Wednesday, Mar 21st

Last update08:40:09 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here:

உடல் உள் உறுப்புகளும் நோய்களும் - பகுதி - 2

E-mail Print PDF
Article Index
உடல் உள் உறுப்புகளும் நோய்களும்
பகுதி - 2
All Pages


 

காற்றுப் பாதை
சுவாசத் தொகுதியின் உறுப்புக்கள்


மூக்கும் மூக்குக் குழியும்

சுவாசத்தை பொறுத்தவரை சுவாச வளியை கடத்தும் ஆரம்பபாதையாக மூக்கும் மூக்குக் குழியும் காணப்படுகின்றன. தவிர உட்செல்லும் வளியின் தூசு துணிக்கைகளை அகற்றல் வளி வெப்பநிலையை உடல் வெப்பநிலைக்கு சீராக்கல் நீரேற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளும் இங்கே மேற்கொள்ளப்படும். இதற்காகவே மூக்கு விசேட அமைப்புகளையும் மூக்கு மயிரையும் சீதப் படையையும் கொண்டுள்ளது. இது தவிர மணத்தை உணர்வதற்கு மண நுகரிகளையும் மூக்கு கொண்டுள்ளது. அத்துடன் மூக்குடன் சம்மந்தப்பட்டு காணப்படும் குடையங்கள் (சைனஸ்) தலையோட்டின் பாரத்தை குறைப்பதுடன் ஒலிப்பரிவுச் செயற்பாட்டையும் மேற்கொள்ளும்.

குரற்பெட்டி

தொண்டை முடியும் இடத்தில் குரற்பெட்டி தொடங்குகிறது. தொண்டையானது சுவாசப் பாதைக்கும் உணவுக் கால்வாய்க்கும் பொதுவான இடமாக இருப்பதால் உணவுப் பொருட்கள் குரற்பெட்டியுள் போகாமல் தடுக்க மூச்சுக் குழல்வாய் மூடி காணப்படும். குரல் பெட்டியானது கசியிரையங்களால் சூழப்பட்டது. குரற்பெட்டியன் உள்ளே குரல் நாண்கள் காணப்படும். இந்தக் குரல் நாண்கள் அதிர்வடைவதால் குரல் ஆரம்பிக்கப்படுகிறது.

வாதனாளித்தொகுதி.

குரற்பெடடியின் கீழே வாதனாளி தொடங்குகிறது. வாதனாளியானது ஆங்கில எழுத்தான சீ வடிவ கசியிழையங்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாதனாளியின் உள்ளே சீத அகவணியில் சீதச்சுரப்பு கலங்களும் பிசிர்களும் காணப்படும். வாதனாளியானது நெஞ்சறையில் ஐந்தாம் முள்ளந்தண்டின் மேல் மட்டத்தில் வலது இடது பிரிவாகப் பிரியும். பின்னர் மீண்டும் பல பிரிவுகளாக பிரிந்து ஒரு மரக்கிளையமைப்பை உருவாக்கும். இறுதியாக சுவாசச் சிற்றறைகளில் புன்வாதனாளியாக நிறைவடையும்.

சுவாசப் பைகள்

மனிதனின் நெஞ்சறைக்கூட்டில் வலது இடது என இரண்டு சுவாசச் சோணைகள் காணப்படுகின்றன. இவை சுவாசச் சுற்றுவிரியால் சூழப்பட்டிருக்கும். வலது சோணை மூன்று சிறுசோணைகளாகவும் இடது சோணை இரண்டு சிறு சோணைகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். இவற்றினிடையே சுற்றுவிரி செல்வதால் பிளவுபோன்ற அமைப்பால் சிறு சோணைகள் வேறுபடுத்தப்பட்டிருக்கும். தவிர இந்த சிறு சோணைகளுக்கான வாதனாளி மற்றும் குருதி விநியோகம் தனித்தனியே இருக்கும். இவ்வாறு வலது சுவாசச் சோணையில் மேற்சோணை நடுச் சோணை கீழ்ச்சோணை என மூன்று சோணைகளும் இடது பக்கத்தில் மேற்சோணை கீழ்ச்சோணை என இரண்டு சோணைகளும் காணப்படும்.

இவ்வாறு சோணைகள் பிரிக்கப்பட்டிருப்பதால் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்ட சோணையை அகற்றுதல் இலகுவானது.

சுவாசச் சிற்றறையில் இருவகையான நுரையீரல் கல்ங்கள் காணப்படும். இதில் முதலாவது வகை சிற்றறையின் சுவரை உருவாக்கும். இரண்டாவது வகை நுரையீரல் கலங்கள் சுவாச மேற்பரப்பு சுரப்பை சுரக்கும். ( சேபக்ரண்ட்)

புரைக்கடித்தல்
தவறுதலாக பாரிய துணிக்கைகள் அல்லது உணவுப் பொருட்கள் வாதனாளியில் புகும்போது பிரிரடித்தல் செயற்பாடடுடன் கூடிய இருமல் மூலம் அத்துணிக்ககைள் வெளியேற்றப்படும்.

குறிப்பு
1. புரைக்கடித்தல் என்பது ஒரு பாதுகாப்புச் செயன்முறை. இப்பொறிமுறை பாதிக்கப்பட்டுள்ளபோது அல்லது சரியாக தொழிற்படாதபோது பிறபொருட்கள் உள்ளிழுக்கப்பட்டு உள்ளிழுத்தல் சுவாச அழற்சி ஏற்படும். இது ஆங்கிலத்தில் அஸ்பிரேசன் நியுமோனியா எனப்படும்.

2.மயக்க மருந்து ஏற்றப்பட்டவர்களில் புரைக்கடித்தல் செயற்பாடு மற்றும் மூச்சுக் குழல்வாய் மூடியின் செயற்பாடு பாதிக்கப்பட்டிருக்கும்.எனவே இவர்களுக்கு வாதனாளி உள்ளே குழாயை செலுத்தி (என்டோ டிரக்கியல் ரியுப்) பிறபொருட்கள் உட்செல்லல் தடுக்கப்படும்.


3. வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மதுபோதையில் உள்ளவர்களுக்கு உள்ளிழுத்தல் சுவாச அழற்சி ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம்.

குறைமாதத்தில் பிறக்கும் பிள்ளைகளிலும் நீரிழிவு நோயுள்ள தாய்மாருக்கு பிறக்கும் பிள்ளைகளிலும் நுரையீரலில் மேற்குறித்த சுரப்பு போதியளவில் காணப்படுவதில்லை. இதனால் இக்குழந்தைகள் மேற்பரப்பிழுவிசையை தாங்காமல் மூச்சுத்திணறலுக்கு உட்படலாம். இதனைத் தடுக்க சுவாச மேற்பரப்பு சுரப்பு செயற்கையாக வழங்கப்படும்.

குரல் பெட்டியழற்சி (லறிஞ்சைட்டிஸ்) ஏற்பட்டவரது குரல் இயல்பு நிலையிலிருந்து மாறுபட்டு காணப்படும்.

நோய்கள்

சுவாசத் தொகுதி தொடர்பான நோய்கள்

உயிர்ப்பான காசநோய்

குணங்குறிகள்
மூன்று வாரங்கட்கு மேற்பட்ட இருமல் அநேகமாக ஆரம்ப அறிகுறியாகும். இது வறண்ட அரிப்பூட்டுகின்ற இருமலாக ஆரம்பிக்க முடியும். இது மாதங்கள் வரையில் நீடித்து மோசமான நிலையினை அடைகிறது. காலஞ் செல்லச் செல்ல சளியுடன் கூடிய இருமல் உருவாகின்றது. இதனால் இருமும் போது அதிகளவு சளி வெளியேற்றப்படும். அது இரதக்கசிவுடன் காணப்படலாம்.

ஏனைய பொதுவான குணங்குறிகள்

காய்ச்சல், அதிகரித்த வியர்வை, உடல் அசதி, உடல் நிறை குறைவடைதல் , நெஞ்சு வலி, மற்றும் பசியின்மை என்பன. கிருமித் தொற்று தீவிரமடைந்து நுரையீரல் பாதிக்கப்படும் போது நோயாளிக்கு சுவாச சிரமம் ஏற்படுகிறது. சிகிச்சை வழங்கப்படாத விடத்து பல சிக்கல்கள் உருவாகின்றன. நுரையீரலிற்கும் நெஞ்சறை சுவருக்குமிடையிலுள்ள புடை மென்சவ்வுகளுக் கிடையில் திரவம் சேகரிக்கப்படுதல். இதனால் சுவாச சிரமம் மேலும் மோசமடைகிறது. காச நோயானது நுரையீரலிலுள்ள குருதிக் கலன்களை பாதிக்கையில் இருமும்போது குருதி வெளியேற்றப்படுகிறது.

காசநோய் கிருமித்தொற்றானது சில வேளைகளில் குருதிச் சுற்றோட்டத்தொகுதி மற்றும் நிர்ப்பீடனத்தொகுதிக்குள் பரவும் போது உடலின் ஏனைய பகுதிகளிலும் கிருமித் தொற்று ஏற்படுகிறது. உடலின் எப்பகுதி பாதிக்கப்படுகிறது என்பதற்கிணங்க பல்வேறு குணங்குறிகள் உருவாகின்றன.

• நிணநீர்க் கணுக்கள் வீக்கமடைதல் – உடலின் எப் பகுதியிலுமுள்ள நிணநீர்க் கணுக்கள் வீக்கமடையலாம். கழுத்து, தோள் மூட்டின் உட்பகுதி மற்றும் இடுப்பு தொடை சந்திப்புலுள்ள நிணநீர் கணுக்களை தொட்டுணர முடியும்.

• உணவுக் கால்வாய் மற்றும் வயிறு – காசநோயானது வயிற்று வலி அல்லது வீக்கத்தினை ஏற்படுத்துகிறது. அல்லது போதிய சமிபாடின்றி வயிற்றொட்டம் மற்றும் உடல் நிறை குறைவடைதல் போன்றவை ஏற்படுகிறது.

• என்பு மற்றும் மூட்டுகள் - காச நோயானது என்பு அல்லது மூட்டுக்களை பாதிப்பதன் காரணமாக என்பு நோ (உ-ம் முள்ளந்தண்டு) மற்றும் மூட்டு வலி அல்லது வீக்கம் ஏற்படுகிறது.

• இதயம் – காச நோய் சில வேளைகளில் இதயத்தினை சூழ அழற்சியினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக நெஞ்சு வலி அல்லது சுவாச சிரமம் என்பன ஏற்படுகின்றன.

• சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை - இவை கிருமித் தொற்றுக்குட்படும் போது இடுப்பின் பின் பகுதியில் இரு கரைகளிலும் வலி, சிறுநீர் கழிக்கும்போது வலி என்பன ஏற்படுகின்றன.

• மூளை – காசநோய் காரணமாக மூளைய மென்சவ்வழற்சி ஏற்படலாம். இதனால் தலைவலி, அருவருப்பு, வாந்தி, வலிப்பு, நித்திரை ஏற்படுவது போன்ற உணர்வு மற்றும் நடத்தை மாற்றங்கள் என்பன.

• தோல் – காசநோய் காரணமாக தோலில் தழும்புகள் ”எரித்தீமா நோடோசம்” எனும் சிவந்த முடிச்சுப் போன்றவை கால்களில் ஏற்படும் தழும்புகளாகும். லூபஸ்வல்காரிஸ் எனும் கட்டிகள் அல்லது புண்கள்.

• உடலின் ஏனைய பகுதிகளுகளுக்குப் பரவலடைதல். இது மிலியரி காச நோய் எனப்படும். இது நுரையீரல், என்புகள், ஈரல் மற்றும் கண்கள் தோல் என்பவற்றைப் பாதிக்கிறது.

நுரையீரல் புற்றுநோய்


குணங்குறிகள்

வெவ்வேறு நோயாளிகளுக்கிடையே குணங்குறிகள் வேறுபட்டவை. பலரிலே ஆரம்பநிலைகளில் குணங்குறிகள் ஏதும் காணப்படுவதில்லை. நுரையீரல் புற்றுநோயானது சந்தர்ப்பவசமாக X கதிர்ப் பரிசோதனையானது வேறு காரண்ங்களுக்காக மேற்கொள்ளப்படும் போது கண்டறியப்படும்.

நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக

• தொடர்ச்சியான இருமல்

• இருமும் போது இரத்தம் அல்லது இரத்த கசிவுடனான சளி வெளியேறல்.

• இலேசான நெஞ்சுவலி

• களைப்பு மற்றும் உடல்சக்தியற்ற தன்மை

• உடல்நிறை குறைவடைதல்

• மூச்சுவிடுவதில் சிரமம் அல்லது இளைப்பு/தொய்வு – விசேடமாக புற்றுநோய்க் கட்டியானது சுவாசக்குழாய்களிலே வளர்ச்சியடையும் போது அது காற்றோட்டத்தினை பகுதியாக தடைப்படுத்தும் சந்தர்ப்பங்களிலாகும்.புற்று நோயானது வளர்ச்சியடைந்து செல்லும்போது குணங்குறிகள் மோசமடைகின்றன.

•    மேற்கூறிய குணங்குறிகள் மோசமடையக்கூடும்

•    நுரையீரல் அழற்சி /நியூமோனியாவானது புற்றுநோய்க் கட்டியால் தடைப்படுத்தப்பட்டுள்ள சுவாசக்குழாய்க்கு சேய்மையான நுரையீரல் பகுதியிலே உருவாகக்கூடும். இவ்வாறான கிருமித்தொற்றானது நுண்ணுயிர்க் கொல்லிகளுக்கு கட்டுப்படாது காணப்படலாம்.

•    நுரையீரல்களுக்கும் புடைமென்சவ்வுகளுக்குமிடையே திரவங்கள் தேக்கமடையக்கூடும். இதனால் சுவாசசிரமம் மோசமடையக்கூடும்.

•    நுரையீரலின் உச்சிப்பகுதியிலே காணப்படும் புற்றுநோய்க்கட்டிகள் அவ்வழியாக செல்லும் நரம்பு நார்களை அழுத்துவதன் காரணமாக தோள் மற்றும் புயங்களில் வலி, அங்கபலவீனம், விறைப்பு போன்றவை உணரப்படலாம்.

•    இதயத்திலிரிந்து தலைப்பகுதிக்கு குருதியை கொண்டு செல்லும் நாளங்கள் புற்று நோய் கட்டியினால் அழுத்தப்படுவதன் காரணமாக முகம் வீக்கமடையலாம்.

•    சில ஸ்மோல்செல் காசினோமாக்கள் அதிகளவு ஓமோன்களை உருவாக்குகின்றன இதன் காரணமாக உடலின் ஏனைய பகுதிகளில் பல்வேறு குணங்குறிகள் உருவாகின்றன.

•    புற்று நோயானது ஏனைய அங்கங்களுக்குப் பரவும் போது ஏனைய பல்வேறு குணங்குறிகளை தோற்றுவிக்கிறது.

ஆஸ்த்மா

சிலருக்கு இயற்கையாகவே உடலில் ஒவ்வாமைகளின் வெளிப்பாடாக எக்ஸிமா., ஆஸ்த்மா போன்றநோய்கள் காணப்படும். ஒவ்வாப் பொருட்களுடன் தொடுகை ஏற்படும்போது சுவாசக் குழாயின் சுவரில் அதிதீவிர தொழிற்பாடு OVER SENSITIVITY (தொட்டாச் சுருங்கிச்செடியில் தொட்டவுடன் அது எதிர்விளைவு காட்டுவதுபோல) ஏற்பட்டுச் சுவாசக் குழாயின் உட்புறம் வீங்கும். சுவாசக் குழாயின் விட்டம் குறைவதனால் சுவாசத்தின்போது கீச்சொலி கேட்கும்.

சுவாசத்தின்போது கீச்சொலி கேட்கும் அனைவரும் தமக்கு ஆஸ்த்மா நோய் ஏற்பட்ள்ளதாகக் கருதக்கூடாது. வேறுகாரணங்களாலும் கீச்சொலி கேட்கலாம். மூச்சுக்குழாய் ஆஸ்த்மா நோயாளருக்குச் செறிவுமிக்க சளி சுரக்கும். சுவாசிப்பதில் சிரமம் காணப்படும். ஆஸ்த்மா நோய் பரம்பரைத் தொடர்புடையதாகவும் இருக்கலாம். இதயம் தொடர்பானதாக வேறொரு வகையான ஆஸ்த்மாவும் ஏற்படுவதுண்டு. ஆதலால் வைத்தியரைச் சந்தித்து எந்த வகையான ஆஸ்த்மா ஏற்பட்டுள்ளது என அறிவது அவசியமானதாகும்.

