Friday, Mar 23rd

Last update10:58:28 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சைவமும் தமிழும் விரதங்களும் தோத்திரங்களும் புரட்டாதி சனிக்கிழமை விரதம் - சனீஸ்வரன் விரதமும் அதன் சிறப்பும் - விஞ்ஞான விளக்கங்களுடன்

புரட்டாதி சனிக்கிழமை விரதம் - சனீஸ்வரன் விரதமும் அதன் சிறப்பும் - விஞ்ஞான விளக்கங்களுடன்

E-mail Print PDF
Image may contain: 1 person

"புரட்டாதிச் சனி விரதம்" என அழைக்கப்படுவது புரட்டாதி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதமாகும். இவ் வருடம் செப்ரெம்பர் மாதம் 23 ம் திகதி (23.09.2017) முதலாவது புரட்டாதிச் சனி விரதமும்; அன்றிலிருந்து அடுத்து வருகிற செப்டெம்பர் 30, ஒக்ரொபர் 07,14 ஆகிய சனிக்கிழமைகளுடன்) நான்கு நாட்கள் புரட்டாதிச் சனி விரத நாட்களாக அமைகின்றது.

சனீஸ்வரன்; கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சுற்றில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் ”பஞ்சம சனி” என்றும்; 8 வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் ”அட்டமத்துச் சனி” என்றும்; 12 வது இராசியிலும், சந்திர இராசியிலும், சந்திரனுக்கு 2 வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் (இவ் மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் ஆகின்றமையால்) ”ஏழரைச் சனி” ன்று அழைப்பர்.

சூரிய பகவானுக்கும் சாயா தேவிக்கும் புரட்டாதி மாத முதல் சனிக்கிழமை சனீஸ்வரர் பிறந்தவர். இவர் மந்தகதி உடையவர். சனீஸ்வரர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. 12 இராசியையும் கடக்க 30 வருடங்கள் ஆகின்றன. ஆகவே ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு தடவை இத் தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன. அதனால் போலும் 30 வருடங்களுக்கு மேல் கஷ்டமாக வாழ்ந்தவர்களும் இல்லை சிறப்பாக வாழ்ந்தவர்களும் இல்லை என்ற முதுமொழி பிறந்தது. வாழ்க்கையில் முதலில் வரும் ஏழரைச் சனி காலத்தை ”மங்கு சனி” என்றும், இரண்டாவதாக வருவதை ”பொங்கு சனி” என்றும், மூன்றாவதாக வருவதை ”மரணச் சனி” என்றும் அழைப்பர். இக்காலங்களில் பெயருக்கு ஏற்றாற்போல் மற்றைய கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலங்கள் கிடைக்கும் என்கின்றது ஜோதிடம்.

இவ் சனிதோஷ காலங்களில்; புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், தேகசுகக் குறைவு, வீண் சச்சரவு என்பன உண்டாம். இவை யாவும் சனிதோஷத்தினால் ஏற்படுபவை என ஜோதிடத்தில் கூறப்பெற்றுள்ளது. இத் தோஷத்தினால் பீடிக்கப் பெற்றவர்கள் தோஷ நிவர்த்தி செய்வதால் சனீஸ்வரன் மகிழ்வுற்று தாக்கங்கள் குறைவடைந்து நன்மைகள் ஏற்படுவதாக ஐதீகம்.  இவற்றுள் ஏழரைச் சனிகாலம் மிகவும் கஷ்டமான காலமாக ஜோதிடம் கணிக்கின்றது.

அரிச்சந்திர மகாராஜான் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன.

"சனீஸ்வரனைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை" எனபது சோதிடப் பழமொழி. அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு. இவ் இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஸ்டங்களையும் நஸ்டங்களையுந் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஸ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.

சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாதி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணைய் வைத்து ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்ளெண்ணை (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி, அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும். அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும்.

வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருந்துவர். மற்றைய விரதங்களின் போது எண்ணை வைத்து தோயும் வழக்கம் இல்லை. ஆனால் சனிக்கிழமை-சநீஸ்வரனுடைய விரதத்திற்கு மாத்திரம் எண்ணை வைத்துத் தோயும் முறை கடைப்பிடிக்கப் பெறுகின்றது.

அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் சனீஸ்வரன் நீதி தவறாதவர். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவி மூலம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.

சனிக்கிரகம்; நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடமானார் என்று புராணங்கள் கூறுகின்றன.

சனி பகவான் தோற்றம்: பிரம்மனின் மானச புத்திரர்களில் தக்ஷப்பிரஜாபதியும் ஒருவர். தக்ஷன் தன் மகள் அதிதியைக் காசியப முனிவருக்கு மணம் செய்து வைத்தார். அவர்கள் சேர்க்கையால் ஓர் அண்டம் உண்டாகியிருந்தது. அது மாறாமல் இருந்திடவே  அது செத்துவிட்டதாகக் கருதினர். அப்போது காசியபர் அண்டம் மடியவில்லை என்றார். அதாவது மார்த்தாண்டம் எனப்பட்டது. அதுவே சூரியன் ஆகும்.

சூரியன் விசுவகர்மாவின் மகள் ஸம்ஜ்ஞாவை மணந்தார். அவர்களுக்கு யமன் என்ற புத்திரனும், யமுனா என்ற பெண்ணும் பிறந்தனர். ஸம்ஜ்ஞாவால் சூரியனின் ஒளியைத் தாங்க முடியாமல் சாயா (நிழல்) என்றொரு பெண்ணைத் தோற்றுவித்து சூரியனுக்குத் தெரியாமல் தனக்குப் பதிலாக இருக்கச் செய்து அவள் தாய்வீடு சென்றுவிட்டாள். இதனை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சாயாவிடம் கூற அவள் தனக்குச் சாபம் எதுவும் ஏற்படாத வரை வெளிப்படுத்துவதில்லை என்று வாக்களித்தாள்.

சில நாட்கள் கழிந்தன. விசுவகர்மாவுக்கு தன் மகள் செயலில் ஐயப்பாடு எழுந்தது. அதனால்;  அவள் தந்தை வீட்டை விட்டு வெளியேறி உத்தரகுரு நாட்டில் ஒரு பெண் குதிரையாக மாறி திரிந்து வந்தாள். சாயா (நிழல்) உருவாக இருந்த  ஸம்ஜ்ன்ஞாவை  நிஜம் என்று எண்ணி  சூரியன் சாயாவுடன் வாழ்ந்து வருமையில் அவர்களுக்கு ச்ருதஷர்வ, ச்ருதசர்மா, தபதி என மூன்று குழந்தைகள் பிறந்தன.

பிற்காலத்தில் ச்ருதஷர்வ சவர்ணி மனு ஆனான். ச்ரதசர்ம சனி கிரகமானது. ஒரு நாள் சாயாவின் மகன் தபதிக்கும், ஸம்ஜ்ஞாவின் மகள் யமுனைக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் இந்த உண்மை சூரியனுக்கு தெரிய வந்தது என பவ்ஷ்ய புராணம் கூறுகின்றது.

இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர்.

உலகிலேயே சனீஸ்வரனுக்கு தனி ஆலயம் இரண்டே இடங்களில் மாத்திரம் அமைந்துள்ளது. மற்றைய ஆலயங்களில் சனீஸ்வரர் பரிவார மூர்த்தியாக அல்லது நவக்கிரகங்களுடன் இணைந்து காணப்பெறுகின்றார்.

தென் இந்தியாவில் புதுச்சேரி மாநிலத்தில் திருநள்ளாறு என்னும் ஊரில் சனீஸ்வரனுக்கென தனிக்கோயில் உள்ளது. சனீஸ்வரனுக்கு அமைக்கப்பட்ட இரண்டாவது தனிக்கோயில் திருகோணமலை நகரில் மடத்தடிச்சந்திக்கு அருகில், ரயில் நிலையத்திற்குப் போகும் வீதியில் வலது புறம் அமைந்துள்ளது

இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது. சனீஸ்வரன் சிறந்த சிவபக்கதன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர்.

