Monday, Mar 02nd

Last update04:56:54 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: ஆரோக்கியம்

தனியாக இருக்கும் போது மாரடைப்பு! - வந்தால் என்ன செய்யலாம்?... யுக்தி அறிமுகம்

E-mail Print PDF

வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்வோர் அவசர மருத்துவ சேவையை அழைப்பதன் மூலம் உடனடியாக வைத்திய உதவிகளைப் பெறுகின்றனர். இவ் வசதி எம் தாய் நாடுகளில் இல்லாதிருப்பதால் உடனடியாக நாம் ஏதாவது உபாயம் செய்து வைத்திய உதவி கிடைக்கும்வரை இருதயத்தை செயல்பெறச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வாழ்கின்றோம். அதற்கான ஒரு யுக்தியை வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன் விபரம் கீழே விபரிக்கப் பெற்றுள்ளது.

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?
உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாகவே இருந்திருந்திருக்கின்றார்கள். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.

மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு?
கரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) கொண்டு செல்லும் இரத்தத்தில் இருந்து இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது.  இந்த இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப்பெறாமல் இறக்கின்றன. இதுவே மாரடைப்பு என்றழைக்கப்படுகிறது. மாரடைப்பின் தீவிரத் தன்மை  இதயத்தசைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து அமைகிறது.

இறந்த தசைகள் இதயத்தின் இரத்தம்செலுத்தும் திறனைக் குறைத்து அதன் செயல்பாட்டினை வெகுவாக பாதிக்கலாம்.  பாதங்களில் வியர்த்தல் மற்றும் மூச்சுவிடமுடியாமை போன்ற நிலையை உருவாக்கி இதயத்தில் செயலற்ற நிலையை ஏற்படுத்தலாம்.

ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம்; ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, கரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) வழியாக அனுப்புகிறது. இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன.

இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.

சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது.  இதனால் இந்த இரத்தக் குளாய் மூலம் ரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப் பகுதி ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....? வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம, ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்.?

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது: "தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இருமுதல் வேண்டும்”, ஒவ்வொரு முறை இருமலுக்கும் முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில் அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது, இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம். இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.. தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர், உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!

நன்றி

656.08.02.14

உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்!!!

E-mail Print PDF

அனேகமானோரின், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால், அனீமியா என்னும் மறதி நோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக இரத்தத்தில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதெற்கென கடைகளில் நிறைய மருந்துகள் விற்பனையாகின்றன.

ஆனால் அவற்றை மட்டும் சாப்பிடுவதால் உடலில் இரத்தம் அதிகரிக்காது. ஒரு சில இயற்கையான வழிகளையும் தினமும் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரத்தம் சுத்தமாகவும், உடலும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை செறிவாக இருக்க வேண்டும். இல்லையெனில் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே அனீமியா நோய் வராது தடுத்துக் கொள்ள இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்...

 

இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்...

மாதுளை: மாதுளைச் சாறு இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை மேலேறச் செய்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, கட்டற்ற மூலக்கூறுகளோடு போராடி, ஆபத்து விளைவிக்கக்கூடிய இரத்த உறைவுகளில் இருந்து காத்து, அருஞ்சேவை புரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவுகளை இவை அதிகப்படுத்துகின்றன.

நன்னாரி வேர்: மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்தது. அதிலும் இந்த வேரில் அதிகமான ஆன்டி-செப்டிக் பொருள் இருக்கிறது. இது இரத்ததில் இருக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமாக வைக்கிறது.

கற்றாழை: கற்றாழையில் இரத்தத்தில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் பொருள் அதிக அளவு உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிட்டாலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பீட்ரூட்: இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள். ஆகவே இதனை டயர்ட் இருப்பவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் இரத்த அணுக்களும் அதிகரிக்கும். அதிலும் பீட்ரூட்டின் இலைகளில் வைட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் இருக்கின்றன.

கீரைகள்: காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. மேலும் இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் இரத்த அணுக்களையும் அதிகரிக்கும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும்.

இரும்புச்சத்து: இது உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்குவதில்லை, உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும். ஆகவே அந்த இரும்புச்சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கும்.

பாதாம்: இரும்புச்சத்து மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுண்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச்சத்தானது கிடைக்கும்.

பழங்கள்: அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடச் சொல்வார்கள். இவற்றை உண்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பழங்களில் தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

கிவி பழம்: இரத்தத்தில் குருதிச் சிறுதட்டுகள் குறைவாக காணப்படுவோ கிவி பழங்களை சாப்பிட்டால் அதன் உற்பத்தி அடிகரிக்கும் என பரிந்துரைக்கப்பட்டுளது

உடற்பயிற்சி: உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக மட்டுமில்லாமல், உடலில் உள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். மேலும் சுத்தமான ஆக்ஸிஜன் உடற்பயிற்சி செய்யும் போது இரத்ததில் கலக்கிறது. ஆகவே இரத்தமும் சுத்தமாக, சீராக உடலில் இயங்குகிறது. அந்த உடற்பயிற்சியில் வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், குதித்தல் போன்றவற்றை செய்யலாம்.

மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்பதால் உடலில் இரத்த அணுக்களின் அளவு அதிகரிப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக வாழலாம். இவை யாவற்றையும் உங்கள் குடும்ப டாக்ரரின் அலோசனியுடன் மேற்கொழ்வதன் மூலம் தேவையற்ற தாக்கங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

நன்றி

1402.21.1.14

63/08/05


நன்றி

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள்

E-mail Print PDF

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

Read more...

எச்.ஐ.வி பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஊட்ட - எச்.ஐ.வியோடு வாழும் தமிழ் பெண்ணின் உணர்வுகளின் வெளிப்பாடு

E-mail Print PDF

உலகளாவிய சுகாதார அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் 25வது உலக எயிட்ஸ் தினத்தை இன்று அனுட்டிக்கின்றன.

எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகளும் கூட்டங்களும் உலகெங்கிலும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொடிய நோயான எயிட்ஸ் தொற்று கட்டுப்படுத்தப்படக் கூடிய நிலையின் தொடக்கத்தில் இருப்பதாக ஹெச்ஐவி/எயிட்ஸ் தொடர்பான ஐநா நிகழ்ச்சித் திட்டத்தின் தலைமை இயக்குநர் மிச்சல் சிடிபெ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் எயிட்ஸ் மற்றும் ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கிவைக்கும் போக்கு இன்னும் சமூகத்தில் நிலவுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 34 மில்லியன் பேர் (3 கோடியே 40 லட்சம்) ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெரிந்தோ தெரியாமலோ எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுவிட்டால்; உலகிலேயே மிக மோசமான குற்றத்தை செய்தவர்கள் போலவே பாதிக்கப்பட்டோரை நோக்குவதே அனேகரது இயல்பாக இருக்கிறது. சமூகத்தின் நச்சுப்பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக எந்தவொரு எய்ட்ஸ் நோயாளியும் தன்முகத்தை வெளிப்படுத்த விரும்புவதில்லை.

நோயாளியின் நலனுக்காக மருத்துவ வட்டாரங்களும் அவர்களை வெளிப்படுத்த முனைவதில்லை. ஆனாலும் துணிச்சலோடு அந்த இரும்புத் திரையை விலக்கிக்கொண்டு எய்ட்ஸ்க்கு எதிராக விழிப்புணர்வு செய்து வருகின்றார் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி தமிழ் (வயது 35) என்கின்ற எச்.ஐ.வியோடு வாழும்பெண்.

Read more...

புத்துணர்ச்சி ஊட்டும் மாதுளம் பழமும் செவ்விளநீரும்

E-mail Print PDF

மாதுளம் பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன. மதுளையில் சுண்ணாம்பு சத்து, தாது உப்புக்கள், இருப்பு சத்து என நோயை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.

இப்பழம் நோய் கிருமிகளை அறவே அழிக்கவும், இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி அளிக்கவும் பயன்படுகிறது. உடலை பித்தத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாதுளை பெரும் பங்கு வகிக்கின்றது.

வயிற்று வலிக்கு சிறந்த நீவாரணியாகவும், உடலில் உள்ள நீர்ச் சத்துக்களை அதிகரிக்கும் தன்மையும் மதுளம் பழத்திற்கு உண்டு.

மாதுளம் பழத்தின் பூ, பழம், அதன் பட்டை என அனைத்திலுமே மருத்துவ குணம் அடங்கியுள்ளது. இது உடல் கடுப்பு மற்றும் சூட்டை தணிக்கும். மூல நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து எனலாம். இந்த பழத்தை சாறாக எடுத்து சாப்பிடுவதோடு பழமாகவே சாப்பிடுவதால் அனைத்துவிதமான நார் சத்துக்களும் நேரடியாக உடலுக்குக் கிடைக்கும்.

குழந்தைகளின் உடலுக்கு நீர்ச்சத்துக்களை அளிப்பதோடு ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது. மாதுளம் பூக்களை உலர்த்தி காய வைத்து பொடி செய்து வைத்து வேளைக்கு ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இருமல் நிற்கும் இவ்வாறு அநேக சத்துக்களை கொண்டதாக மாதுளை விளங்குகிறது.

இயற்கையின் கொடையான இளநீரில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வெயில் காலத்துக்கு ஏற்ற இளநீர் உடலில் உள்ள வெப்பதை தணித்து குளிர்ச்சியை தருகிறது. எனர்ஜி மிகுந்த இந்த இளநீரில் அதிகளவில் பொட்டாசியம், மினரல் உள்ளது. களைப்பை போக்கி சுறுசுறுப்பை தரக்கூடியது.

செரிமான சக்தி கொண்டது. எனர்ஜி மிகுந்த இந்த இளநீரில் அருந்தியதும் நமக்கு ஒருவித உற்சாகம் பிறக்கிறது. காரணம் 100 கிராம் இளநீரில் 312 மில்லிகிராம் பொட்டாசியமும் 30 மில்லி கிராம் மக்னீசியமும் உள்ளது தான் காரணம்.

இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும் தசைகளுக்கும் ஒருவிதப் புத்துணர்ச்சியையும் வலுவையும் ஊட்டி விடுகின்றன. காலையில் இளநீர் சாப்பிடுவது மிக மிக ஆரோக்கியமான பானமாகும். உடலுக்குச் சத்தும் தந்து ஊக்கமும் தரும் இனிய இயற்கை மருந்து. சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க இளநீர் உதவுகிறது.

இதனால் தான் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மற்றும் மஞ்சள் காமாலை நோயாளிகளின் சூட்டால் வெளியாகும் மஞ்சள் நிற சிறுநீரை மாற்றவும் இளநீர் தவறாமல் அருந்தச் சொல்லுகிறார்கள். இதில் கொழுப்பு இல்லை. சர்க்கரையை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. கேன்சர் வராமல் தடுக்கிறது.

வைரசுக்கு எதிராக போராடும் சக்தி கொண்டது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது. இதுபோன்ற பல்வேறு நன்மைகளை கொண்ட இளநீரை கோடைகாலத்தில் குடித்து பயன்பெறலாம்.

பச்சைநிற இளநீரை விட செவ்விளநீரில் விற்றமின் “D" அதிகமாக இருப்பதாக் கூறப்பெறுகின்றது. செவ்விளநீரின் புறத்தோல் சூரிய கதிர்களில் இருந்து விற்றமின் டீ யை பிரித்து இளநீரில் சேர்த்து விடுவதனால், சக்தி கூடியதாக விளங்குகின்றது.

ஆறு வகையான "ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்

E-mail Print PDF

மாரடைப்பா... இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.

Read more...

Page 5 of 30

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்