பின்வருவனவற்றுள் ஒன்றோ பலவோ ஒவ்வாமைக் காரணியாக இருந்து மூச்சுக்குழாய் ஆஸ்த்மாவை ஏற்படுத்தலாம். சாம்பிராணி, மெழுகுவர்த்தி, மண்ணெண்ணை போன்றவற்றின் புகை, மரத்தூள் அடுப்புப் புகை, வாகனப்புகை, சிகரட் புகை, மரஅரிவுத்தூசி, புத்தகத் தூசி, தேயிலைத் தூசி, அஸ்பெஸ்டஸ் தூசி, சீமேந்துத் தூசி, தலைமயிர்ச் சாயங்கள், தோலை அழகாக்கும் விழுதுகள்(CREAM), பூச்சுகள், வாசனைப் பொருட்கள், சவர்க்காரங்கள், சில மூலிகைத் தயாரிப்புகள், சிலவகைக் காளான் தயாரிப்புகள், சிலவகை மரக்கறிகள், அன்னாசிப் பழம், கத்தரிக்காய், கணவாய், முட்டை, பட்டர், மாசரீன், சிலவகை குளிர்பானங்கள், குளிர்பானங்களிலிருக்கும் நிறப்பொருள்கள், சிலவகைச் செருப்புகள், சில உலோகங்கள், உடைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறப்பொருள்கள். பிளாஸ்டிக், மிருகங்களின் உரோமங்கள், பறவைகளின் இறக்கைத் துகள்கள், பறவைகளின் எச்சங்கள், நுளம்புக்கடி, மூட்டைக்கடி, தெள்ளுக்கடி, உண்ணிக்கடி, பாம்புக்கடி மயிர்க்கொட்டி, பல்லி, எலி, கரப்பான்பூச்சி, தெள்ளு, உண்ணி, மூட்டைப்பூச்சி, எறும்பு, கறையான், நத்தை போன்றவையும் அவற்றின் எச்சங்களும்; சிலவகை மருந்துகள், வைக்கோல் துகள்கள், சில தாவரங்களும் அவற்றின் பூக்களும், சில புல்வகைகளும் அவற்றின் பூக்களும், வளியின்; ஈரப்பதன், சில வகை ஒலிகள் சில பழங்களின் மணம்,; மீன் மணம், இறைச்சி முட்டை பொரிக்கும் மணம், நெய் உருக்கும் மணம், சாக்கடை மணம், மலகூட மணம், கழிவு-குப்பைகளின் மணம் போன்றவை. நகர்ப்புறங்களில் கழிவு-குப்பைகள் ஒழுங்காக அகற்றப்படாது தேங்கி நாறுவதாலேயே நகர்ப்புறங்களில் மூச்சுக்குழாய் ஆஸ்த்மா அதிகமாக ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது.

படுக்கை விரிப்புகளிலும் தலையணைகளிலும் படியும் எமது உடலிலிருந்து உதிரும் தோல்த்துகள்களும் அவற்றில் வாழும் சிற்றுண்ணிகளும் மூச்சுக்குழாய் ஆஸ்த்மாவை ஏற்படுத்தலாம். இவற்றுள் எது மூச்சுக்குழாய் ஆஸ்த்மாவை ஏற்படுத்துகிறது என அறிந்து, அதனைத் தவிர்த்து ஆஸ்த்மா ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வைத்தியர்கள், சுவாசக் குழாயின் உட்புறம் வீங்குவதைத் தடுப்பதற்கு ஒரு மருந்தையும் சுவாசக் குழாயின் விட்டத்தைக் கூட்டுவதற்கு இன்னொரு மருந்தையும் சிபார்சு செய்யலாம். சுவாச உறிஞ்சிகளாக விற்கப்படும் இந்த மருந்துகள் இதே மருந்துகளின் குளிகைகளை விடச் சிறந்த பயன் தருபவையாகும். ஆஸ்த்மா எப்பொழுது ஏற்படும் என எதிர்வுகூற முடியாது என்பதனால் நோயாளிகள் எங்கே சென்றாலும் இந்த மருந்துகளை எப்பொழுதும் கைவசம் வைத்திருக்கவேண்டும்.


உணவும் நாமும்

உணவைப் போல, உடலுக்கு உதவிசெய்யும் சுவையான பொருட்கள் வேறெதுவும் இல்லை.உவை உட்கொள்ளாத உடல் தேய்வடைகின்றது. களைப்படைகிறது.கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து, உயிரையும் இழந்து விடுகின்றது. எனவே, உணவு தான் உடலுக்குச் சக்தியைத் தருகின்றது. வளர்ச்சியை அளிக்கின்றமு. தேய்ந்த திசுக்களை பழுது பார்க்கின்றது, பராமரிக்கின்றது.

சமிபாட்டுத் தொகுதி
வாயினால் எடுத்துக் கொள்ளப் படுகின்ற உணவைச் சுவைப்பதிலிருந்து, அவை ஒவ்வொரு உறுப்பிலும் போற்றுதற்குரிய மாற்றத்தை ஏற்படுத்தி, உணவைச்செரிக்கச் செய்து,செரித்தவைகளை உறிஞ்சி, இரத்த்த்தில் சேர்க்கும் வரை உண்டாகிவிடும் மாற்றத்தையே சமிபாடு எனக் கூறுவோம்.

சமிபாட்டுக்கு உதவுகின்ற உறுப்புக்களின் கூட்டதுதையே சமிபாட்டுத் தொகுதி என்கின்றோம்.

சமிபாட்டு உறுப்புக்கள்
ஒரு மனிதன் ஓராண்டுக்கு 500 கிலோ அளவு உணவை உட்கொள்கின்றான். இந்த உணவின் வழி வாயிலிருந்து தொடங்கி மலம் கழிக்கும் குழாய் வரை நீண்டுசெல்கின்றது.
• வாய்

• தொண்டை

• உணவுக் குழாய்

• இரைப்பை

• சிறுகுடல்

• பெருங்குடல்

• மலக்குடல்

உணவை உடைப்பதற்கு உதவும் உறுப்புக்கள் போலவே, கரைப்பதற்கும் சில இரசாயன நீர்கன் இருக்கின்றன.

• உமிழ் நீர்

 

• பித்த நீர்

• இரைப்பை நீரட

• கணைய நீர்

• குடல் திரவங்கள்

சமிபாடு என்பது உணவில் ஏற்படுகின்ற திடமாற்றமும் இரசாயன மாற்றமும் ஆகும்.

உறுப்புக்கள்

மனிதனின் உணவுக் கால்வாய்த் தொகுதி

வாய்குழி

வாய்குழியில் உணவு துண்டாக்கப்படுகிறது.அரைக்கப்படுகிறது. இதனால் பௌதீக சமிபாடு நிகழ்கிறது.வெட்டும் பற்களும் வேட்டைப்பற்களும் உணவை சிறு துண்டுகளாக்குவதில் ஈடுபடுகின்றன.

முன்கடைவாய்பற்கள்,கடைவாய்பற்கள் என்பவற்றினால் உணவு உமிழ்நீருடன் சேர்ந்து அரைக்கப்பட்டு உணவு திரளை ஆக்கப்படுகின்றது.உணவுத்திரளைகள் தொண்டையுள் கடத்தப்பட்டு விழுங்கப்படுகின்றன.

மனிதனின் பற்கள் அனு என்பிலும் சிபுத என்பிலும் உள்ள குழிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன.

1 .உதிர்கின்ற பற்கள் இவை 20 காணப்படும்.

2. நிரந்தரபற்கள்

இவை ஒரு பாதி மேல் கீழ் தாடைகளில் உள்ள வெவ்வேறு பற்களின் எண்ணிக்கையை பற்சூத்திரம் எடுத்துக்காட்டுகிறது.

பல்
I. பன்முடி

II. பற்கழுத்து

III. பல்வேர் ஆகிய 3 பகுதிகளை உடையது.

பல்முடி முரசின் மேலாகக் காணப்படும் பகுதியாகும். பற்கழுத்து முரசினால் சூழப்பட்ட பகுதியாகும். பல்வேர் தாடைகளை ஆக்கும் என்புக் குழிகளுள் பாதிக்கப்பட்டிருக்கும் அபகுதியாகும்.

வெட்டடும் பற்களும் வேட்டைப் பற்களிற்கும் தனி வேர் உண்டு. முன் கடைவாய் பற்களில் இரு வேர்களும் கடைவாய் பற்களிற்கு 3 வேர்களும் காணப்படுகின்றன.பல் மூன்று பதார்த்தங்களினால் ஆக்கப்பட்டது.

மிளிரி இது கனியுப்புக்களினால் ஆக்கப்பட்ட வன்மையான பகுதி. பன்முடியில் காணப்படுகின்றது. பன்முதல் இது பல்லின் பெரும் பகுதியை அமைக்கின்றது.பல்லரும்பர் குழியங்கள் காணப்படும். மிளிரி இதனால் சுரக்கப்படுகின்றது. பற் சீமெந்து நார்பதார்தங்களால் ஆக்கப்பட்டது.

பல்லின் மத்தியில் மச்சைக்குழி உண்டு. இது பல்லின் ஒரு கூறு அல்ல. இதில் குருதிக் குழாய்களும் நிணநீர் குழாய்களும் நரம்புகளும் உள்ளன.

ஒவ்வொரு உணவு வேளையின் போதும் பல்லின் மேற்பரப்பின் PH7 இல் இருந்து 5 ஆக குறைகின்றது. குறிப்பாக உணவில் உள்ள வெல்லங்கள் பற்றீரியாக்களினால் |சேதன அமிலங்களாக மாற்றப்படுவதால் இவ்வாறு PH மாற்றம் ஏற்படுகின்றது.இவ்வமிலங்களால் மிளிரி சிதைவடைகின்றது. இதனால் பற்சொத்தை ஏற்படுகின்றது. ஒழுங்கற்ற முறையில் அடிக்கடி உணவு உண்பதால் வாய்க்குழியில் அமிலத்தன்.மை அடையும் வாய்ப்பு கூடுகின்றது.

உணவிலுள்ள வெல்லங்கள் பற்களின் வீக்கத் தழும்பின்(Plaque) ஆக்கத்தில் ஈடுபடுகின்ற பக்றீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுகின்றது.உணவு மிகுதிகள் உமிழ்நீர்,பற்றீரியாக்கள் என்பவற்றால் Plaque ஏற்படுத்தப்படுகின்றது.இது வலிமை அடைந்து பற்கள் மீது படிந்துவிடுகின்றது.

பற்களின் ஆரோக்கியத்திற்கு:

I. நார்த்தன்மையான உணவுகளை உள்ளெடுத்தல்.

II. குறைந்தளவு சமைத்த உணவுகளை உட்கொள்ளுதல்.

III. பற்களுக்கிடையில் உணவுத்துணிக்கைகளை அகற்றும் வகையில் பல் துலக்கல்.

IV. பற்களின் ஆரோக்கிய நிலையை பேணும் அளவில் Floride எடுத்தல்.

உணவு வாய்குழியில் உமிழ்நீருடன் சேர்ந்து அரைக்கப்படுகின்றது. உமிழ்நீரானது உமிழ்நீர்ச்சுரப்பிகளால் சுரக்கப்பட்டு வாய்குழியில் விடப்படுகின்றது.

மனிதனில் 3 சோடி உமிழ்நீர்ச்சுரப்பிகள் உள்ளன.அவை,

I. கன்ன உமிழ்நீர்ச்சுரப்பி

II. அனுகீழ்ச்சுரப்பி

III. நாவிற்கு கிழான சுரப்பி

உமிழ்நீர்
I. இதில் உமிழ்நீர் அமிலேஸ் அல்லது தயலின் நொதியம்.

II. சீதம்

III. Lysozyme என்னும் பற்றீறியாக்களை அழிக்கக்கூடிய நொதியம்

IV. நீர்

V. கனிப்பொருள் அயன்கள்

VI. குருதி உறைதல் காரணிகள் என்பன உள்ளன.

உமிழ்நீரினால் பின்வரும் தொழில்கள் ஆற்றப்படுகின்றன
I. மாப்பொருளின் இராசயன சமிபாடு நிகழ்த்தப்படுகின்றது.

II. உணவை ஈரலிப்பாக்கி திரளாக்குவதில் ஈடுபடுகின்றது.

III. உணவை கரையச்செய்யும் ஊடகமாக இருப்பதன் மூலம் சுவையை அறியமுடிகின்றது.

IV. Lysozyme பற்றீறியாக்களை அழிக்கக்கூடிய நொதுயம் ஆகையால் தனித்திறன் அற்ற நீர்பீடனத்தை வழங்குகின்றது.

V. வாய்குழியை சுத்தமாக்குவதில் பயன்படுகின்றது.

களம்
I. தொண்டையை அடுத்த நீண்ட நேரான குழாய் வடிவமான அமைப்பு களம் ஆகும்.

II. இது வதனாளிக்கு பின்புறமாகவும் முள்ளந்தண்டிற்கு முன்புறமாகவும் நெஞ்சறைக்குழியின் ஊடாக செல்லும் பகுதி ஆகும்.

III. பிரிமென்றட்டை ஊடுருவிச்சென்று வயிற்றறைக்குழியில் உள்ள இரைப்பையுடன் தொடுகின்றது.

IV. களம் உணவு இரைப்பைக்கு செல்லும் பாதையாக அமைகின்றது.

இரைப்பை

I. இரைப்பை வயிற்றறைக்குழியில் பிரிமென்றட்டு,ஈரல் என்பவற்றிற்கு கீழாக அமைந்துள்ளது.

II. இரைப்பை J வடிவமானது.

III. இது அடிக்குழி,உடல்,குடல்வாய்குழி ஆகிய மூன்று பகுதிகளை உடையது.

IV. இரைப்பைச்சுவரின் சுரப்பிகளில்:

a. சீதம் சுரக்கும் கலங்கள்

b. Zymogenic கலங்கள்

c. Oxyntic கலங்கள் உள்ளன.

இரைப்பையின் தொழில்கள்

I. உணவு தற்காலிகமாக சேமிக்கப்படும் இடம்.

II. புரதத்தின் இராசயன சமிபாட்டை நிகழ்த்துதல்.

III. இரைப்பை பாகு ஆக்கப்படுவதன் மூலம் பௌதீ சமிபாட்டில் ஈடுபடுதல்.

IV. மருந்துகள்,அற்ககோள்,சிறிதளவு நீர் என்பவற்றை அகத்துறிஞ்சுதல்.

V. விற்றமின் B12 இனை அகத்துறிஞ்ச உதவும் காரணி பதார்த்தத்தை சுரத்தல்.

VI. இரைப்பை உள்ளடக்கங்கள் முன் சிறுகுடலினுள் செல்வதைக் கட்டுப்படுத்தல்

VII. Gastrin என்னும் ஓமோனைச்சுரத்தல்.

 

சிறுகுடல்
I. இரைப்பையிற்கும் பெருங்குடலிற்கும் இடையிலான நீண்ட உருவான அமைப்பு.

II. இது முன் சிறுகுடல்,இடைச்சிறுகுடல்,சுருட்குடல் என 3 பகுதிகளை உடையது.

III. முன்சிறுகுடல் வளைந்த பகுதியாகும்.

சிறுகுடலின் தொழில்கள்
I. சுற்றுச்சுருங்கல் அசைவினால் சமிபாடடைந்து வரும் உள்ளடக்கங்களை கொண்டு செல்லுதல்.

II. சிறுகுடற்சாறை சுரத்தல்.

III. காபோவைதரேற்றுக்கள்,புரதங்கள்,கொழுப்புக்களின் இராசயன சமிபாடு பூரணம் அடையும் இடமாக இருத்தல்.

IV. Cholecystokinin, Secretin போன்ற ஓமோன்களை சுரத்தல்.

V. சமிபாடு அடைந்த உணவுகளை அகத்துறிஞ்சுதல்.

அகத்துறிஞ்சலுக்கான இசைவாக்கங்கள்

I. சிறு குடலில் சடை முளைகள் காணப்படுதல்.

II. மேலணிக்கலங்களில் நுண்சடைமுளைகள் காணப்படுதல்.

III. சடைமுளைகளில் காணப்படும் மழமழப்பான தசைகளின் தொழிற்பாட்டினால்

உணவுடன் சடைமுளைகள் தொடுகை அடையும் திறனுடையனவாக இருத்தல்.

பெருங்குடல்
இது சிறுகுடலைத்தொடர்ந்து குதம் வரை காணப்படும் பகுதியாகும்.பெருங்குடலானது குருட்டுக்குடல், குடற்குறை,நேர்குடல்,குதக்கான் ஆகிய பகுதிகளை உடையது.இதில் குடற்குறையானது ஏறுகின்றகுடற்குறை,குறுக்கானகுடற்குறை,இறங்குகின்ற_குடற்குறை 3 பகுதிகளை உடையது.