இந்திரஜித்து இராவணனின் மகன்.  இவன் பிறப்பதற்கு முன் இராவணன் சோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர்.

சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்தினாதமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.

சனிக்கிழமை விரதம் எளிமையானது. புனிதமானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். சனிக்கொழமைகளில் பெருமாள் ஆலயத்தில் சனீஸ்வரனுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.

நல்லெண்ணை முழுக்கிற்கு விஞ்ஞானம், சோதிடம் கூறும் விளக்கம்
நம் முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நல்லெண்ணை உடல் முழுக்க பிரட்டி சிறிது நேரம் (உடம்பில் சுவறும் வரை) இருந்து தோய்வது வழக்கமாக இருந்தது எங்கள் எல்லோருக்கும் தெரியும். காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்பெற்றுள்ளது. இந்த சனிக்கிரகம் உடலுக்கு தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக் கூடிய தீய கதிர் வீச்சுக்களை வீசுகின்றது.

அதனால் அதனை ஒரு பாபக் கிரகமாக ஜோதிடம் அடையாளம் காட்டுகின்றது. சனி கிரகம் ஒரு ஜாதருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்ளில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணையில் சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு.

இத் தீய கதிர்கள் மூளை நரம்புகளை பாதிக்கின்றது. ஜாதகருடைய சிந்தனைகளை திசைமாறி செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது. அந்த கிரகத்தின் கதிர் வீச்சிலிருந்து தப்பிச்க பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிக முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணையய் (நல்லெண்ணை வைத்து) பிரட்டி சூரிய உதயத்தில் 1/2 மணி நேரம் நின்ற பின் தோய வேண்டும், அதனால்தான் எமது முன்னோர்களும் சனிக்கிழமைகளில் எண்ணை வைத்து தோயும் வழக்கத்தினைப் பின்பற்றியுள்ளனர் என்பது வெளிப்படை. ஆனால் தற்போது நாகரீக மேலாதிக்கத்தினால் அவை  பின்பற்றப் பெறுவதில்லை.

 

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு!
(முகநூலில் பகிரப்பட்டதகவல் - உங்களுக்காக)

https://youtu.be/LlN_TfBOzXo

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரளவைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச் சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநே ஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் ‘சனி பகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்றுவரை விண்ணில் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.”

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கை கோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர் வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.
நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவ கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டி வைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்த அறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறிய வேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கட வுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்…


சனீஸ்வரன் தோத்திரம்:

முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலி னார்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்
சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே !

நவகிரக தோத்திரம்:
ஓம் ஓங்காரசூக்கும உடலாய் போற்றி
ஓம் ஓராழித்தேர் ஊர்ந்தாய் போற்றி
ஓம் ஏழன் குதிரை ஏவினை போற்றி
ஓம் ஓர்முகம் எண்கர முடையாய் போற்றி

ஓம் இருதோட் கமலம் ஏந்தினாய் போற்றி
ஓம் பொற்ப்ட் டுடையி பொழிவாய் போற்றி
ஓம் வியாவிருதி ஏழ் விளங்குவாய் போற்றி
ஓம் பன்னிரு முனிதுதிப்பாற்கரா போற்றி

ஓம் மழைபருவம் மாற்றுவாய் போற்றி
ஓம் மூலாகினியில் முகிழ்த்தாய் போற்றி
ஓம் வீதிமுன்றிராசி பன்னிரண்டாய் போற்றி
ஓம் சூரியா வீரியா சுகமருள்வாய் போற்றி

ஓம் சங்கரன் முடிதவழ் சந்திரா போற்றி
ஓம் திருமகள் சோதரா திவ்யா போற்றி
ஓம் சவுக்கவடிவில் இருந்தாய் போற்றி
ஓம் முத்துவிமான வாகனா போற்றி

