Friday, Nov 24th

Last update07:31:39 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் பண்டிகைகள் / கொண்டாட்டங்கள்

கனடா, அமெரிக்கா - (வட அமெரிக்க நாடுகள்) ஹேவிளம்பி புத்தாண்டு 13.04.2017 பிற்பகல் 3:36 மணிக்கு மலர்கின்றது

E-mail Print PDF

Image may contain: text

கலியுகாதி சுத்ததினம் 1869391, நாடி 21 விநாடி 20, தற்பரை 15 க்கு; சரியாக ஹேவிளம்பி தமி்ழ் புத்தாண்டு 13.04.2017 வியாழக்கிழ்மை பிற்பகல் 3:36 மணிக்கு அபரபக்க திருதியை திதியில்,விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில்; சித்தி நாம யோகத்தில், வணிசக் கரணத்தில், சிங்கலக்கினத்தில், மிதுன நவாம்சத்தில், செவ்வாய் காலவோரையில், குரு சூக்குமகுணவோரையில், தாமத குண வேளையில், நட்ஷத்திர பட்சியாகிய காகம் உண்டித் தொழிலும் சூட்சும பட்சி நடைத் தொழிலும் செய்யும் காலத்தில் மங்களம் பொங்கும் ஹேவிளம்பி வருஷம் பிறக்கின்றது.

விஜூபுண்ணிய காலம்: முற்பகல் 11:16 முதல் பிற்பகல் (19:16).7:16 மணிவரை விஜூபுண்ணிய காலமாகும்.

இப் புண்ணிய காலத்தில்; யாவரும் விதிப்படி சங்கற்பித்து மருத்து நீர் தேய்த்து சிரசில் வேப்பமிலையும், காலில் கொன்றையிலையும் வைத்து ஸ்ஞானம் செய்து, மஞ்சள் நிறமுள்ள பட்டாடையாயினும் தரித்து புஷ்பராகம், மாணிக்க பதித்த ஆபரணம் அணிந்து சுகந்த சந்தணம் பூசி நறுமலர் சூடி விநாயகர், குலதெய்வங்களை வணங்கி, பெற்றோர், பெரியோகளை வணங்கி அவர்களின் ஆசி பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்வீர்களாக.!!

 


சித்திரைப் புத்தாண்டு - வாழ்த்துகள் - 13.04.2017

E-mail Print PDF

துர்முகி வருடம் நிறைவடைந்து, புதிய தமிழ் வருடமான ஹேவிளம்பி வருடம் பிறக்கிறது. 13/14.4.17 - வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த வியாழனன்று நள்ளிரவு (விடிந்தால் வெள்ளிக்கிழமை) 12 மணி 43 நிமிடத்துக்கு, கிருஷ்ண பட்சம் திருதியை திதி, விசாக நட்சத்திரம் 3-ம் பாதம், துலாம் ராசியில், மகர லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னம், மிதுன ராசியில், சித்தி நாமயோகம், பத்தரை நாமகரணத்தில், புதன் ஓரையில், நேத்திரம் ஜீவன் நிறைந்த... பஞ்சபட்சிகளில் காகம் வலுவிழந்த காலத்தில், குரு மகா தசையில், சுக்கிர புத்தி - சுக்ரன் அந்தரத்தில், சுப மங்களகரமான ஹேவிளம்பி வருடம் பிறக்கிறது.

ஹேவிளம்பி வருட வெண்பா
ஹேவிளம்பி மாரியற்பமெங்கும் விலைகுறைவாம்
பூவல்விளை வரிதாம் போர் மிகுதி சாவுதிகம்
ஆகுமமே வேந்தரணியாயமே புரிவார்
வேகுமே மேதினி தீ மேல்

ஹேவிளம்பி வருஷ பலன்கள்
இடைக்காடர் சித்தர் பெருமான் அருளிய இந்தப் பாடலின்படி, இந்த வருடத்தில் மழை குறையும். விலைவாசி குறையும். அதேநேரம், உணவு உற்பத்தியாகிய விளைச்சலும் குறையும். விபத்துகளாலும், போராலும் உயிரிழப்புகள் அதிகமாகும். நாடாளுபவர்கள் மனதில் போர்க்குணம் அதிகமாகும். போர் மூளும். உலகெங்கும் தீ விபத்துகளும் அதிகமாகும்.