உணவுக்கால்வாய் ஓமோன்கள்

Ÿ உணவுக்கால்வாயில் இரைப்பையினால் gastric எனும் ஓமோனும் முன்சிறுகுடலினால் secretion,cholecystokinin எனும் ஓமோன்களும் சுரக்கப்படுகின்றன.
Ÿ உணவு இரைப்பையில் இருப்பதால் ஏற்படும் தூண்டல் gastric இன் சுரத்தலை தூண்டுகின்றது.
Ÿ உணவு முன் சிறுகுடலை அடைவதால் ஏற்படும் தூண்டல்கள் secretion, cholecystokinin சுரத்தலைத்தூண்டுகிறது.
Ÿ இவ் ஒமோன்கள் குருதியில் விடப்பட்டு குருதி வழியாக கொண்டுசெல்லப்படுகின்றது.
Ÿ Secretion இரைப்பையில்தொழிற்பட்டு உதரச்சாறு சுரக்கப்படுவதை நிரோதிக்கிறது.
Ÿ cholecystokinin சிறுகுடலில்செயற்பட்டு குடற்சாறு சுரக்கப்படுவதை secretion தூண்டுகின்றது.
Ÿ Cholecystokinin பித்தப்பையின் சுருக்கத்தை தூண்டி பித்தத்தை வெளியேற்றுகின்றது.
Ÿ Cholecystokinin சதையியில்செயற்பட்டு சதயச்சாறு சுரத்தலை தூண்டுகின்றது.
சதையீ
• மனிதனின் சதையீ வயிற்றறைக்குழியில் இரைப்பையின்மேல் இடது உப மணிப்பகுதியின் முன் சிறுகுடலின் வளைவுப்பகுதியில் அமைந்துள்ளது.
• கான் சுரப்பியால் சதைச்சாறு சுரக்கப்படுகின்றது.
• சதைக்குலைகளில் இருந்து சுரப்புக்கள் சிறு கான் வழியாக சதையக்கானில் விடப்படுகின்றது.

ஈரல்

• மனிதனின் உடலில் காணப்படும் மிகப்பெரிய சுரப்பி ஈரலாகும்.
• இது வயிற்றறைக்குழியில் வலது உப மணிப்பகுதியில் அமைந்துள்ளது.
• ஈரல்மெல்லிய உறை ஒன்றினால் முற்றாக மூடப்பட்டும் சுற்று விரி ஒன்றினால் பகுதியாக மூடப்பட்டும் உள்ளது.
• மனித ஈரல் நான் சோணைகள் உடையது.இவற்றுள் வலது சோணை பெரியது,இடது சோணை சிறியது.வாற்சோணை,நாற்புடைசோணை என்பன சோணைகள் ஆகும்.
• ஈரலிற்கு ஈரல் வாயில் நாளம் வழியாகவும் ஈரல் நாடி வழியாகவும் குருதி வழங்கப்படுகின்றது.எனவே ஈரல்இரட்டைக்குருதி தரவு உடையது.


ஆரோக்கியம்

சமிபாட்டுத் தொகுதி தொடர்பான நோய்கள்

சதையியில் ஏற்படும் புற்றுநோய்

இது மேற்குலக நாடுகளில் பொதுவாக ஏற்படும் புற்றுநோய் ஆகும். இது வயதுடன் உருவாகும் வாய்ப்பு கூடுவதுடன் பெரும்பாலானவை60 வயதிற்கு மேற்பட்டோரில் ஏற்படுகிறது. 60% நோயாளிகள் ஆண்கள் ஆவர். புகைத்தலானது இதன் ஆபத்தை 2 மடங்கு அதிகரிக்கும். நீண்ட கல சதையி அழற்சியும் இதற்கு இட்டுச்செல்லும். இவற்றுடன் விகாரம் அடைந்த மரபணுக்களும் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைக் கூட்டுகின்றன.

அறிகுறிகள்
இவை எங்கு புற்றுநோய் ஏற்படுகின்றது என்பதைப் பொறுத்து வேறுபடும். சதையியின் தலைப்பகுதியில் ஏற்படும் புற்றுநோயானது பித்தக்கானை ஆரம்பக்கட்டங்களிலேயே அடைப்பதனால் இதன் குணங்குறிகள் ஏனையவற்றுக்கு முன்னர் ஏற்படும். பொதுவாக வலியானது காணப்படாது.
ஏற்படும் வலியானது புற்றுநோய் சதையியின் உடல், வால் பகுதியில் உள்ளமையை அல்லது நோயானது நன்கு பரவி உள்ளமையைக் காட்டும். இது முதுகிற்கும் பரவிச் செல்லும் வலி ஆகும். பித்தக்கான் அடைக்கப்பட்டு கண்கள் மஞ்சள் நிறமாக மாறலாம். வயிற்றில் வைத்தியரால் பரிசோதிக்கப்படும் போது பித்தப்பை பெருத்தல், ஈரல் வீக்கம் ஆகியன காணப்படலாம்.
சிலரில் பல மூட்டுக்களைப் பாதிக்கும் மூட்டுவாதம், தோலில் கட்டிகள் என்பன ஏற்படலாம்.

நோயானது கண்டறியப்படல்

வயிற்றின் கழியொலி ஸ்கான் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டாலும் உடல், வால்ப்பகுதியில் ஏற்படும் புற்றுநோயை காணமுடியாது. CT ஸ்கான், ERCP பரிசோதனை, MRI ஸ்கான் ஆகியன பயன்படும்.

சிகிச்சை

பெரும்பாலான நோயாளிகளுக்கு நோயானது முற்றிய நிலையிலேயே நோயானது கண்டறியப்படுகிறது. இவர்களில் சத்திரசிகிச்சை மூலம் புற்றுநோயை வெட்டி எறிய இயலுவதில்லை. எனினும் புற்றுநோய்க்கான மருந்துகள், கதிர்வீச்சு சிகிச்சை ஆகியன பயன்படலாம். பித்தக்கானின் அடைப்பானது குழாய் ஒன்றின் மூலம் அகற்றப்பட்டு சிகிச்சை அளிக்கலாம்.
நோய் குணங்குறிகள்.
தைரொயிட் சுரப்பியிலுள்ள கலங்கள் உடலின் கட்டுப்பாடில்லாமல் பெருகுவதனாலும் தைரொயிட் புற்றுநோய் உண்டாகின்றது. அத்தொடு உடலின் மற்றய பகுதிகளுக்கும் மற்றய புற்று நோயைப் போன்று பரவலடைகிறது.
பெரும்பாலும் நோயின் ஆரம்பநிலைகளில் நோய்அறிகுறிகள் இருப்பதில்லை. ,பின்னய நிலைகளிலேயே ஏற்படுகின்றது. கீழ்கூறப்பட்ட வற்றில் ஒன்று அல்லது அதற்கு அமற்பட்ட குணங்குறிகள் இருக்கலாம். எனினும் இவை வேறு தைரொயிட் வருத்ததினாலும் ஏற்படலாம்.எனவே நோய் குணங்குறிகளை மட்டும் கருத்தில் கொண்டு தைரொயிட் புற்றுநோயை உறுதிப்படுத்த முடியாது. கீழ்கூறப்பட்டவை காணப்படின் வைத்தியரின் ஆலோசனையைப் பெறவும்.
• கழுத்தின் முன்பகுதியில் தைரொயிட் சுரப்பியிலிருந்து கட்டி / வீக்கம் ஏற்படுதல்.
• உணவை விழுங்குவதற்குக் கடினமாக இருத்தல்.
• முச்சு எடுப்பதற்குக் கடினமாக இருத்தல்.
• குரலில் மாற்றம் ஏற்படுதல்.
• கழுத்துப் பகுதியில் நிணநிர் முடிச்சுக்கள்.9Lymphnodes) !வீங்குதல்.
• கழுத்துப்பகுதியில் நோவு ஏற்படுதல்.
• உடலின் மற்றய பகுதிகளுக்கு புற்றுநோய் பரவுமாக இருந்தால் (நுரையீரல், ஈரல்,என்பு ) அவற்றின் காரணமாகவும் நோய் அறிகுறிகள் ஏற்படலாம். உதாரணமாக நுரையிரலுக்கு புற்றுநோய் பரவுவதனால் இருமல் ஏற்படுகின்றது.
பித்தக் கற்கள்.
பித்தக் கற்கள் உனப்படுபவை சிறிய கல் போன்ற திண்மக்கட்டிகளாகும். இவையாவும் பித்தப்பையிலேயே (Gallbladder) உருவாக்கப்படுகின்றன. இவ்வருத்தத்தைப் பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்வதற்கு ஈரல் மற்றும் பித்தப்பாதைகள் பற்றித் தெரிந்திருத்தல் அவசியமாகும்.


ஈரல் மற்றும் பித்தப்பாதை. :

பித்தப் பாதையானது பித்தத்தினைக் கடத்துகின்ற தொழிலைச் செய்கிறது. பித்தமானது ஈரலில் உருவாக்கப்படுகின்றது. பின்னர் பித்தப்பாதையில் சேமிக்கப்பட்டு தேவையேற்படின் பித்தக் குழாயினுடு முன்சிறுகுடலை அடைகிறது. பித்தக் குழாயானது பித்தக்கற்களினால் அடைப்புக்கு உட்படுமாயின் பித்தச் சுற்றோட்டம் தடுக்கப்டுவதனால் பித்தக் குழாயினுள் பித்தம் தெங்குகின்றது. உடலில் பித்தத்தின் அளவு கூடுவதனால் உடலும் கண்ணும் மஞ்சள் நிறமாக மாறுகின்றது. இது Jaundice என அழைக்கப்படும். பித்தக்குழாயின் அடைப்பினால் ஏற்படுவதனால் இவ்வகை Jaundice ஆனது Obstuctive Jaundice என அழைக்கப்டும்.
பித்தமானது சிறிகுடலை அடைந்தத்தும் அங்கு காணப்டும் கொழுப்புவகை உணவுகளை குழம்புகளாக அதாவது சிறு சிறு துணிக்கைகளாக உடைக்கிறது. இதன் மூலம் கொழுப்புப் பதார்த்தங்கள் சமிபாடைந்து அகத்துறிஞ்சப் படுகின்றது.
பித்த்தில் காணப்படும் பிளிரூபின் (bilirubin) என்ற பதார்த்தத்தின் முடிவுப் பொருட்களினாலேயே மலத்தின் மஞ்சள் நிறம் ஏற்படுகின்றது. பித்தத்தின் பாதை அதாவது பித்தக்குழாய் அடைப்புக்குள்ளாகின்ற பொழுது மலத்தின் மஞ்சள் நிறம் அற்றுப் போகிறது . இதனால் மலம் மஞ்சள் நிறமாக மாறும்.
பித்தக் குழாய் அடைப்புக்குள்ளாகின்ற பொழுது குருதியில் பித்தத்தின் அளவ் அதிகரிப்பதனால் தோலில் மஞ்சள் நிறமான பித்தம் படிவடைவதனால் தோல் மஞ்சளாவதஞடன் (Jaundice) சிறுநிருடன் சேர்ந்து பித்தப் பொருட்கள் வெளியேறுவதனால் சிறுநீர் தேனிர் நிறத்தில் / Coco—cola நிறதத்ில் வெளியேறும்.
பித்தப்பாதையில் ஏதாவது நோய்கள் ஏற்படுமாயின் அதனால் எண்டாகும் நோவு வயிற்றின் மெல் பகுதியில் வலியாக உணரப்படும்.
பித்தக்கற்களில் பலவகையுண்டு. பெரும்பாலான கற்கள் கொலஸ்ரோல் மற்றும் பித்தப் பொருட்கள் என்பவற்றினால் ஆக்கப்பட்டது. பித்தக் கற்களின் அளவு மற்றும் அவை காணப்படும் இடம் (பித்தப்பையா ? பித்தக் குழாயா?) என்பவற்றைப் பொறுத்து ஏற்படும் நோய்குணங்குறிகள் வேறுபடும்.
அடிசன்
நோய்க் குணங்குறிகள்
இந்நோய் பொதுவாக காலம் தாமதித்தே கண்டறியப்படுகிறது
1. களைப்பு
2. பலவீனம்
3. பசியின்மை
4. உடல் எடைக்குறைவு
5. தலைச்சுற்றல்
6. தலைவலி
7. மூட்டுவலி
8. மனச்சோர்வு
9. மனநோய்
10. சமிபாட்டுத்தொகுதியில் – குமட்டல், வாந்தி
11. வயிற்று நோ
12. மலச்சிக்கல்
13. தோல் கைகளின் கரமை அதிகரித்தல்
14. உதடுகளின் மேலணி கருமையடைதல்
15. நிற்கும் போது இரத்த அழுத்தம் குறைதல்
16. சுற்றோட்ட செயலிழப்பு
17. தோல் வெளிறல்
18. காயச்சல்
19. ஆண்மைக் குறைவு
20. மாதவிடாய்ச் சிக்கல்கள்
21. மூட்டு மற்றும் நாரிவலி

பரிசோதனைகள்

1.குறுகிய கால ACTH பரிசோதனை சினக்தன் வழங்கப்பட்டு அதன் முன்னரம் 30 நிமிடங்களின் பின்னரும் குருதிப்பாய கோட்டிசோலின் அளவு அளவிடப்படும்
2 வது அளவீடு 50 நனோமூல்/லீற்றா விட அதிகமாக காணப்பட்டால் நோயானது இல்லை எனக்கூறலாம் .
2.காலை 9மணிநேரத்தில் ACTH இன் அளவு 300மி.கி/லீற்றருக்கு அதிகமாக காணப்படல். எனினும் இது சில குறிப்பிட்ட வகை நிலைமைகளில் குறைவாக காணப்படும்
3.வயிறு மற்றும் நெஞ்சின எக்ஸ் கதிர்ப்படம்
காச நோய் அதிரினல்களில் கல்சியம் படிவு ஆகியவற்றை கண்டறியலாம்
4.MRI ஸ்கான் CT ஸ்கான் USS ஸ்கான் காச நோய் அதிரினல்களில் கல்சியம் படிவு ஆகியவற்றை கண்டறியலாம்
5.சோடியம் குறைதல் பொற்றாசியம் கூடுதல் கல்சியம் கூடுதல் குருதியில் கியோசினோபில் கலங்கள் கூடுதல் குருதிச்சோகை
6.நோயாளி மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டு குருதியழுத்தம் குறைந்து காணப்படடால் ஐதரோக்கோட்டின் 100மி.கி வழங்கப்பட்டு இயலுமாயின் ACTH பரிசோதனையானது உடனடியாக செய்யப்படல்.

குடல் புற்றுநோய் (Clinical features).


நோய்க்குணங்குறிகள்

1. மலத்தினூடாக இரத்தம் வெளியேறுதல்..
இரத்தம் மாற்றத்திற்குள்ளாகி கறுப்பு நிறமாகவோ அலல்து மாற்றத்திற்குள்ளாகாமல் சிவப்புநிறமாகவோ காணப்படலாம்.
2. மலம் கழிக்கும் வழமையில் மாற்றம் ஏற்படலாம்..
அதாவது மலச்சிக்கலும் வயிற்றோட்டமும் மாறி மாறி ஏற்படலாம். அத்துடன் மவம் கழிக்கும் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் ஏற்படலாம். இவை சாதாரணமானதா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதற்கு உங்கள் முன்னைய மலம் கழிக்கும் வழமையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
3. சடுதியாக ஏற்படும் குடல் அடைப்புடன் (Intestina obstruction) நோயாளி வைத்திய சாலைக்கு வரலாம். இதன்போது நோயாளிக்கு வயிற்றுவலி மலம் செல்லாமை (ஊழளெவயைவழை,வயிறு வீக்கம் , வாந்தியெடுத்தல் ஆகிய குணங்குறிகள் காணபப்டலாம்.
4. நீண்ட காலத்திற்கு குடல் புற்றுநோயிலிருந்து தொடர்ச்சியாக சிறிது சிறிதபக இரத்தக் கசிவு ஏற்படுவதனால் நோயாளிக்கு குருதிச் சோகை (Anemia) ஏற்படலாம். இதனால் சோர்வு ,மூச்சடைப்பு , நெஞ்சு படபடப்பு என்பன ஏற்படலாம்.
5. உடல் நிறைகுறைவு மற்றும் உணவில் விருப்பமின்மை.
6. மலம் கழித்தபின்னரும் மலம் முற்றாக வெளியேறாதது போன்ற உணர்வு ஏற்படலாம்.
7. வைதத்ியரினால் மலவாயிலூடாக விரல் விடப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றபோது சிலவேளைகளில் மலக்குடலில் அல்லது குதமார்க்கத்தில் காணப்படும் கட்டி கண்டுபிடிக்கப்படலாம். சில வேளைகளில்மலவாசல் பரிசோதனையின் பின் வைத்தியரின் விரலில் காணபப்டும் இரத்தத்திலிருந்து குடல் புற்று நோய் இருப்பது சந்தேகிக்கப்படும்.
8. குடல் புற்று நோயானது ஈரவிற்கு போதுவாகப் பரவுகின்ற தன்மை கொண்டது. இதனால் ஈரலின் பரிமாணம் அதிகரிக்கின்றது. இது வைத்தியர் வயிற்றுப் பகுதியை அமத்தி பரிசோதனை செய்கின்றபோது அவரினால் அடயாளம் காணப்படலாம்.

குடல் புற்றுநோய்

நோயாளியினால் வழங்கப்படுகின்ற நோய்க்குணங்குறிகள் மற்றும் வைத்தியரினால் செய்யப்படும் உடற்பரிசோதனைகளிலிருந்து குடல் புற்றுநோய் இருப்பது ஓரளவிற்கு அடையானப்படுதத்ப்படும். இதனை உறுதிசெய்வதற்காக மேலதிக பரிசோதனைகளை மருத்துவர் செய்வார்.

சிறுநீரகத் தொகுதி
மனித உடலானது பல தொகுதிகளை கொண்டது.உதாரணமாக குருதிச்சுற்றோட்டத் தொகுதி, சமிபாட்டுத்தொகுதி, நரம்புத்தொகுதி, கழிவுத்தொகுதி, என்பு தசைத்தொகுதி, சுவாசத்தொகுதி என்பன அடங்கும். ஒவ்வொரு தொகுதியும் தமக்கேயுரிய தொழிற்பாடுகளை கொண்டவை.இத்தொகுதிகள் யாவும் இணைந்தே உடலை உருவாக்குவதுடன் நாளாந்த தொழிற்பாடுகளையும் மேற்கொள்கிறது.இந்த வகையில் சிறுநீரகத்தொகுதி உடலின் பலவிதமான முக்கிய தொழில்களை ஆற்றுகின்றது. அவையாவன:

• உடலில் காணப்படும் கழிவுப்பொருட்களான யூரியா போன்றவற்றை வெளியேற்றுதல்

• உடலில் நீர் கனியுப்புக்களின் சமநிலையை பேணுதல்.இதனாலேயே சிறுநீரகம் பாதிப்படைந்தவர்களில் உடலில் நீர் கனியுப்புக்கள் தேக்கமடைவதால் அவர்கள் வீக்கமடைவார்கள்.

• பல முக்கிய ஓமோன்களையும்,உடல் இரசாயனத்தாக்கங்களையும் செய்வதன் காரணமாக

• குருதியில் செங்குருதிச்சிறுதுணிக்கைகளின் உற்பத்திக்கு உதவுகிறது.எனவே சிறுநீரகங்கள் பாதிப்படைந்தவர்களில் செங்குருதிக்கலங்களின் அளவு குறைவடைவதால் குருதிச்சோகை ஏற்படுகிறது.

• உடலில் குருதியமுக்கத்தை கட்டுப்படுத்துகிறது

• விற்றமின் D தெகுப்பிற்கு உதவுகிறது எனவே சிறுநீரகம் பாதிப்படைந்தவர்களில் விற்றமின் D இன் அளவு குறைவடைந்து என்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது.
சிறுநீரக தொகுதியானது பின்வரும் முக்கிய பகுதிகளால் உருவாக்கப்பட்டது.அவையாவன

• ஒரு சோடி சிறுநீரகம்

• ஒரு சோடி சிறுநீர்க்குழாய்கள்

• சிறுநீர்ப்பை சுரப்பி (ஆண்களில் மட்டும்)

• சிறுநீர் வழி

குருதியானது வடிகட்டப்பட்டு சிறுநீரகத்தில் சிறுநீர் உருவாக்கப்படுகிறது.சிறுநீர் நீர்,கழிவுப்பொருட்கள் என்பவற்றால் ஆக்கப்பட்டது.பின்னர் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பக்கு சிறுநீரை கடத்துகின்ற தொழிலை சிறுநீர்க்குழாய்கள் செய்கின்றன.இதன்போது சிறுநீர்க்குழாயில் ஏற்படும் சுற்றுச்சுருங்கல் அசைவு இதற்கு துணைபுரிகிறது.

பின்னர் சிறுநீர்ப்பையில் சிறுநீரானது தற்காலிகமாக சேமிக்கப்படும்.ஏறத்தாழ 400 ml சிறுநீர் சேர்ந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டுமமென்ற உணர்வு ஏற்படும்.இதன் பின்னர் சிறுநீர்ப்பை சுருங்குவதனாலும் சிறுநீர்ப்பையின வாயிலுள்ள இறுக்கிகள் தளருவதாலும் சிறுநீரானது சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர்ப்பையினூடாக வெளியேறுகிறது.

சிறுநீர் வழியானது ஆண்களில் நீண்டதாகவும் (20 cm) பெண்களில் சிறியதாகவும் (4 cm) காணப்படும். இச்சிறுநீர் வழியில் எங்காவது அடைப்பு ஏற்படுமாயின் வலி ஏற்படுவதுடன் சிறுநீர் உடலில் தேங்கி நிற்கு் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.இவற்றினால் சிறுநீரகத்தில் பாதிப்புக்கள் ஏற்படலாம்.

கட்டமைப்பு
சிறுநீரகத் தொகுதியின் கட்டமைப்பு
சிறுநீரகங்கள் அவரைவித்து வடிவானவை. நடுக்கோட்டுப் பகுதியில் குழிவானவை. பக்கப்பாடாக குவிவானவை. சிறுநீரக உறையால் மூடப்பட்டிருக்கும். இது வெண்நார் இழையங்களால் ஆக்கப்பட்டது. நடுக்கோட்டு மேற்பரப்பில் மணிப்புள்ளி உண்டு. இதன் வழியாக குருதிக்குழாய்கள், நிணநீர்குழாய்கள், நரம்புகள் செல்கின்றன. சிறுநீர்குழாய் இதன் வழியாகசெல்கிறது.சிறுநீரகங்களின் அதிவெளிப்புறப் பகுதி மேற்பட்டையாகும். உட்புறமான பகுதிமையவிழையம் ஆகும்.மையவிழையத்தில் சிறுநீரக பிரமிட்டுக்கள் எனப்படும் கூம்பு வடிவமான பல அமைப்புக்கள் உள்ளன.இவை வரித்தோற்றம் உடையவை .

சிறுநீரகத்திகள்

சிறுநீரகத்தி ஒரு முனையில் மூடப்பட்டும் மற்றய முனையில் திறந்து காணப்படுகின்றதுமான சிறுகுழாய் ஆகும்.இது திறந்த முனை வழியாகசேகரிக்கும் கானினுள்திறக்கின்றது. இதன் மூடியமுனை கிண்ண வடிவமான போமனின் உறையை அமைக்கின்றது.இதன் வெளியான படைதனிச் செதில் மேலணியால் ஆக்கப்பட்டது. உள்ளான படையில்பாதக்குழியங்கள் என்னும் விசேடகலங்கள் காணப்படுகின்றன.
போமனின்உறையைத்தொடர்ந்து அண்மையான மடிப்படைந்த சிறுகுழாய் என்லேயின் இறங்குபுயம், என்லேயின் வளைவு, என்லேயின் ஏறுபுயம் என்பனவும் இதனைத் தொடர்ந்த சேய்மையான மடிப்படைந்த சிறுகுழாயும் காணப்படுகின்றது.
சேய்மையான மடிப்படைந்த சிறுகுழாயின் அந்தம் சேகரிக்கும் கானில் திறக்கிறது. அண்மையான மடிப்படைந்த சிறுநீர்குழாய் எளியகன வடிவமேலணிக் கலங்களால் ஆக்கப்பட்டது இதன் சுயாதீன கலப்பரப்பில் நுண்சடை முளைகள் காணப்படும். என்லேயின் இறங்குபுயம் எளியகன மேலணியாலும் ஆக்கப்பட்டது. என்லேயின் வளைவு எளிய செதில்மேலணியாலும் ஆக்கப்பட்டது.

என்லேயின் தடம்

சிறுநீரகத்தியின் என்லேயின் தடம் u வடிவமான குழாய் போன்ற பகுதியாகும். என்லேயின் தடம் நீர்காப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அமைப்பு என்லேயின் தடத்தினால் மையவிழையப் பகுதியில் அதிக உப்புச்செறிவு ஏற்படுத்தபடுகின்றது. இதன் காரணமாக மையவிழையப் பகுதியூடு செல்லுகின்ற சேகரிக்கும் கான்களில் இருந்து பிரசாரணம் மூலம் நீர் வெளியேறி மையவிழையத்தை அடைவதனால் சிறுநீர் மூலம் இழக்கப்படும் நீரின் அளவு மேலும் குறைவடைகின்றது.
என்லேயின் இறங்குபுயம் வழியாக கலன் கோள வடித்திரவம் கீழ் நோக்கியும் ஏறுபுயம் வழியாக மேல் நோக்கியும் செல்கின்றது. இதனால் இது எதிரோட்டப் பொறிமுறையை ஏற்படுத்துகின்றது.
என்லேயின் இறங்கு புயம் நீரைப்புகவிடும் தன்மையுடையது. இதனால் கலன்கோள வடித்திரவத்தில் இருந்து பிரசாரணம் மூலம் நீர் வெளியேறுகின்றது.
மையவிழையப் பகுதியில் இருந்து Na+ அயன்கள் உயிர்ப்பாகவும் CI- மந்தமாகவும் இறங்கு புயப்பகுதியில் உள் எடுக்கப்பட்டு கலன்கோள வடித்திரவத்தினுள் சேர்க்கப்படுகின்றது. இதனால் இறங்கு புயத்தில் கீழ் இறங்கிச் செல்லச் செல்ல வடித்திரவத்தில் Na+, CI- அயன்களின் செறிவும் அதிகரித்துச் செல்லும் மிகக்கூடிய காரியங்களின் செறிவு என்லேயின் வளைவுப்பகுதியில் காணப்படும். தடத்தின் நீளம் அதிகரிக்க இவ்வாறான நீரின் மீள் அகத்துறிஞ்சலும் அதிகரிக்கும்.
என்லேயின் ஏறுபுயம் நீரைப்புகவிடும் தன்மை அற்றது இப்பகுதியில் கலன் கோளவடித்திரவத்தில் இருந்து உயிர்ப்பான முறையில் Na+ அயன்களும் மந்தமான முறையில் CI- அயன்களும் வடிவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு மைய விழையத்தில் விடப்படுகின்றது.
சிறுநீரகத்தியின் அண்மையான மடிப்படைந்த சிறுகுழாய் பகுதி தேர்விற்குரிய மீள் அகத்துறிஞ்சலை நிகழ்த்தும் பிரதான பகுதியாகும். மீள் அகத்துறிஞ்சலுக்கு ஏற்றதாக இதில் காணப்படும் சிறப்பியல்புகள்
1. கலங்களின் மேற்பரப்பில் நுண்சடை முளைகள் இருப்பதனால் அதிக மேற்பரப்பு வழங்கப்படுகின்றது.
2. உயிர்ப்பான அகத்துரிஞ்சலிற்கு ATP யை வழங்க இழை மணிகள் அதிக எண்ணிக்கையில் இருத்தல்.
3. குருதி மயிர் குழாய்களுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருத்தல்.

தொழிற்பாடு
சிறுநீரகத் தொகுதி
மனிதனின் சிறுநீரகங்களின் தொழில்கள்
1 நைதரசன் கழிவுகளை அகற்றுதல்
2 உடலின் நீர் சமநிலையைபேணுதல்.
3 குருதியின் கன அளவைபேணுதல்.
4 குருதியின் pH இனை சமப்படுத்தல்.
5 பிரசாரணச் சீராக்கம்செய்தல்.
6 சிறு நீரை உருவாக்குதல்.
7 குருதி அமுக்கத்தைப்பேணுதல்.
8 ஒரு சீர் தடநிலயைப்பேணுதல்.
சிறுநீர் ஆக்கச் செயற்பாடு.
சிறுநீர் ஆக்கம் சிறுநீரகத்திகளில் நிகழுகின்றது. இது மூன்று படிநிலைகளை உடையது.
1. அதீத வடிகட்டல்
2. தேர்வு மீள் அகத்துறிஞ்சல்
3. சுரத்தல்
அதீத வடிகட்டல்
அதீத வடிகட்டலில் குருதி வடிகட்டப்படுகின்றது. இதில் உயர் அமுக்கம் காரணமாக கலன்கோளத்தின் குருதி மயிர்க்குழாய்களின் சுவரின் ஊடாகவும் போமனின் உறையின் உள்ளான சுவரின் வழியாகவும் குருதி வடிக்கப்படுகின்றது.
வடிகட்டலால் பெறப்பட்ட வடித்திரவம் கலன்கோள வடிதிரவம் எனப்படும் .
இதில் நீர், உப்புகள், அல்லது கனிப்பொருள், அயன்கள், அமினோ அமிலங்கள், குளுக்கோஸ், யூரியா, விற்றமீன்கள், சில மருந்துகள் என்பன காணப்படும்.குருதி முதலுருப் புரதங்களும் குருதிக் கலவைகளும் வடிதிரவத்தில் காணப்படுவதில்லை.
தேர்வு மீள் அகத்துறிஞ்சல்
அண்மையான மடிப்படைந்த சிறுகுழாய் பகுதியில் கலன்கோள வடிதிரத்தில் இருந்து சில பதார்த்தங்கள் தேர்விற்குரிய முறையில் மீள் அகத்துறிஞ்சப்படுகின்றன.
Na+, அமினோ அமிலங்கள், குளுக்கோஸ் என்பவை உயிர்பான முறையில் மீள் அகத்துறிஞ்சபடுகின்றன. கட்டுப்பட்ட நீரின் மீள் அகத்துறிஞ்சல் இங்கு நிகழ்கின்றது.C1-, யூரியா, HCO3  என்பன மந்தமான முறையில் மீள் அகத்துறிஞ்சபடுகின்றன.
கலன் கோள வடித்திரத்தில் இருந்து ஏறத்தாள 75 % நீரின் மீள் அகத்துறிஞ்சல் அண்மையான மடிப்படைந்த சிறுகுழாயில் நிகழ்கின்றது. இது உடலின் நீர் சமநிலையில் தாங்கியிருக்காது. ஆகையால் கட்டுபட்ட நீரின் மீள் அகத்துறிஞ்சல் எனப்படும்.
ஆரோக்கியமனவர்களின் கலன்கோள வடித்திரவத்தின் இருந்து அமினோ அமிலங்கள், குளுக்கோஸ் என்பன முற்றாக மீள் அகத்துரிஞ்சபடுகின்றது.
இதனையடுத்து கலன் கோள வடித்திரவம் என்லேயின் இறங்கு புயம் வழியாகச் செல்லுகின்றது. இதில் பிரசாரணம் மூலம் அதாவது, மந்தமான முறையில் நீரின் மீள் அகத்துறிஞ்சல் நிகழ்கின்றது.
என்லேயின் ஏறுபுயத்தில் Na+ இன் உயிர்ப்பான மீள் அகத்துறிஞ்சல் நிகழ்கின்றது. C1- இன் மந்தமான மீள் அகத்துறிஞ்சல் நிகழ்கின்றது.
சிறுநீரகத்தியின் சேய்மையான மடிப்படைந்த சிறுகுழாய் பகுதியில் Na+ இன் உயிர்ப்பான மீள் அகத்துறிஞ்சல் நிகழ்கின்றது. C1- இனதும் HCO3-, இனதும் மந்தமான மீள் அகத்துறிஞ்சல் நிகழ்கின்றது.
ADH ஓமோன் காணப்படும்போது இங்கு நீரின் மீள் அகத்துறிஞ்சல் நிகழ்கின்றது. ADH இனால் சேகரிக்கும் சிறுகான் பகுதியில் இருந்தும் நீரின் மீள் அகத்துறிஞ்சல் நிகழ்கின்றது,
சுரத்தல் ( Secretion)
சிறுநீரகத்திகளின் சேய்மையான மடிப்படைந்த சிறு குழாய்பகுதியில் நிகழ்கின்றது.இங்கு குருதியில் இருந்து உயிர்ப்பான முறையில் K+, H+, NH4+, Creatinine, யூரியா, சில மருந்துகள் என்பன கலன்கோள வடித்திரவத்தினுள் சுரந்து விடப்படுகின்றன
சிறுநீரகண்களால்  நாள் ஒன்றிற்கு ஏறத்தாள 100 – 180 l குருதி வடிக்கபடுகின்றது. இங்கு நாள் ஒன்றிற்கு 1 - 2 l வரையிலான சிறுநீர் உருவாக்கபடுகின்றது. சேகரிக்கும் கான் வழியாகச் செல்லும் சிறுநீர் சிறுநீரக இடுப்பு பகுதியில் சேகரிக்கப்படுகின்றது. இதில் இருந்து சிறுநீர் கான்கள் வழியாக சிறுநீர்ப்பையை அடைகின்றது.சிறுநீர் பையினுள் தற்காலிகமாகச் சேமிக்கப்படும் சிறுநீர் சிறுநீர்வழியூடு வெளியேற்றப்படுகின்றது.

மனிதனின் சிறுநீரில் காணப்படும் கூறுகள்

1. நீர்
2. யூரியா
3. Creatinine
4. யூரிக்கமிலம்
5. அமோனியா
6. Na+, K+, C1-, PO3-4 போன்ற அயன்கள்
சிறுநீரகத்தில் இருவகையான சிறுநீரகத்திகள் காணப்படுகின்றன.
1. மேற்பட்டைக்குரிய சிறுநீரகத்தின் இவற்றின் பெரும்பகுதி சிறுநீரக மேற்பட்டையில் காணப்படுகின்றது.என்லேயின் தடம் நீளம் குறைந்ததாகவும் காணப்படும். இவ்வகைச் சிறுநீரகத்திகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
2. மேற்பட்டை மைய விளையச் சிறுநீரகத்திகள் இவற்றில் போமனின் உறைப்பகுதி மேற்பட்டைமையவிழைய சந்திப்பிற்கு அருகாகக் காணப்படும். என்லேயின் தடம் நீண்டு காணப்படுகின்றது.நீர் குறைவகாகக் கிடைக்கும் நிலையில் உடலில் மேலதிக நீரைப் பேணும்வகையில் மேற்பட்டை மையவிழையச் சிறுநீரகத்திகள் தொழிற்படுகின்றன.

சிறுநீர் கழித்தல்

சிறுநீர் கழித்தல் தெரிவினைச் செயற்பாடு ஆயினும் இச்சைவழி இதனைக் கட்டுப்படுத்த முடியும். சிறுநீர்பையில் சிறுநீர் நிரம்பும்போது அதன் சுவர் விரிவடைகின்றது. இதில் இருக்கும் இழுவை வாங்கிகள் தூண்டப்பட்டு சிறுநீரை வெளியேற்ற வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது.
சிறுநீர்பை சுருக்கம் அடைந்து அதன் அடியில் உள்ள இறுக்கித் தசைகள் தளர்ந்து சிறுநீர் வெளியேற்றப்படுகின்றது.
சிறுநீரகங்களினால் பிரசாரணச் சீராக்கம் செய்யப்படுதல்
குருதியின் கரைய அழுத்தத்தினை மாறுபடாது பேணுவதில் சிறுநீரகத்தியின் சேய்மையான மடிப்படைந்த சிறுகுழாய்பகுதியும் சேகரிக்கும் கானும் ஈடுபடிகின்றன. உள் எடுக்கப்படும் நீரின் அளவு குறைதல், வியர்வை மூலம் இழக்கப்படும் நீரின் அளவு கூடுதல் என்பவற்றால் குருதியில் கரைய அழுத்தம் மேலும் எதிர் பெறுமானம் அடைகின்றது.
இந்த மாற்றம் பரிவாகக் கீழில் உள்ள பிரசாரண வாங்கிகளால் அறியப்படுகின்றது. இதன் தூண்டலால் கபச்சுரப்பியில் இருந்து ADH (Anti diuretic hormone) வெளிவிடப்படும் அளவு அதிகரிக்கின்றது. ADH குருதி வழியாக சிறுநீரகங்களை அடைகின்றது.   ADH சிறுநீரகத்தியின் சேய்மையான மடிப்படைந்த சிறுகுழாய் பகுதியிலும் சேகரிக்கும் கான்களிலும் நீரின் புகவிடும் தன்மையை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் கலன்கோள வடித்திரவத்தில் இருந்து மேலும் நீர் வெளியேறி குருதியை அடைகின்றது. குருதியின் பிரசாரணச் செறிவு இயல்பு நிலையை அடையும்போது பரிவாகக் கீழில் உள்ள வாங்கிகளின் செயற்பாடு எதிர் பின்னூட்டல் முறையில் நிரோதிக்கப்படுகின்றது.
ADH இன் முன்னிலையில் நிகழும் நீரின் மீள் அகத்துறிஞ்சல் அமையத்திற்கு ஏற்ற நீரின் மீள் அகத்துறிஞ்சல் எனப்படும். இதனால் குறைந்த கனவளவின் செறிவு கூடிய சிறுநீர் உருவாக்கப்படுகின்றது.
உள் எடுக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கும்போது வியர்வை மூலம் இழுக்கப்படும் நீரின் அளவு குறையும்போது குருதியில் நீரின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் குருதியில் கரைய அழுத்தம் குறைந்தளவு எதிர் பெறுமானத்தை அடைகின்றது.
இந்த மாற்றம் பரிவாகக்கீழில் உள்ள பிரசாரண வாங்கிகளால் அறியப்படுகின்றது. இதன் தூண்டலால் கபச்சுரப்பியில் இருந்து வெளியே விடப்படும் ADH இன் அளவு குறைகின்றது. இதனால் சிறுநீரகத்தியின் சேய்மையான மடிப்படைந்த சிறு குழாயிலும் சேகரிக்கும் கானிலும் நீரின் புகவிடும் தன்மை இழக்கப்படுகின்றது. இதனால் இங்கு நிகழக்கூடிய அமையத்திற்கேற்ற நீரின் மீள் அகத்துறிஞ்சல் நிகழ முடியாது போகின்றது. எனவே மேலதிகமான நீர் சிறுநீர் மூலம் இழக்கப்படுகின்றது. இதனால் ஐதான கனவளவு கூடிய சிறுநீர் உருவாக்கப்படுகின்றது.
குருதியில் கரைய அழுத்தம் இயல்பு நிலையை அடையும்போது பிரசாரண வாங்கிகளின் செயற்பாடு எதிர்பின்னூட்டல் முறையினால் நிரோதிக்கப்படுகின்றது.

சிறுநீரகங்களினால் pH இன் சீராக்கம்

மனிதனின் உடற்பாய் பொருளின் pH சீராக்கத்தில் சிறுநீரகங்களின் சேய்மையான மடிப்படந்த சிறுகுழாய் பகுதி ஈடுபடுகின்றது.
குருதியின் இயல்பு நிலைக்குரிய pH 7 .4 குருதியின் pH 7 .4 இலும் குறையும் போது குருதியில் இருந்து H+ அயன்கள் கலன்கோள வடிதிரவத்தினுள் எடுக்கப்படுகின்றது. வடிதிரவத்தில் இருந்து HCO3- அயன்கள் குருதி முதலுருவில் விடப்படுகின்றன.
குருதியின் pH 7.4 இலும் அதிகரிக்கும்போது குருதியில் இருந்து HO- அயன்களும் HCO3- அயன்களும் கலன்கோள வடித்திரவத்தினுள் விடப்படுகின்றன. இதனால் குருதியின் pH இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்படுகின்றது.
குருதியில் Na+ அயன்களின் செறிவின் சீராக்கம்.
குருதியில் Na+ அயன்களின் செறிவு இயல்பு நிலையை விடக் குறையும்போது குருதியுள் செல்லும் நீரின் அளவு குறைகின்றது. இதனால் குருதியின் கனவளவு குறைகின்றது. இதன் விளைவாக குருதி அமுக்கம் இயல்பு நிலையை விடக்குறைகின்றது.
குருதி அமுக்கம் குறைவடைதல் காரணமாக கலன்கோளச் சிக்கல் தூண்டப்பட்டு renin இணை சுரக்கின்றது. றெனினினால் குருதியில் உள்ள அஞ்சியோரென்ஸினோஜென் ஆக மாற்றப்படுகின்றது. கலன்கோளச் சிக்கல் என்பது உட்காவு சிறுநாடிக்கும் சேய்மையான மடிப்படைந்த சிறு குழாயிற்கும் இடையில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு ஆகும்.
அஞ்சியோஸிஸினின் தூண்டலினால் அதிரினற் சுரப்பியின் மேற்பட்டை தூண்டப்பட்டு அல்டோஸ்ரெறோன் என்னும் ஓமோனை வெளிவிடுகின்றது.
அல்டோஸ்ரெறோன் குருதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டு சிறுநீரகங்களை அடைகின்றது. அங்கு சிறுநீரகத்திகளின் சேய்மையான. மடிப்படைந்த சிறுகுழாய் பகுதியில் Na+ அயன்களின் மீள் அகத்தறிஞ்சலை தூண்டுகின்றது. இதன் விளைவாக கலன்கோள வடிதிரவத்தில் இருந்து Na+ குருதியும் மீள் அகத்துறிஞ்சப்படுகின்றது. உணவுக் கால்வாயில் நிகழும் Na+ இன் அகத்துறிஞ்சல் அதிகரிக்கப்படுகின்றது.
வியர்வைச் சுரப்பிகளில் செயற்பட்டு வியர்வை வழியாக Na+ அயன்கள் இழக்கப்படும் அளவு குறைக்கப்படுகின்றது. இதனால் குருதியில் Na+ இன் செறிவு அதிகரித்து இயல்புநிலையை அடைகின்றது.

உடல்நலக் கேடு

சிறுநீரகத் தொகுதியுடன்
தொடர்புடைய நோய்கள்
சிறுநீரகக் கற்கள்
நோய் அறிகுறிகள்
கற்கள் எங்கே காணப்படுகின்றது என்பதனை பொறுத்து நோயறிகுறிகள் வேறுபடும் .அதாவது சிறுநீரகத்தினுள்ளா,சிறுநீர் குழாயிலா,சிறுநீர் பையிலா என்பதிலே தங்கியுள்ளது .
• சிறுநீரகத்தினுள் தோன்றும் சிறுநீரககற்கள் பெரிய அளவு வரை வளரக் கூடியவை .ஏனெனில் இக் கற்கள் ஆரம்ப நிலைகளில் எந்த நோயறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை .பின்னய நிலைகளில் வயிற்றுப்பகுதியிலும் கீழ் முதுகுப்பகுதியில் நோயை ஏற்படுத்தும் .
• சிறுநீர் குழாயினுள் சிறுநீரககற்கள் காணப்படுகின்ற பொழுது இக்கற்கள் அவற்றின் பாதையில் அடைப்பினை ஏற்படுத்துவதனால் அடைப்பிற்கெதிராக சிறுநீர்குழாயின் சுற்றுச்சுருங்கல் அசைவு அதிகரிக்கிறது .இதனால் பாதிக்கப்பட்டவருக்கு அதீத வயிற்று வலி ஏற்படுகின்றது.இவ் வலி ஆண்/ பெண் குறியினை நோக்கி பரவுவது போன்றிருக்கும்.வலி தாங்க முடியாமல் நோயாளி படுக்கையில் சுழலுமளவிற்கு வலி தீவிரமாக இருக்கும்.இத்துடன் வியர்வை,வாந்தி என்பனவும் ஏற்படும்.
• இக்கற்கள் சிறுநீர் பாதையில் பயணம் செய்கின்ற போது அவற்றின் மேற்பரப்புடன் உரசுவதனால் இரத்தக்கசிவு ஏற்படுகிறது.இதனால் சிறுநீரானது இரத்த நிறத்தில் காணப்படலாம்.இது Haematuria என வைத்தியர்களால் அழைக்கப்படுகிறது.
• சிறுநீர்ப்பாதையில் அடைப்பு ஏற்படுவதனால் சிறுநீர் தேக்கமடைகிறது.இதன் பின்னர் இதனுள் நுண்ணங்கித்தொற்றல் ஏற்படுகிறது.இதன் காரணமாக நோயாளியிற்கு காய்ச்சல்,நடுக்கம்,வயிற்றுவலி என்பன ஏற்படலாம்.

சிறுநீரகக் கற்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்

நீண்டகாலப்போக்கில் கற்கள் சிறுநீரக பாதையை அடைத்துக்காணப்படுமாயின் சிறுநீர் தேக்கமடைவதுடன் இதன் காரணமாக சிறுநீரக கற்கள் மீது கூடிய அழுத்தம் பிரயோகிக்கப்படுவதனால் சிறுநீரகங்கள் சிறிது சிறிதாக தமது தாழிற்பாட்டை இழக்கின்றன.இதனால் நிண்ட காலப்போக்கில் சிறுநீரக இழப்பு (Renal failure) ஏற்படுகிறது.இதனால் பல்வேறு பிரச்சனைகள் நிகழலாம்.
இவ்வாறாக தேக்கமடைந்த சிறுநீரில் நுண்ணங்கி தொற்றல் ஏற்பட்டதன் பின்னர் இந்நுண்ணங்கி தொற்று சிறுநிரகத்தை பாதிப்படையச் செய்யலாம் (Acute pyelonephritis) மேலும் சிறுநீரகங்களை சுற்றி சீழ் கட்டிகளை உருவாக்கலாம் (Renal abscess) சிலவேளைகளில் இந்நுண்ணங்கியானது உடல் முழுவதும் பரவுவதனால் செப்ரிசீமியா ஏற்பட்டு இறப்புக் கூட ஏற்படலாம்.
சிறு நீரக செயலிழப்பு
இடுப்புப் பாகத்தின் கீழ்ப்பகுதியில் இரண்டு சிநீரகங்கள் அமைந்துள்ளன. இவற்றின் பிரதான தொழில் சிறுநீரை உற்பத்தி செய்தல். சரீரத்திலிருந்து அகற்றப்படவேண்டிய நீர், கழிவுப்பபொருட்கள் ஆகியன சிறுநீரில் அடங்கியுள்ளன. கழிவப்பொருட்களை அகற்றுவதுடன் இரத்த அமுக்கம், உப்பு அமிலம், ஈமோகுளோபின் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. இரண்டு சிறுநீரகங்களும் தாக்கப்பட்டு 60-70% வரை சிறுநீரகம் வேலை செய்யாது இருந்தால் மட்டுமே ஒரு நோயாளிக்கு சிறுநீரகச் செயலிழப்பு உண்டு என்று நாம் சொல்லுவோம். 90% க்கு மேல் அவை வேலை செய்யாவிடின் அந்த நோயாளிக்குக் கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு என்று சொல்லுவோம்.
சிறுநீரகச் செயலிழப்பின் இரண்டு வகை.
1. சடுதியான சிறுநீரகச் செயலிழப்பு - இது குறுகிய காலத்தில் விருத்தி அடையும்: பொதுவாக தொழிற்பாடு திரும்பவும் வரக்கூடியது. ( உ+ம்: பாம்புக்கடியைத் தொடர்ந்து)
2. நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு - இது பல மாதங்கள் , வருடங்களாக விருத்தியடையும். ஆனால் தொழிற்பாடு திரும்பி வராது. (உ+ம்:திரும்பத்திரும்ப சிறுநீரக அழர்ச்சி தோன்றுவது.) மேலே கூறப்பட்ட இரண்டு இனங்களை விட, கலப்பான வேறு இனங்களும் உண்டு.

சிறுநீரக செயலிழப்புக்குக் காரணம்

பிள்ளைகளிலும் பெரியவர்களிலும் இந்தக் காரணம் வேறுபடுகிறது. வளர்ந்தவர்களில், சடுதியான சிறுநீரக செயலிழப்புக்குக் காரணமாய் இருப்பவை பாம்புக்கடி, சிறுநீரக அழர்ச்சி, நஞ்சு, போதைப்பொருள், பாரிய சத்திரசிகிச்சை, கடுமையான தொற்று நோய்கள் என்பன. வளர்ந்தோரில் காணப்படும் நாட்பட்ட சிறுநீரசச் செயலிழப்புக்கு பொதுவான காரணம், நீண்ட கால சிறுநீரக அழர்ச்சி, இரத்த அமுக்கம், புறொஸ்ரேற் நோய், சிறுநீரக்தில் உண்டாகும் கல்லு என்பனவும் பொலிசிஸ்ரிக் (Polycystic) சிறுநீரக நோயும் ஆகும். சிறுநீரகத் தொற்றுக்கள், சில வேளைகளில் தாமாகவே சிறுநீரகச் செயலிழப்பை உண்டாக்குகின்றன. எப்படியாயினும் சிறுநீரகச் செயலிழப்பு உள்ளவா்களில் சிறுநீரகத் தொற்று, சிறுநீரகத் தொழிற்பாட்டை மிக மோசமாக்கி விடும்.
பிள்ளைகளிலே சிறுநிரகத் தொற்று, சிறுநீரக அழர்ச்சி என்பன அதிகமாகக் காணப்படினும் அவர்களுக்கு சிறுநீரகச் செயலிழப்பு வருவது மிகவும் அரிது. அநேகருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்புக்குக் காரணம் கண்டுகொள்வது மிகவும் கடினம்.
சிறுநீரகச் செயலிழப்பை அடையாளம் காணுதல்
சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பத்திலே நோயாளியிடத்தில் குறிப்பாகக் கொள்ளக்கூடிய எதுவித அறிகுறிகளும் இராது. சிறுநீரகச் செயலிழப்பு உண்டு என்ற சந்தேகத்தின் பேரில் இரத்தம் சிறுநீர் ஆகியவற்றை பரிசோதித்தே திட்டமாக அறியமுடியும். சிறுநீரகச் செயலிழப்பில் பின்வரும் அறிகுறிகள் காணப்படும்.
1. கடுமையான பசியின்மை, பிரட்டு, சத்தி, விக்கல், வாந்தி.
2. மூச்சு விடுவதில் கஸ்டம்
3. முகம் கால், வயிற்றுப் பகுதியில் வீக்கம்.
4. சிறுநீர் குறைவாகக் கழித்தல், (சடுதியான சிறுநீரகச் செயலுழப்பு) அல்லது கூடுதலான சிறுநீர் கழித்தல் (நாள் கடந்த சிறுநீரக செயலிழப்பில்)
5. இரத்தச் சோகை (Anaemia)  (நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு)

நாளமில்லாச் சுரப்பித் தொகுதி
ஏன் இந்தப் பெயர் வந்தது?
நாளமில்லாச் சுரப்பியானது ஆங்கிலத்தில் “Endocrine” என்று அழைக்கப்படுகின்றது. Endon என்ற சொல்லுக்கு உள்ளுக்குள்ளே என்றும், Kinein என்ற சொல்லுக்கு தனியாக, சிறப்பாக என்று அர்த்தம் இருக்கிறது. உள்ளுக்குள்ளே சுரக்கின்ற விஷேஷமான பொருள் என்று இதற்குப் பொருள் கூறுவர்.
இந்த விஷேஷமான பொருளுக்கு அல்லது திரவத்திற்கு ஹார்மோன்கள் என்று பெயர். ஹார்மோன் என்ற கிரேக்கச் சொல்லுக்கு கிளர்த்தல் என்று பெயர். உயிரினத்துள், ஹார்மோன்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றன. நம் உடலில் நடைபெறுகின்ற காரியங்கள் எல்லாமே, இந்த ஹார்மோன்களின் உதவியினுடனேயே செயலாக்கம் பெறுகின்றன.
நமது உடலின் வளர்ச்சிக்கு; சிதையும் திசுக்கள் சீரடைதலுக்கு; அடிப்படை உணர்வுகளின் உந்துதல்களுக்கு; இன உணர்வுகளின் ஊக்கத்திற்கு; கோபம், பயம், கொடூரம், சந்தோஷம், துயரம் போன்ற குணாதிசயங்களுக்கு; சந்தர்ப்பங்களுக்கும்,தேவைகளுக்கும் ஏற்றவாறு தேகத்தைத் தயார் செய்துகொள்வதற்கு;மாற்றி அனுசரனையாக வைத்துக் கொள்வதற்கு; படையெடுக்கும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு; காதல் உணர்ச்சி பெறுவது போன்ற காரியங்களைச் செய்திட ஹார்மோன்கள் உதவுகின்றன.
இத்தகைய ஹார்மோன்களைச் சுரக்கின்ற சுரப்பிகள் யாவும், தங்களது சுரக்கும் நீரைக் கொண்டு செல்ல, தகுந்த நாளங்கள் இல்லாமல் இரத்தத்திலும் அல்லது நிணநீரிலும் நேரடியாகக் கலக்குமாறு செய்து விடுகின்றன. இவ்வாறு நாளமில்லாமல் சுரக்கும் சுரப்பிகள் பல உண்டு.
எல்லா நாளமில்லா சுரப்பிகளின் பணிகளும் ஒன்றோடொன்று இணைந்தே உள்ளன. இந்தச் சுரப்பிகள் அனைத்தும் ஒரே அமைப்பாக, ஒரு முகமாகப் பணிபுரிவதால்தான்,இதை நாம் நாளமில்லா சுரப்பி மண்டலம் என்று கூறுகிறோம்.


நமது உடலில் உள்ள சுரப்பிகள், பல விஷேஷமான பொருட்களை அல்லது திரவத்தை சுரக்கின்றன என்று நாம் அறிவாம். இவற்றை இரண்டு வகையாகப் பிரித்துக் கூறுவார்கள்.

1. வெளிப்புறச் சுரப்பிகள்
2. உட்புறச் சுரப்பிகள்
வெளிப்புறச் சுரப்பிகளுக்குரிய உதாரணம் – வாய், வயிறு, குடற்பகுதி போன்றவற்றில் சுரக்கின்ற நீர்கள், இவை உணவுப் பாதையில் வந்து கலந்து கொள்கின்றன. வியர்வை, கண்ணீர் போன்றவற்றை சுரக்கும் சுரப்பிகள், சுரந்த நீரை உடலின் வெளிப் புறத்திலேயே விழவிடுவதை நாம் பார்க்கிறோம்.
உட்புறச் சுரப்பிகளுக்கு, சுரக்கும் நீரை வாங்கி நிரப்பிக் கொள்ள, போதிய வெளியேற்று நாளங்கள் எதுவும் கிடையாது. அதனால், சுரக்கும் நீர்கள் யாவும் நேரடியாக இரத்தத்தில் சென்று கலந்து விடுகின்றன. அதாவது, இரத்த மண்டலத்தில், இரத்த ஓட்டத்தில் கலந்து கொண்டு, உடலிலுள்ள அனைத்துத் திசுக்களுக்கும் உறுப்புக்களுக்கும் போய் சேர்கின்றன. அங்கே சென்று, இந்த சுரப்பி நீரானது, தனது தனித் தன்மையைக் காட்டி, உடலின் உறுப்புக்களில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.
இத்தகைய நாளமில்லா சுரப்பிகள், சுரக்கின்ற திரவத்திற்குப் பெயர் தான் ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் யாவும் இரசாயனத் தூதுவர்கள் போல் பணியாற்றித் துணைபுரிக்கின்றன. அதாவது, நரம்பு மண்டலம் தருகின்ற தொடர்புகள் போல, நாளமில்லா சுரப்பியின் ஹார்மோன்களும், தகவல் தொடர்பு கருவிகளாகப் பணியாற்றித் துணைபுரிகின்றன. நாளமில்லா சுரப்பிகளின் பணிகள், நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
தேகத்தில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள்
1. பிட்யூட்டரி சுரப்பி
2. தைராய்டு சுரப்பி
3. பாராதைராய்டு சுரப்பி
4. தைமஸ் சுரப்பி
5. அட்ரீனஸ் சுரப்பி
6. பால் இனச் சுரப்பி
7. கணையச் சுரப்பி
8. பீனியஸ் சுரப்பி

நரம்புச் சுரப்பிகள்
உறுப்புக்கள்
பிட்யூட்டரி சுரப்பி
பயறு வடிவத்தில் அல்லது சிறு முட்டை அளவாக, பிட்யூட்டரி சுரப்பி அமைந்திருக்கிறது. இதன் எடை 0.5 கிராம் உள்ளது.
மூக்கு, கண்களுக்குப் பின் புறமாக,சிறுமூளைக்கு அடியில், கபாலக் குழியில் பிட்யூட்டரி அமைந்துள்ளது. இந்தச் சுரப்பி ஒரு சிறு காம்பு போன்ற பாகத்தால் சிறு மூளையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
பிட்யூட்டரி சுரப்பி சுரக்கின்ற ஹார்மோன்கள், எல்லா நாளமில்லாச் சுரப்பிகளும் தங்கள் பணியை திறமையாகச் செய்யத் தூண்டுவதால்,இதனை, நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் என்று கூறுகின்றார்கள்.
பிட்யூட்டரி சுரப்பியை இரண்டு பகுதியாகப் பிரிக்கலாம்
a. சுரப்பியின் முற்பகுதி
b. சுரப்பியின் பிற்பகுதி
சுரப்பியின் முற்பகுதியானது, மற்றைய சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகின்ற ஹார்மோன்களை சுரக்கும் பெருமையைப் பெற்றிருக்கிறது.முற்பகுதி சுரக்கும் திரவத்திற்கு டிராபிக் ஹார்மோன்கள் என்று பெயர்.

இந்த ஹார்மோன்களுக்குரிய பெயர்கள் பின்வருமாறு

I. வளர்ச்சி ஹார்மோன் இது உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. ஹார்மோன் வளர்சிதை மாற்றத்தில் குறிப்பாக, திசுக்களில் புரதத் தொகுப்பைப் பாதித்துப் பணியாற்றுகிறது.
II. தைராய்டு ஊட்ட ஹார்மோன் இது தைராய்டு சுரப்பியின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.
III. அட்ரீனல் ஊட்ட ஹார்மோன் இது அட்ரீனல் சுரப்பிகளின் பணியைத் தூண்டுகிறது.
IV. இனப்பெருக்க ஊட்ட ஹார்மோன் இது இனப்பெருக்கச் சுரப்பிகளின் மீது வினையாற்றித் தூண்டுகிறது.
பிட்யூட்டரி முன்பகுதி சுரக்கின்ற திரவம்,சீர்கெட்ட முறையில் அமைகிற போது, உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன.
பிட்யூட்டரிச் சுரப்பி மிகையாகச் சுரக்கும் போது,தேக வளர்ச்சியில், இராட்சதத் தன்மையை உண்டாக்கி விடுகிறது. இப்படி ஏற்படுகிற வளர்ச்சி ஏறத்தாள 9 அடி உயரத்திற்கும் வளர்த்து விடுகிறது. பிட்யூட்டரி சுரப்பியின் சரியில்லா சுரப்பானது, தேகத்தின் வளர்ச்சியை சீரழித்து விடுகிறது.
பிட்யூட்டரி பின் பகுதி சுரக்கின்ற திரவத்திற்குரிய பெயர்கள்
I. ஆக்ஸிடோசின்
II. வேசோபிரசின்
ஆக்ஸிடோசின் திரவமானது,பலவீனமான பிரசவத்தை பலம் அடையச் செய்கிறது.
வேசோபிரசின் இரத்த நாளங்களை,குறிப்பாக கர்ப்பப்பையின் இரத்த நாளங்களை, சுருங்கச் செய்து, சிறுநீரைப் பிரிக்கும் செயலில், வினை புரிகிறது. இவ்வாறு சிறு நீரைப் பிரிக்கும் பணியை ஊக்குவிக்கிற ஹார்மோனின் சுரப்புக் குறைவதால், பல மாற்றங்கள் ஏற்படுகிற நோய்க்கு டயபெட்டிஸ் இன்சிபிடஸ் என்று பெயர்.
இந்த நோய் ஏற்பட்டால், அதிகமான தாகம் ஏற்படும்.பெரும் அளவில் சிறு நீர் கழியும், அதிகமான தாகம் என்றால், 20 முதல் 30 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது என்பது தான் இந்த வியாதியின் மகத்துவம்.
தைராய்டு சுரப்பி
தைராய்டு சுரப்பி, கழுத்தின் முன் பரப்பில் அமைந்துள்ளது. இதன் எடை 1 அவின்சு, அதாவது 28 கிராம். சில சுரப்பிகளின் எடை 30 முதல் 60 கிராம் வரை இருக்கும். இதன் வலது பக்கமும் இடது பக்கமும் உருவில் சற்றுப் பெரியதாகவும், இடைப்பட்ட நடுப்பகுதியில் கனம் குறைந்ததாகவும் காணப்படும். இந்தக் கனம் குறைந்த பகுதிக்கு இஸ்துமஸ் என்று பெயர். தைராய்டு சுரக்கும் திரவத்திற்குப்பெயர் தைராக்ஸின்.
தைராய்டு சுரப்பியின் ஹார்மோன்,பிட்யூட்டரி சுரப்பியின் முன்பகுதி சுரக்கின்ற தைரோற்றோபின் ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது. தைராய்டு சுரப்பியின் தைராக்ஸிஸ் ஹார்மோனானது அயோடின் கலந்த கலவையாக இருக்கிறது. தைராய்டு சுரக்கும் இரண்டு வித ஹார்மோன்கள்:
1) தைராக்சின்
2) டிரையோடோ தைரானின்
தைராக்சினை விட, டிரையோடோ பல மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.

பயன்கள்

உடல் வளர்ச்சிக்கு உற்ற துணையாக விளங்குகிறது. வளர்சிதை மாற்றம், உயிரினத்தின் வளர்ச்சி. முதிர்ச்சி, நரம்பு மண்டலத்தின் ஒருங்கிணைந்த சீரியாக்கம் ஆகியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. உடல் சூட்டைக் கட்டுப்படுத்துகிறது.
பாரதைராய்டு சுரப்பி
பாராதைராய்டு சுரப்பிகள்,தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் அமைந்திருக்கும்.இவை சிறிய முட்டை வடிவமான அமைப்பைப் பெற்றிருக்கின்றன. எண்ணிக்கையில், நான்கு பாராதைராய்டு சுரப்பிகள் இருக்கின்றன. அவை, பக்கத்திற்கு இரண்டாக அதாவது இரண்டு மேலாகவும், இரண்டு கீழாகவும் அமைந்துள்ளன.ஒவ்வொரு சுரப்பியின் எடை 0.05 கிராமாக இருக்கிறது.
பாராதைராய்டு சுரப்பி சுரக்கின்ற ஹார்மோனுக்குப் பெயர் பாராதார்மோன். இது,உடலில் உள்ள கல்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.
பாராதார்மோன் அதிகமாகச் சுரந்தாலும், அல்லது அளவுக்குக் குறைவாகச் சுரந்தாலும்,அது தசைகள்,நரம்புகள்,நரம்புகளின் இயற்கையான செயல்முறைகளைப் பாதித்து விடுகின்றன.

தைமஸ் சுரப்பி

தைமஸ் சுரப்பி, மார்புக் கூட்டில் உள்ள, மூச்சுக் குழாய் இரு பிரிவாகப் பிரிவதற்கு முன்பாக, தைராய்டு, பாராதைராய்டு சுரப்பிகளுக்கு சற்றுக் கீழாக அமைந்துள்ளது. விஞ்ஞானிகளால் விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு, கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு இதன் செயல்கள் இருக்கின்றன.
பிறந்த குழந்தையின் தைமஸ் சுரப்பியின் எடை 13 கிராம் என்றும், 11 முதல் 15 வயதுள்ள வளர்ச்சி பெற்றவர்களிடம் 35 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது என்றும் கூறுகின்றார்கள். தைமஸ் சுரக்கும் ஹார்மோனுக்கு தைமிக் ஹ்யூமரஸ் ஃபேக்டர் என்று பெயர்.
தற்கால ஆய்வின்படி, தைமஸ் சுரப்பி உடலில் நுழைகிற வெளிப்புற நச்சுப் பொருட்கள், வைரஸ் கிருமிகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தித் தேகத்தைக் காக்கிறது என்று தெரிகிறது. உடல் வளர்ச்சிக்கும்,பால் இனச் சுரப்பிகளுக்கும் இது உதவுகின்றது. குழந்தைப் பருவத்தில், பருவம் அடைவதற்கு முன்பாக, பால் இனச் சுரப்பிகள் முதிர்ச்சி அடைவதை, தைமஸ் ஹார்மோன் கட்டுப்படுத்தித் தடுக்கிறது. பால் இனச் சுரப்பிகள் செயலாற்றத் தொடங்கியதும்,இச் சுரப்பிகள் செயலிழந்து போய் விடுகின்றன.
தைமஸ் சுரப்பி அகற்றப்பட்டால் என்ன ஆகும் என்பதை விலங்குகள் மூலம் ஆராய்ச்சி செய்த பிறகு, கொடுத்த குறிப்புக்களில், எலும்புகள் அமைப்பு மாற்றம் பெறுகின்றன. அதாவது எலும்புகளில் வலிமை குறைந்து மிருவதாக மாறுவதால்,எளிதில் முறிந்து போகக் கூடிய தன்மையுடையனவாக்கி விடுவதுடன்,குன்றிய வளர்ச்சி கொண்டவர்களாகவும் ஆக்கி விடுகின்றது என்பதே விஷேஷ தன்மையுடைய குறிப்பாகும்.
அட்ரீனல் சுரப்பி
அட்ரீனல் சுரப்பிகள் சிறுநீரகங்களின் மேற்பாகத்தில் அமைந்துள்ளன. அட்ரீனல் சுரப்பி இரண்டு பாகமாக பிரிந்துள்ளது. ஒன்றின் பெயர் கார்டெக்ஸ். மற்றொன்றின் பெயர் மெடுல்லா. ஒவ்வொரு அட்ரீனலும் 7 கிராம் எடையுடன் விளங்குகிறது. இது முக்கோண வடிவம், அல்லது அர்த்தச் சந்திர வடிவுடன் விளங்கும்.
1) கார்டெக்ஸ் சுரக்கும் ஹார்மோனுக்கு கார்டிசோன் என்றும், அல்டோஸ்டிரோன் என்றும் பெயர். கார்டிசோன் என்னும் ஹார்மோன், சக்தியை உற்பத்தி செய்யவும், சேகரித்து வைக்கவும் துண்டுதலாக விளங்குகிறது. உடலில் உள்ள தாதுப் பாருட்களின் நிலைமையை சீர்படுத்துகிறது. உடலில் உள்ள தசைகளின் தன்மைகளை வளர்த்து விடுவதுடன்,தசைச் சோர்வையும் கட்டுப்படுத்துகிறது. நோய்களிலிருந்து தேகத்தைப் பாதுகாக்கிறது.
பாலுணர்ச்சிப் பண்புகளை, இயற்கைத் தன்மைகளைச் சீர்படுத்திச் செம்மை செய்கிறது. அதாவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துணை புரிகிறது. புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் போன்றவற்றைச் செரிக்க செய்து, ஏற்படுகிற வளர்சிதை மாற்றத்தில் துணைபுரிகிறது. மாவுப் பொருட்களை குளுக்கோசாகவும் மாற்றவும், அவற்றைக் கல்லீரலில் சேர்த்து வைக்கவும் போன்ற காரியமாற்றத்திற்குப் பெரிதும் துணை செய்கிறது.
இந்தச் சுரப்பிகள் பாதிக்கப்பட்டால் அல்லது நோய் வாய்ப்படுகிற போது, உடல் பலவீனம் அடைகிறது. தாது உப்புக்களின் அளவும், தேகத்தில் குறைந்து போகிறது. பாலுணர்ச்சி தடைபடுகிறது. தாக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்கும் தன்மை குறைவடைவதால், விரைவில் இறக்கவும் நேரிடுகிறது.
2) மெடுல்லா : சுரக்கும் ஹார்மோனுக்கு அட்ரீனலின் என்று பெயர். மனிதர்கள் எப்பொழுதும் அடிக்கி கோபம், தாபம், பசி, மூச்சடைப்பு போன்ற உணர்ச்சி வசப்படும் குணாதிசயங்களைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இப்படிப்பட்ட இக்கட்டான சமயங்களில், இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரந்து,இரத்தத்தோடு கலந்து,உடலுக்கேற்படுகிற அபாயமான நிலைமைகளிலிருந்து பாதுகாக்கிறது.
தேகத்தில் ஏற்படுகிற மாறுதல்களாக, சருமம் வெளிற்றிப்போதல், இருதயத்தில் மிகையான துடிப்பு போன்றவை ஏற்படுவதை, உணர்ச்சி வசப்படும் அனைவரும் உணர்வதை நீங்களும் அறிந்திருக்கலாம். இதற்கு மேலாக, இந்த ஹார்மோன் செய்யும் உதவிகள் பல. இது இரத்தக் குழாய்களுக்கு உணர்ச்சியூட்டி, அவற்றின் அழுத்தத்தை, சீராக்கி உதவுகிறது.இது மாவுப் பொருட்களில் உண்டாகும் மாற்றங்களைக் கட்டுப்படுத்துகிறது. இது கல்லீரலில் கிளைகோஜனை குளுக்கோசாக மாற்றி,இரத்தத்திற்கு விநியோகம் செய்கிறது. மேற்கூறிய மாற்றங்கள் யாவும், மனிதர்களுக்கு ஏற்படுகிற அவசர காலங்களில், முக்கியமாகத் தேவைப்படுகின்றன.

பால் இனச் சுரப்பி

பால் இன ஹார்மோன்களைச் சுரக்கின்ற சுரப்பிகளாக விரைகளும், சூலகங்களும் விளங்குகின்றன. இச்சுரப்பிகள் பால் இன ஹார்மோன்களைச் சுரந்து, இரத்தத்தில் கலக்கச் செய்கின்றன. இந்த ஹார்மோன்கள் இரண்டு தரமான காரியங்களைச் செய்கின்றன. முதல்தரப் பாலினப் பண்பு, இரண்டாந் தரப் பாலினப் பண்பு என்பதாக அப்பணிகள் வேறுபடுகின்றன.
முதல்தரப் பண்பில், பால் இன உறுப்புக்களும், ஆண் மற்றும் பெண்களில் கலவி உறுப்புக்களும் அடங்கும். இரண்டாந் தரப் பண்பில், ஆணிலிருந்து பெண்ணையோ அல்லது பெண்ணிலிருந்து ஆணையோ பிரித்தறியக் கூடிய அமைப்புக்கள் அடங்கும்.
அவை பின்வருமாறு:
1. ஆண், பெண் உடலமைப்பு வேறுபாடு, அதாவது உடல் அமைப்பு, தோள்பட்டை, இடுப்புப் பின் பகுதியமைப்பு, மார்புக் கூடு, மண்டை அமைப்பு.
2. தேகத்தில் தாடி, மீசை, வயிறு, மார்பு போன்ற பகுதிகளில் ஆண்களுக்கு முளைக்கக் கூடிய உரோம அமைப்பு.
3. பேசும் போது ஏற்படுகிற குரல் வித்தியாசம்
பால் இன ஹார்மோன்கள் வகைகளை மூன்றாகக் கூறுவார்கள்.
a) ஆன்ட்ரோஜென்ஸ்
b) ஒஸ்ட்ரோஜென்ஸ்
c) புரோஜெஸ்ட்ரஜென்ஸ்
ஆண் பால் ஹார்மோன்
இவற்றில், டெஸ்டோஸ்டீரோன் மற்றும் ஆன்ட்ரோஸ்டீரான் ஹார்மோன்கள் விரைகளால் செய்யப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள், ஆண்களுக்கு ஏறத்தாழ 15 வயதாகிற போது, பூரண வளர்ச்சியடைந்து விடுகின்றன. இதன் தொழில் எடுப்பாக ஆரம்பமாகும் பொழுது, மிடுக்கான பல மாற்றங்கள், ஆண்கள் தேகத்தில் ஏற்பட ஆரம்பிக்கின்றன.

1. முகத்திலும் தேகத்திலும் மயிர் வளர்ச்சி.


2. பேசும் குரலில் கனம். அகன்ற குரல்.


3. தேகத்தில் உண்டாகும் தசை அமைப்பு.

15 வயதிற்கு முன்னதாக இச்சுரப்பிகள் அகற்றப்பட்டால், மேற்கூறிய மாற்றங்கள் எதுவும் தேகத்தில் நிகழாது. மேற்கூறிய குணங்கள் இல்லாது போனால், அவர்களை அலிகள் என அழைப்பர்.
பெண் பால் ஹார்மோன்
சூலகத்தில் உற்பத்தியாகும் ஹார்மோன்களில், ஒஸ்ட்ரோஜென்ஸ் முக்கியமானதாகும். சூலகங்கள் இரண்டும், வயிற்றின் அடிப்பாகத்தில், கருபப்பையின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. பெண்களுக்கு 12 அல்லது 13 வயது ஆகும் போது இந்தச் சுரப்பிகள் பூரண வளர்ச்சியைப் பெறுகின்றன. இதன் அறிகுறிகள் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதாகும்.

இந்த ஹார்மோன்களின் பணிகள் பின்வருமாறு:

1. பெண்களின் பருவ முதிர்ச்சியைக் காட்டுகிறது.
2. மார்பகங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

3. மாதவிடாயைக் கட்டுப்படுத்துகிறது.

மூன்றாவதாக உள்ள ஹார்மோன் புரோஜெஸ்டிராஜென்ஸ் ஆகும். இது கர்ப்பத்தின் சகஜமான பணிக்கு உதவுகிறது. இந்த ஹார்மோனை, கர்ப்பத்தின் ஹார்மோன் என்றும் அழைக்கின்றனர். பெண்பால் ஹார்மோன்கள், ஆண்பால் ஹார்மோன்களைப் போல செல்களின் வளர்சிதை மாற்றத்திலும் முக்கிய பங்கேற்கின்றன.
பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் ஏற்படுகின்றது. பெண்களுக்கு 40 முதல் 50 வயதாகும் போது, இந்த ஹார்மோன்கள் சுரப்பது, படுப்படியாகக் குறைந்து போகிறது. இதன் காரணமாக மாதவிடாய் நின்று போகிறது. இதை ஆங்கிலத்தில் மெனோபாஸ் என்பார்கள். மாதவிடாய் நின்று போகிற சமயத்தில், அதிகமான நரம்புக் கிளர்ச்சி, தலைவலி, சிலசமயங்களில் உறக்கம் இன்மை போன்ற விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படும். என்றாலும், அவற்றை, அறிவாண்மையுடன் பொறுத்துக் கொள்ளுதல் பெண்களுக்கு அழகாகும். அந்த மனப் பண்பாடு இருந்தால்தான், மகிழ்ச்சியோடு வாழ முடியும். மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு மகப்பேறு பெறுகிற பாக்கியம் முடிந்து போய்விடுகிறது.

கணையச் சுரப்பி

கணையமானது, உட் சுரப்பும், வெளிச் சுரப்பும் கொண்ட ஒரு சுரப்பியாகும். இதன் ஹார்மோன் ஒன்று முன் சிறு குடலுக்குச் செல்கிறது. இதைத் தவிர, கணையம் இரண்டு வித ஹார்மோன்களைச் சுரக்கிறது.
a. இன்சுலின் இன்சுலின் மாவுப் பொருளைக் கரைக்கும் பணிக்கு உதவுகிறது. இது மாவுப் பொருளைக் கரைக்கவும், கிளைக்கோஜனைத் தசைகளிலும் கல்லீரலிலும் சேர்த்து வைக்கவும் உதவுகிறது. இந்த ஹார்மோன் மந்தமாக சுரந்தால், நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் ஏற்பட்டு விட்டால், திசுக்கள் சர்க்கரையை சகஜமான முறையில் தன்மயமாக்கிட முடியாமல் போகிறது. கல்லீரலும் கிளைக்கோஜனைச் சேமித்து வைப்பதில் தவறி விடுகிறது. அதனால் சிறுநீரில் சர்க்கரை காணப்படுகிறது.

b. குளுக்காகோன் குளுக்காகோன் ஹார்மோன், கிளைக்கோஜன் சேமிப்பைச் சீர்குலைக்கும் பணியைச் செய்கிறது. அதாவது, இன்சுலின் செய்கிற விளைவுகளுக்கு எதிரான பணியில் ஈடுபடுகிறது.

பீனியல் சுரப்பி
பீனியல் சுரப்பி, பெருமூளை எபிபிசிஸ் எனும் இடத்தில், ஒரு சிறிய உறுப்பாக அமைந்திருக்கிறது. இச் சுரப்பியின் பணி பற்றி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. குழந்தைப் பருவத்தில், இச்சுரப்பி சிறந்த முதிர்ச்சிமிக்க வளர்ச்சியை அடைகிறது என்றும், இனப்பெருக்கச் சுரப்பிகள் பருவத்திற்கு முன்னதாக, வளர்ச்சியடைவதைத் தடுப்பதாகத் தெரிகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள்.நோய்கள் பற்றி

நாளமில்லாச் சுரப்பித் தொகுதியுடன் தொடர்புடைய நோய்கள்
கபச்சுரப்பி நோய்கள்  
கபச்சுரப்பியானது குறைந்தளவு அல்லது அதீத செயற்பாட்டை காட்டக்கூடியதாகும்
கபச்சுரப்பியினால் பினவரும் நோய்கள் ஏற்படலாம்;
1.         செயற்பாட்டுக் குறைவு
2.         அதீத வளர்ச்சி

கபச்சுரப்பியினால் பின்வரும் ஹார்மோன்கள் சுரக்கப்டுகின்றன

1.         வளர்ச்சி ஓமோன்
2.          FSH புடைப்பு வளார்ச்சி ஓமோன்
3.         தையிரொயிட்டை தூண்டும் ஓமோன் TSH
4.          LH-மஞ்சட் கலவிழையத்தை தூண்டும் ஓமோன்
5.         அதிரீனல் மேற்பட்டையை தூண்டும் ஓமோன் ACTH
6.         ஒட்சிடோசின்
7.         வேஸோபிரசின்

கபச்சுரப்பியின் செயற்பாட்டுக்குறைவு

இதன் போது கபச்சுரப்பியின் முற்புறப்பாகத்தால் சுரக்கப்படும் ஹார்மோன்களின் அளவானது பின்வரும் ஒழுங்கில் குறைவடையூம்
1.         வளர்ச்சி ஹார்மோன் (GH)
2.         FSH
3.         LH
4.         TSH
5.         ACTH
சில வேளைகளில் அனைத்து ஹார்மோன்களினதும் அளவும் ஒட்டுமொத்தமாக குறைவடையாலாம் கதிர்வீச்சு சத்திரசிகிச்சை கபச்சுரப்பியில் கட்டுப்பாடற்ற கலவளர்ச்சி என்பன இதற்குரிய  சில காரணிகளாகும் இந்நோய்க்கு குறைவடைந்த ஹார்மோன்களின் மீளப்பிரதியீடு செய்வதே  உரிய சிகிச்சையாகும்.

இவை பின்வருமாறு

1.  ACTH குறைபாட்டிற்கு - ஐடிரோகாட்டிசோன்
2.  TSH குறைவிற்கு - தைரொக்சின்
3. இலிங்க உறுப்பு விருத்தி மற்றும் ஒஸ்டியோபுரோசிஸ் இற்கு இலிங்க ஹார்மோன்கள் - டெஸ்டெஸ்ரோன் 250மிகி மூன்று வாரங்களுக்கு ஒரு முறை ஊசி மூலம் -  ஈஸ்ரஜின்
4.     வளார்ச்சி ஹார்மோன் பிரதியீடு

கபச்சுரப்பியில் ஏற்படும் அதீத கலவளார்ச்சி

இவற்றில் மூன்று வகை உள்ளன
1.         குரோமோபோபீல் கலவளார்ச்சி - இது 70% கலவளர்ச்சியாகும் அநேகமாக இது வளர்ச்சி ஹார்மோனகளை உற்பத்தியாக்குவதில்லை
2.         அசிடோபில் கலவளாச்சி 15% இது வளர்ச்சி ஹார்மோன் அல்லது புரோலக்டினை சுரக்கும்
3.         பேசொபில் கலவளர்ச்சி 15% இது ACTH ஹார்மோனை சுரக்கும் இவை 1mm இலும் சிறியதாயின் மைக்ரோஅடினோமோ எனவூம் 1mm இலும் பெரியதாயின் மக்ரோஅடினமோ எனவூம் அழைக்கப்படும்.இவை தலைவலி பார்வைப்புலப்பாதிப்பு மண்டையோட்டு நரம்புப்பாதிப்பு போன்றவற்றைவும் எற்படுத்தும்.
இவற்றை கண்டறிவதற்கு பின்வருவன பயன்படலாம்;
1.         கபச்சுரப்பியின் MRI ஸ்கான் பாரிசோதனை
2.         ஹார்மோன் அளவீடுகள்
3.         பார்வைப்புல பாரிசோதனைகள்

சிகிச்சை

•  சத்திரசிகிச்சை மூலம் கலவளர்ச்சியை அகற்றல்
•  கதிர்வீச்சு மூலம் கலவளர்ச்சியை குறைத்தல்
•  ஹார்மோன் பிரதியீடுகள்

1) கபச்சரப்பி செயற்பாட்டுக் குறைபாடுகளுக்கான காரணிகள்

அ)கால்மன் நோய்த்தொகுதி
ஆ)கலவளர்ச்சி
இ)அழற்சி
ஈ)நோயத்தொற்று (காசநோய் மூளைக்காயச்சல்)

2) கபச்சுரப்பி காம்பின் மட்டத்தில்

அ)விபத்து சத்திரசிகிச்சையில் காயமேற்படல்
ஆ)சத்திர சிகிச்சை
இ)வேறு கலவளர்ச்சிகளினால் ஏற்படும் அழுத்தம்
ஈ)மூளையினை சுற்றியூள்ள சுவர்களின் புற்றுநோய்கள்
உ)குருதிக்குழாய்கள் விரிவடைதல்

3) கபச்சுரப்பியில் ஏற்படும் பாதிப்புகள்

1.         அதீதகலவளர்ச்சி
2.         கதிர்வீச்சு
3.         அழற்சி
4.         வேறுநோய்களின் ஊடுருவல்
5.         குருதி வழங்கலில் ஏற்படும் குறைபாடுகள்

சுரப்பிகளுடன் தொடர்புடைய மேலும் சில நோய்கள்

தைராய்டின் அதிகமாகப் பணி என்பது அதிகமான சுரப்பாகும்.இதனால் உடலுல் மிகையான வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு, நரம்பு மண்டலம் அதிகமாகக் கிளர்ச்சி பெற்று,கடைசியாக அந்த மனிதரை அசதிக்குள்ளாக்கும் கஷ்டத்தைக் கொடுத்து விடுகிறது. இந்த வியாதிக்குப் பெயர் பேஸ்டோவின் வியாதி என்பதாகும்.
முண்டக்கண்,நரம்புத் தளர்ச்சி,வேகமான நாடித் துடிப்பு போன்றவை நோயின் குணங்களாகும். தைராய்டின் மந்தமாக பணி செய்யும் போது, மிக்சடிமா, கிரிட்டினிசம் வியாதிகள் ஏற்படுகின்றன.
தாய்மார்களின் மகப்பேறு காலத்தில்,அயோடின் சத்து குறைந்து போவதால், அவர்களுக்கு அப்போது பிறக்கும் குழந்தைகள்,குறைந்த சக்தியுள்ள தைராய்டு சுரப்பிகளுடனே தான் பிறக்கும். அப்படிப்பட்ட தைராய்டு உள்ள குழந்தைகள், அறிவு வளர்ச்சி குறைவடைதல், சரியான வளர்சிதை மாற்றம் நிகழாது இருத்தல், உறுப்புக்களின் பொருத்தமற்ற வளர்ச்சி, மிகையான அறிவுச் சோர்வு போன்ற நிலைமையுடனேயே வளரும்.அந்த வியாதிக்கு கிரிட்டினிசம் என்று பெயர்.
வயது வந்தவர்களுக்கு தைராய்டு சுரப்பியின் மந்தமான பணியால், உடலில் தண்ணீரும்,தசைகளில் கொழுப்புப் பொருட்களும் அதிகமாகச் சேர்ந்து விடும். அப்பொழுது ஏற்படும் அறிகுறிகள்”: முகம் பெரியதாக அளவில் மாறும். தலை, புருவம் இவற்றில் முடி உதிரும், அறிவு வளர்ச்சி குன்றும். தேகத்தில் தேவையான சூடு குறையும்.இப்படிப்பட்ட வியாதிக்கு மிக்சடிமா என்று பெயர்.
பாராதைராய்டு சுரப்பி அதிகமாக பாராதார்மோனைச் சுரந்து விட்டால்,இரத்தத்தில் கல்சியத்தின் அளவு கூடிப் போகிறது.இதனால் சிறு நீரகப் பிரிவுகளில், ல்சியம் அதிகமாகப் படிந்து போய்,சிறு நீரகக் கற்கள் உண்டாகின்றன.
அத்துடன், எலும்புகளில் உள்ள கல்சியச் சத்து, அதிகமாக எடுக்கப்பட்டு விடுவதால், ஆஸ்டிரிட்டிஸ் பைபிரோசாசிஸ்டிரிகா என்ற நோய் ஏற்படுகின்றது.

கல்சியக் குறைவால், வாலிபர்களுக்குப் பல வியாதியும் ஏற்படக் காரணமாகின்றது. அதாவது, பாராதார்மோனின் விளைவு, வைட்டமின் D யைப் பாதிப்பதாகவும் அமைந்திருக்கிறது. பாராதார்மோன் சுரப்பு குறைந்து போய்விட்டால் இரத்தத்தில் கல்சியம் குறைகிறது. அதனால் வலிப்பு நோய் வருகிறது.


ஹார்மோன் சீராக்கம்
உடற்பயிற்சிகளும் நாளமில்லாச் சுரப்பிகளும்.
இளைஞர்கள், சிறுவர்கள், தங்கள் தேகத்தை மிகுதியான தகுதியும் திறமும் கொண்டதாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஏனென்றால், தகுதியான தேகமென, தேகவளர்ச்சியை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. உடற்பயிற்சிகள் தான், உயர்ந்த தேகத்திறனை வளர்த்து விடுகின்றன.
டெஸ்டொஸ்டிரோன் என்னும் ஹார்மோன் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிற போது, தசை வளர்ச்சி ஏற்படுகிறது. தசைகளில் வலிமையும், நீடித்துளைக்கும் ஆற்றலும் மிகுதியடைகின்றது.
இன்சுலின் என்ற ஹார்மோன், அதிகமாகச் சுரக்கும்.சர்க்கரையில் ஏற்படுகிற வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்திகிறது.இன்சுலின் பற்றாக்குறை நீரிழிவு நோய்க்குக் காரணமாக அமைகின்றது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு,உடற்பயிற்சி உணவு போல் அமைந்து விடுகிறது. உடற்பயிற்சி அவர்களுக்குச் சீரான விடுதலையையும், பூரண மகிழ்ச்சியையும் வழங்குகிறது.
அட்ரீனலின் உற்பத்தியை, உடற்பயிற்சி தூண்டுகிறது. அதனால் தேகத்தில் தகுதியும் திறமும் மிகுதியாக உண்டாகிறது. இப்படிப்பட்ட தகுதியுள்ள மனிதர்கள், சாதாரணமாக சுறுசுறுப்புடன் வாழ்கிறார்கள்.
உடற்பயிற்சிகள் நாளமில்லா சுரப்பிகளை உற்சாகத்துடன் செயற்பட உதவுகின்றன. உற்சாகம் ஊட்டுகின்றன.


மனித உடல் பற்றிய அபூர்வ தகவல்கள்!
நமது மனித உடல்கள் பற்றிய பல தகவல்கள் தற்போதும் ஆராயப்பட்டு பல உண்மைகள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் பல நமக்கு ஆச்சரியத்தையும் ஏன் அதிர்ச்சியையும் கூட ஏற்படுத்தும்.

அதுபோன்று நமது உடல் பற்றிய சில தகவல்கள் இங்கே...

பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது

. மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

தசைகள் எவ்வாறு இணைகளாகச் (pairs) செயல்புரிகின்றன?

தசைகள் உண்மையில் இணைகளாகத்தான் செயல்படுகின்றன. ஒரு தசை ஒரு திசையில் இழுக்கப்படும்போது, உடன் உள்ள எலும்பை அதன் சரியான இடத்தில் வைத்திருக்க, அதன் இணைத் தசையை எதிர்த் திசையில் இழுக்க வேண்டியுள்ளது. நாம் நமது முன்கையை (forearm) உயர்த்தும்போது, மேற்கை முன்தசைகள் (biceps) எலும்பை உயர்த்தும் பொருட்டு குறுகுகிறது. நாம் நமது கையை நீட்டும்போது, மேற்கைப் பின் தசைகள் (triceps) அதனைப் பழையபடி இழுக்கின்றன; அப்போது கையின் முன் தசைகள் தளர்வுறுகின்றன. இதே போன்ற செயல்பாடுகள் நடக்கும்போதும் ஓடும்போதும் நமது கால்களில் நடைபெறுகின்றன; நமது கை விரல்கள் மற்றும் கால் விரல்கள் ஆகியன அசையும்போதும் நடைபெறுகின்றன.

நாம் உண்ணும் உணவைச் சிதைத்து நடைபெறும் வேதியியல் செயல்பாடே வளர்சிதை வினை மாற்றம் (metabolism) எனப்படுகிறது. தீவிரமான உடற்பயிற்சியின் போது நமது உடலில் நடைபெறும் வளர்சிதை வினை மாற்றத்தின் வீதம் அதிகரிக்கிறது; உண்ணும் உணவின் ஆற்றலும் அப்போதுதான் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

உடற்பயிற்சி செய்யும்போது தசைகள் எவ்வாறு வினை புரிகின்றன (respond)?

தசை நார்கள் (fibres) எனப்படும் மெல்லிய உயிரணுக்களால் (cells) ஆனவையே தசைகள். ஆனால் அவை என்ன செய்கின்றன, எவ்வாறு செயல்படுகின்றன என்பவற்றைப் பொறுத்துத் தசைகள் வேறுபடுகின்றன. ஒரு தசை சுருங்கும்போது, அது லேக்டிக் அமிலம் என்னும் ஓர் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. இந்த அமிலம் நச்சுத் தன்மை வாய்ந்தது; இது உங்கள் தசைகளைக் களைப்படையச் செய்து அதன் விளைவாக உங்களையும் சோர்வடையச் செய்கிறது. இந்த லேக்டிக் அமிலத்தை களைப்புற்ற தசையிலிருந்து நீக்கி விட்டால், சோர்வு நீங்கி உங்களால் மீண்டும் நன்கு செயல்பட முடிகிறது!

ஆனால் நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது லேக்டிக் அமிலம் சாதாரணமாக வெளியேற்றப்படுவதில்லை; மற்றும் தசைகள் சுறுசுறுப்பாக இயங்கும்போது பல்வேறு நச்சுப் பொருட்களும் (toxins) உற்பத்தியாகின்றன. அவை இரத்தத்தால் உடல் முழுதும் எடுத்துச் செல்லப்பட்டு, உடல், குறிப்பாக மூளை களைப்படையக் காரணமாகின்றன. எனவே உடற்பயிற்சிக்குப் பின்னர் களைப்பாக உணர்வது என்பது ஒருவகை உட்புற நச்சுத்தன்மையால் உண்டாவதே.

இருப்பினும், உடலுக்கு இக்களைப்பு உணர்வு தேவைப்படுகிறது எனலாம்; இதனால் உடல் ஓய்வு பெற விரும்புகிறது. ஓய்வின்போது கழிவுப் பொருட்கள் வெளியேறுகின்றன; உயிரணுக்கள் மீட்சி அடைகின்றன; மூளையின் உயிரணுக்கள் தமது மின்கலன்களுக்கு (batteries) மீள்செறிவூட்டம் (recharging) அளிக்கின்றன; மூட்டுகளில் பயன்படுத்தப்பட்ட உயவுப் பொருட்களுக்கு (lubricants) மாற்றுப்பொருட்கள் அளிக்கப்படுகின்றன. எனவே, உடலுக்கும் தசைகளுக்கும் உடற்பயிற்சியின்போது நன்மையே விளைகிறது.

முழங்கால் என்பது ஒரு சுமைதாங்கும் இணைப்பு (joint) ஆகும். எலும்பின் முனைகளில் அமைந்துள்ள குஷன் (cushion) போன்ற குருத்தெலும்பு, அதன் மீதான தாக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. உயவு நீர்மம் (synovial fluid) என்னும் உயவுப் பொருளால் எலும்பின் மீதான தேய்மானமும் குறைக்கப்படுகிறது.


மனித உடலின் முக்கிய உறுப்பு மண்டலங்கள் என்னென்ன?


உடலின் பல்வேறு உறுப்புகளைக் கண்டறிந்தே மனித உடற்கூறியல் ஆய்வுசெய்யப்படுகிறது. உடலுறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள்ஆகியவற்றின் அடிப்படையில் அவை பல்வேறு குழுக்களாக அல்லது மண்டலங்களாகப்
பிரிக்கப்படுகின்றன. அக்குழுக்கள் பின்வருமாறு:

எலும்பு (skeletal) மண்டலம்,

தசை (muscular) மண்டலம்,

நரம்பு (nervous) மண்டலம்,

நாளமில்லா சுரப்பி (endocrine) மண்டலம்,

மூச்சு (respiratory) மண்டலம்,

இதயக் குருதி நாள (cardiovascular) மண்டலம்,

நிணநீர் நாள (lymph vascular) மண்டலம்,

செரிமான (digestive) மண்டலம்,

கழிவு (excretory) மண்டலம் மற்றும்

இனப்பெருக்க (reproductive) மண்டலம்

உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒருமனித உடலில் சுமார் 2 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலைநீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது. மிகவும்சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில்விளங்குவது ஈரல் (liver) ஆகும்.

ஒருவரின் சிதைந்து போன உடலுறுப்பை நீக்கி, வேறொரு கொடையாளியிடமிருந்துபெறப்பட்ட நல்ல உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிப் பொருத்துவதற்கு உறுப்புமாற்று அறுவை சிகிச்சை (transplantation surgery) எனப் பெயர். தற்போது இதயம், ஈரல்,சிறுநீரகங்கள், நுரையீரல்கள் ஆகிய உறுப்புகளை அறுவை சிகிச்சை வாயிலாக மாற்றிப்பொருத்த முடியும்.

ஓர் உயிரணுவின் (cell) உள்ளே என்ன இருக்கிறது?

தாவரம், விலங்கு, மனிதர் ஆகிய அனைத்து உயிரினங்களும் உயிரணுக்களால் ஆனவையே. இவ்வுயிரணுக்களில் சைடோபிளாசம் (cytoplasm) எனப்படும் பாகு (jelly) போன்ற நீர்மப் பொருளே நிரம்பியுள்ளது.

ஒவ்வொரு உயிரணுவும் மிக மெல்லிய சவ்வு போன்ற பொருளால், நீர் நிரம்பிய பலூன் (balloon) போன்று ஒன்றிணைக்கப்படுகிறது. உயிரணுவின் உள்ளே சைட்டோபிளாசம், குறிப்பிட்ட நுண் உறுப்புப் பகுதிகளில் (organells) அடங்கியிருக்கும். உயிரணுக்களின் செயல்பாட்டை இவையே கட்டுப்படுத்துகின்றன; எடுத்துக்காட்டாக புரதங்களின் (proteins) உற்பத்தியைக் குறிப்பிடலாம்.

மைட்டோகாண்டிரியா (mitochondria) எனப்படும் மிகச் சிறு நுண்ணுறுப்புகள் உயிர்வளியைப் பயன்படுத்தி உனவுப் பொருளைத் துகள்களாக மாற்றி, உயிரணுக்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன.

அணு உட்கருப் (nucleus) பகுதியில் நூலிழை போன்ற 46 குரோமோசாம்கள் அடங்கியுள்ளன; இவையே உயிரணுவின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துபவை.

குடல்களின் சுவர்ப் பகுதியில் உள்ள உயிரணுக்கள் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்பவை; ஆனால் மூளைப் பகுதியின் நரம்பிலுள்ள உயிரணுக்கள் நம் வாழ்நாள் முழுதும் உயிர் வாழ்பவை.

உயிரணுக்கள் வாழ்வதற்கு உணவு, உயிர்வளி, நீர்மச் சூழல் ஆகியன இன்றியமையாதன. இரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் உணவையும் நீர்ப்பொருளையும் அளிக்கின்றன. கழிவுப் பொருட்களையும் இவையே வெளியேற்றுகின்றன. உயிரணுவுக்குத் தேவைப்படும் உணவு மற்றும் வேதிப்பொருட்களையும் இரத்தமே அளிக்கிறது.

பொது அறிவு:

உடலில் உள்ள மொத்த எலும்புகளில் பாதிக்குமேற்பட்டவை கை, கால் விரல்களிலேயே தான் அமைந்திருக்கின்றன.

ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம் ஃபில்டர்கள் உள்ளன. இவை ஒரு நிமிடத்திற்கு 13 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன. கழிவுகள், சிறுநீராக வெளியேறுகின்றன.

தினமும் நாம் பார்ப்பதற்காக, கண்ணைச் சுற்றியுள்ள தசைகளை சுமார் ஒரு லட்சம்முறை இயக்குகிறோம். இந்த அளவுக்குக் கால் தசைகளை நாம் இயக்க வேண்டுமெனில் ஒரு நாளைக்கு 80 கிலோ மீட்டர்கள் நடந்தால் தான் முடியும்.

ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம் ஃபில்டர்கள் உள்ளன

உடலில் உள்ள மொத்த எலும்புகளில் பாதிக்குமேற்பட்டவை கை, கால் விரல்களிலேயே தான் அமைந்திருக்கின்றன.

ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம் ஃபில்டர்கள் உள்ளன. இவை ஒரு நிமிடத்திற்கு 13 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன. கழிவுகள், சிறுநீராக வெளியேறுகின்றன.

தினமும் நாம் பார்ப்பதற்காக, கண்ணைச் சுற்றியுள்ள தசைகளை சுமார் ஒரு லட்சம்முறை இயக்குகிறோம். இந்த அளவுக்குக் கால் தசைகளை நாம் இயக்க வேண்டுமெனில் ஒரு நாளைக்கு 80 கிலோ மீட்டர்கள் நடந்தால் தான் முடியும்.

நமது கண்ணின் கருவிழிக்குள் கிட்டத்தட்ட பதினேழுகோடி பார்வை செல்கள் உள்ளன. இதில் பதின்மூன்று கோடி செல்கள் கருப்பு, வெள்ளையைப் பார்க்க உதவி செய்பவை. மீதியிருக்கும் சுமார் நாலு கோடி செல்கள், மூலமாகத்தான் நாம் வண்ணங்களைப் பார்க்க முடிகிறது.

உடலிலேயே மிகவும் சிறிய தசை காதுகளுக்குள் உள்ளது. அதன் மொத்த நீளம் ஒரு மில்லிமீட்டர்தான். அதேபோல் காதுக்குள் இருக்கும்.

சில பகுதிகள் விசேஷமானவை. இவைகளுக்கு ரத்தம் செல்வதில்லை. இவை தமக்கு வேண்டிய சத்துக்களை மிதந்து கொண்டிருக்கும் திரவத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றன.

செவிப்பறை மிகவும் நுண்மையான அமைப்பு, ரத்தக் குழாய்கள், அங்கு வந்தால், நாடித்துடிப்பின் சத்தத்திலேயே செவிப்பறை செயலற்றுப் போய்விடும் என்பதால் ரத்தக் குழாய் இல்லை.

மூளை, உடலில் மொத்த எடையில் மூன்று சதவிகிதம் உள்ளது. அது நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து 20 சதவிகித ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறது. நாம் உண்ணும் உணவில் 20 சதவிகித கலோரிகளும், அதற்குத்தான் போகிறது. அது மட்டுமல்ல, 15 சதவிகித ரத்தமும் அதன் உபயோகத்திற்குத் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நாடித்துடிப்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக இல்லை. ஓய்வாக இருக்கையில் ஒரு ஆணின் துடிப்பு, ஒரு நிமிடத்திற்கு எழுபத்திலிருந்து எழுபத்திரண்டு வரை இருக்கிறது. பெண்ணுடையதோ, எழுபதெட்டிலிருந்து எண்பத்திரண்டு வரை இருக்கிறது. கடுமையாக உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது நிமிடத் திற்கு 200 துடிப்புகள் வரை கூட உயரும்

கல்லீரல் சம்பந்தமான நோய்களுக்கு
மனித உடலில் வெட்டினாலும் வளரக்கூடிய ஒரே உறுப்பு கல்லீரல் தான். அதே போல் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் உச்சபட்ச சாதனையாக இருப்பது கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை தான்.

இதயம், கண், நுரையீரல், சிறுநீரகம் என ஒவ்வொரு உறுப்பும் சில குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்கின்றன. ஆனால் கல்லீரல் மட்டும்தான் உணவை ஜீரணம் செய்வதில் ஆரம்பித்து நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பது வரை, 3,000-க்கும் அதிகமான பணிகளை செய்து கொண்டே இருக்கிறது.

குடிப்பழக்கத்தாலும், வைரஸ் கிருமிகளாலும் பாதிக்கப்படும் கல்லீரல் 80 சதவிகிதம் கெட்டுப்போன பிறகு தான் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதையே நம்மால் அறிய முடியும். இது நமக்குத் தெரியவரும் போது கல்லீரல் பிரேக் டவுன் ஆகும் நிலையில் இருக்கும்.

கல்லீரல் புற்றுநோய், வயிற்றில் நீர் கோத்து வயிற்றைப் பானை போல் மாற்றி விடுவதோடு கால் வீக்கம், லிட்டர் கணக்கில் ரத்த வாந்தி, சுய நினைவு இழப்பு, நடக்கவே முடியாத நிலை எனப் படிப்படியாக மனிதனை முடக்கிவிடும்.

ஆகையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்றே நிரந்தரத் தீர்வு.

கல்லீரல் பிரச்னை வராமல் இருக்க அதிகக் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். புரதம், மாவுச் சத்து, வைட்டமின் மற்றும் காய்கறி, பழ வகைகளைச் சாப்பிடுவது கல்லீரலைக் காக்கும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

 

18649.20.02.2015BLOG COMMENTS POWERED BY DISQUS