ஓம் சக்கரம் மூன்றுடைத்தேராய் போற்றி
ஓம் குருந்த மலர் நிறக் குதிரையாய் போற்றி
ஓம் கலைவளர் மதியே கருணையே போற்றி
ஓம் தேவர் பிழிந்துணும் அமுதே போற்றி
ஓம் சக்தியை நடுக்கொள் மண்டலா போற்றி

ஓம் வஞ்சம் மோகினிக் குரைத்தாய் போற்றி
ஓம் நிலப்பயிர் தழைக்கும் நிலவே போற்றி
ஓம் இருகண் பார்வைச் சுகமருள்வாய் போற்றி

ஓம் பூதேவி குமரா பெளமா போற்றி
ஓம் செந்நிற உருவாய் செவ்வாய் போற்றி
ஓம் அன்ன வாகனம் அமர்ந்தாய் போற்றி
ஓம் முக்கோண வடிவிருக்கையாய் போற்றி

ஓம் எண்பரித் தேர்மிசை இயல்பாய் போற்றி
ஓம் தவத்தால் உயர்பதம் அடைந்தாய் போற்றி
ஓம் தட்சன் யாகம் தடுத்தாய் போற்றி
ஓம் யோக நெருப்புடை யுடலாய் போற்றி

ஓம் மங்களாம் தரும் மங்கலா போற்றி
ஓம் அருங்கலை வல்லாய் ஆரல் போற்றி
ஓம் தைர்யம் வலிமை தருவாய் போற்றி
ஓம் அங்காரகனே அருள்வாய் போற்றி

ஓம் புதனெனும் தாரை புத்திரா போற்றி
ஓம் பசுமை மேனி கொண்டோய் போற்றி
ஓம் அம்பின் வடிவில் அமர்ந்தாய் போற்றி
ஓம் வெண்காந்தள் மலர்விரும்பினாய் போற்றி

ஓம் குதிரைவாகனங் கொண்டோய் போற்றி
ஓம் நால்பரித்தேர்மிசை அமர்ந்தாய் போற்றி
ஓம் தவத்தால் கோளென உயர்ந்தாய் போற்றி
ஓம் அசுவ யாகம் ஆற்றினாய் போற்றி

ஓம் இளையை மணந்த எழிலே போற்றி
ஓம் சிவனால் சாபம் நீங்கினாய் போற்றி
ஓம் இருக்கு வேததிருந்தாய் போற்றி
ஓம் ஞானமுங் கல்வியும் நல்குவாய் போற்றி

ஓம் பிருகு புத்திரனே சுக்கிரா போற்றி
ஓம் வெள்ளி நிறத்தில் விளங்குவாய் போற்றி
ஓம் ஐங்கோணாசனம் அமர்ந்தாய் போற்றி
ஓம் வெண்டாமரைமலர் கொண்டோய் போற்றி

ஓம் கருட வாகனத்தில் ஒளிர்வாய் போற்றி
ஓம் பதின்பரித் தேர்மிசை வருவாய் போற்றி
ஓம் சிவனால் ஒளி நிறம் பெற்றோய் போற்றி
ஓம் கசனை உயிர்த்த கருணையே போற்றி

ஓம் தண்டன் நாடுகாடாக்கினாய் போற்றி
ஓம் அசுரர்க் கபஜெயம் தந்தாய் போற்றி
ஓம் பகீர தன்னிடர் தீர்த்தாய் போற்றி
ஓம் மிருதஞ் சீவினி மந்திரா போற்றி

ஓம் பிருகு புத்திரனே சுக்கிரா போற்றி
ஓம் வெள்ளி நிறத்தில் விளங்குவாய் போற்றி
ஓம் ஐங்கோணாசனம் அமர்ந்தாய் போற்றி
ஓம் வெண்டாமரைமலர் கொண்டோய் போற்றி

