகரம் பாவ நீக்கம் வகரம் என்றால் ஆன்ம் இயற்கை குணம் என்றும் கூறுவார்கள்.

ஆறுமுகம்(ன்)
சிவ பெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர்ந்து ஆறுமுகங்களானதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது. சிவத்திற்குரிய தற்புருடம், அகோரம், வாமதேவம், சக்தியோஜதம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள். இத்துடன் சக்தியின் அதோமுகமும் சேர்ந்தது. முருகன் சிவ ஸ்வரூபமாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் சேர்ந்து விளங்குகிறான் என்பதையே இது உணர்த்துகிறது. திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வர்யம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்று சொல்பவர்களும் உண்டு.

ஆறுமுகன் (முருகன்) அவதாரம்:
தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய ஐந்து முகங்களும், இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய “அதோமுகம்” (மனம்) என்னும் ஆறாவது முகமும் உண்டு.) அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் சென்று வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய ”சரவணப் பொய்கையில்” மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.

அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வரும் வேளை அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினன் உலகமுய்ய.

ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் “ஆறுமுகசுவாமி” எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.

பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் “ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்” எனப்பெறுகின்றது.

யார் அந்த சூரபத்மன்?:
பிரமதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்ததினால் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.

காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்பெறுபவர்) ஏவப்பட்ட "மாயை" என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.

இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானைமுகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி (பெண்) என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர்.

இவர்களுள் சூரபதுமன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வவல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து; 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் ஆரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேரு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான். இவ்வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.

சூரபதுமன் பதுமகோமளை என்னும் பெண்ணை மணந்து வீரமகேந்திரபுரியை இராசதானியாகக் கொண்டு ஆண்டுவரும் காலத்தில் அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், 3 தலைகளைக் கொண்ட-வச்சிரவாகு ஆகிய நாங்கு புதல்வர்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரவரும் (3000-மூவாயிரம் பேரும்) பிறந்தனர். இவர்களுடன் இன்னும் 120 பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

சூரபத்மனை ஏன் வதைக்க வேண்டும்?;
சூரபத்மன் என்னும் அசுரன் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டு இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்து அதர்ம வழியில் ஆட்சிசெய்யலானான்.

அசுரர்களின் இக் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்டு சூரபத்மன் முதலான பலம் மிக்க அசுரர்களைகளை அழிக்கும் சக்தி படைத்த ஆறுமுகன் அவதரித்தார்.

சுபம்


மரண அறிவித்தல் - திரு. பூலோகம் தனபாலசிங்கம்

E-mail Print PDF

Image may contain: 1 person, text

காலையடி தெற்கை பிறப்பிடமாகவும் பணிப்புலம் ,கலட்டியை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்துவந்த உயர்திரு. பூலோகம் தனபாலசிங்கம் அவர்கள் இன்று 31.01.2018 புதன்கிழமை இறைவனடி சேர்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »

Page 1 of 128

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்