சித்தர் பெருமானின் பாடலுடன் இந்த வருடப் பிறப்பின் நட்சத்திர கிரக நிலைகளை ஆராய்ந்துப் பார்க்கும்போது, ஐப்பசி மாதம் வரை சுக்ரன் கிழக்கு திசையில் நிற்பதால், போதிய மழை பொழியும்;
விளைச்சல் அதிகமாகும். ஹேவிளம்பி வருடத்தின் ராஜாவாக செவ்வாய் வருவதாலும், அவர் வருடப்பிறப்பு ஜாதக லக்னத்துக்கு 5-ல் நிற்பதாலும், சந்திரனுக்கு எட்டாம் வீட்டில் மறைவதாலும், நாட்டை ஆளும் மந்திரிகள் நிம்மதி இழப்பார்கள்.

கறுப்புப் பணம் புதிய வழிகளில் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட்டில் நடைபெறும் தில்லுமுல்லுகளைத் தீர்க்கவும், ஆறு, ஏரி, குளம் ஆகிய நீர்நிலைகளைக் காக்கவும் புதுச் சட்டங்கள் அமலுக்கு வரும். குதிரைகளை வினோத நோய்கள் தாக்கும். மந்திரியாக சுக்ரன் வருவதாலும், அவர் உச்சம்பெற்று வலுவடைவதாலும், வீட்டாதிபதி குருவின் சமசப்தம பார்வையைப் பெறுவதாலும் தலைமைப் பொறுப்புக்கு அடுத்துள்ளவர்கள் வலுவடைவார்கள். யானைகளைக் காப்பாற்ற அரசு அதிக அக்கறை காட்டும். தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் திகழும். வைரம், வைடூரியம், மரகதப் பச்சை ஆகியவற்றின் விலை உயரும். துணி உற்பத்தி அதிகரிக்கும். வாகனங்கள் மற்றும் ஜவுளி வியாபாரம் சூடு பிடிக்கும்.

அர்க்காதிபதியாக குருபகவான் வருவதால், பெட்ரோலியப் பொருள்களின் விலை குறையும். பித்தளை, செம்பு, ஈயம், இயந்திர உதிரி பாகங்களின் விலை குறையும். ஸஸ்யாதிபதியாக சூரியன் வருவதால், உலகின் தட்பவெப்பநிலை மாறுபடும். சாலை விபத்துகள் அதிகரிக்கும்.

தான்யாதிபதியாக சனி வருவதால் எண்ணெய் வித்துக்களின் விலை குறையும். எள், உளுந்து ஆகியவற்றின் உற்பத்தி அதிகரிக்கும்.  புதிய நிலக்கரி படிவங்கள், எரிபொருள்கள் கண்டறியப் படும். சேனாதிபதியாக குரு வருவதால் ராணுவத் தளவாடங்கள் நவீனமாகும். புதிய அணு உலைகள் அமைக்கப்படும். எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரிக்கும். திடீர் தாக்குதல்களும் நிகழும். காவல் மற்றும் ராணுவத் துறைகளில் பணியாற்று பவர்களுக்குக் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். ரஸாதிபதியாக செவ்வாய் வருவதால், சர்க்கரை, வெல்லம் போன்றவற்றின் விலை குறையும். இந்தியப் பொருளாதாரம் வலுவடையும். திடீர் தேர்தலைச் சந்திக்க நேரிடும். வங்கிகளின் வாராக் கடன்கள் வசூலாகும்.

9.3.18 முதல் 26.5.18 வரை, சனியும், செவ்வாயும் சமசப்தமமாக பார்ப்பதால், தமிழக அரசியலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

புதனும், குருவும் பரிவர்த்தனை அடைந்தி ருப்பதால், படிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு மத்திய அரசு நிறைய சலுகைகளை அறிவிக்கும். பொறியியல், மருத்துவத் துறை சார்ந்த படிப்புகளின் நுழைவுத் தேர்வுகளுக்கான விதிமுறைகள் கடுமையாகவே இருக்கும். தனியார் கல்வித் துறை நிறுவனங்கள் பாதிப்படையும்.

சுக்கிரன் உச்சமாகி நிற்பதாலும், புதன் நீசபங்க ராஜயோகம் அடைந்திருப்பதாலும் கணினித் துறை சார்ந்து வெளிநாட்டில் வேலை தேடுவதைக் காட்டிலும் உள்நாட்டில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்கேற்ப இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். வங்கிகள்,  மருத்துவம், விளம்பரம் ஆகிய துறைகள் தொடர்பான படிப்புகளுக்கு மதிப்பு கூடும்.

இந்த வருடம் மகர லக்னத்தில் பிறப்பதால், மத்திய அரசின் கை ஓங்கும். பல புதிய திட்டங்கள் மத்திய அரசால் கொண்டுவரப்படும். கறுப்புப் பணத்தைத் தடுக்கக் கடுமையான சட்டம் வரும். சனியும் செவ்வாயும் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொண்டிருக்கும்போது, நாடெங்கும் இனக் கலவரம் அதிகரிக்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் அந்நிய நிதி கட்டுப்படுத் தப்படும். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடையும். பஞ்சாப் மாநிலத்தில் மோதல்கள் அதிகரிக்கும்.

இந்த ஆண்டு, சுக்கிரனின் ராசியில் குருவின் நட்சத்திரத்தில் பிறப்பதால், பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கும் நடுத்தர வர்க்கத் தினருக்கும் வலிமை சேர்ப்பதாக இருக்கும்.செல்வந்தர்களுக்குச் சொத்துச் சிக்கல்கள் ஏற்படும். இளைய தலைமுறையினருக்கு தொழில் தொடங்குவதில் ஈடுபாடு அதிகரிக்கும். மேகாதிபதியாக குரு வருவதால் இந்த ஆண்டு மழை உண்டு. விவசாயம் செழிக்கும். அதிகாலை நேரத்திலும், அஸ்தமன நேரத்திலும் மழைப் பொழிவு அதிகமாகும். வேர்க்கடலை, கரும்பு, மூங்கில் ஆகியவற்றின் உற்பத்தி பெருகும்.

மொத்தத்தில் இந்த ஹேவிளம்பி வருடம், மக்கள் மனதில் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை விதைப்பதாகவும், குலத்தொழிலில் ஆர்வம் அளிப்பதாகவும் அமையும்.

பரிகாரம்: சுக்கிரனின் துலாம் ராசியிலும் சனி பகவானின் மகர லக்னத்திலும், புதனும், சுக்கிரனும் வலுவடைந்திருக்கும் நேரத்திலும், போர்க் கிரகமான செவ்வாய், சனியைப் பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்திலும் ஹேவிளம்பி பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் சகல நலன்களும் கைகூட, சனிக்கிழமைதோறும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரைத் தரிசித்து வழிபட்டால்,  தொட்டதெல்லாம் துலங்கும்.

ஜோதிட ரத்னா முனைவர் கே.பீ. வித்தியாதரன் அவர்கள்


சித்திரைப் புத்தாண்டு - ஹேவிளம்பி வருடப் பிறப்பு - இலங்கை - இந்தியா - 13.04.2017

E-mail Print PDF

Image may contain: 2 people

இலங்கை, இந்தியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் 13.04.2017 வியாழக்கிழமை பின் இரவு 00:48 மணிக்கும்;

கனடா, அமெரிக்கா போன்ற வட அமெரிக்க நாடுகளில் 13.04.2017 வியாழக்கிழமை பிற்பகல் 3:36 மணிக்கும் ஹேவிளம்பி எனும் சித்திரப் புத்தாண்டு பிறக்கின்றது.

ஹேவிளம்பி வருட வெண்பா
ஹேவிளம்பி மாரியற்பமெங்கும் விலைகுறைவாம்
பூவல்விளை வரிதாம் போர் மிகுதி சாவுதிகம்
ஆகுமமே வேந்தரணியாயமே புரிவார்
வேகுமே மேதினி தீ மேல்

மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். இதன் பிரகாரம் திருவள்ளுவர் ஆண்டு 2049, சித்திரைத் திங்கள் 1ம் நாள் வியாழக்கிழமை; ஆங்கிலமாதம் ஏப்பிரல் 13ம் (13.04.2017) திகதி பின் இரவு 00:48 மணிக்கு அபரபக்ஷ் திருத்தியை திதியில் விசாக நட்சத்திரத்திரம் 3ம் பாதத்தில் மங்களகரமான ”ஹேவிளம்பி வருஷம்” பிறப்பதாக வாக்கிய பஞ்சாங்கமும்; அன்றைய தினம் பின்னிரவு 02:02 மணிக்கு மங்களகரமான ஹேவிளம்பி் வருஷம் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கமும் கணித்துள்ளன.

Read more...

நத்தார் வாழ்த்துகள் - 2016

E-mail Print PDF

Image may contain: text

துர்முகி வருஷப் பிறப்பும் அதன் மகிமையும் - 13.04.2016

E-mail Print PDF

அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஓம்

மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். இதன் பிரகாரம் திருவள்ளுவர் ஆண்டு 2047, சித்திரைத் திங்கள் 1ம் நாள் புதன் கிழமை ஆங்கில மாதம் ஏப்பிரல் 13ம் (13.04.2016) திகதி சுக்கில பக்‌ஷத்தில் காலை 9:05 மணிக்கு (கனடா-அமெரிக்கா) வட - அமெரிக்க நாடுகளிலும் ; பிற்பகல் 3:06 மணிக்கு சுவிஸ், ஜேர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகளிலும்;

இலங்கை, இந்தியா உட்பட தென்கிழக்கு ஆசியநாடுகளில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி  13 ஆம்  திகதி  இரவு 6.30 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது. அன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம்  இரவு 10.30 மணிவரை புண்ணிய  காலமாகும். சிரசில் கடப்பம் இலையும் காலில் வேப்பம்  இலையும் வைத்து  மருத்து  நீர் தேய்த்து நீராட  வேண்டும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. திருக்கணித  பஞ்சாங்கமும்  நாளை மறுநாள் 13 ஆம் திகதி இரவு 7.48 மணிக்கு   ”துர்முகி” வருஷம் பிறக்கிப்பதாக கணித்துள்ளது. அன்று  பிற்பகல்  3.48 மணி தொடக்கம் இரவு 11.48  மணிவரை புண்ணிய காலமாகும்.  சிரசுக்கு வேப்பம் இலையும்  காலுக்கு கொன்றை இலையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிறக்கப் போகும்  பொழியும் ”துர்முகி” வருஷம் பிறக்கின்றது. சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசியில் பிரவேசிக்கும் வரை உள்ள காலப்பகுதியே ஓர் தமிழ்-வருஷமாகும்.

துன்முகி வருடப்பலன்
‘’ மிக்கான துன்முகியில் வேளாண்மை யேறுமே
தொக்க மழை பின்னே சொர்யுமே – மிகுகான
குச்சர தேசத்திற் குறை தீரவே விளையும்
அச்சமில்லை வெள்ளை அரிதாம்.”

விவசாயம் செழிக்கும். பின் பாதியில் மழை அதிகம். வட தேசத்தில் நல்ல விளைச்சல் ஏற்படும். பயம் இல்லை. வெள்ளைநிறப் பொருட்கள் குறையும். வருட அதிபதி குரு பகவானாவார்.

Read more...
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  Next 
  •  End 
  • »

Page 1 of 9

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்