ஓம் கருட வாகனத்தில் ஒளிர்வாய் போற்றி
ஓம் பதின்பரித் தேர்மிசை வருவாய் போற்றி
ஓம் சிவனால் ஒளி நிறம் பெற்றோய் போற்றி
ஓம் கசனை உயிர்த்த கருணையே போற்றி

ஓம் தண்டன் நாடுகாடாக்கினாய் போற்றி
ஓம் அசுரர்க் கபஜெயம் தந்தாய் போற்றி
ஓம் பகீர தன்னிடர் தீர்த்தாய் போற்றி
ஓம் மிருதஞ் சீவினி மந்திரா போற்றி

ஓம் சூரியபாலா சுபமருள் போற்றி
ஓம் அஞ்சன வண்ணா சனியே போற்றி
ஓம் வில்வடிவாசனம் விளங்கினாய் போற்றி
ஓம் காக்கை வாகனக் கடவுளே போற்றி

ஓம் கருங்கு வளைமலருகந்தாய் போற்றி
ஓம் எள்ளும் வன்னியும் ஏற்றாய் போற்றி
ஓம் மேற்றிசை நின்ற மேலோய் போற்றி
ஓம் நளனைச் சோதிதாண்டாய் போற்றி

ஓம் தேவரும் பார்வையில் தீய்த்தாய் போற்றி
ஓம் பற்றற் றாரையும் பற்றுவாய் போற்றி
ஓம் கலியென்றொரு பெயருடையாய் போற்றி
ஓம் தொழுதேன் சனியே தொடாதே போற்றி

ஓம் சிம்மிகை மைந்தா இராகுவே போற்றி
ஓம் கொடிவடிவமர்ந்த கோளே போற்றி
ஓம் ஆட்டு வாகனம் அமர்ந்தாய் போற்றி
ஓம் தென்மேற்றிசையில் திகழ்வாய் போற்றி

ஓம் மந்தாரை மலர் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் உளுந்தும் அருகும் உகர்ந்தாய் போற்றி
ஓம் கரும்பாம் புருவம் கண்டாய் போற்றி
ஓம் நாலிரு குதிரைத் தேராய் போற்றி

ஓம் தேவர் அமுதம் உண்டோய் போற்றி
ஓம் ஓருட லிருகோளானாய் போற்றி
ஓம் தவமேம் பட்ட தலையே போற்றி
ஓம் இராஜபோகம் தரு இராகுவே போற்றி

ஓம் இராகுவினுடலே கேதுவே போற்றி
ஓம் சிவனால் தலையுயிர் பெற்றாய் போற்றி
ஓம் செம்பாம் புருவை வேண்டினாய் போற்றி
ஓம் முச்சில் வடிவில் முகழ்ந்தாய் போற்றி

ஓம் செவ்வல் லிமலர் சேர்த்தாய் போற்றி
ஓம் கொள்ளும் தர்ப்பையும் கொண்டாய் போற்றி
ஓம் அரிவாகனத்தில் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆறு குதிரைத் தேராய் போற்றி

ஓம் வடமேற்றிசையில் நின்றாய் போற்றி
ஓம் நீதி நெறிசேர் கேதுவே போற்றி
ஓம் தவத்தால் கோள் நிலை பெற்றாய் போற்றி
ஓம் ஞானமும் மோட்சமும் நல்குவாய் போற்றி

 

என்று தோத்திரம் சொல்லி வணங்குவதால் சகல துன்பங்களும் நீங்கப்பெற்று நீண்ட ஆயுள் கிட்டும். இந்த சனீஸ்வர விரதத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுட்டிக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமாவது அனுட்டிக்க வேண்டும்.

 

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அருளிய கோளறு பதிகம்.
"வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ டாறும்
உடனாய நாள்க ள‌வைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார‌வர்க்கு மிகவே. "

"உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே. "

"மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதம‌வையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான‌பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வத‌னால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே."

 

சுபம்

 

9-3306-27

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS